என் மலர்
நீங்கள் தேடியது "Death Threat"
- பாபி சிம்ஹாவுக்கும் காண்டிராக்டர் ஜமீருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு கட்டிட பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பேத்துப்பாறையில் பிரபல நடிகர் பாபி சிம்ஹா வீடு கட்டி வருகிறார். அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் இடத்தில் வீடு கட்டுவதாக இவர் மீதும், அதே பகுதியில் வீடு கட்டும் நடிகர் பிரகாஷ்ராஜ் மீதும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதனிடையே பாபி சிம்ஹாவுக்கும் காண்டிராக்டர் ஜமீருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு கட்டிட பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது.
காண்டிராக்டருக்கு நடிகர் பாபி சிம்ஹா பல லட்சம் ரூபாய் தராமல் ஏமாற்றி விட்டதாக புகார் எழுந்தது. ஜமீரின் உறவினர் உசேனும் பாபி சிம்ஹாவும் பள்ளி நண்பர்கள் என்பதால் இந்த கட்டிட பணிகளை அவர் ஒத்துக் கொண்டார்.
இந்நிலையில் கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் காண்டிராக்டர் ஜமீரின் உறவினர் உசேன் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கொடைக்கானல் செண்பகனூரில் உள்ள எனது தங்கும் விடுதிக்கு கடந்த மாதம் 20-ந் தேதி நடிகர் பாபி சிம்ஹா மற்றும் கே.ஜி.எப். படத்தின் வில்லன் நடிகர் ராமச்சந்திர ராஜ் மற்றும் அடையாளம் தெரியாத 2 பேர் வந்து வீடு கட்டும் பிரச்சினையில் தலையிட்டால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.
எனவே அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.
அதன் பேரில் நடிகர்கள் பாபி சிம்ஹா, ராமச்சந்திர ராஜ் உள்பட 4 பேர் மீது கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- விருதுநகர் மேஜிஸ்திரேட் கோர்ட்டில் கவிதா வழக்கு தொடர்ந்தார்.
விருதுநகர்
விருதுநகர் கருப்பசாமி நகரை சேர்ந்தவர் கவிதா. இவருக்கும் மதுரை மாவட்டம் திருமங்கலம் பாண்டியன்நகரை சேர்ந்த ராஜாராம் என்பவருக்கு கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இதற்காக 7 பவுன் நகைகள், ரூ.50ஆயிரத்தை பெண் வீட்டார் கொடுத்துள்ளனர். மேலும் திருமணத்திற்காக ரூ.1லட்சம் வரை செலவு செய்தனர். இந்த நிலையில் ராஜாராம் தினமும் மது குடித்து விட்டு வந்து கவிதாவுடன் தகராறு செய்து வந்தார். அத்துடன் பெற்றோரிடம் பணம் வாங்கி வருமாறு மனைவியிடம் வற்புறுத்தி உள்ளார். இதனால் மனைவி கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார்.
மேலும் விருதுநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் அழைத்து பேசியபோது மனைவியை பிரிந்து வாழ்வதாகவும், அவருக்கு 5 பவுன் நகைகள்,ரூ.1½ லட்சம் தருவதாகவும் ராஜாராம் எழுதி கொடுத்தார். ஆனால் பணம், நகை தரவில்லை. இந்த நிலையில் கவிதாவின் பெற்றோர் வீட்டிற்கு வந்த அவர், பணம் தரமுடியாது என கூறி தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து விருதுநகர் மேஜிஸ்திரேட் கோர்ட்டில் கவிதா வழக்கு தொடர்ந்தார். விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் ராஜாராம் மீது வழக்கு தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
- பீட்டர் தங்க நகைகள் விற்பனை மற்றும் அடகு கடை நடத்தி வந்துள்ளார்
- இதில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் மேகலாவிடம் ரூ.1 லட்சம் கடன் கேட்டுள்ளார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளை மேலத்தெருவை சேர்ந்தவர் இம்மானுவேல் மனைவி மேகலா (வயது 36). இவர் களக்காட்டில் தையல் கடை வைத்துள்ளார். இவரது கணவரின் நண்பரான அதே ஊரை சேர்ந்த பீட்டர் (33) தங்க நகைகள் விற்பனை மற்றும் அடகு கடை நடத்தி வந்துள்ளார். இதில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் மேகலாவிடம் ரூ.1 லட்சம் கடன் கேட்டுள்ளார். மேகலா வும் ரூ.1 லட்சம் கொடுத்து ள்ளார். ஆனால் அவர் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதுபற்றி மேகலா களக்காடு போலீசில் புகார் செய்தார். அதன் பின்ன ரும் பணம் கொடு க்காமல் ஏமாற்றி வந்துள்ளார்.
சம்பவத்தன்று பீட்டர், மேகலாவின் வீட்டின் அருகே சென்று கொண்டிருந்தார். இதைப்பார்த்த மேகலா, பீட்டரிடம் பணத்தை திருப்பிக் கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த பீட்டர் நீ பணம் தரவே இல்லை. பணத்தை கேட்டால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார். மேலும் மேகலாவை அவதூறாக பேசியுள்ளார். இதுபற்றி மேகலா களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி பீட்டரை தேடி வருகின்றனர்.
- ஏதோ குடிகாரன் பேசுவதாக நினைத்துக்கொண்ட கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ, இதனை பெரிதுபடுத்தவில்லை.
- பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி காலாப்பட்டு தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏவாக இருப்பவர் கல்யாணசுந்தரம். நேற்று காலை இவர் வழக்கம்போல் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது எம்.எல்.ஏவுக்கு போன் செய்த மர்மநபர், முன்னாள் அமைச்சர், எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம் தானே, எனக்கேட்டு தகாத வார்த்தைகளால் திட்டினார்.
அதற்கு கல்யாண சுந்தரம் எம்.எல்.ஏ. அந்த நபரிடம் யார் வேண்டும் எனக் கேட்ட போது, உங்களுக்கு பதில் சொல்ல முடியாது. என்னை ஏதும் உங்களால் செய்ய முடியாது, பாக்குறீங்களா? எனக்கூறி மிரட்டல் விடுத்தார்.
இதையடுத்து கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. என்னுடைய தொலைபேசி எண் உங்களுக்கு எப்படி கிடைத்தது எனக்கேட்ட போது, காரைக்காலில் ஒருவரிடமிருந்து வாங்கினேன் என்றார்.
இதையடுத்து கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. இப்போது உனக்கு என்ன வேண்டும் எனக் கேட்டபோது, என்னிடம் வைத்துக்கொள்ளாதீர்கள் எனக்கூறி போனை துண்டித்துவிட்டார்.
ஏதோ குடிகாரன் பேசுவதாக நினைத்துக்கொண்ட கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ, இதனை பெரிதுபடுத்தவில்லை.
இதற்கிடையே திருபுவனை தொகுதி பா.ஜனதா ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ அங்காளனுக்கு நேற்று மாலை சொல்போனில் பேசிய மர்ம நபர், என்னிடம் மோத வேண்டாம், நீங்கள் முன்னாள் அமைச்சரா இருந்தா என்ன? என்கிட்ட வச்சுக்காதீங்க எனக்கூறி அங்காளன் எம்.எல்.ஏ.வை திட்டினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அங்காளன் எம்.எல்.ஏ. திருக்கனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் மிரட்டல் விடுத்த நபரின் செல்போன் எண்ணை ஆய்வு செய்தனர்.
விசாரணையில் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ மற்றும் அங்காளன் எம்.எல்.ஏ. ஆகிய இருவரையும் தொலைபேசியில் மிரட்டியது ஒரே நபர் என்றும், ஒரே எண்ணை பயன்படுத்தியதும் தெரியவந்தது.
மேலும் அந்த செல்போன் நாகை மாவட்டத்தில் இருந்து பேசியது பதிவாகி இருந்தது.
இதனால் உஷாரான போலீசார், காரைக்கால் மாவட்ட போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த எண்னை வைத்து விசாரணை நடத்தியதில் எம்.எல்.ஏ.க்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த வர் நாகப்பட்டினத்தை அடுத்த செம்பியன்மகாதேவி கிராமத்தை சேர்ந்த நரேந்திரன் (வயது40) என்பது தெரியவந்தது.
அவரை கைது செய்ய காரைக்கால் போலீசார் நாகப்பட்டினம் விரைந்தனர். அங்கு பதுங்கியிருந்து நரேந்திரனை பிடித்து காரைக்கால் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நரேந்திரன் எதற்காக எம்.எல்.ஏ.க்களுக்கு மிரட்டல் விடுத்தார்? இதன் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- ஆட்டோ டிரைவர் பிரகாஷ் என்பவர் குடிபோதையில் பெண்களை தகாத வார்த்தைகளால் பேசியபடி சென்றார்.
- தனலட்சுமி பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் செய்தார்.
பொள்ளாச்சி,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் ரோடு பெரியார் காலனியை சேர்ந்தவர் சசி. இவரது மனைவி தனலட்சுமி (வயது 37). கூலித் தொழிலாளி.
சம்பவத்தன்று இவரது வீட்டின் அருகே வசிக்கும் ஆட்டோ டிரைவர் பிரகாஷ் (37) என்பவர் குடிபோதையில் அந்த பகுதியில் உள்ள பெண்களை தகாத வார்த்தைகளால் பேசியபடி சென்றார்.
இதனை பார்த்த தனலட்சுமி ஏன் இவ்வாறு பேசி செல்கிறீர்கள் என கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த பிரகாஷ் அவரையும் தகாத வார்த்தைகளால் பேசி விட்டு சென்றார். பின்னர் அவர் அந்த வழியாக வேலை முடிந்து நடந்து வந்த தனலட்சுமியின் கணவர் சசியை வழிமறித்து உனது மனைவியை ஒழுங்காக வைத்து கொள். இல்லை என்றால் கொலை செய்து விடுவேன் என மிரட்டி அவரையும் தாக்கி விட்டு சென்றார்.
இது குறித்து தனலட்சுமி பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குடி போதையில் பெண்ணை தகாத வார்த்தைகளால் பேசி அவரது கணவரை தாக்கிய ஆட்டோ டிரைவர் பிரகாஷை கைது செய்தனர். பின்னர் போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- மதுபோதையில் இருந்த ரத்தினசாமி 2 பேரையும் தகாத வார்த்தைகளால் பேசினார்.
- கொலை மிரட்டல் விடுத்த ரத்தினசாமியை கைது செய்து விசாரிக்கின்றனர்.
கோவை,
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள ஆத்து பொள்ளாச்சியை சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி மவுசிகா (வயது 26). இவரது தாய் சகுந்தலா அ.தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார்.
மவுசிகா வீட்டின் அருகே பெரியப்பா ரத்தினசாமி (63) என்பவர் வசித்து வருகிறார். அவர் அடிக்கடி மது போதையில் அந்த பகுதியை சேர்ந்த பொது மக்களை தகாத வார்த்தைகளால் பேசி தொல்லை கொடுத்து வந்தார். இது குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர் மவுசிகாவிடம் புகார் கூறினார்.
சம்பவத்தன்று மவுசிகா மற்றும் அவரது தாய் சகுந்தலா ஆகியோர் இது குறித்து கேட்பதற்காக சென்றனர். அப்போதும் மதுபோதையில் இருந்த ரத்தினசாமி 2 பேரையும் தகாத வார்த்தைகளால் பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து மவுசிகா ஆனைமலை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது மகளை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்த ரத்தினசாமியை கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கிராம நிர்வாக அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் அருகேயுள்ள கான்சாபுரம் கிராம நிர்வாக அதிகாரியாக இருப்பவர் கணேஷ் பாண்டியம்மாள்(வயது30). இவர் பணியில் இருந்தபோது அதே பகுதியை சேர்ந்த ரத்தினம் என்பவர் வந்தார்.
அவர் தான் பட்டா மாற்ற மனு செய்ததாகவும், அது இன்னும் தரப்படவில்லை என்றும் கேட்டுள்ளார். அதற்கு ஆவணங்களை பார்த்து பட்டா மாறுதல் சரி செய்து தருவதாக கணேஷ் பாண்டியம்மாள் கூறியுள்ளார்.
அப்போது ஆத்திரமடைந்த ரத்தினம் கிராம நிர்வாக அதிகாரி மற்றும் அவரது உதவியாளர் சுனிதா ஆகியோரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கூமாபட்டி போலீஸ் நிலையத்தில் கணேஷ் பாண்டியம்மாள் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காரைக்குடியில் சப்- இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணி யாற்றி வருபவர் லெனின். இவர் அங்குள்ள மகளிர் போலீஸ் நிலையம் முன்பு வந்தபோது அப்துல் கனி உள்பட 4 பேர் பெண் போலீஸ் நிஷாந்தினி, அமலரூபம் ஆகியோரிடம் போக்சோ வழக்கு தொடர் பாக வந்த பெண்ணிற்கு மருத்துவ பரிசோதனை செய்ய கூடாது என்று வற்பு றுத்தி கொண்டிருப்பதை பார்த்தார்.
இதனை கண்ட அவர் பெண் போலீசாரிடம் இவ்வளவு கடுமையாக பேசக்கூடாது என்று 4 பேரிடமும் கூறி உள்ளார். இதில் ஆத்திரமடைந்த 4 பேரும் அவரை தகாத வார்த்தை பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது பற்றி லெனின் காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் வழக்குப்பதிவு செய்து அப்துல் கனி என்ப வரை கைது செய்தார்.
மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
- நவம்பர் 27 ஆம் தேதி இந்தூரை அடைந்த ராகுல் காந்தி மறுநாளே உஜ்ஜைன் மாவட்டத்திற்கு சென்றார்.
- இந்தூரில் உள்ள இனிப்பு கடைக்கு கொலை மிரட்டல் கடிதங்கள் வந்தன.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் கமல் நாத் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் கடிதங்களை அனுப்பிய 60 வயது நபர் மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூரில் வைத்து கைது செய்யப்பட்டார். இவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ் நாட்டின் கன்னியாகுமாரியில் ராகுல் காந்தி துவங்கிய பாரத் ஜோடோ நடைபயணத்தின் போது கொலை மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டது. யாத்திரையின் அங்கமாக கடந்த நவம்பர் 27 ஆம் தேதி இந்தூரை அடைந்த ராகுல் காந்தி மறுநாளே உஜ்ஜைன் மாவட்டத்திற்கு சென்றார்.

இந்தூரில் உள்ள இனிப்பு கடைக்கு கொலை மிரட்டல் கடிதங்கள் வந்தன. இதனை அனுப்பியவர் தயாசிங் என்கிற ஐஷிலால் ஜாம் என்று போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசார் இவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், ரயில் மூலம் தப்ப இருந்த ஜஷிலால் ஜாமை ரயில் நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
இவர் எதற்காக அந்த மாதிரியான கடிதத்தை அனுப்பினார் என்ற விவரங்கள் மர்மமாகவே உள்ளது. கொலை மிரட்டல் விடுத்ததை அடுத்து இவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்தூரில் பாரத் ஜோடோ நடைபயணத்தின் போது ராகுல் காந்தி மற்றும் கமல் நாத் ஆகிய இருவரும் வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்படுவர் என்று ஜஷிலால் ஜாம் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
- வீட்டினுள் வைத்து பூட்டி பெட்ரோல் ஊற்றி கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
- ரூ.3 லட்சம், ரூ.5 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களை வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி வீராம்பட்டி னம் பகுதியை சேர்ந்தவர் கலைஞர். மீனவர்.
இவரது மனைவி ஜமுனா (வயது 32). திருமணத்தின் போது பெண் வீட்டினர் 25 பவுன் நகை, ரூ.3 லட்சம், ரூ.5 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். கலைஞர், அடிக்கடி குடித்துவிட்டு, பணத்தை சூதாட்டத்தில் செலவழித்து வந்ததாக தெரிகிறது.
இதனை தட்டிக் கேட்ட ஜமுனாவை தாக்கி வந்துள்ளார். மேலும், பணம், நகை வாங்கி வருமாறு அடித்து வந்துள்ளார். இதற்கிடையே, கலைஞர் வேறு ஒரு பெண்ணுடன் பழகி, 2-வது திருமணம் செய்ததாக தெரிகிறது. இதனை ஜமுனா தட்டிக் கேட்டபோது அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுபற்றி அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே புகார் அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கலைஞர், வழக்கை வாபஸ் பெறா விட்டால், வீட்டினுள் வைத்து பூட்டி பெட்ரோல் ஊற்றி கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இதற்கு கணவர் குடும்பத்தினர் உடந்தையாக இருப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றி ஜமுனா, அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில், கணவர் கலைஞர், மாமியார் மரக தம், நாத்தனார் சித்ரா ஆகிய 3 பேர் மீதும் வரதட் சணை கொடுமை, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.