வீட்டு கதவை உடைத்து 8 பவுன் நகை திருட்டு

வீட்டு கதவை உடைத்து 8 பவுன் நகை திருட்டு போனது. இதுகுறித்து சேத்தூர் ஊரக போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
வீட்டு கதவை உடைத்து 8 பவுன் நகை திருட்டு
Published on

ராஜபாளையம்

ராஜபாளையம் அருகே உள்ள கணபதி சுந்தரநாச்சியாபுரம் வாட்டர் டேங்க் தெருவை சேர்ந்தவர் மலையம்மாள் (வயது55). இவரது கணவர் முத்துச்சாமி, ஏற்கனவே இறந்து விட்டார்.

இவரது மகன் மானாமதுரையிலும், மகள் ராஜபாளையத்திலும் வசித்து வருகின்றனர். கடந்த வாரத்தில் மலையம்மாள் மகனை பார்ப்பதற்காக மானாமதுரை சென்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பக்கத்து வீட்டுக்காரரிடம் செல்போனில் பேசியுள்ளார். அப்போது அவர் வீடு திறந்து கிடப்பதாக கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மலையம்மாள் ஊருக்கு வந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு அதில் இருந்த தங்க செயின், மோதிரம் உள்பட 8 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது. யாரோ மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகைகளை திருடிச்சென்றுள்ளனர்.

இதுகுறித்து சேத்தூர் ஊரக போலீஸ் நிலையத்தில் மலையம்மாள் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கருத்தபாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com