என் மலர்
நீங்கள் தேடியது "3 arrested"
- மேச்சேரி அருகே சிந்தாமணியூர் பென்னாகரத்தை சேர்ந்தவர் அருண்.
- அதே பகுதியை சேர்ந்த அவரிடம் இருந்து ரூ.500, செல்போன் ஆகியவற்றை வழிப்பறி செய்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே சிந்தாமணியூர் பென்னாகரத்தை சேர்ந்தவர் அருண். ஜவுளிக்கடைக்கு சென்று விட்டு வந்த இவரை அதே பகுதியை சேர்ந்த பாலச்சந்திரன், சாரதி, பரத் ஆகியோர் பாரப்பட்டி காலனி பகுதியில் மிரட்டி அவரிடம் இருந்து ரூ.500, செல்போன் ஆகியவற்றை வழிப்பறி செய்தனர். இது குறித்து அருண் மேச்சேரி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பாலச்சந்திரன், சாரதி, பரத் ஆகியோரை கைது செய்தனர்.
- சிகிச்சை பெற்று வந்த ரகுபதி நேற்று முன்தினம் இரவு இறந்தார்.
- சாரங்கபாணி, ராஜாமணி, அனிதா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த வடக்குத்து கிராமத்தில் வசிப்பவர் விஸ்வநாதன். இவரது தம்பி சாரங்கபாணி. இவ்விரு குடும்பத்தாருக்கு இடையே சில தினங்களுக்கு முன்பாக ஏற்பட்ட தகராறில், விஸ்வநாதன், அவரது மனைவி கஸ்தூரி, மகன் ரகுபதி, மருமகள் வைதேகி ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பான புகாரின் பேரில் சாரங்கபாணி, அவரது மனைவி ராஜாமணி, மகன்கள் உதயசூரியன், ரஞ்சினிகுமார், மருமகள்கள் அனிதா, பரிமளா ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியல் சிகிச்சை பெற்று வந்த ரகுபதி (எலக்ட்ரீசியன்) நேற்று முன்தினம் இரவு இறந்தார். இதனைத் தொடர்ந்து போலீசார், இந்த வழக்கினை கொலை வழக்காக மாற்றினர். இந்த வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய வலியுறுத்தி ரகுபதியின் உறவினர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதாக உறுதியளித்தனர்.
அதன்படி, சாரங்கபாணி, ராஜாமணி, அனிதா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள உதயசூரியன், ரஞ்சினிகுமார், பரிமளா ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். தலைமறைவாக உள்ளவர்களின் செல்போன் எண்ணின் டவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். நெய்வேலி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சாரங்கபாணி உறவினர் வீடுகளில் இரவு நேரங்களில் நெய்வேலி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். அவர்கள் நெய்வேலியை விட்டு தப்பிச் செல்லமுடியாதவாறு போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
- நரசிம்மஜோதி தலைமையிலான காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
- மண் கடத்த பயன்படுத்தப்பட்ட 2 டிராக்டர்கள், ஒரு பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் காவல் உதவி ஆய்வாளர் நரசிம்மஜோதி தலைமையிலான காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது மூக்கனூர் அனந்தாங்கல் ஏரியில் 3 பேர் 2 டிராக்டர்களில் கடத்துவதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் மண் அள்ளிக் கொண்டிருந்தனர். இதைபார்த்த காவலர்கள், அங்கு விரைந்து சென்று, மண் கடத்தியதாக புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்த டிரைவர்கள் மணிகண்டன்(25), சிவா(25), உலகுடையாம்பட்டை சேர்ந்த மாதேஷ்(20) ஆகியோரை காவலர்கள் கைது செய்து, மண் கடத்த பயன்படுத்தப்பட்ட 2 டிராக்டர்கள், ஒரு பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து வாகனங்களின் உரிமையாளர்கள் மூக்கனூர் கிராமத்தை சேர்ந்த மகேஸ்வரி, மதியழகன், பன்னீர் ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- போலீசார் காரில் சோதனை செய்தபோது அதில் 3 மூட்டைகளில் 300 கிலோ போதை பொருட்கள் கடத்தி வந்ததுகண்டுபி டிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
பெங்களூருவில் இருந்து மூட்டை மூட்டையாக பான் மசாலா ஹான்ஸ் புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு கடத்தி வரப்படுவது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்துடி.எஸ்.பி. மகேஷ் தலைமையிலான போலீசார் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கர்நாடக மாநில பதிவை கொண்ட கார் அந்த வழியாக வேகமாக வந்ததை பார்த்த போலீசார் அதனை தடுத்து நிறுத்தினார்கள். போலீசாரை கண்டதும் நிற்காமல் அதி வேகமாக சென்ற கார் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேகம் பிடித்தது. இருப்பினும் காரை சுமார் 20 கிலோமீட்டர் தூரம் துரத்தி சென்று மடக்கி பிடித்த போலீசார் காரில் சோதனை செய்தபோது அதில் 3 மூட்டைகளில் 300 கிலோ போதை பொருட்கள் கடத்தி வந்ததுகண்டுபி டிக்கப்பட்டது. தொடர்ந்து காரில் பயணம் செய்த விருத்தாசலம் பகுதியை சேர்ந்த ஜெய பாண்டியன் (43,) சிறுபாலன் (27 )மற்றும் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எம் .எஸ். தர்கா பகுதியை சேர்ந்த சாகுல் அமீது (45 )உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிதம்பரம் நகரில் அரசு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதனர்.
- போலீசார் ரெயில் நிலையம் மற்றும் பஸ் நிலையம் அருகே திடீர் சோதனை செய்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் அரசு மதுபானக்கடை மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரகுபதிக்கு தகவல் வந்தது. அவரது உத்தரவின் பேரில் நகர சப்-இன்ஸ்பெக்டர்கள் சங்கர், லெட்சுமிராமன் மற்றும் தனிப்படை போலீசார் ெரயில் நிலையம் மற்றும் பஸ் நிலையம் அருகே திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சிதம்பரம் ெரயில் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடை அருகில், மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தை சேர்ந்த கவுஸ்பாஷா (வயது 50) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து கள்ளத்தனமாக விற்பனைக்கு வைத்திருந்த 75 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.இதனையடுத்து சிதம்பரம் பஸ் நிலையம் டாஸ்மாக் கடை அருகே சிதம்பரம் கள்ளுகடைசந்தைச் சேர்ந்த தியாகராஜன் (38) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 45 மதுபாட்டில்களையும், அதே பகுதியில் சிதம்பரம் எம்.கே. தோட்டம் ராஜா (38) என்பவரை கைது செய்து அவரிடமிருத்து 68 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சிதம்பரம் நகர போலீசார் மொத்தம் 188 மதுப்பாட்டில் களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
- போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட னர்.
- பொது இடத்தில் மது அருந்தி கொண்டிருந்த 3பேரை போலீசார் கைது செய்தனர்
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் போலீசார் அம்பேத்கர் நகர் மற்றும் ரெயில் நிலையம் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்ட னர். அப்போது ெரயில் நிலையம் அருகில் உள்ள பொது இடத்தில் மது அருந்தி கொண்டிருந்த சின்ன கள்ளிப்பட்டை சேர்ந்த நவநீதன்(31), ராஜா(26). சாவடி பாட்டை தெருவை சேர்ந்த இளவரசன் (26)ஆகி யோரை போலீசார் கைது செய்தனர்.
- பள்ளப்பட்டி உடையார் காடு பகுதியில் லேத் பட்டறை வைத்து நடத்தி வருகிறார்.
- முகத்தை மூடிக்கொண்டு வந்த 3 மர்ம நபர்கள், தாங்கள் கொண்டு வந்த அரிவாளால் 3 பேரையும் சாரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர்.
சேலம்:
சேலம் கந்தம்பட்டி மூலப்பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 46). இவர் பள்ளப்பட்டி உடையார் காடு பகுதியில் லேத் பட்டறை வைத்து நடத்தி வருகிறார்.
கடந்த ஜனவரி 25-ந் தேதி இவரது பட்டறைக்கு தலையில் ஹெல்மெட் மற்றும் கைக்குட்டையால் முகத்தை மூடிக்கொண்டு வந்த 3 மர்ம நபர்கள், தாங்கள் கொண்டு வந்த அரிவாளால் பாஸ்கர் மற்றும் அவருடன் இருந்த செவ்வாபேட்டை நரசிம்மன்செட்டி தெருவை சேர்ந்த சிவகுமார் (44), கந்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த சாரதி (18) ஆகிய 3 பேரையும் மூவரையும் சாரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர்.
படுகாயம் அடைந்த மூவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து புகாரின் பேரில் பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் இன்று காலை பாஸ்கர் உள்ளிட்டோரை வெட்டிய சம்பவத்தில் தொடர்புடைய ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்த மருதமுத்து பரத் (23), இதே பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வன் மகன் சாமுவேல் (20), விஜயகுமார் மகன் பாலமுருகன் (20) ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மதுரை அருகே 2¼ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
- கஞ்சா விற்பனையை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சமூக விரோதிகள் அதிகளவில் கஞ்சா விற்பனை செய்து வருகின்றனர். இதனை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து போதிய பலனில்லை. கஞ்சா விற்பனையை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் திருமங்கலம் மது விலக்கு தடுப்பு போலீசார் நேற்று உசிலம்பட்டி ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது அணைப்பட்டி அருகே உள்ள கல்யாணிபட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த உத்தப்பநாயக்கனூரை சேர்ந்த மூர்த்தி(26), கல்லூத்தை சேர்ந்த பெருமாள்(52) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். ஆனால் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதனால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு மோட்டார் சைக்கிளை சோதனையிட் போது 1 கிலோ 150 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதனை பறிதல் செய்த போலீசார் மூர்த்தி,பெருமாளை கைது செய்தனர்.
இதேபோல் உசிலம்பட்டி அருகே உள்ள கீரிபட்டியை சேர்ந்த செல்லபாண்டி(45) என்பவர் வீட்டில் சோதனையிட்ட போது 1 கிலோ 100 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. மதுவிலக்கு போலீசார் அதனை பறிமுதல் செய்து செல்லபாண்டியை கைது செய்தனர்.
- போலீசாரிடம் துப்பாக்கி காட்டி மிரட்டிய வழக்கு மேலும் ஒருவரை பிடித்து விசாரணை
- இது தொடர்பாக தெர்மல் போலீசார் கமலம் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர்.
கடலூர்:
நெய்வேலி அருகே உள்ள தொப்புளிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கமலம் இவர் தனது வீட்டில் வேலை செய்த குத்தண்டி ராஜேஸ்வரி தம்பதியரின் 5 வயது பெண் குழந்தையை தன்னுடைய மகள் மற்றும் மகனுடன் சேர்ந்து கொலை செய்தார். இது தொடர்பாக தெர்மல் போலீசார் கமலம் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர். இதனையடுத்து ஜாமினில் வெளிவந்த கமலம் கொலை வழக்கில் சாட்சி சொல்லாமல் இருக்க ராஜேஸ்வரி உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பணம் கொடுப்பதாக கூறியிருந்தார். பின்னர் கமலம் பணம் தராததால் சம்பவத்தன்று கமலத்தை ராஜேஸ்வரி உறவினர்கள் கொலை செய்ய முயன்றனர் அப்போது அங்கு வந்த போலீசார் அந்த கும்பலை தடுத்த போது அவர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். தப்பி ஓடியவர்களை பிடிக்க போலீசார் 2 தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த தேடுதல் வேட்டையில் நெய்வேலி மாற்று குடியிருப்பு பி2 இளங்கோவன் மனைவி சுந்தரி (வயது 33) வடலூர் அருகே கல்லுக்குழி காலணியை சேர்ந்த விஜய் (24) ஆகியோரை தெர்மல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர் இந்நிலையில் வடலூர் பகுதியைச் சேர்ந்த வீரமுத்து என்பவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்தனர். பிடிபட்ட மூன்று பேரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.
விசாரணையில் இவர்களிடம் சமூக வலை தளங்களில் விற்பனை செய்வோர் மூலம் ஏர்கான் துப்பாக்கியை வாங்கி இருப்பது தெரியவந்தது. மேலும் சம்பவம் நடந்த முன்தினம் நள்ளிரவு அந்தப் பகுதியில் மினிலாரி ஒன்று இரும்பு பொருட்களை ஏற்றி கொண்டு வந்தது. அந்த மினி லாரியை மடக்கி துப்பாக்கியை காட்டி மிரட்டி இரும்பு பொருட்களுடன் மினி லாரியை தூக்கி சென்றதும் தெரிய வந்தது. அந்த மினி லாரியை இவர்கள் வடலூர் சந்தை பின்புறம் கொண்டு சென்று நிறுத்தி இருந்தனர். உடனே போலீசார் அங்கு சென்று பார்த்தபோது இரும்பு பொருட்கள் இல்லாமல் லாரி மட்டும் இருந்தது. இதன்பின்னர் மினி லாரியை ஓட்டி வந்த நபர் கொடுத்த புகாரின் பேரில் இதற்குப் பின்னால் சந்தேகத்தின்பேரில் 10 பேர் கொண்ட கும்பல் இருக்கக்கூடும் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் போலீசார் இதற்கு பின்னால் பலர் இருக்கக்கூடும் என்பதால் 3 நபர்களிடம் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
- சந்தனம், தேக்கு உள்ளிட்ட விலை உயர்ந்த மரங்கள் உள்ளது.
- மரங்கள் வெட்டி கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட முதுமலை புலிள் காப்பகத்தின் வெளி மண்டல பகுதியாக மசினகுடி, சிங்காரா, சீகூர் வனச்சரகங்கள் உள்ளன.
இங்கு சந்தனம், தேக்கு உள்ளிட்ட விலை உயர்ந்த மரங்கள் உள்ளது. இதுதவிர காட்டு யானைகள், புலிகள், செந்நாய்கள், கரடிகள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
இந்தநிலையில் மசினகுடி அருகே உள்ள சீகூர் வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது தெரிய வந்தது.
இதை தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் உத்தரவின் பேரில், துணை இயக்குனர் அருண்குமார் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து சந்தன மரங்களை வெட்டி கடத்தியவர்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொ ள்ளப்பட்டது.
இதையடுத்து சந்தேகத்தின் பேரில் 3 பேரை பிடித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் சந்தன மரங்களை வெட்டி கடத்தியது உறுதி செய்யப்பட்டது. மேலும் பலர் அதற்கு உடந்தையாக இருப்பது கண்டுபி டிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக தெங்குமரஹாடா பகுதியை சேர்ந்த பண்டன் (வயது 32), மசினகுடி பகுதியை சேர்ந்த பாலன், சந்திரன் ஆகிய 3 பேர் மீது சீகூர் வனச்சரகர் முரளி உள்ளிட்ட வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
தொடர்ந்து பண்டன், பாலன், சந்திரன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை கூடலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, சந்தன மரங்கள் வெட்டி கடத்திய வழக்கில் மேலும் பலருக்கு தொடர்பு உள்ளது. இதனால் அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர். மசினகுடி அருகே வனப்பகுதியில் சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.