என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மாணவிகள்"
- மாணவிகள் பாதை மாறாமல் சரியான இலக்கை நோக்கி செல்ல வேண்டும்.
- மாணவர்கள் அதிகமாக புத்தகங்களை படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
சீர்காழி:
சீர்காழி சியாமளா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளு க்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் கீதா தலைமை வகித்தார். காவல் துணை கண்காணிப்பாளர் லாமெக், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயகிருபா, சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா பங்கேற்று பேசுகையில், மாணவிகள் எதிர்காலத்தில் மகிழ்ச்சியான வாழ்க்கை அமைவதற்கு, தேர்ந்தெடுப்பதற்கு, தற்பொழுதிலிருந்து பாதை மாறாமல் சரியான இலக்கை நோக்கி பயணிக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். உயர் கல்வியில் எந்த இலக்கை அடைய முயற்சி செய்கிறோமோ, அதை நோக்கி ஒவ்வொரு நாளும் பயணிக்க வேண்டும்.
அதற்கென நேரம் ஒதுக்கி குறிக்கோளோடு செயல்பட வேண்டும். நம்மைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அதிகமாக புத்தகங்களை படித்து தெரிந்து கொள்வதோடு, நமக்குள்ளே, கேள்விகளை கேட்டு, அதற்கான பதிலை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நம்மை நாமே தெளிவுபடுத்திக் கொள்ள முடியும் என்றார். இதில் மாணவிகள் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
- மாணவிகள் பெற்றோரிடம் தெரிவித்து தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
- போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ராஜ மாணிக்கத்தை கைது செய்தனர்.
காடையாம்பட்டி:
திருச்சி மாவட்டம் மணப்பாறை பொன்னம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (50).
இவர் தீவட்டிப்பட்டி அடுத்த நடுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். மேலும் காடையாம்பட்டி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து பள்ளி விடுமுறை நாட்கள் மற்றும் மாலை நேரங்களில் டியூஷன் நடத்தி வருகிறார்.
இவரிடம் காடையாம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மாணவிகள் டியூஷன் பயின்று வருகின்றனர். இதில் 2 மாணவிகளை தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஆசிரியர் ராஜமாணிக்கம் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த மாணவிகள் பெற்றோரிடம் தெரிவித்து தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ராஜ மாணிக்கத்தை கைது செய்தனர்.
- 17 வயதுக்கு உட்பட்ட மாணவிகளுக்கு 15 கி.மீ. தூரமும் நடைபெற்றது.
- 4 முதல் 10-ம் இடம் வரை பிடிப்பவர்களுக்கு தலா ரூ.250 மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு தஞ்சை அன்னை சத்யா மைதானத்தில் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் போட்டியை எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி., கலெக்டர் தீபக்ஜேக்கப் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் இருந்து தொடங்கிய சைக்கிள் போட்டி பாலாஜி நகர், ஈஸ்வரி நகர், மருத்துவ கல்லூரி சாலை வழியாக பிள்ளையார்பட்டி புறவழி சாலை சென்று மீண்டும் அதே வழியாக விளையாட்டு அரங்கத்திற்கு வந்தடைந்தது.
சைக்கிள் போட்டிகள் 13 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ. தூரமும், 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரமும், 13 வயதிற்கு உட்பட்ட மாணவிகளுக்கு 10 கி.மீ., 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட மாணவிகளுக்கு 15 கி.மீ. தூரமும் நடைபெற்றது.
முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறும் மாணவ- மாணவிகளுக்கு பரிசு தொகையாக தலா ரூ.5000, ரூ.3000, ரூ.2000 வீதமும் 4 முதல் 10-ம் இடம் வரை பிடிப்பவர்களுக்கு தலா ரூ.250 மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
இதில் ஏராளமான மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கற்பகம், பயிற்றுநர்கள் விளையாட்டு இயக்குனர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- உணவு, இயற்கை காய்கறிகள், பழ வகைகள், சிறு தானியங்கள் குறித்து விழிப்புணர்வு
- வாழப்பாடி புதுப்பாளையம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான அடுப்பில்லா சமையல் போட்டி
வாழப்பாடி:
பள்ளி குழந்தைகளிடையே சரிவிகித ஊட்டச்சத்து உணவு, இயற்கை காய்கறிகள், பழ வகைகள், சிறு தானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
வாழப்பாடி வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வாழப்பாடி புதுப்பாளையம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான அடுப்பில்லா சமையல் போட்டி நடத்தப்பட்டது.
பள்ளி தலைமையாசிரியை ஜெயலட்சுமி தலைமையில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் கீர்த்திகா தேவி, மேற்பார்வையாளர் பிரேமா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மாணவிகளிடையே போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். இதனைத்தொடர்ந்து சரிவிகித சத்துணவு, சுகாதாரம் மற்றும் ரத்த சோகை தவிர்ப்பு இயற்கை காய்கறிகள், பழ வகைகள், சிறுதானியங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதின் நன்மைகள் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு வழங்கினர். நிறைவாக, அங்கன்வாடி பணியாளர் வசந்தி நன்றி கூறினார்.
- மாணவிகள் பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியப்படி பேரணியாக சென்றனர்.
- பேரணியானது நகரின் முக்கிய இடங்களின் வழியாக சென்று பழைய கலெக்டர் அலுவலகத்தில் முடிவடைந்தது.
தஞ்சாவூர்:
உலக வனவிலங்கு தின விழாவை முன்னிட்டு தஞ்சையில் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியின் விலங்கியல் துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
சிவகங்கை பூங்கா நுழைவாயில் இருந்து தொடங்கிய பேரணியை மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி கொடியசைத்து தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் ஜான் பீட்டர் தலைமை தாங்கினார்.
தேர்வு கட்டுப்பாட்டு நெறியாளர் மலர்விழி முன்னிலை வகித்தார். பேரணியை காலநிலை திட்ட அலுவலர் ஸ்ரீதர்ஷிணி முடித்து வைத்தார்.
இதில் கல்லூரி மாண விகள் ஏராளமானோர் கலந்து கொண்டு வனம் காப்போம், உயிர் காப்போம், வனவிலங்குகளை பாதுகாப்போம் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியப்படி பேரணியாக சென்றனர்.
செல்லும் வழியில் துண்டு பிரசுரங்கள் விநியோகித்தனர்.
பேரணியானது பல்வேறு வழியாக சென்று பழைய கலெக்டர் அலுவலகத்தில் முடிவடைந்தது.
இந்த நிகழ்ச்சியை விலங்கியல் துறை தலைவர் சந்திரகலா ஒருங்கிணைத்தார்.
இதில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் முருகன், பொருளாளர் ராஜசேகரன், கல்லூரி கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியன், பேராசிரியர்கள் சுகுமாறன், மணிவண்ணன், துரைராஜ், நாசர், வாசுகி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி மாணவிகள் சாதனை படைத்தனர்.
- வெற்றி பெற்ற மாணவிகளுக்கு இஸ்லாமிய மெட்ரிக் பள்ளியின் தாளாளர் முகைதீன் இப்ராகிம், முதல்வர் மேபல் ஜஸ்டஸ் மற்றும் ஆசிரியர்கள்,அலுலவர்கள் பாராட்டினர்.
கீழக்கரை
பள்ளி கல்வி துறை சார்பாக கலாமை கொண்டாடுவோம் என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கு வட்டார அளவிலான போட்டிகள் முத்துப்பேட்டை புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் வினாடி, வினா போட்டியில் 6 முதல் 8-ம் வகுப்பு பிரிவில் பாத்திமா சனா, ராஜ கிரிஷா ஆகியோர் முதல் பரிசும், 11 மற்றும் 12-ம் வகுப்பு பிரிவில் நசாகா, ஆயிசா ராபிகா முதல் பரிசும் பெற்று மாவட்ட அளவில் பங்கு பெறுவதற்கு தகுதி பெற்றனர்.
ஓவியப்போட்டியில் ஆயிஷா ஸைனா 2-ம் பரிசு, கட்டுரைப்போட்டியில் பசிஹா 2-ம் பரிசு பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு இஸ்லாமிய மெட்ரிக் பள்ளியின் தாளாளர் முகைதீன் இப்ராகிம், முதல்வர் மேபல் ஜஸ்டஸ் மற்றும் ஆசிரியர்கள்,அலுலவர்கள் பாராட்டினர்.
- மாயகிருஷ்ணன், தெய்வசிகாமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- மாணவர்கள் மாநில அளவில் காஞ்சிபுரத்தில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்கின்றனர்.
கடலூர்:
பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடலூர் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜமாணிக்கம், மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா ஆகியோர் போட்டி களை தொடங்கி வைத்த னர். இதில் இணை ஒருங்கிணை ப்பாளர் ராஜராஜ சோழன், உடற்கல்வி ஆசிரியர்கள் முருகானந்தம், கருப்பையன், மனோகர் பயிற்சியாளர் மாயகிருஷ்ணன், தெய்வசிகாமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதில் மாணவ, மாணவிகளுக்கு ஓட்டப் பந்தயம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு தடகள போட்டிகள் நடைபெற்றது. 14 வயது முதல் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான போ ட்டிகள் நடைபெறுகிறது. இதில் 1500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றனர். போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவில் காஞ்சிபுரத்தில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்கின்றனர்.
- சேலம் கோட்டையில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 2 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவிகள் படித்து வருகிறார்கள்.
- தலைமை ஆசிரியரிடம் இதுகுறித்து கூறினாலும் அவர் மிரட்டுவதாகவும் புகார் தெரிவித்து வந்தனர்.
சேலம்:
சேலம் கோட்டையில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 2 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இந்த பள்ளியில் மாணவிகளுக்கு சுகாதாரமான குடிநீர், கழிப்பறை வசதிகள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை என மாணவிகள் குற்றம்சாட்டி வந்தனர். மேலும் தலைமை ஆசிரியரிடம் இதுகுறித்து கூறினாலும் அவர் மிரட்டுவதாகவும் புகார் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை 9 மணியளவில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் பள்ளி வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மாவட்ட கல்வி அதிகாரி மோகன் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். அப்போது மாணவிகள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று உறுதிப்பட தெரிவித்தனர்.
இதுகுறித்து மாணவிகள் கூறியதாவது:-
பள்ளியின் தலைமை ஆசிரியை தமிழ்வாணி சக ஆசிரியர், ஆசிரியர்களையும், மாணவிகளையும் தர குறைவாக நடத்துகிறார். பள்ளியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை.
2 நாட்களுக்கு முன்பு பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில் புழுக்கள் இருந்தது. இதனைப் பார்த்த நாங்கள் அந்த குடிநீரை பயன்படுத்தக் கூடாது என தெரிவித்தோம். இது தொடர்பாக புகார் தெரிவித்த மாணவிகள் சிலரை தலைமை ஆசிரியை அறையிலேயே முட்டி போட வைத்து அவமானப்படுத்தினார்.
கழிவறைகளும் அசுத்தமாக உள்ளதால் அதையும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. நோய் தொற்று ஏற்படும் நிலை உள்ளது. எனவே எங்களின் அடிப்படை வசதியை நிறைவேற்றாத தலைமை ஆசிரியை தமிழ்வாணியை பணிநீக்கம் செய்ய வேண்டும்.
வேறு தலைமை ஆசிரியையை இப்பள்ளிக்கு அரசு நியமிக்க வேண்டும். விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மாணவிகள் போராட்டம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியை கூறுகையில், குடிதண்ணீரில் புழுக்கள் இருப்பதாக மாணவிகள் புகார் கூறினர். உடனடியாக ஆய்வு செய்த நான் தண்ணீரில் புழுக்கள் இல்லை என்று கூறினேன். மேலும் கழிவறையையும் சுத்தமாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நான் எந்த மாணவி களையும் அவர்களது பெற்றோரையும் மிரட்டவில்லை. வேண்டுமென்று எனக்கு எதிராக சில ஆசிரியர்கள் மாணவிகளை தூண்டிவிட்டு போராட்டத்தில் ஈடுபட வைத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த கல்வி அதிகாரிகள், வருவாய்துறையினர் மற்றும் போலீசார் தலைமை ஆசிரியை மற்றும் மாணவிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தலைமை ஆசிரியை தமிழ்வாணி மாணவிகளிடம் மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
- சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த 2 தம்பதிகளின் 14 வயது உடைய 2 மகள்கள் சேலம் கிச்சிபாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்கள்.
- அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய் மாமன் உடனடியாக பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
சேலம்:
சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த 2 தம்பதிகளின் 14 வயது உடைய 2 மகள்கள் சேலம் கிச்சிபாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்கள்.
இந்த 2 மாணவிகளும் நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு வந்தனர். பின்னர் மதியம் பள்ளியிலிருந்து சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தனர். அதில் ஒரு மாணவி தனது தாய் மாமனுக்கு போன் செய்து நாங்கள் இருவரும் வீட்டிற்கு செல்ல விருப்பமில்லாத காரணத்தால் வெளியூர் செல்கிறோம், எங்களை தேட வேண்டாம் என்று கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய் மாமன் உடனடியாக பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் செய்தனர்.
இதையடுத்து போலீசார் மாணவிகளின் செல்போன் சிக்னலை கண்காணித்தபோது மாணவிகள் திருச்சி பஸ்சில் சென்று கொண்டிருப்பதை கண்டுபிடித்தனர். துரிதமாக செயல்பட்ட போலீசார் உடனடியாக பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரின் செல்போன் எண்களை வாங்கி அவர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும் அந்த மாணவிகளை முசிறி போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கும்படி தெரிவித்துக் கொண்டனர். அதன்படி முசிறி போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட மாணவிகளை பள்ளப்பட்டி போலீசார் மற்றும் மாணவிகளின் பெற்றோர்கள் நேற்று இரவு மீட்டு சேலத்திற்கு அழைத்து வந்தனர்.
- மத்திய கல்வி நிலையங்களில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு ஆணையிடப்பட்டுள்ளது.
- இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஐ.ஐ.ஐ.டி., என்.ஐ.டி. மற்றும் மத்திய பல்கலைகழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ் நாட்டைச்சேர்ந்த பிற்ப டுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாண விகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவ, மாணவிகளுக்கு ஒருவருக்கு ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
மேற்படி கல்வி உதவித் தொகைக்கு 2023-2024 ஆம் கல்வியாண்டில் புதியது மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவர்கள் கீழ்க்கண்ட முகவரியிலுள்ள இயக்ககத்தையோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவல கத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களை அணுகியோ அல்லது https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm# scholarship_schemes என்ற இணையதள முகவரியிலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் மேற்படி 2023-2024 ஆம் நிதியாண்டிற்கான புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை விண்ணப்பித்தினை மாணவர்கள் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்கவேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தினை பரிந்துரை செய்து ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நல இயக்ககம், எழிலகம் இணைப்புக் கட்டடம், 2-வது தளம்,சேப்பாக்கம், சென்னை-5, தொலைபேசி எண்:044-29515942, மின்னஞ்சல் முகவரி tngovtiitscholarship@gmail,com என்ற முகவரிக்கு பூர்த்தி செய்த புதுப்பித்தல் விண்ணப்பங்களை 15.12.2023 க்குள் மற்றும் புதியது விண் ணப்பங்களை 15.01.2024-க்குள் அனுப்பி வைக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.