search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jewelery theft"

    • வீட்டு கதவை உடைத்து 8 பவுன் நகை திருட்டு போனது.
    • இதுகுறித்து சேத்தூர் ஊரக போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள கணபதி சுந்தரநாச்சியாபுரம் வாட்டர் டேங்க் தெருவை சேர்ந்தவர் மலையம்மாள் (வயது55). இவரது கணவர் முத்துச்சாமி, ஏற்கனவே இறந்து விட்டார்.

    இவரது மகன் மானாமதுரையிலும், மகள் ராஜபாளையத்திலும் வசித்து வருகின்றனர். கடந்த வாரத்தில் மலையம்மாள் மகனை பார்ப்பதற்காக மானாமதுரை சென்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பக்கத்து வீட்டுக்காரரிடம் செல்போனில் பேசியுள்ளார். அப்போது அவர் வீடு திறந்து கிடப்பதாக கூறியுள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த மலையம்மாள் ஊருக்கு வந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு அதில் இருந்த தங்க செயின், மோதிரம் உள்பட 8 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது. யாரோ மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகைகளை திருடிச்சென்றுள்ளனர்.

    இதுகுறித்து சேத்தூர் ஊரக போலீஸ் நிலையத்தில் மலையம்மாள் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கருத்தபாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • வீட்டுக்குள் இருந்த பீரோ மற்றும் மேஜை ஆகியவை உடைக்கப்பட்டு அதில் தங்க மற்றும் வெள்ளி நகைககள் கொள்ளையடி க்கப்பட்டு இருந்தன.
    • கொள்ளை தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது.

    கோவை

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் வீட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று ள்ளனர். பொள்ளாச்சி சேரன் நகர் லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் குழந்தைவேல் (வயது 68). அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி கலைச்செல்வி (61). மகன் விஷ்ணு (32).

    குழந்தைவேலின் மூத்த மகள் கவிதா என்பவர் கோவை தண்ணீர் பந்தல் பகுதியில் புதிதாக வீடு கட்டி உள்ளார். அந்த வீட்டின் புதுமனை புகுவிழா நடந்தது. இதற்காக குழந்தைவேல், வீட்டை பூட்டி விட்டு விழாவுக்கு சென்று விட்டார்.

    4 நாட்களுக்கு பிறகு பொள்ளாச்சிக்கு திரும்பிச் சென்றார். அங்கு அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. வீட்டுக்குள் இருந்த பீரோ மற்றும் மேஜை ஆகியவை உடைக்கப்பட்டு அதில் தங்க மற்றும் வெள்ளி நகைககள் கொள்ளையடி க்கப்பட்டு இருந்தது. கம்மல், செயின், தங்க நாணயம், வளையல் உள்பட 10¾ பவுன் தங்க நகையும், வெள்ளி குங்கும சிமிழ், சந்தன கிண்ணம் ஆகிய வையும் கொள்ளை போய் இருந்தது.

    இதுபற்றி பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீஸ்நி லையத்தில் குழந்தைவேல் புகார் செய்தார். இன்ஸ்பெ க்டர் வெங்கடேசன் நேரில் சென்று விசாரணை மேற்ெகாண்டார். தொடர்ந்து கொள்ளை தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது.

    • திசையன்விளை அருகே உள்ள சிவந்தியாபுரத்தை சேர்ந்தவர் கணேசன். டிரைவர்.
    • இவர் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். மாலையில் வீட்டுக்கு வந்தபோது கதவு திறந்து கிடந்துள்ளது.

    திசையன்விளை:

    திசையன்விளை அருகே உள்ள சிவந்தியாபுரத்தை சேர்ந்தவர் கணேசன். டிரைவர். இவரது மனைவி அம்மா பொண்ணு (வயது 32). கூலி தொழிலாளி. இவர் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுள்ளார்.

    மாலையில் வீட்டுக்கு வந்தபோது கதவு திறந்து கிடந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகை மற்றும் ரூ.3500 திருட்டு போயிருந்தது. உடனே அவர் திசையன்விளை போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதய லெட்சுமி வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் பொரு த்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
    • திருடர்களை தேடி வருகின்றனர்.

    கோவை,

    கோவை கருமலை செட்டிப்பாளையம் சுந்தரம் வீதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது 55). இவர் நூற்பாலை உதிரி பாகம் விற்பணையாளராக வேலை செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு சாவியை மறைவாக இடத்தில் வைத்து வேலைக்கு சென்றார். அப்போது அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த ராஜேஷ் என்பவர் ரமேஷ்குமாருக்கு போன் செய்து வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருப்பதாக தெரிவித்தார்.

    இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனே வீடு திரும்பினார். உள்ளே சென்று பார்த்த போது அறையில் இருந்த மேஜையின் லாக்கரை உடைத்து இதில் இருந்த 3 பவுன் தங்க நகை மற்றும் வீட்டு பத்திரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    அப்போது ராஜேஷ் மற்றொரு வீட்டின் பூட்டும் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்தார். அங்கு 4½ பவுன் தங்க நகைகள் திருட்டு போயிருந்தது. பின்னர் இதுகுறித்து ரமேஷ்குமார் ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு தகவல் அளித்தார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காமிராக்களை ஆய்வு செய்தனர்.இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அடுத்தடுத்த வீடுகளில் நகைகளை கொள்ளை அடித்த திருடர்களை தேடி வருகின்றனர். 

    • வைஷாலி தங்கி ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
    • வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பீளமேடு,

    திருச்சியை சேர்ந்தவர் வைஷாலி (வயது 30). இவர் கோவை பீளமேட்டை அடுத்த பிருந்தவன் நகரில் தங்கி ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

    இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கையில் அடிப்பட்டு முறிவு ஏற்பட்டது. அதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் தான் அணிந்திருந்த 7 பவுன் நகைகளை கழற்றி அறையில் பீரோவில் வைத்திருந்தார்.

    இந்த நிலையில் தன்னால் வேலை செய்ய முடியாததால் அவர் ஒரு வேலைக்காரரை பணிக்கு அமர்த்தினார். சம்பவத்தன்று வைஷாலி தனது நகைகளை அணிவதற்காக பீரோவை திறந்தார்.

    அப்போது பீரோவில் இருந்த நகைகள் மாயமாகி இருந்தது. இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீடு முழுவதும் தேடி பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை. பின்னர் இதுகுறித்து வைஷாலி பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை திருச்சி ரோடு ஹைவே காலனியை சேர்ந்தவர் சம்பத்குமார். இவரது மனைவி அமுதா (51). சம்பவத்தன்று இவர் சர்சுக்கு சென்றார். பின்னர் வீடு திரும்பினார்.

    அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 6 பவுன் நகை திருட்டு போயிருந்தது தெரியவந்து.

    பின்னர் இது குறித்து அவர் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரது வீட்டுக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

    மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்ட பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அவர்களிடம் இருந்து 22 பவுன் நகைகள் மீட்டக்கப்பட்டன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் வீடு புகுந்து கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வந்தன. குற்றவாளிகளை பிடிக்க ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் தீவிர ரோந்து சுற்றி வந்தனர்.

    சம்பவத்தன்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது 2 பேர் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். இதையடுத்து 2 பேரும் போலீஸ் நிலை யத்திற்கு அழைத்துச் செல்லப் பட்டனர்.

    அவர்க ளிடம் விசாரணை நடத்திய போது பொன்னையாபுரம் எம்.ஜி.ஆர். நகர் பாண்டி மகன் தங்கராஜ் (வயது 33), கருமலையான் மகன் செல்லமுத்து (24) என தெரியவந்தது. இவர்கள் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் வீடு புகுந்து நகை திருடியுள்ளனர். இதையடுத்து அவர்களிடம் இருந்த 14 பவுன் நகைகள் மீட்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

    பரமக்குடி அருகே நயினார்கோ விலை அடுத்துள்ள மும்முடி சாத்தானை சேர்ந்த ரோஜா என்பவரது வீட்டில் கடந்த வாரம் 8 பவுன் நகை, வெள்ளி கொலுசு திருடு போனது. இது தொடர்பாக நயினார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய பெண் வீடு புகுந்து திருடியது தெரிய வந்தது. இதையடுத்து போலீ சார் அந்த பெண்ணை கைது செய்து 8 பவுன் நகையை மீட்டனர்.

    • வேலை காரணமாக இன்பராஜ் பாளை டார்லிங் நகர் 3-வது தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
    • பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 6 பவுன் தங்க நகை திருடப்பட்டு இருந்தது.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த பழையபேட்டை நாராயணசுவாமி கோவில் தெருவை சேர்ந்தவர் இன்பராஜ்(வயது 40). இவர் வேலை காரணமாக பாளை டார்லிங் நகர் 3-வது தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

    நகை திருட்டு

    கடந்த 14-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் இன்பராஜ் வெளியூருக்கு சென்றுவிட்டார். நேற்று நள்ளிரவு நெல்லை திரும்பிய அவர் வீட்டிற்கு சென்று பார்த்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உடனே குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 6 பவுன் தங்க நகை திருடப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக அவர் பாளை போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலை தேடி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர். திருட்டு போன நகையின் மதிப்பு ரூ.2.40 லட்சம் என்று கூறப்படுகிறது.

    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு தயாயும், மகனும் கண்ணியா குமரிக்கு உறவினர்களுடன் சுற்றுலா சென்றனர்.
    • செல்போன் மூலம் சீனிவா சனின் மனைவி கவுரிக்கு தகவல் தெரிவித்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி லிங்காரெட்டி பாளையத்ைத சேர்ந்தவர் சீனுவாசன் (வயது 50). இவர் துபாயில் உள்ள தனி யார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கவுரி, மகன் பாலகிருஷ்ணன் ஆகியோர் லிங்காரெட்டி பாளையத்தில் வசித்து வருகிறார்கள். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு தயாயும், மகனும் கண்ணியா குமரிக்கு உறவினர்களுடன் சுற்றுலா  சென்றனர். வீட்டில் வளர்த்து வந்த நாயை பக்கத்துவீட்டை சேர்ந்த வரிடம் பார்த்து கொள்ளு மாறு சொல்லி விட்டு சென்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்திய மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோ வை உடைத்து அதில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற னர். அப்போது நாய்க்கு உணவு வைப்ப தற்காக பக்கத்து வீட்டை சேர்ந்த வர் அங்கு வந்தார். அப்போது வீடு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். 

    இதுகுறத்து அவர் செல்போன் மூலம் சீனிவா சனின் மனைவி கவுரிக்கு தகவல் தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த அவர் உடனே ஊருக்கு திரும்பி னார். அப்போது பீரோவில் இருந்த 50 பவுன் நகை, ரூ.10 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சி யடைந்தார். இதுகுறித்து உடனடியாக பண்ருட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. தகவல் அறிந்த போலீஸ் டி.எஸ்.பி. சபிபுல்லா, இன்ஸ்பெக்டர் நந்தகுமார் ஆகியோர் அங்கு விரைந்தனர். அங்குள்ள கண்காணிப்பு கேமராவை பார்த்தபோது அது உடைக்கப்பட்டு டிஸ்க் திருடுபோய் இருந்தது. 

    கொள்ளையர்கள் பற்றி துப்புதுலக்க மோப்பநாய் கடலூரில் இருந்து வர வழைக்கப்பட்டது. அது வீட்டை சுற்றி ஓடி சாலை யோரம் நின்றது. உடனே போலீசார் கொள்ளை நடந்த வீட்டின் வெளிபுற பகுதி யில் உள்ள கண்கா ணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது 4 பேர் ஆம்னி வேனில் சென்றது கண்டு பிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் ஆம்னிவேனில் சென்ற 4 பேரை பிடித்து விசா ரணை நடத்தி வருகிறா ர்கள். கொள்ளை நடந்த வீட்டில் உள்ள நாய் யாரைக்கண்டாலும் துடிப்பாக கவ்வி பிடிக்கும். ஆனால் கொள்ளை நடந்த அன்று நாய் அமைதியாக இருந்துள்ளது. எனவே இந்த நாய்க்கு உணவு அளித்தவர் மீதும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. எனவே அவரிடமும், கவுரியின் உறவினரிடமும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • காரைக்கால் நிரவியில் வீட்டின் முன்பக்க பூட்டை உடைத்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
    • கடந்த 14ந் தேதி, தனது குடும்பத்துடன் புதுச்சேரியில் உள்ள உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு சென்றனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே நிரவி ரோஜா நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் தமிழகத்தில் உள்ள ஒரு சிமெண்ட் கடையில் காசாளராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 14ந் தேதி, தனது குடும்பத்துடன் புதுச்சேரியில் உள்ள உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, நேற்று முன்தினம் வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கபட்டு, படுக்கையறையில் இருந்த அலமாரி உடைக்கப்பட்டு, 4 பவுன் தங்க நகை திருடுபோய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து, அவர் நிரவி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடிவருகின்றனர்.

    • விழுப்புரத்தில் துணிகர சம்பவம், மின் ஊழியர் வீட்டில் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
    • மகளை பார்ப்பதற்காக கணேசன் தனது மனைவியுடன் சென்னைக்கு சென்றார்.

    விழுப்புரம்:

    விழுப்புரத்தில் சென்னை-தேசிய நெடுஞ்சா–லையில் சலாமத் நகரை சேர்ந்தவர் கணேசன் (வயது 54). இவர் விழுப்புரத்தில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் போர்மேனாக உள்ளார். இவரது மகள் சென்னை–யில் உள்ளார். அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. எனவே மகளை பார்ப்ப–தற்காக கணேசன் தனது மனைவியுடன் சென்னைக்கு சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் அங்கிருந்த பீரோவை உடைத்து நகையை எடுத்து சென்றனர். இன்று காலை அந்த வழியாக சென்ற அக்கம் பக்கத்தினர் கணேசனின் வீடு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி யடைந்தனர். இதுகுறித்து அவர்கள் செல்போன் மூலம் கணே–சனுக்கு தெரி வித்தனர். அவர் இது குறித்து தாலுகா போலீசில் புகார் செய்தார்.


    புகாரில் வீட்டின் பீரோ வில் 10 பவுன் நகை இருந்தது என தெரிவித்துள் ளார். அதன்பேரில் போலீசார் கணேசனின் வீட்டுக்கு சென்றனர். பீரோவில் இருந்த நகை மற்றும் பொருட்கள் மாயமாகி இருந்தது. கணேசன் வந்தால்தான் கொள்ளை போன பொருட்களின் முழு நிலவரம் தெரியவரும். இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர். கொள்ளயைர்களை பற்றி துப்புதுலக்க கைரேகை நிபுணர்கள் வீட்டுக்கு விரைந்தனர். அவர்கள் கொள்ளையர்களின் ரேகையை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மதுரையில் சமையல் காண்டிராக்டர் வீட்டில் நகை திருடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    • செல்போன் திருட்டில் ஈடுபட்ட நபர்கள் தான் சமையல் காண்டிராக்டர் வீட்டிலும் ைகவரிசை காட்டியது தெரியவந்தது.

    மதுரை

    மதுரை வசந்தநகர் 1-வது தெருவை சேர்ந்தவர் சீனிவாச சங்கர நாராயணன். சமையல் காண்டிராக்டராகன இவர் கடந்த 29-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திருச்சியில் நடந்த உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்று விட்டார்.

    இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டுக்குள் புகுந்து 40 பவுன் நகை, ரூ. 20 லட்சம் ரொக்கம் திருடிவிட்டு தப்பினர்.

    இதுகுறித்து சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். திருட்டு நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்ேபாது 2 பேர் நள்ளிரவில் சீனிவாச சங்கர நாராயணன் வீட்டுக்கு செல்வது தெரியவந்தது.

    இதை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் கடந்த 26-ந் தேதி ஆண்டாள்புரம் பகுதியில் நரேந்திரன் என்பவரது வீட்டில் கேமரா செல்போன் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட அதே நபர்கள் சமையல் காண்டிராக்டர் வீட்டிலும் ைகவரிசை காட்டியது தெரியவந்தது.

    போலீசார் கேமிராவில் பதிவான 2 பேரின் உருவங்களை வைத்து விசாரணை நடத்தியதில் அதில் ஒருவர் மதுரை வைத்தியநாதபுரத்தை சேர்ந்த அந்தோணி கணபதி மகன் பாண்டியராஜன் (வயது 22) ஆவார். இவர் மீது அடிதடி, கொள்ளை உள்பட பல்வேறு வழக்குகள் மதுரை நகர் போலீஸ் நிலையங்களில் பதிவாகி உள்ளன.

    இதனை தொடர்ந்து போலீசார் பாண்டியராஜன் வீட்டில் சென்று அவரை கைது செய்தனர். போலீஸ் நிலையத்தில் அழைத்து விசாரணை நடத்தியதில் தனது கூட்டாளி கணேசன் என்பவருடன் சேர்ந்து அவர் சமையல் காண்டிராக்டர் வீட்டில் நகை, பணம் திருடியுள்ளார்.

    அவரிடம் இருந்து 30 பவுன் நகை, ரூ. 8 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மீதம் 10 பவுன் நகை, ரூ.12 லட்சம் ரொக்கம் கணேசன் எடுத்து சென்றுள்ளார். தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    சமையல் காண்டிராக்டர் வீட்டில் கொள்ளை நடந்த 13 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

    கண்ணமங்கலம் அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் 1 கிலோ வெள்ளிப்பொருட்கள் மற்றும் ரூ.25 ஆயிரத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள காட்டுக்காநல்லூர் காலனியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 52). முன்னாள் ராணுவவீரர். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு வங்கியில் வணிக தொடர்பாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வரலட்சுமி ஆசிரியையாக உள்ளார். இவர்களுக்கு அனுஷா என்ற மகளும், அவினாஷ் என்ற மகனும் உள்ளனர். அவினாஷ் பெங்களூருவில் தங்கி வேலைபார்த்து வருகிறார்.

    அன்பழகன் தனது மனைவி மற்றும் மகளுடன் 2 நாட்களுக்கு முன்பு அவினாசை பார்க்க பெங்களூருவுக்கு சென்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர்கள் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 1 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.25 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. மேலும் வீட்டில் இருந்த சில ஆவணங்களையும் மர்மநபர்கள் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.

    இது குறித்து கண்ணமங்கலம் போலீஸ் நிலையத்தில் அன்பழகன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தடய அறிவியல் துறையை சேர்ந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தர்ராஜும் அங்கு வந்து கதவு மற்றும் பீரோவில் பதிவாகியிருந்த மர்மநபர்களின் கைவிரல் ரேகைகளை பதிவு செய்தார்.

    அதன் அடிப்படையில் திருட்டுசம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் பழைய குற்றவாளிகளா? என்ற கண்ணோட்டத்தில் போலீசார் விசாரணை நடத்தி அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    ×