என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கமல் ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்த நடிகருக்கு பாஜகவில் மாநில பிரசார அணி செயலாளர் பதவி!
    X

    கமல் ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்த நடிகருக்கு பாஜகவில் மாநில பிரசார அணி செயலாளர் பதவி!

    • நடிகர் சூர்யாவின் அகரம் பவுன்டேஷன் விழாவில் சனாதானம் குறித்து கமல் பேசியிருந்தார்.
    • 'கமல் கழுத்தை அறுத்து விடுவேன்' என கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியிருந்தார்.

    விஜய் டிவியில் `பாண்டியன் ஸ்டோர்ஸ்', சன் டிவியில் `மருமகள்' ஆகிய சீரியல்களில் நடித்தவர் ரவிச்சந்திரன்.

    இவர் யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பாஜகவுக்கு ஆதாரவாக அரசியல் கருத்துகளை பேசி வருகிறார்.

    சில மாதங்களுக்கு முன், நடிகர் சூர்யாவின் அகரம் பவுன்டேஷன் விழாவில் சனாதானம் குறித்து கமல் பேசிய தை கண்டித்து நடிகர் ரவிச்சந்திரன் யூடியூப் வலைதளத்தில், 'கமல் கழுத்தை அறுத்து விடுவேன்' என கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியிருந்தார்.

    இதுதொடர்பாக மக்கள் நீதி மயயம் சார்பில் இவர் மீது போலீஸில் புகார் தரப்பட்டது. இந்த புகாரில் கைதில் இருந்து தப்பிக்க ரவிச்சந்திரன் முன்ஜாமீன் பெற்றார்.

    இந்நிலையில் தற்போது பாஜகவில் நடிகர் ரவிச்சந்திரனுக்கு மாநில பிரச்சார அணி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×