search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Man killed"

    • ெரயில் மோதி இறந்து கிடந்த ஆண் யார்?
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    கோவை,

    கோவை இருகூர்- பீளமேடு செங்களியப்பன் நகர் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயில் மோதி இறந்து கிடந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து கோவை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அவர் ரோஷ் நிற சட்டை வெள்ளை வேட்டி அணிந்திருந்தார். பின்னர் போலீசார் ஆணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ெரயில் மோதி இறந்து கிடந்த ஆண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து தெரியவில்லை. அவர் ெரயில் தண்டவாளத்தை கடந்தபோது ெரயில் மோதி அடிபட்டு இறந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து ெரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    • தாராபுரம் உடுமலை சாலையை கடக்க முயன்ற போது உடுமலைபேட்டையில் இருந்து தாராபுரம் நோக்கி வந்த சொகுசு கார் மோதியது.
    • காரை ஓட்டிவந்த டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

    தாராபுரம் :

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கருப்பராயன்வலசு பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 60). இவர் செலாம்பாளையம் அருகே உள்ள பெட்ரோல் பங்க் அருகே தாராபுரம் உடுமலை சாலையை கடக்க முயன்ற போது உடுமலைபேட்டையில் இருந்து தாராபுரம் நோக்கி வந்த சொகுசு கார் மோதியது. இதில் வேலுசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து அலங்கியம் போலீசார் வழக்கு பதிவு செய்து காரை ஓட்டிவந்த உடுமலைப்பேட்டை போடி பட்டியைச் சேர்ந்த டிரைவர் மணிகண்டன் (38) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

    இந்த சம்பவத்தின் சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. அந்த காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மகாராஷ்டிர மாநிலத்தில் மானபங்க வழக்கை வாபஸ் பெற மறுத்ததால் பெண்ணின் தந்தையை ஒரு கும்பல் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #MolestationCase #MHMurder
    நாசிக்:

    மகாராஷ்டிர மாநிலம் மாலேகான் நகரின் கோல்டன் நகர் பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு ஒரு பெண்ணை சயீத் என்பவர் மானபங்கம் செய்துள்ளார். இது தொடர்பாக அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் பவார்டி காவல் நிலையத்தில் சயித் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு உள்ளூர் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

    இந்நிலையில், மானபங்க வழக்கை திரும்ப பெறும்படி பெண்ணின் தந்தை பசல் முகமது நவாப் அலியிடம் (வயது 55) தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர். ஆனால் அவர் வழக்கை வாபஸ் பெற மறுத்துள்ளார்.

    இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு சயீத் மற்றும் சிலர் அலியை வழிமறித்து உருட்டுக்கட்டைகளால் கடுமையாக தாக்கி உள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அலி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தார்.

    இது தொடர்பாக பவார்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சயீத் உள்ளிட்ட 4 பேரைக் கைது செய்துள்ளனர். 3 பேரை தேடி வருகின்றனர். #MolestationCase #MHMurder
    இஸ்ரேலில் அமெரிக்கர் குத்திக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக தாக்குதல் நடத்திய பாலஸ்தீன வாலிபரை போலீசார் கைது செய்தனர். #IsraeliAmerican #StabbingAttack
    ஜெருசலேம்:

    இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான எல்லை பிரச்சினை நீண்டகாலமாக நீடித்து வருகிறது. சர்ச்சைக்குரிய மேற்கு கரை பகுதியில் இஸ்ரேலியர்களை கத்தியால் குத்தியும், கார்களை கொண்டு மோதியும் தாக்குதல் நடத்துவதை பாலஸ்தீனர்கள் வழக்கமாக கொண்டு உள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவில் பிறந்து இஸ்ரேலில் குடியேறி அந்நாட்டு குடியுரிமை பெற்ற அரி புல்ட் (வயது 45) என்பவர் நேற்று முன்தினம் ஜெருசலேம் நகரின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு வணிக வாளகத்தில் நின்றுகொண்டிருந்தார்.



    அப்போது அங்கு பாலஸ்தீன வாலிபர் ஒருவர் அரி புல்ட்டை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். பின்னர் அந்த பாலஸ்தீன வாலிபர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். எனினும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையிலும் அரி புல்ட் தன்னுடைய துப்பாக்கியை எடுத்து பாலஸ்தீன வாலிபரை சுட்டார்.

    இதில் பாலஸ்தீன வாலிபரின் உடலில் குண்டுபாய்ந்து சுருண்டு விழுந்தார். பின்னர் அங்கு நின்றிருந்த பொதுமக்கள் சிலர் ஓடி சென்று அவரை மடக்கி பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர்.

    இதற்கிடையே கத்திக்குத்து தாக்குதலில் காயம் அடைந்த அரி புல்ட்டை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். கல்வி சம்பந்தமாக வருகிற நவம்பர் மாதம் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள அரி புல்ட் திட்டமிட்டிருந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.  #IsraeliAmerican #StabbingAttack
    மகாராஷ்டிரா மாநிலத்தில் 15 கோடி ரூபாய் சொத்துக்காக கூலிப்படையினருடன் சேர்ந்து கணவரை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். #wifenkillsMan #Rs15crproperty
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்தில் கல்யான் டவுன்ஷிப் பகுதியை சேர்ந்தவர் ஷங்கர் கைக்வாட்(44). இவரது மனைவி ஆஷா கைக்வாட்(40), தனது கணவரை கடந்த மே மாதம் 18-ம் தேதியில் இருந்து காணவில்லை என்று போலீசில் புகார் அளித்திருந்தார்.

    இதுதொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடிவந்த நிலையில் ஷங்கர் கைக்வாட் மாயமானதில் அவரது மனைவிக்கு தொடர்பு இருக்கலாம் என ஷங்கரின் உறவினர்கள் தெரிவித்தனர். போலீசார் இந்த கோணத்திலும் விசாரிக்க தொடங்கியபோது, ஆஷா கெய்க்வாட்டின் கைபேசி அழைப்புகளை ஆய்வு செய்தனர்.

    தனக்கு சொந்தமாக இருந்த ஏராளமான சொத்துகளை ஆஷாவின் பெயருக்கு ஷங்கர் ஏற்கனவே எழுதி வைத்திருந்தார். அவரிடம் இருந்த 15 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தையும் தனது பெயருக்கு மாற்றித்தருமாறு ஆஷா வற்புறுத்தி வந்துள்ளார்.

    அது தந்தையின் மூலம் தனக்கு கிடைத்த சொத்து என்பதால் அதை ஆஷாவுக்கு எழுதித்தர ஷங்கர் மறுத்து விட்டதாக தெரிகிறது. எனவே, அந்த சொத்தினை அடைய ஆசைப்பட்ட ஆஷா, கூலிப்படையினரின் துணையுடன் கணவர் ஷங்கரை கொன்றுவிட திட்டம் தீட்டினார்.

    இதற்காக, கூலிப்படையை சேர்ந்த ஹிமான்ஷு துபே என்பவரை தொடர்புகொண்ட ஆஷா, கணவரை தீர்த்துக்கட்ட 30 லட்சம் ரூபாய் பேரம்பேசி, 4 லட்சம் ரூபாயை முன்பணமாக தந்தார்.

    கடந்த மே மாதம் 18-ம் தேதி கணவர் ஷங்கரை ஆட்டோ ரிக்‌ஷா மூலம் பாதல்பூர் பகுதிக்கு அழைத்துச் சென்று, குளிர் பாணத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்தார். ஷங்கர் சுயநினைவை இழக்க தொடங்கியவுடன், ஹிமான்ஷு துபே மற்றும் அவருடன் வந்த 4 பேர் உதவியுடன் ஷங்கரை இரும்புக் கம்பிகளால் தாக்கிக் கொன்ற ஆஷா, அவரது உடலை ஒதுக்குப்புறமான பகுதியில் தூக்கிவீசினார்.

    பிறகு, ஒன்றும் தெரியாததுபோல் கல்யான் டவுன் ஷிப் பகுதியில் உள்ள வீட்டுக்கு வந்துசேர்ந்த ஆஷா, தனது கணவர் காணாமல் போனதாக போலி நாடகமாடியும் போலீசில் புகாரும் அளித்த உண்மைகளை, ஆஷாவின் கைபேசி அழைப்புகள் மூலம் போலீசார் கண்டுபிடித்தனர்.

    இதைதொடர்ந்து, ஆஷா மற்றும் இந்த கொலையில் உடந்தையாக இருந்த ஹிமான்ஷு துபே ஆகியோரை கைது செய்து பல்வேறு குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருக்கும் ஹிமான்ஷு துபேவின் கூட்டாளிகள் 4 பேரை தேடி வருகின்றனர். #wifenkillsMan #Rs15crproperty 
    ×