என் மலர்
நீங்கள் தேடியது "ஆஷா"
- ஆஷா என்பது உலகமே போற்றிய ஓர் உன்னதமான திட்டம் ஆகும்.
- இது 2005ஆம் ஆண்டில் நான் அறிமுகப்படுத்திய திட்டம்
'ஆஷா' திட்டத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படத்திற்கு பாமக தலைவர் அன்புமணி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நாம் படைத்த சாதனைகளை இந்த உலகம் கொண்டாடும் போது, அது சார்ந்த மலரும் நினைவுகளை மனதில் ஓட்டிப் பார்ப்பதை விட மகிழ்ச்சி வேறு எதுவும் இருக்க முடியாது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக பணியாற்றிய போது இந்தியாவில் தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் இறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் நான் அறிமுகப்படுத்திய ஆஷா(Accredited Social Health Activist - ASHA) திட்டத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில் ஆஷா என்ற மராத்திய திரைப்படத்தை அமேசான் பிரைம் தளத்தில் பார்த்த போது எனக்கு அதே உணர்வு தான் ஏற்பட்டது.
ஆஷா என்பது உலகமே போற்றிய ஓர் உன்னதமான திட்டம் ஆகும். இது 2005ஆம் ஆண்டில் நான் அறிமுகப்படுத்திய உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டமான தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் பிரிக்க முடியாத அங்கம் தான் ஆஷாக்கள் ஆவர். இந்தியாவின் ஒவ்வொரு கிராமத்திலும் பயிற்சி பெற்ற சுகாதாரப் பெண் பணியாளர் ஒருவரையாவது நியமிக்க வேண்டும் என்பது தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் அடிப்படை விதி ஆகும். இந்த விதியை நிறைவேற்ற நியமிக்கப்பட்டவர்கள் தான் ஆஷாக்கள் ஆவர். இந்தியா முழுவதும் 10 லட்சம் ஆஷாக்கள் பணியாற்றி வருகின்றனர்.
கருவுற்ற பெண்களுக்கு இயல்பாக ஏற்படும் ஐயங்களையும், அச்சத்தையும் போக்க வேண்டுமா? அவர்களுக்கு நுண்ணூட்டச் சத்து மற்றும் துப்புரவு தொடர்பான ஆலோசனைகளை வழங்க வேண்டுமா? கருவுற்ற பெண்களை குறித்த காலத்தில் மருத்துமனைகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டுமா? பிறந்த குழந்தைகளின் உடல் நலத்தைக் காக்க வேண்டுமா? குறித்த காலத்தில் தடுப்பூசிகள் போடப்படுவதை உறுதி செய்ய வேண்டுமா? அனைத்தையும் ஆஷாக்கள் பார்த்துக் கொள்வார்கள்.
அவர்களின் துடிப்பான பணிகளால் தான் இன்று 100% பிரசவங்களும் மருத்துமனைகளில் நடைபெறுகின்றன; தாய்மார்கள் இறப்பு விகிதம் 60 விழுக்காடும், குழந்தைகள் இறப்பு விகிதம் 80 விழுக்காடும் குறைந்துள்ளன. ஆஷா பணியாளர்களின் சேவையை பாராட்டி, அவர்களுக்கு உலக சுகாதார தலைவர்கள் விருதை உலக சுகாதார நிறுவனம் வழங்கிப் பாராட்டியிருக்கிறது.
இவ்வளவு சிறப்பு மிக்க ஆஷா திட்டத்தை கதைக்களமாக வைத்து ஆஷா திரைப்படத்தை தயாரித்த அதன் இயக்குனர், தயாரிப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாடு முழுவதும் உள்ள மத்திய சுகாதார பணியாளர்களான ஆஷா, அங்கன்வாடி, ஏ.எம்.என். (துணை செவிலியர்கள்) ஊழியர்கள் ஒரு லட்சம் பேருடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-
ஆஷா பணியாளர்களின் வழக்கமான ஊக்கத்தொகை உயர்த்தப்படும். அதோடு ஆஷா பணியாளர்கள் மற்றும் அவர்களது உதவியாளர்கள் பிரதமரின் இலவச காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள். அதேபோல அங்கன்வாடி பணியாளர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியமும் அதிகரிக்கப்படும்.
அதன்படி இதுவரை மாதம் ரூ.3 ஆயிரம் பெற்றுவந்தவர்களுக்கு இனி ரூ.4,500 கிடைக் கும். அதேபோல மாதம் ரூ.2,200 பெற்றவர்களுக்கு இனி ரூ.3,500 கிடைக்கும். அங்கன்வாடி உதவியாளர்களின் மதிப்பூதியமும் ரூ.1,500-ல் இருந்து ரூ.2,250 ஆக உயர்த்தப்படும். இந்த உயர்வுகள் அடுத்த மாதம் முதல் அமல் படுத்தப்படும்.
அதுமட்டுமின்றி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களில் ஐ.சி.டி.எஸ். அப்ளிகேஷன் தொழில்நுட்பத்தை பயன்படுத்த தெரிந்தவர்களுக்கு கூடுதல் ஊக்கத்தொகையாக ரூ.250 முதல் ரூ.500 வரை அவர்களது செயல்திறனுக்கு ஏற்ப வழங்கப்படும்.
ஆஷா, அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சுகாதார பயனாளிகள் தான் தேசத்தை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பலமில்லாத அஸ்திவாரத்தின் மீது வலுவான கட்டிடத்தை கட்டமுடியாது. அதேபோல தான் நாட்டின் குழந்தைகள் பலமில்லாதவர்களாக இருந்தால் நாட்டின் முன்னேற்றமும் குறையும்.
3 கோடி குழந்தைகள் மற்றும் 85 லட்சத்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தரமான, சுகாதாரமான மகப்பேறு மற்றும் போதுமான ஊட்டச்சத்து ஆகியவற்றில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.
ஒவ்வொரு மகப்பேறுக்கு பின்னரும் ஆஷா பணியாளர்கள் அந்த குழந்தைகளை 42 நாட்களில் 6 முறை நேரில் பார்த்துவந்தனர். இனி 15 மாதங்களில் 11 முறை அவர்கள் குழந்தைகளை நேரில் சென்று கவனிப்பார்கள். குழந்தைகளின் வாழ்க்கையில் முதல் ஆயிரம் நாட்கள் மிகவும் முக்கியம். உங்கள் அர்ப்பணிப்பு சிறந்த குடிமக்களை உருவாக்கும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். #Modi #Incentives #Asha #Anganwadi






