என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாளையில் பூட்டிய வீட்டில் 6 பவுன் நகை திருட்டு
    X

    பாளையில் பூட்டிய வீட்டில் 6 பவுன் நகை திருட்டு

    • வேலை காரணமாக இன்பராஜ் பாளை டார்லிங் நகர் 3-வது தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
    • பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 6 பவுன் தங்க நகை திருடப்பட்டு இருந்தது.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த பழையபேட்டை நாராயணசுவாமி கோவில் தெருவை சேர்ந்தவர் இன்பராஜ்(வயது 40). இவர் வேலை காரணமாக பாளை டார்லிங் நகர் 3-வது தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

    நகை திருட்டு

    கடந்த 14-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் இன்பராஜ் வெளியூருக்கு சென்றுவிட்டார். நேற்று நள்ளிரவு நெல்லை திரும்பிய அவர் வீட்டிற்கு சென்று பார்த்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உடனே குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 6 பவுன் தங்க நகை திருடப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக அவர் பாளை போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலை தேடி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர். திருட்டு போன நகையின் மதிப்பு ரூ.2.40 லட்சம் என்று கூறப்படுகிறது.

    Next Story
    ×