என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோவை புறநகரில் ஒரே நாளில் 3 பேர் தற்கொலை
  X

  கோவை புறநகரில் ஒரே நாளில் 3 பேர் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
  • வாழ்க்கையில் விரக்தி அடைந்த கொடிகாத்த குமாரன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  கோவை,

  கோவை பெரிய நாயக்கன் பாளையம் அருகே உள்ள வீரபாண்டி இந்திரா நகரை சேர்ந்தவர் கொடிகாத்த குமரன் (வயது 32). கூலித் தொழிலாளி. இவருக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து கொடிகாத்த குமரனை அவரது மனைவி ரிந்து சென்றார். பின்னர் தனது கணவருக்கு அவர் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த கொடிகாத்த குமாரன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  இது குறித்து பெரிய நாயன்கன் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  வால்பாறையை சேர்ந்தவர் நிசாந் பிரதீப்குமார் (30). கூலித் தொழிலாளி. இவருக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு 2 பேரும் விவாகரத்து பெற்றனர். அதன் பின்னர் நிசாந் பிரதீப்குமார் குடி பழக்கத்துக்கு அடிமையானார்.

  சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வால்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  சூலூர் அருகே உள்ள பெரிய கமலாபட்டியை சேர்ந்தவர் மருதாச்சலம் (46). கூலித் தொழிலாளி. இவர் கடந்த 2 மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  இது குறித்து சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  Next Story
  ×