search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "incentives"

    • ரூ.8 கோடிக்கான காசோலையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராமகிருஷ்ணனிடம் வழங்கினார்.
    • முழுநேர பயிற்சி பெறும் 212 மாண வர்களும், பகுதிநேர பயிற்சி பெறும் 80 மாணவர்களும், என மொத்தம் 292 மாணவர்கள் பயன்பெறுவர்.

    சென்னை:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 490 கோவில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்காக அரசு மானியமாக ரூ.8 கோடிக்கான காசோலையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுசீந்திரம் கன்னியாகுமரி மாவட்ட கோவில்களின் அறங்காவலர் குழுத் தலைவர் ராமகிருஷ்ணனிடம் வழங்கினார்.

    இதே போல் ஒருகால பூஜைத் திட்ட கோவில்களில் பணிபுரிந்து வரும் அர்ச்சகர்களின் மகன், மகள்களின் மேற்படிப்பிற்கான உயர் கல்வித் தொகையினை 400 மாணவர்களுக்கு வழங்கிடும் அடையாளமாக 8 மாணவர்களுக்கு அதற்கான வங்கி வரைவோலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    கோவில்கள் சார்பில் நடத்தப்படும் பயிற்சிப் பள்ளிகளில் முழு நேரமாகவும், பகுதி நேரமாகவும் பயிலும் மாணவர்களுக்கான ஊக்கத் தொகையை முறையே ரூ.4 ஆயிரம் மற்றும் ரூ.2 ஆயிரமாக உயர்த்தி 292 மாணவர்களுக்கு வழங்கிடும் அடையாளமாக 8 மாணவர்களுக்கு அதற்கான வங்கி வரைவோலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    இதன்மூலம் முழுநேர பயிற்சி பெறும் 212 மாண வர்களும், பகுதிநேர பயிற்சி பெறும் 80 மாணவர்களும், என மொத்தம் 292 மாணவர்கள் பயன்பெறுவர்.

    நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளீதரன், கூடுதல் ஆணையர் திருமகள், ஹரிப்ரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • பாரம்பரிய நெல் விதை வங்கி பராமரிப்பு திட்டத்தில் ரூ.3 லட்சம் ஊக்கத்தொகை அளிக்கும் திட்டம் 2023-24-ம் ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ளது.
    • இத்திட்டத்தின் பயனை ஒருமுறை மட்டுமே பயனாளி பெற முடியும்.

    ராமநாதபுரம்

    தமிழக அரசு 'வேளாண்மை துறையின் மூலம் பாரம்பரிய நெல் விதை வங்கி" பராமரிப்பு விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் ஊக்கத்தொகை அளிக்கும் திட்டம் 2023-24-ம் ஆண்டில் செயல்ப டுத்தப்பட உள்ளது.

    மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பாரம்பரிய நெல் விதை வங்கி பராமரிக்கும் விவசாயிகளுக்கு, தமிழக அரசு வேளாண்மைத் துறையின் மூலம் ரூ.3 லட்சம் ஊக்கத்தொகை அளிக்கும் திட்டம் இந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது. பாரம்பரிய நெல் விதை வங்கி திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் அக்ரிஸ்நெட் வலைதளம் அல்லது உழவன் செயலியில் விண்ணப்பிக்க வேண்டும்.

    இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், குறைந்தபட்சம் 100 பாரம்பரிய நெல் ரகங்களை நெல் வங்கியில் பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பராமரித்துவரும் பாரம்பரிய நெல் ரகங்களை மறு உற்பத்தி செய்து இனத் தூய்மையுடன் தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.

    ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் மரபு சார் நெல் ரகங்களை உற்பத்தி செய்து பராமரிக்க வேண்டும். விதை வங்கியில் பராமரிக்கப்படும் பாரம்பரிய நெல் ரகங்கள் நல்ல முளைப்புத்திறனுடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். வயல்களில் உரிய அளவில் பாரம்பரிய முறையில் சாகுபடி செய்ய வேண்டும்.

    மாவட்ட கலெக்டர் தலைமையிலான தேர்வுக் குழு மூலம் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு மாநில தேர்வுக் குழுவிற்கு பரிந்துரை செய்யப்படும். இத்திட்டத்தின் பயனை ஒருமுறை மட்டுமே பயனாளி பெற முடியும்.

    கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் பார்வையிடும் வகையில் முறையாக காட்சிப்படுத்த வேண்டும். பாரம்பரிய நெல் விதை வங்கி பராமரிக்கும் விவசாயிகள், ஊக்கத்தொகை பெறு வதற்காக அக்ரிஸ்நெட் வலைதளம் அல்லது உழவன் செயலியில் விண்ணப்பிக்க தேவையான விண்ணப்ப படிவங்களை தங்கள் வட்டாரத்திலுள்ள வேளாண்மை உதவி இயக்குநரை அணுகி பெற்றுக் கொள்ளலாம்

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

    • இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியியை அக்.1 முதல் மார்ச் 31 வரையிலும் செலுத்த வேண்டும்.
    • சொத்து வரியை பொதுமக்கள் எளிதாகச் செலுத்தும் வகையில் மாநகராட்சி சார்பில் அரையாண்டு தொடக்கம், இறுதியில் குறுந்தகவல் மூலம் வலைதள இணைப்பு அனுப்பப்படுகிறது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை ஏப்.1 முதல் செப்.30-ந் தேதி வரையிலும், இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியியை அக்.1 முதல் மார்ச் 31 வரையிலும் செலுத்த வேண்டும்.

    இதில் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை ஏப்.30-ந் தேதிக்குள்ளும், இரண்டாம் அரையாண்டு சொத்து வரியை அக்.30-ந் தேதிக்குள்ளும் செலுத்துவோருக்கு மாநகராட்சி சார்பில் 5 சதவீதம் ஊக்கத் தொகை அதிகபட்சம் ரூ. 5 ஆயிரம் வரை வழங்கப்பட்டு வருகிறது. நிகழாண்டு முதல் நிதியாண்டில் ரூ. 769.62 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டு உள்ளது. இவற்றில் ரூ.321 கோடியை இணையதளம் மூலம் 4.77 லட்சம் சொத்து உரிமையாளர்கள் செலுத்தி உள்ளனர்.

    சொத்து வரியை பொதுமக்கள் எளிதாகச் செலுத்தும் வகையில் மாநகராட்சி சார்பில் அரையாண்டு தொடக்கம், இறுதியில் குறுந்தகவல் மூலம் வலைதள இணைப்பு அனுப்பப்படுகிறது.

    இதுபோல் www.chennai corporation.gov.in என்ற மாநகராட்சி இணையதளம், நம்ம சென்னை கைப்பேசி செயலி, சொத்துவரி ரசீதில் உள்ள கியூ ஆர் குறியீடு மூலம் சொத்து வரியை செலுத்தலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பொது வினியோக திட்டத்தை தமிழக அரசு, தனியார் துறையாக அறிவிக்க வேண்டும்.
    • மகளிர் உரிமை திட்டத்து க்காக, களப்பணியில் ஈடுபட்ட ரேஷன் பணியாளர்களுக்கு, ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங்க (சி.ஐ.டி.யு.,) நிர்வாகிகள் கூட்டம், சி.ஐ.டி.யு., மாவட்ட குழு அலுவலகத்தில் நடைபெற்றது. சங்க மாவட்ட தலைவர் கவுதமன் தலைமை வகித்தார்.

    கூட்டத்தில் தேர்தல் வாக்குறுதிப்படி பொது வினியோக திட்டத்தை தமிழக அரசு, தனியார் துறையாக அறிவிக்க வேண்டும். ரேஷன் பணியாளர் அனைவரையும் பி.எப்., திட்டத்தில் சேர்க்க வேண்டும். பல கூட்டுறவு சங்கங்களில் தேர்வு நிலை சிறப்பு நிலை ஊதியம் வழங்கப்படவில்லை. மாவட்டம் முழுவதும் ரேஷன் கடைகளில் தேங்கியுள்ள காலி சாக்குகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

    மகளிர் உரிமை திட்டத்து க்காக, களப்பணியில் ஈடுபட்ட ரேஷன் பணியாளர்களுக்கு, ஊக்கத்தொகை வழங்க வேண்டும். அனைத்து ரேஷன் கடைகளிலும் கழிப்பிட வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். காலாவதியாகாத தரமான மளிகை பொருட்களை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    அனைத்து பொருட்களும் 10-ந்தேதிக்குள் ரேஷன் கடைகளுக்கு சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும் என தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    • தமிழக விவசாயிகள் நெல் உற்பத்தி செலவினங்களை ஒப்பிடும்போது, தமிழக அரசு இப்போது அறிவித்துள்ள, நெல்லுக்கான ஆதார விலையுடன் வ ழங்கும் ஊக்கத்தொகை மிகவும் குறைவாக உள்ளது.
    • எனவே இதை உயர்த்தி வழங்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாமக்கல்:

    நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    2023-–24ம் ஆண்டிற்கு, நெல்லுக்கு உண்டான குறைந்தபட்ச ஆதார விலையாக சாதாரண ரக நெல் குவிண்டாலுக்கு ரூ. 2,183 எனவும், சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு, ரூ, 2,203 என மத்திய அரசு கொள்முதல் விலை நிர்ணயம் செய்துள்ளது.

    தமிழக அரசு தமிழகத்தில் தற்போது திறக்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையம் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் நெல் குவிண்டால் ஒன்றுக்கு உண்டான ஆதரவு விலையுடன், தமிழக அரசின் ஊக்கத்தொகையாக, சாதாரண நெல் குவிண்டாலுக்கு ரூ. 82 கூடுதலாகவும், சன்னரக நெல் குவிண்டாலுக்கு ரூ. 107 கூடுதலாகவும் அறிவித்து விலை நிர்ணயம் செய்துள்ளது.

    தமிழக அரசு அறிவித்த விலைப்படி, சாதாரண ரக நெல் குவிண்டாலுக்கு, ஊக்கத்தொகையுடன் ரூ. 2,265, சன்னரக நெல் குவிண்டாலுக்கு, ஊக்கத்தொகையுடன் ரூ. 2,310 என, செப். 1 முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது.

    2021 சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தவுடன், விவசாயிகளின் நலன் கருதி, நெல்லுக்கு ஆதார விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2,500 வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.

    தி.மு.க. அரசு ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகள் முடிவடைந்து மூன்றாம் ஆண்டு நடந்து வருகிறது. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி நெல்லுக்கு உண்டான விலை அறிவிக்காதது, தமிழக விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த 3 ஆண்டுகளாக நெல் உற்பத்தி செலவை ஒப்பிடும்போது, வேலை ஆட்கள் கூலி மிகவும் அதிகப்படியாக உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை பல மடங்கு அதிகரித்துள்து. மேலும், உரம், மருந்து அதன் மூலப்பொருட்கள் ஏற்றிவரும் வாகன வாடகையும், பல மடங்கு உயர்ந்துள்ளது.

    தமிழக விவசாயிகள் நெல் உற்பத்தி செலவினங்களை ஒப்பிடும்போது, தமிழக அரசு இப்போது அறிவித்துள்ள, நெல்லுக்கான ஆதார விலையுடன் வ ழங்கும் ஊக்கத்தொகை மிகவும் குறைவாக உள்ளது. எனவே இதை உயர்த்தி வழங்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • ஒரு மாத பயிற்சி பெற மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    • மாணவா்களுக்கு ஒரு மாத காலத்துக்கு ஊக்கத்தொகையுடன் பயிற்சி அளிக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் கைவினை கலைகள் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) தியாக ராஜன் தெரிவித்துள்ளா.

    இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:-

    தமிழக அரசு நிதியுதவியின் கீழ் நடைபெறும் தமிழ் மண்ணின் பாரம்பரிய கைவினைக் கலைகளை மீட்டெடுத்தல் திட்டத்தில் நெட்டி வேலைப்பாடு மற்றும் தலையாட்டி பொம்மை செய்தல் தொடா்பாக ஒரு மாத காலப் பயிற்சி பெற மாணவா்கள் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன.

    இதில், மாணவா்களுக்கு ஒரு மாத காலத்துக்கு ஊக்கத் தொகையுடன் பயிற்சி அளிக்கப்படும்.

    மேலும் விவரங்களை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் காணலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இடுபொருட்கள் தயாரிக்கும் மையம் நிறுவ ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும்.
    • கலன்கள், மண்புழு உரம் தயாரிக்கும் படுக்கை, பேக்கேஜிங், லேபிலிங் மற்றும் மூல பொருட்கள் வாங்க பயன்படுத்தலாம்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியி ட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவாரூர் மாவட்டத்தில் அங்கக வேளாண்மையை உழவர்களிடையே பிரபலபடுத்தி ஊக்குவிக்கவும், அங்கக இடுபொருட்களை உழவர் குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யவும், 2023-24-ம் ஆண்டு மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    இயற்கை விவசாயம் செய்திடும் அல்லது செய்திட ஆர்வமுள்ள விவசாயிகள் குழுவாக இணைந்து இயற்கை இடுபொருட்கள் தயாரிக்கும் மையம் நிறுவ ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும்.

    இதன்மூலம் இயற்கை இடுபொருட்கள் உற்பத்திக்கான கலன்கள், மண்புழு உரம் தயாரிக்கும் படுக்கை, பேக்கேஜிங், லேபிலிங் மற்றும் மூல பொருட்கள் வாங்க பயன்படுத்தலாம்.

    இத்திட்டத்தின்கீழ் பயன்பெறும் குழுக்களுக்கு தங்கள் பொருட்களை உழவர் சந்தையில் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் உழவன் செயலியின் கீழ் பதிவு செய்ய வேண்டும். மேலும் தகவ லுக்கு தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குனரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 10, 12-ம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
    • முடிவில், மதுரை நாடார் உறவின் முறை பொதுச் செயலாளர் வி.பி.மணி நன்றி கூறினார்.

    மதுரை

    மதுரை நாடார் உறவின் முறை சார்பில் பெருந்த–லைவர் காமராஜரின் 121-வது பிறந்தநாளை முன் னிட்டு கல்வி மேற்படிப்பு ஊக்கத்தொகை வழங்கும் விழா ம.நா.உ.சுப்புராஜ நாடார் கிருஷ்ணம்மாள் மன்றத்தில் நடைபெற்றது. விழாவுக்கு மதுரை நாடார் உறவின்முறை துணைத் தலைவர் ஆர்.முத்தரசு தலைமை தாங்கினார்.

    பொதுச்செயலாளர் எஸ்.கே.மோகன் வரவேற் றார். ஜெயராஜ் நாடார் மேல் நிலைப்பள்ளி கே.பி.எஸ்.வி.டி. மாணவர் விடுதி செயலாளர் ப.குமார், பாரத பெருந்தலைவர் காமராஜர் அறநிலைய தலைவர் ஜெமினி எஸ்.பால்பாண்டி–யன், துணைத்தலைவர் எம்.எஸ்.சோமசுந்தரம், பொதுச் செயலாளர் கே.பி.எம்.எம்.காசிமணி, டி.பாலசுப்பிரம–ணியன்,

    ஜெயராஜ் அன்னபாக்கி–யம் மெட்ரிக்குலேசன் மேல் நிலைப்பள்ளி இணைச் செயலாளர் ஒய்.சூசை அநா் தோணி ஆகியோர் வாழ்த் துரை வழங்கினர். தனியார் தொலைக்காட்சி புகழ் பட்டிமன்ற நடுவர் அவனி மாடசாமி சிறப்புரையாற்றி–னார்.

    சாக்ஸ் எம்.ஏ.வி.எம்.எம். பொறியியல் கல்லூரி செயலாளர் ஜி.கணேசன் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 450 மதிப்பெண்க–ளுக்கு மேல் பெற்ற 25 மாணவ, மாணவிகளுக்கு ரூ.1 லட்சத்து 25 ஆயிரமும்,

    12-ம் வகுப்பு பொதுத் ேதர்வில் 500 மதிப்பெண்க–ளுக்கு மேல் பெற்ற 61 மாணவ, மாணவிகளுக்கு ரூ.6 லட்சத்து 10 ஆயிரமும் என மொத்தம் ரூ.7 லட்சத்து 35 ஆயிரம் கல்வி மேற்ப–டிப்பு ஊக்கத்தொகையாக வழங்கினார். முடிவில், மதுரை நாடார் உறவின் முறை பொதுச் செயலாளர் வி.பி.மணி நன்றி கூறினார்.

    • அதிக மதிப்பெண் பெற்ற கிராமபுற மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
    • இந்த விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை அருகே குன்னங்கோட்டை, கீழப்பங்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த கல்வி ஆண்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்று அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் குன்னங்கோட்டை கள்ளர் பேரவை அறக்கட்டளை சார்பில் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

    முதல் மதிப்பெண் எடுத்த காளீஸ்வரன் என்ற மாணவனுக்கும், 2-வது மதிப்பெண் பெற்ற திருவிளங்கை கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ் என்ற மாணவனுக்கும், மாலைகண்டனைச் சேர்ந்த தமிழரசனுக்கும், தேவபட்டு சசிகலா என்ற மாணவிக்கும் ஊக்கத்தொகை வழங்கபட்டது.

    இந்த விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ. 3000 வழங்கப்பட்டது.
    • கல்வி ஊக்கத்தொகை மறைந்த அவிநாசியப்பகவுண்டர் நினைவாக மணிவேலுச்சாமியால் வழங்கப்பட்டு வருகிறது.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம்,சாமளாபுரம் பகுதியில் உள்ள வாழைத்தோட்டத்து அய்யன் கோயில் மேல்நிலைப் பள்ளியில் 10,11, மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஆண்டுதோறும் கல்வி ஊக்கத்தொகை மறைந்த அவிநாசியப்பகவுண்டர் நினைவாக மணிவேலுச்சாமியால் வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி இந்த கல்வியாண்டில் (2022-2023) பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரூ 10,000 ,இரண்டாம் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரூ.7500,மூன்றாம் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரூ.5000, பொருளியல் ,கணக்குப்பதிவியல் வரலாறு பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு தலா ரூ. 3000 மும் ஆக மொத்தம் ரூ. 60 ஆயிரம் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்வில் ஏ.வி.ஏ.டி. பள்ளியின் தலைமை ஆசிரியர் ரா. செல்வகுமார் வரவேற்புரையாற்றினார், சாமளாபுரம் பேரூராட்சி தலைவர் விநாயகாபழனிச்சாமி , சாமளாபுரம் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் குட்டிவரதராஜன், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் ரத்தின சபாபதி , பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மோகன்குமார், ஆடிட்டர் தெய்வசிகாமணி உள்பட பலர் கலந்துக்கொண்டு வாழ்த்துரை வழங்கி மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கினார்கள். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • 34 பயனாளிகளுக்கு ரூ7.21 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • ரூ.1,500 மானியத்துடன் கூடிய தர்பூசணி பழக்கன்றையும் கலெக்டர் வழங்கினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது. இதில்எபொதுமக்களிடம் இருந்து 377 மனுக்கள் பெறப்பட்டன. தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    வருவாய்த்துறையின் சார்பில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 12 பயனாளிகளுக்கு பல்வேறு வகையான உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கான ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.

    அதன்படி தேவகோட்டை வட்டத்தை சேர்ந்த ராசு என்பவர் பாம்பு கடித்து இறந்ததையொட்டி அவரது குடும்பத்துக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதி ரூ.1 லட்சத் திற்கான காசோலையையும், வேளாண்மை-உழவர் நலத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு கலைஞர் திட்டத்தின் கீழ் பேட்டரி தெளிப்பான் இடுபொருட் களையும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் ஒரு பயனாளிக்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங் கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் சார்பில் ரூ.7 ஆயிரத்து 200 மானி யத்துடன் கூடிய மா பழக்கன்று மற்றும் ஒரு பயனாளிக்கு ரூ.1,500 மானியத்துடன் கூடிய தர்பூசணி பழக்கன்றையும் கலெக்டர் வழங்கினார்.மானாமதுரை பால் உற்பத்தியாளர்கள் கூட்டு றவு சங்கத்தின் சார்பில் 9 உறுப்பினர்களுக்கு ரூ.6 லட்சத்திற்கான கறவை மாட்டு வளர்ப்பிற்கு கடன் திட்டத்திற்கான ஆணை களையும், மாவட்ட வழங்கல் துறையின் சார்பில், திருக்கோஷ்டியூர் மற்றும் இடைக்காட்டூர் நியாயவிலை கடைகளில் விற்பனை யாளர்களாக தேர்வு பெற்ற முதல் பரிசு ரூ.4ஆயிரத்தை யும், 2-ம் பரிசு ரூ.3ஆயிரத் தையும் கலெக்டர் வழங்கி னார்.

    சிவகங்கை மற்றும் சக்கந்தி நியாயவிலை கடை களில் எடையாளர்களாக தேர்வுபெற்ற முதல் பரிசு ரூ.3ஆயிரம், 2-ம் பரிசு தொகை ரூ.2ஆயிரத்திற்கான காசோலைகள் என மொத்தம் 34 பயனாளி களுக்கு ரூ.7லட்சத்து 20 ஆயிரத்து 700 மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவி களை கலெக்டர் மதுசூதன் ரெட்டி வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், உதவி ஆணையர் (கலால்) ரத்தின வேல், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் (பொறுப்பு) சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சொத்து உரிமையாளர்களுக்கு குறுந்தகவல் அனுப்புதல், வாகனங்கள் மூலம் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
    • டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாக சொத்துவரி செலுத்தவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    கடலூர்:

    நெல்லிக்குப்பம் நகர்மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் மற்றும் கமிஷனர் (பொறுப்பு) மகேஸ்வரி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நெல்லிக்குப்பம் நகராட்சியில் சொத்து உரிமையாளர்கள் தங்களது 2023 - 24 ஆண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை ஏப்ரல் 30ந் தேதிக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. சொத்து உரிமையாளர்கள் சொத்து வரியினை செலுத்துவதற்கு விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் சொத்து உரிமையாளர்களுக்கு குறுந்தகவல் அனுப்புதல், வாகனங்கள் மூலம் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

    மேலும் சொத்து உரிமையாளர்கள் சொத்து வரிகளில் தங்களது இல்லம் தேடிவரும் வரி வசூலிப்பாளர்கள் மற்றும் நகராட்சி அலுவலகம் மூலம் அமைந்துள்ள வசூல் மையங்கள் ஆகியவற்றில் கடன் மற்றும் பற்று அட்டை, காசோலை மற்றும் வரவோலை மூலமாகவும் டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாக சொத்துவரி செலுத்தவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    ஆகையால் சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்து வரியை ஏப்ரல் 30 -ந் தேதிக்குள் செலுத்தி ஊக்கத்தொகை பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் நகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளில் தங்களது பங்களிப்பினை வழங்கிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×