திசையன்விளை அருகே பட்டப்பகலில் பூட்டிய வீட்டில் நகை திருட்டு

திசையன்விளை அருகே உள்ள சிவந்தியாபுரத்தை சேர்ந்தவர் கணேசன். டிரைவர். இவர் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். மாலையில் வீட்டுக்கு வந்தபோது கதவு திறந்து கிடந்துள்ளது.
திசையன்விளை அருகே  பட்டப்பகலில் பூட்டிய வீட்டில் நகை திருட்டு
Published on

திசையன்விளை:

திசையன்விளை அருகே உள்ள சிவந்தியாபுரத்தை சேர்ந்தவர் கணேசன். டிரைவர். இவரது மனைவி அம்மா பொண்ணு (வயது 32). கூலி தொழிலாளி. இவர் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுள்ளார்.

மாலையில் வீட்டுக்கு வந்தபோது கதவு திறந்து கிடந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகை மற்றும் ரூ.3500 திருட்டு போயிருந்தது. உடனே அவர் திசையன்விளை போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதய லெட்சுமி வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் பொரு த்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com