search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "covai"

    • கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை திருடியுள்ளார்.
    • புகார் பேரில் வடவள்ளி போலீஸார் ரேவதியை கைது செய்துள்ளனர்..

    கோவை, 

    கோவை வீரகேரளம் பொன்னுசாமி நகரை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி மலர்(48). இவர் சம்பவத்தன்று கோவை கடைவீதிக்கு வந்து பொருட்களை வாங்கி விட்டு மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக வீரகேரளம் செல்லும் பஸ்சில் சென்றார். வீட்டிற்கு சென்று தனது பையை எடுத்து பார்த்தார். அப்போது, தங்க செயின் மாயமாகி இருந்தது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர் நகைைய திருடியது தெரியவந்தது.

    இதுகுறித்து அவர் வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடிய கடலூர் நெல்லி குப்பத்தை சேர்ந்த ரேவதி(28) என்பவரை கைது ெசய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.மேலும் அவரிடமிருந்து 4 பவுன் செயினை மீட்டனர்.

    • தேசியக்கொடியை முண்டாசாக அணிந்து வந்திருந்ததால் பரபரப்பு
    • உறவினர்கள் சொத்துக்களை அபகரித்ததாக மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

    கோவை. 

    ஈரோடு மாவட்டம் கருங்கல் பாளையத்தை சேர்ந்தவர் தவுலத். இவர் இன்று காலை தனது மனைவி, மாமியார், மகள், மற்றும் குழந்தையுடன் கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.

    பின்னர் தவுலத் மற்றும் அவரது குடும்பத்தினர் கலெக்டர் அலுவலக சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். கோஷங்களும் எழுப்பினர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் ரேஸ்கோர்ஸ் போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டவ ர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் கலைந்து செல்ல மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து போலீசார் அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி சென்று வண்டியில் ஏற்றி ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது போராட்ட த்தில் ஈடுபட்ட பெண் கூறியதாவது:-

    எங்களுக்கு மேட்டு ப்பாளையம் பகுதியில் 8½ ஏக்கர் நிலம் உள்ளது. ஆனால் அந்த இடத்தை எனது உறவினர்கள், எனக்கு தெரியாமலேயே தி.மு.க பிரமுகர் ஒருவருக்கு விற்று விட்டனர்.

    அதில் எனக்கான பங்கையும் அவர்கள் தரவில்லை. இதுதொ டர்பாக நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இன்று குடும்பத்துடன் சாலைமறியலில் ஈடுபட்டோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

    • விதிகளை மீறி வாகனங்களை நிறுத்தியதால் வாக்குவாதம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து மர்லினை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை. 

    கோவை ஆர்.எஸ்.புரம் போலீஸ் ஸ்டேஷனில் போக்குவரத்து காவலராக இருப்பவர் மதுசூதனன். இவர் நேற்று மருதமலை அடிவாரத்தில் போக்குவரத்து சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது, அங்கு கோவை தொண்டாமுத்தூரை சேர்ந்த இளநீர் கடை நடத்தி வரும் மார்லின்(35), என்பவர் போக்குவரத்து விதிகளை மதிக்காமல் வேகமாக வந்தார்.

    இதை பார்த்த போலீஸ்காரர் மதுசூதனன், மார்லின் வாகனத்தை நிறுத்தினார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த மார்லின், போக்குவரத்து போலீஸ்காரரை தாக்க முயன்றார்.

    இதுகுறித்து மதுசூதனன் கோவை ஆர்எஸ். புரம் போலீசில் புகார் செய்தார்.பு போலீசார் வழக்கு பதிவு செய்து மர்லினை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் மண்டல செயலாளர் உபைதுர் ரஹ்மான் தலைமையில் நடந்தது.
    • நெல்லையில் வருகிற 9-ந் தேதி நடைபெறும் கூட்டத்துக்கு கோவையிலிருந்து 50 வாகனத்தில் செல்ல தீர்மானம்

    கோவை, 

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் கொங்கு மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மண்டல செயலாளர் உபை துர் ரஹ்மான் தலைமையில் உக்கடம் சாக்கு வியாபா ரிகள் சங்க கட்டிடத்தில் நடந்தது.

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் கிழக்கு மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன், திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பிரகாஷ், கோவை வடக்கு மாவட்ட செயலாளர் மோகன், மத்திய மாவட்ட பொறு ப்பாளர் ராமகிருஷ்ணன், பாராளுமன்ற துணை பொறுப்பாளர் பால்ராஜ், தொகுதி செயலாளர்கள் கவுண்டம்பாளையம் தொகுதி செயலாளர் சரத் சக்தி, தொண்டாமுத்தூர் தொகுதி செயலாளர் அசிரியா, வால்பாறை தொகுதி செயலாளர் மதிவாணன், திருப்பூர் தெற்கு தொகுதி செயலாளர் செல்வராஜ், ஆனைமலை ஒன்றிய செயலாளர் கண்மணி, குனியமுத்தூர் பகுதி செயலாளர் சுரேஷ் மாநில செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம், குனியமுத்தூர் பகுதி இளைஞரணி செயலாளர் ஜெயக்குமார், கோவை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் தம்பு, வால்பாறை இளைஞர் அணி செயலாளர் ஆறு முகம், குனியமுத்தூர் பகுதி இளைஞர் அணி செயலாளர் மோகன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நெல்லையில் வருகிற 9-ந் தேதி நடைபெறும் சமத்துவ மக்கள் கட்சி பிரமாண்ட கூட்டத்துக்கு கொங்கு மண்டலத்தின் சார்பாக 50 வாகனத்தில் செல்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

    • கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
    • கழிவறை வசதி இல்லாததால் பெண்கள், கர்ப்பிணிகள், முதியோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்

    கோவை. 

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. இதனையொட்டி கலெக்டர் அலுவலகத்திற்கு ஏராளமான மக்கள் வந்து மனு அளித்தனர். கோவை பேரூர் செட்டிபாளையம் இந்திராநகர் பகுதியை சேர்ந்த மக்கள் கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர்.அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கோவை பேரூர் செட்டிபாளையம், இந்திரா நகர் பகுதியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு அருந்ததியர் மக்களுக்கு அரசு சார்பில் 25 குடியிருப்புகள் கட்டித் தரப்பட்டது. அந்த குடியிருப்புகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழுதாகி விட்டது. தற்போது கட்டிடம் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அரசு அதிகாரிகளிடமும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் பலமுறை மனுக்கள் அளித்தும் தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் ஒரு மழை பெய்தால் வீடுகள் இடிந்து விழும் நிலை உள்ளது. மேலும் அப்பகுதியில் கழிவறை வசதி இல்லாததால் பெண்கள், கர்ப்பிணி பெண்கள், முதியோர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.எனவே மாவட்ட நிர்வாகம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உதயநிதி பிறந்தநாளையொட்டி மாதம் முழுவதும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க தீர்மானம்
    • செயற்குழு கூட்டத்துக்கு அவைத்தலைவர் கணபதி ராஜ்குமார் தலைமை தாங்கினார்

    கோவை, நவ.

    கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் கிராஸ்கட் ரோட்டில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்துக்கு அவைத்த லைவர் கணபதி ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் சிறப்புரை யாற்றினார். இதில் வருகிற டிசம்பர் 2-ந் தேதி மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் இளைஞர்கள் அணி கூட்டத்தில் தி.மு.க. இளைஞரணி மாநில செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

    எனவே இந்த கூட்டத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்க வேண்டும். இதுவரை இல்லாத அளவில் கூட்டத்தை நடத்த வேண்டும். இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, மாதம் முழுவதும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில், தி.மு.க. சொத்து பாதுகாப்பு குழு துணை தலைவர் பொங்கலூர் பழனிசாமி, மாநகர் மாவட்ட துணை செயலாளர் கோட்டை அப்பாஸ், தள பதி இளங்கோ, மு.மா.முருகன், நா.பாபு, நோயல் செல்வம், கோவை லோகு, இளைஞர் அணி அமைப்பாளர் தனபால் மற்றும் பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    • சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது
    • வாராந்திர ரெயில் சேவைகளை நிரந்தரமாக இயக்க பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    கோவை, 

    மேட்டுப்பாளையம்-நெல்லை இடையே வாராந்திர ரெயில் சேவை நடைமுறையில் உள்ளது. அதன்படி நெல்லையில் இருந்து ஞாயிறு தோறும் புறப்படும் ரெயில், அடுத்த நாள் காலை மேட்டு ப்பாளை யத்துக்கு செல்லும். இதே போல மேட்டுப்பாளை யத்தில் இருந்து திங்கள்தோ றும் புறப்படும் ரெயில், அடுத்த நாள் நெல்லைக்கு செல்லும்.

    மேலும் இருமார்க்கங்க ளிலும் செல்லும் மேற்கண்ட ரெயில்கள் சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், கீழக்கடை யம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபா ளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்து க்கடவு, போத்தனூர், கோவையில் நின்று செல்கின்றன.

    மேட்டுப்பாளையம்-நெல்லை இடையேயான வாராந்திர ரெயில் சேவை இன்று வரை (27-ந்தேதி) நடைமுறையில் இருக்கும் என்று சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் ஏற்கனவே அறிவித்து இருந்தது.

    இந்த நிலையில் மேற்கண்ட சிறப்பு ரெயில்க ளின் சேவை அடுத்த மாதம் டிசம்பர் 25-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் வெளியிட்டு உள்ளனர்.மேட்டுப்பாளையம்-நெல்லை இடையேயான வாராந்திர ரெயில் சேவை நீட்டிப்பு, பயணிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது:-

    மேட்டுப்பாளையம்-நெல்லை இடையேயான வாராந்திர ரெயில் போக்கு வரத்து பொதுமக்களுக்கு மிகவும் பலனளிக்கும் வகையில் அமைந்து உள்ளது. அதிலும் குறிப்பாக மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் மேற்கண்ட ரெயில் போக்குவரத்தை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.

    எனவே மேட்டுப்பாளை யம்-நெல்லை இடையே யான வாராந்திர ரெயில் போக்குவரத்துக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட காலஇடைவெளியில் நீட்டிப்பு செய்யக்கக்கூடாது. மேலும் அந்த வாராந்திர ரெயில் சேவைகளை நிரந்த ரமாக இயக்குவதற்கான நடவடிக்கை களில் தென்னக ரெயில்வே அதிகாரிகள் ஈடுபட வேண்டும்.

    இவ்வாறு ரெயில் பயணிகள் கூறிஉள்ளனர்.

    • பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    • சரவணம்பட்டி, பச்சாபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது

    ரத்தினபுரி, 

    கோவை மாவட்டத்தின் வடக்கு பகுதியில் அமைந்து உள்ளது சின்னவேடம்பட்டி. ஒரு காலத்தில் இந்த ஊரை சுற்றி எங்கு பார்த்தாலும் விவசாய நிலங்கள் செழித்து காணப்பட்டன. சோளம், பருத்தி, கீரை வகைகள் உள்பட பல்வேறு பயிர்களையும் பயிரிட்டு விவசாயம் செய்து வந்தனர்.

    விவசாயம் செய்து வந்தாலும் அங்கு ஒரு குளம் என்பது கிடையாது. மேலும் மாங்கரை, கணுவாய் உள்ளிட்ட பகுதிகளில் அதீத கனமழை பெய்யும் போது, வெள்ளம் பெருக்கெடுத்து சங்கனூர் ஓடையில் ஓடும். அப்போது கடும் வெள்ளம் காரணமாக குடியிருப்புகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது.

    இதனை தடுக்கவும், விவசாயத்திற்கு தண்ணீர் தேக்கி வைப்பதற்காகவும் உருவாக்கப்பட்டதே சின்னவேடம் பட்டி ஏரி.

    இந்த ஏரி அமைவதற்கு முதன் முதலாக முன்னெடுப்பு எடுத்தவர் 1959-ம் ஆண்டு ஊராட்சி தலைவராக இருந்த வெங்கிடு. இவர் தான் அப்பகுதி மக்களிடம் பேசி, தங்கள் பகுதியில் ஒரு ஏரியை உருவாக்கும் எண்ணத்தை எடுத்து கூறினார். மக்களும் அதற்கு சம்மதம் தெரிவித்தனர்.

    தொடர்ந்து 1962-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சராக இருந்த காமராஜரை சந்தித்து கோரிக்ைக மனு கொடுத்தார்.பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பினாலும், சின்ன வேடம்பட்டியில் ஏரி உருவாக்கியே தீருவேன் என வெங்கிடு முடிவாக இருந்தார்.

    இதற்காக அவர் எம்.எல்.ஏ.தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வும் ஆனார். எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டதும் தனது முதல் கோரிக்கையாக சட்டமன்றத்தில் சின்ன வேடம்பட்டியில் ஏரி அமைக்க வேண்டும் என்பதை கோரிக்கையாக வைத்தார்.

    அப்போதைய முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர், மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருந்த குழந்தை வேலுவையும் நேரில் சந்தித்து வலியுறுத்தினார். தொடர் முயற்சிகள் காரணமாக கடந்த 1984-ம் ஆண்டு சின்னவேடம்பட்டி ஏரி அமைக்க நிதி ஒதுக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது.

    இதை கேட்டதும் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். நிதி ஒதுக்கப்பட்டு ஏரி உருவாவதற்கான பணிகள் தொடங்கின. அங்குள்ள விவசாயிகள் பலரும் தங்கள் விவசாய நிலங்களை ஏரி உருவாவதற்காக கொடுத்தனர். பின்னர் 200 ஏக்கர் பரப்பளவில், ஏரி அமைந்தது. ஏரி அமைந்து 2 முறை மட்டுமே தண்ணீர் வந்துள்ளது.

    இந்த ஏரிக்கு கணுவாயில் இருந்து பன்னீர்மடை ஆஞ்சநேயர் கோவில், துடியலூர், வெள்ளகிணர் பகுதியில் உள்ள ராஜவாய்க்கால் வழியாக சின்னவேடம்பட்டிக்கு தண்ணீர் வருகிறது.

    கடைசியாக 1992-ம் ஆண்டு தண்ணீர் வந்தது. அதன்பிறகு 32 ஆண்டுகளாக ஏரிக்கு தண்ணீர் வரவே இல்லை. இதற்கு பல்வேறு காரண ங்கள் சொல்லப்படுகின்றன. முக்கியமாக தண்ணீர் வரக்கூடிய வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகள், தண்ணீர் வராததால் ஏரி தூர்வாரப்படாமல் அப்படியே விடப்பட்டு விட்டது.

    இதனை சீரமைக்க வெங்கிடுவின் மகனான ராமமூர்த்தியும் கடந்த 2003-ம் ஆண்டு சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தார். ஆனாலும் எதுவும் நடந்தபாடில்லை. பல ஆண்டுகளாக ஏரி தூர்வாரப்படாமல் அப்படியே கிடந்தது.

    இதனை பாதுகாக்க வேண்டும் என கவுசிகா நீர்க் கரங்கள் என்ற தன்னார்வ அமைப்பினர் உறுதியேற்றனர். அவர்க ளுடன் சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு அமைப்பினரும் சேர்ந்து கொண்டனர். இவர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஏரியை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். வாரந்தோறும் ஏரி பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு, தொழிலதிபர்கள், கல்வி நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் உதவியோடு ஏரியை தூர்வாரும் பணியை மேற்கொண்டனர்.

    மேலும் ஏரிக்கு தண்ணீர் வரும் ராஜ வாய்க்காலிலும் தூர்வாரும் பணி மேற்கொ ண்டனர். தூர்வாரும் பணிகள் அனைத்தும் முடிந்து என்றைக்காவது ஒருநாள் தண்ணீர் வரும் என காத்திருந்தனர். அவர்களின் காத்திரு ப்பும், கனவும் வீண் போகவில்லை. இந்த மாதம் பெய்த 2 மழையால் வெள்ளம் ஆறாய் பெருக்கெடுத்தது.

    புகலிடம் தேடிய மழை வெள்ளத்துக்கு அடைக்கலம் கொடுத்தது சின்னவேடம்பட்டி ஏரி. 16 அடி கொள்ளளவு கொண்ட ஏரியில் தற்போது 8 அடி தண்ணீர் வந்துள்ளது. ஏரிக்கு தண்ணீர் வந்ததை பார்த்ததும் கவுசிகா நீர்கரங்கள் அமைப்பினர், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.

    தொடர்ந்து மழை பெய்தால் ஏரி தனது முழு கொள்ளளவையும் எட்டிவிடும் என கவுசிகா நீர்கரங்கள் அமைப்பினர் தெரிவித்தனர். 32 ஆண்டுகளுக்கு பிறகு சின்னவேடம் பட்டி ஏரி நிரம்பியிருப்பது, விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் சின்னவேடம்பட்டி நிரம்பினால், சரவணம்பட்டி, பச்சாபாளையம், அன்னூர், மனியகாரம்பாளையம், கணபதி, அத்திப்பாளையம், பீளமேடு, விளாங்குறிச்சி, காளப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். விவசாயமும் செழிக்கும். 

    • வால்பாறை நகரமன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி முன்னிலையில் பேரணி நடந்தது.
    • 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்

    வால்பாறை, 

    நாடு முழுவதும் பெண்கள் பாதுகாப்பு அமைப்பினர் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை கடைபிடித்து வருகிறார்கள். வால்பாறையில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

    அமைப்பு சார்பில் ஜூலியா ஜெரோசா மற்றும் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் வால்பாறை நகரமன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி முன்னிலையில் பேரணி நடந்தது. பேரணியில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

    மகளிர் அமைப்பினர் ராதா மற்றும் ஸ்ரீவித்யா திசையாலினி, தமிழழகி, சசிகலா ஒருங்கிணைந்தார்கள். ஊர்வலம் நகராட்சி அலுவலகம் வரை திரும்பியது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்க வேண்டும் எனவும் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.  

    • சுகாதார பணிகள் துறை துணை இயக்குநர் தகவல்
    • மலையேற்றத்தின்போது நெஞ்சுவலி ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை வழங்கவும் ஏற்பாடு

    கோவை, 

    சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு உதவ மருத்துவ மையங்கள், அவசர தேவைக்கான முதலுதவி சிகிச்சை மைய ங்கள் அமைக்கப்பட்டு ள்ளன.

    இதுதொடர்பாக சுகாதார பணிகள் துறை துணை இயக்குநர் அருணா கூறியதாவது:-

    மத்திய அரசின் சுகாதா ரம், குடும்ப நலத்து றையின் வழிகாட்டுதல்படி தமிழ்நாடு அரசு, கேரள அரசின் சுகாதாரம், குடும்ப நலத்துறையின் மூலம் கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டத்தை அடிப்படையாக கொண்டு சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு தேவையான சிகிச்சை வசதிகள், மருத்துவ சேவைகள் வழங்க உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த மருத்துவ வசதியை கோட்டயம், ஆலப்புழா, இடுக்கி போன்ற அருகில் உள்ள மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தவும் திட்டமி டப்பட்டுள்ளது.

    மலையேற்ற பாதைகளில் போதுமான மருத்துவ மையங்கள், அவசர தேவைக்கான முதலுதவி வழங்க ஏற்பாடு செய்யப்ப ட்டுள்ளது. மேலும் சபரிம லையில், நிலக்கல், பம்பா, அப்பாச்சி மேடு, நீலிமலை, சாரல்மேடு, சந்நிதானம் ஆகிய இடங்களில் மருத்து வமனைகள் உள்ளன.

    கூடுதலான அவசர மருத்துவ உதவிக்காக மலையேற்றப் பாதையில் பல இடங்களில் அவசர சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் முதலு தவி ரத்த அழுத்தப் பரிசோதனை, ஆக்சிஜன், டிபிபிரிலேட்டர் போன்ற வசதிகளும் செய்யப்ப ட்டுள்ளது.

    பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று வரும் பக்தர்கள் சம்பிராதய விரதம் தொடங்கிய பிறகும் மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.

    மேலும் தங்களின் சிகிச்சை பதிவுகள், மருந்து களை உடன் கொண்டு வர வேண்டும். மலையேற்ற த்தின் போது பக்தர்களுக்கு நெஞ்சுவலி அல்லது மூச்சு த்திணறல் ஏற்பட்டால் அவ ர்கள் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் விழா கோலாகலம்
    • இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது

    குனியமுத்தூர், 

    கோவை- பாலக்காடு ரோடு, குனியமுத்தூருக்கு அருகே உள்ள மதுக்கரையில் பிரசித்திபெற்ற தர்மலிங்கே ஸ்வரர் கோவில் அமைந்து உள்ளது. கோவில், தரைமட்ட த்தில் இருந்து 1600 அடி உயரத்தில் அமைந்து உள்ளது. இங்கு கிட்டத்தட்ட 960 படிகள் ஏறி சென்று, சுவாமியை தரிசனம் செய்ய வேண்டும்.

    மதுக்கரை தர்மலிங்கே ஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் கார்த்திகை தீபத்தி ருவிழா மற்றும் கிரிவலம் ஆகியவை வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அப்போது கோவை மட்டுமின்றி அண்டை மாவட்டங்களிலும் இருந்து பக்தர்கள் அதிகளவில் வந்தி ருந்து கார்த்திகை தீபத்திருவிழாவில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து மனநிறைவுடன் வீடு திரும்புவர்.

    மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நடப்பாண்டுக்கான கார்த்திகை தீபத்திருவிழா இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. முன்னதாக இன்று அதிகாலை 5 மணியளவில் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடத்தப்பட்டன.

    மதுக்கரை தர்மலிங்கே ஸ்வரர் கோவிலில் கார்த்திகை திருவிழாவை கண்டுக ளிப்பதற்காக திருமலை பாளையம், சாவடி, சீரப்பாளையம், அரிசிபாளை யம், எட்டிமடை, கோ வைப்புதூர், சுண்ட க்காமுத்தூர், ராமசெட்டி பாளையம், பி.கே.புதூர், குனியமுத்தூர், குரும்பபா ளையம், ஈச்சனாரி, அறிவொ ளி நகர், எம்ஜிஆர் நகர், மதுக்கரை மார்க்கெட், சுகுணாபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலுக்கு வந்திரு ந்தனர்.

    அப்போது அவர்கள் கோவில் கருவறையில் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளிய சுவாமியை மனமுருக வழிபட்டு வருகின்றனர். மேலும் இந்த கோவிலில் இன்று மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் நேரடியாக கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் இந்த கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா 3 நாட்கள் சிறப்பாக நடத்தப்படுகிறது. இதில் முதல் நாள் திருவிழாவை மதுக்கரை ஊர்மக்களும், 2-வது நாள் திருவிழாவை திருமலை யாம்பாளையம் பொது மக்களும், 3-வது நாள் திருவிழாவை எட்டிமலை ஊர்மக்களும் ஒருங்கிணைந்து செய்து வருகின்றனர்.

    தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் நாளை (திங்கட்கிழமை) கிரிவலம் நடைபெற உள்ளது. மேற்கண்ட 3 நாட்களிலும் சேர்த்து கிட்டத்தட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு, தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மதுக்கரை தர்மலிங் கேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை தீபம் முடிந்து கீழே இறங்கும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். மேலும் நாளை கிரிவலத்தின்போது காலை முதல் மாலைவரை அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவில் கிரிவலத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிலை சுற்றி வலம் வர உள்ளனர். மேலும் தர்மலிங்கேஸ்வரரை மனதார வேண்டி கிரிவலம் சென்று வந்தால் நினைத்த காரியங்கள் நடக்கும், கோர்ட் வழக்குகளில் வெற்றி கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    இந்த கோவிலில் மாதாமாதம் பவுர்ணமி பூஜை சிறப்பாக நடைபெறும். அப்போதும் இங்கு பவுர்ணமி கிரிவலம் நடத்தப்படும்.

    மதுக்கரை தர்மலிங்கே ஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபம் மட்டுமின்றி பிரதோஷம், கிருத்திகை, பவுர்ணமி அன்று சிறப்பு பூஜை நடைபெறும். ஐப்பசி பவுர்ணமி மற்றும் தைப்பூசம் அன்று அன்னா பிஷேகம் நடைபெறுவது வழக்கம்.மேலும் பௌர்ணமி தவிர மாத நாட்களில் தினமும் முக்கால பூஜை நடைபெற்று வருகிறது. அதன்படி காலை 7 மணி முதல் 8 மணி வரையிலும், மதியம் 12 மணி முதல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 5 மணி வரையிலும் முக்கால பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் விசேஷ நாட்களில் மாலை 6.30 மணிவரை கோவிலின் நடை திறந்திருக்கும்.

    பழம்பெருமைவாய்ந்த மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில், 150 ஆண்டுகளுக்கும் மேல் கார்த்திகை தீபம் தொடர்ந்து ஏற்றப்பட்டு வருகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

    • வீட்டுக்குள் புகுந்து உணவுப்பொருட்களை சேதப்படுத்துகிறது
    • குடியிருப்புக்குள் வராமல் தடுக்க பொதுமக்கள் கோரிக்கை

    வால்பாறை, 

    கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் புதுத்தோட்டம் பி.ஏ.பி.நகர், காமராஜர் நகர், துளசிங்க நகர், கூட்டுறவு காலனி, அண்ணா நகர், வால்பாறை டவுன் பகுதி உள்ளிட்ட இடங்களில் கடந்த சில நாட்களாக 100க்கும் மேற்பட்ட சிங்கவால் குரங்குகள் சுற்றி வருகிறது.

    இந்த சிங்கவால் குரங்குகள் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி திரிவதோடு அங்குள்ள வீடுகளின் ஜன்னல் வழியாக சமையலறைக்குள் நுழைந்து, அங்கு வைத்திருக்க கூடிய உணவுப் பொருட்களை சாப்பிட்டு சேதப்படுத்தி வருகிறது.

    சிங்கவால் குரங்குகள் நடமாட்டத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சிங்கவால் குரங்குகளை குடியிருப்பு பகுதிக்குள் வராமல் தடுக்க வனத்துறையினருக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கூட்டுறவு காலனி பகுதியில் 100க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றி வந்தது.

    இதில் ஜெபா என்பவர் வீட்டில் நுழைந்த குரங்குகள் கூட்டம் வீட்டிற்குள் இருந்த உணவு பொருட்கள் சாப்பிட்டு கண்ணாடி பொருட்களை உடைத்து சேதப்படுத்தியது. நீண்ட நேரம் போராட் டத்திற்கு பின்பு சிங்கவால் குரங்குகளை அப்பகுதியில் இருந்து சென்றது. குரங்குகள் குடியிருப்பு பகுதியில் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுத்து உள்ளனர்

    ×