search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Motorists suffer due to pit dug"

    • மாநகராட்சி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தினமும் 44 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.
    • பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் தினம்தோறும் காலை, மாலை வேளைகளில் இந்த சாலையை கடந்து செல்கின்றனர்.

    மேட்டுப்பாளையம்,

    பவானி ஆற்றில் இருந்து குடிநீர் வடிகால் வாரியம் மூலம் திருப்பூர் மாநகராட்சிக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையத்தில் துவங்கி அன்னூர், அவிநாசி, திருமுருகன் பூண்டி, திருப்பூர் மாநகராட்சி ஆகிய பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தினமும் 44 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.

    இந்த நிலையில் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட 6-வது வார்டு எஸ்.எம்.நகர் செல்லும் வழியில் உள்ள ெரயில்வே கேட் அருகே குடிநீர் வடிகால் வாரியம் மூலம் குடிநீர் குழாய்கள் பதிக்க 10 அடி ஆழத்தில் குழி தோண்டப்பட்டது. ஆனால் இதுவரை அந்த குழியை மூடாமல் விட்டு சென்றுள்ளனர்.

    மேலும் எந்தவித பாதுகாப்பும் இன்றி அந்த குழி இருந்து வருகிறது. வன பத்திரகாளியம்மன் கோவில் செல்லும் பிரதான சாலையான இந்த சாலையில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் தினம்தோறும் காலை, மாலை வேளைகளில் இந்த சாலையை கடந்து செல்கின்றனர். குழியால் வாகனஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

    எனவே அசம்பாவித சம்பவங்கள் ஏதாவது ஏற்படுவதற்கு முன்பு இந்த குழியை மூட நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×