வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு

மூதாட்டியின் தங்க செயினை மர்ம நபர் பறித்து கொண்டு ஓடிவிட்டார்.இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர் .
வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு
Published on

முசிறி:

திருச்சி மாவட்டம் முசிறி அழகாப்பட்டி சாலையில் திருமால் நகரை சேர்ந்தவர் குழந்தை தெரசா( வயது 78).

இவர் வீட்டை பூட்டி விட்டு, தனது மகளின் மாமியார் இறந்ததற்கான தேவை காரியத்திற்காக துணி எடுத்து விட்டு மகள் வீட்டிற்கு சென்று விட்டு நள்ளிரவு 1.45 மணிக்கு வீடு திரும்பி உள்ளார்.

அப்போது முன்பக்க கதவு திறந்திருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்துள்ளார்.

அப்போது உள்ளே மறைந்திருந்த மர்ம நபர் குழந்தை தெரசா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க செயின்களை பறித்து கொண்டு ஓடிவிட்டார்.

சம்பவம் குறித்து குழந்தை தெரசா 100 எண்ணிற்கு புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் நள்ளிரவு சுமார் 2.30 மணி அளவில் வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைத்து தடயவியல் ஆய்வு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து குழந்தை தெரசா காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர் .

முசிறியில் பூட்டிய வீடுகளை மர்ம நபர்கள் கண்காணித்து திருடி வருவது முசிறி பகுதி பொது மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com