என் மலர்
நீங்கள் தேடியது "kovai"
- கோவை அண்ணா மார்க்கெட் 40 வருடங்களுக்கு மேலாக நடந்து வருகிறது.
- 500-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஏலம் எடுத்து கடை நடத்தி வருகிறோம்.
கோவை, மே.22-
கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.
கோவை அண்ணா மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் மாடசாமி, செயலாளர் கனகராஜ், தலைமை பொருளாளர் அப்துல் சமது ஆகியோர் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:-
கோவை அண்ணா மார்க்கெட் 40 வருடங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. இதனிடைய கோவை மாநகராட்சியால் பொது ஏலத்தில் விடப்படும் கடைகளை கடந்த 35 வருடங்களுக்கு மேலாக சுமார் 500-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஏலம் எடுத்து கடை நடத்தி வருகிறோம்.
காய்கறிகள், மளிகை பொருட்கள் போன்ற வியாபாரங்கள் செய்து வருகிறோம். இதில் வியாபாரிகள் அவரது குடும்பத்தினர், கூலி தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் என ஆயிரக்கணக்கானோர் வாழ்வாதாரமும் அடங்கி உள்ளது.
இதனிடையே கோவை மாநகராட்சி மத்திய மண்டல உதவி கமிஷனர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அண்ணா மார்க்கெட்டில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளது.
எனவே சீரமைப்பு பணிகள் முடியும் வரை கோவை கவுண்டம்பா ளையம் எருக்கம்பெணி மைதானத்தில் தற்காலிகமாக எங்களது செலவில் கடைகளை அமைத்து வியாபாரம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அப்பகுதியில் மின்சாரம், குடிநீர் கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. எனவே இந்த விவாகரத்தில் கலெக்டர் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வணிகம் செய்து கொண்டே மார்க்கெட்டை சீரமைக்க வழிவகை ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.
- எஸ்.எஸ்.எல்.சி. பொது தேர்வு முடிவுகள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.
- மாணவ, மாணவிகள் ஏராளமானோர் பள்ளிக்கு வந்திருந்தனர்.
கோவை,மே.22-
எஸ்.எஸ்.எல்.சி. பொது தேர்வு முடிவுகள் கடந்த வெள்ளிக்கிழமை வெளி யானது. இதனையடுத்து இன்று முதல் பிளஸ்-1 வகுப்பு மாணவர் சேர்க்கை தமிழ்நாடு முழுவதும் தொடங்கி உள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் இன்று காலை 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான சேர்க்கை தொடங்கியது.
கோவையில் உள்ள அனைத்து அரசு பள்ளி களிலும் இன்று காலை முதலே மாணவ, மாண விகள் ஏராளமானோர் தங்களது பெற்றோர்களுடன் பள்ளிக்கு வந்திருந்தனர்.
அவர்கள் பள்ளியில் தாங்கள் படிக்க விரும்பும் பாடப்பிரிவினை தேர்வு செய்து கொண்டனர். 10-ம் வகுப்பு வரை ஒரே மாதிரியான பாடப்பிரிவில் பயின்று வந்த மாணவர்கள் தற்போது பிளஸ் 1 வகுப்பில் பல்வேறு பாடப்பிரிவுகள் இருப்பதால் சில மாணவர்கள் எந்த பாடப்பிரிவை தேர்வு செய்வது என தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.
அப்படி குழப்பமாக இருக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள், மாணவர்கள் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் அவர்கள் எந்த பிரிவை எடுத்து படிக்கலாம் என்பது குறித்து அறிவுரை வழங்கி வருகின்றனர். கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலுமே மாணவர் சேர்க்கையானது விறு,விறுப்பாக நடைபெற்று வருகிறது.
- கேரளாவில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர்.
- படுகாயம் அடைந்த 4 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
கோவை,
கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள மண்ணுத்தியை சேர்ந்தவர் ராஜூ(வயது50). இவரது மனைவி சம்ளா(43). இவர்களது மகள் ஆயிஷா (18) மகன் இஷான் (14).
தற்போது பள்ளிகள் கோடை விடுமுறை என்பதால் அனைவரும் காரில் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றனர். பின்னர் அங்கு ஜாலியாக சுற்றிப்பார்த்து விட்டு மீண்டும் சொந்த ஊருக்கு காரில் புறப்பட்டனர்.
கார் கோத்தகிரி ரோட்டில் பவானி சாகர் காட்சி முனை அருகே சென்ற போது திடீரென காரின் பிரேக் பிடிக்காமல் போனது.
அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் இருந்த தடுப்பில் மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர்.
அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அனைவரும் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சஜீத் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
- வீட்டை பூட்டி சாவியை தந்தையிடம் கொடுத்து விட்டு சென்றார்.
கோவை
கோவை சரவணம்பட்டி விளாங்குறிச்சி ரோட்டை சேர்ந்தவர் சஜீத் (வயது40). தனியார் நிறுவன ஊழியர்.
இவர் சம்பவத்தன்று தனது சொந்த ஊரான பாலக்காட்டிற்கு சென்றார். இதனால் வீட்டை பூட்டி சாவியை தந்தையிடம் கொடுத்து விட்டு சென்றார்.
இந்த நிலையில் சஜீத்தின் வீட்டிற்கு அவரது தந்தை சென்றார்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், அவரது மகன் சஜீத்துக்கு தகவல் தெரிவித்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சஜித், வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டில் வைக்கப்பட்டிருந்த 7 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.
இதனையடுத்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடி சென்ற கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
- கணவன்-மனைவி 2 பேரும் தூய்மை பணியாளராக வேலை செய்து வருகின்றனர்.
- இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை,
கோவை உக்கடம் அருகே எஸ்.எச் காலனியை சேர்ந்தவர் பரமசிவம் (வயது47).
இவரது மனைவி லதா (41). கணவன்-மனைவி இருவரும் கோவை மாநகராட்சியில் தூய்மை பணியாளராக வேலை செய்து வருகின்றனர்.
பரமசிவத்திற்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனை அவரது மனைவி கண்டித்து வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று பரமசிவம் மீண்டும் குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். அப்போ து மீண்டும் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த பரமசிவம் வீட்டில் இருந்த சாணி பவுடரை எடுத்து கரைத்துக் குடித்தார். சிறிது நேரத்தில் அவரது வீட்டில் மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி யடைந்த அவரது மனைவி அவரை மீட்டு கோவையில் உள்ள அரசு ஆஸ்ப த்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து உக்கடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புவனேஷ்வரி தனியார் நிறுவன ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
- புவனேஷ்வரி சம்பவ இடத்திலேயே கணவர் கண்முன்னே பரிதாபமாக இறந்தார்
கோவை,மே.22-
கோவை தொண்டா முத்தூர் அருகே உள்ள குப்பேபாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ். கூலித் தொழிலாளி. இவரது மனைவி புவனேஷ்வரி (வயது25). தனியார் நிறுவன ஊழியர்.சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் குப்பேபாளை யத்தில் இருந்த தொண்டாமுத்தூர் நோக்கி சென்றனர். மோட்டார் சைக்கிள் வண்டிக்காரனூர் அருகே சென்றபோது அந்த வழியாக மாட்டுவண்டி சென்றது. திடீரென மாடு மிரண்டு மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். இதில் தலையில் படுகாயம் அடைந்த புவனேஷ்வரி சம்பவ இடத்திலேயே கணவர் கண்முன்னே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய பிரகாஷை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த தகவல் கிடைத்ததும் தொண்டாமுத்தூர் போலீசார் விரைந்து சென்று இறந்த புவனேஷ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்தது
- ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் மற்றும் பயிற்சிகளையும் வழங்கினார்.
கோவை,
கோவை மாநகரில் போலீசாரின் மன அழுத்த த்தை குறைக்கும் வகையில் மாநகர காவல்துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் போலீசாருக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறார்.
இதில் போலீசாருக்கான உடற்பயிற்சிக்கூடம், வாகனங்களில் 'மினி' நூலகம், போலீசாரின் குடும்பத்தினருக்கான விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் இன்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தீவிரவாதம் தடுப்பது தொடர்பான பயிற்சி கூட்டம் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் கோவை மாநகர போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் பலர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு தீவிரவாதம் தடுப்பதற்கு உரித்தான ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் மற்றும் பயிற்சிகளையும் வழங்கினார்.
இதில் குற்றச்செயல்களை எவ்வாறு கண்டறிவது எவ்வாறு அதனை தொடர்ந்து கண்காணிப்பது, அதனை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து அறிவுரைகள், ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் பலர் கலந்து பயிற்சி பெற்றனர்.
- வீட்டில் மாடியில் துணியை உலர்த்தி கொண்டு இருந்தார்
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை, -
கோவை பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (54). இவர் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் வங்கியில் காசாளராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று, அவர் தனது வீட்டில் மாடியில் துணியை உலர்த்தி கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரியநாயக்கன்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- இயற்கை அழகை பாதுகாக்க வேண்டும்.
- குழந்தைகளுக்கு உயர்கல்வியை பெற்று சுயவேலை வாய்ப்பை உருவாக்கலாம் என கூறினார்
கோவை
மே தினத்தினை முன்னிட்டு தொண்டா முத்தூர் வட்டாரம் இக்கரை போளுவாம்பட்டி, முள்ளாங்காடு சமுதாய நலக் கூடத்தில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது :-
குடியரசு தினம், மே தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உலக தண்ணீர்தினம், உள்ளாட்சி தினம் ஆகிய நாட்களில் கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மே தினத்தில் கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூர் வட்டாரம், இக்கரை போளுவாம்பட்டி, ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெறுகின்றது.
இந்த கிராமம் அழகானதாக உள்ளது. தூய்மை பாரத இயக்கம், நம்ம ஊரு சூப்பரு போன்ற திட்டங்களில் இந்த கிராமம் முன்னோடியாக விளங்கி வருகிறது. நொய்யல் ஆறு இந்தப் பகுதியில் தான் உள்ளது. இயற்கை அழகை பாதுகாக்க வேண்டும். பிளா ஸ்டிக் பயன்படு த்துவதை தவிர்க்க வேண்டும். குப்பைகளை தரம் பிரித்து தூய்மை காவலர்களிடம் கொடுக்க வேண்டும்.
இதன் மூலம் நீர்நிலைகள் மற்றும் சுற்றுச் சூழலும் பாதுகாக்கப்படும். கழிவறைகளை பயன்படுத்த வேண்டும். சிறுவாணி சுய உதவி குழுக்கள் உள்ளிட்ட மகளிர் சுய உதவிக்குழுக்கள் இங்கு உள்ளன. சுய உதவிக்குழுக்கள் மூலம் இந்த பகுதியில் சிறப்பு பெற்ற பொருட்களை தயாரித்து விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சுய உதவிக் குழுக்களுக்கு திறன் பயிற்சிகள் வழங்கப்ப டுகிறது. அதனை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
நான் முதல்வன் திட்டம், கல்லூரி கனவு போன்ற திட்டங்கள் செயல்படுத்த ப்படுகிறது. குழந்தைகள் அனைவரும் கல்வி கற்க வேண்டும். குழந்தை திருமணத்தை தவிர்க்க வேண்டும். குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் இருக்க கூடாது. இந்த இந்த ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
பள்ளி படிப்பு முடிக்கும் குழந்தைகளுக்கு கல்லூரி கல்வியை பயின்றால்தான் அவர்களுக்கான சரியான வேலை வாய்ப்பை பெற முடியும். கோவை மாவட்டத்தில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. பல்வேறு மாவட்ட ங்கள், மாநிலங்களை சேர்ந்த வர்களுக்கு வேலைவா ய்ப்பை வழங்கும் இடமாக நம் மாவட்டம் திகழ்கிறது. புதுமை பெண்கள் திட்டம், உள்ளிட்ட அரசின் திட்டங்க ளை சிறப்பாக பயன்படுத்தி குழந்தை களுக்கு உயர்கல்வியை பெற்று சுய வேலை வாய்ப்பை உருவாக்கலாம்.
உயர்ந்த பணி வாய்ப்பினை பெறலாம். குழந்தை திருமணம் இல்லாத கிராமமாகவும், குழந்தை தொழிலாளர் இல்லாத கிராமமாகவும், சிறப்பான ஊராட்சியாக உருவாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது.
- 2 மயில்கள் மீது மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தது.
கோவை,
கோவையில் தேசிய பறவையான மயில்கள் தொடர்ந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மின் கம்பியில் சிக்கி மயில்கள் உயிரிழ ப்பதை தடுக்க வனத்துறை யினர் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரி க்கை விடுத்து உள்ளனர்.
கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளான துடியலூர், வடவள்ளி, நரசீபுரம், தொண்டாமுத்தூர், மதுக்கரை உள்ளிட்ட கோவையின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான மயில்கள் உணவிற்காக கூட்டம் கூட்டமாக விளை நிலங்களிலும், மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கும் வருகை தருகின்றன.
இந்நிலையில் கோவை மாநகரின் முக்கிய பகுதியான ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. அதனை சுற்றி காலி இடங்கள் ஏராளமாக உள்ளன. அங்கு மயில்கள் கூட்டம் கூட்டமாக காணப்படும். இந்நிலையில் அவை மின் கம்பிகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழக்கும் சம்பவங்களும் அவ்வப்போது நடந்து வருகின்றன.
இந்நிலையில் இன்று ரேஸ்கோர்ஸ் தாமஸ் பார்க் பகுதியில் 2 மயில்கள் சுற்றி வந்தது. பின்னர் ஒரு பகுதியில் இருந்த மற்றொரு பகுதிக்கு பறந்து செல்ல முயன்ற போது அப்பகுதியில் இருந்த டிரான்ஸ்பார்மரில் எதிர்பாராத விதமாக சிக்கியது. இதில் 2 மயில்கள் மீது மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தது. மயில்கள் மின் கம்பியில் சிக்கி பரிதாபமாக பலியாகும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது பறவை ஆர்வலர்கள் இடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
இதனை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.