கோவையில் காவலாளி உள்பட 3 பேர் பலி

இளங்கோவன் சம்பவத்தன்று கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டில் நடந்து சென்றார். காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவையில் காவலாளி உள்பட 3 பேர் பலி
Published on

கோவை,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காட்டூரை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 57). காவலாளி. சம்பவத்தன்று இவர் கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டில் நடந்து சென்றார்.

அப்போது அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிள் இளங்கோவன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே இளங்கோவன் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சூலுர் அருகே உள்ள அம்மன் நகரை சேர்ந்தவர் தங்கவேலு (41). சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் அவினாசி - கோவை ரோட்டில் சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகிறார்கள்.

நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் ரங்கசாமி (36). சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் கோவை -மேட்டுப்பாளையம் ரோட்டில் சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ரங்கசாமி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து பெரிய நாயக்கன் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com