என் மலர்tooltip icon

    இந்தியா

    பள்ளியில் 24 சிறுமிகளை தொடர் பாலியல் துன்புறுத்தல் செய்த கணித ஆசிரியர் கைது
    X

    பள்ளியில் 24 சிறுமிகளை தொடர் பாலியல் துன்புறுத்தல் செய்த கணித ஆசிரியர் கைது

    • 8, 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் படிக்கும் 24 சிறுமிகளை அவர் துன்புறுத்தினார்
    • ஆசிரியரின் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால், பாதிக்கப்பட்ட அனைத்து சிறுமிகளும் ஒன்றாக புகார் அளித்தனர்.

    இமாச்சல பிரதேசத்தில் பள்ளியில் படிக்கும் 24 சிறுமிகளை ஆசிரியர் பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

    இந்த விஷயம் காவல்துறைக்கு தெரிய வந்து ஆசிரியரை கைது செய்தனர். இந்த சம்பவம் சிர்மௌர் மாவட்டத்தில் நடந்தது.

    இமாச்சலப் பிரதேசத்தின் சிர்மௌர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு உயர்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியர் ஒருவர் மாணவர்களிடம் தவறாக நடந்து கொண்டார். 8, 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் படிக்கும் 24 சிறுமிகளை அவர் துன்புறுத்தினார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

    ஆசிரியரின் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால், பாதிக்கப்பட்ட அனைத்து சிறுமிகளும் ஒன்றாகச் சென்று பள்ளி முதல்வர் காந்தா தேவியிடம் புகார் அளித்தனர்.

    இந்த புகாரை முதல்வர் பாலியல் துன்புறுத்தல் தடுப்புக் குழுவிற்கு அனுப்பினார். அதே நேரத்தில், காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

    இதன் அடிப்படையில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். ஆசிரியரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் உண்மை என கண்டறியப்பட்டால் ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மூத்த கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதற்கிடையில், குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியதை அறிந்த பெற்றோர்கள், பள்ளிக்கு பெருமளவில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியரை உடனடியாக இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரினர்.

    Next Story
    ×