search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "sexual harassment"

  • கல்லூரி மாணவிகள் படிப்பு செலவுக்காக பகுதி நேரமாக பைக் டாக்ஸி ஓட்டுகின்றனர்.
  • சம்பந்தப்பட்ட டாக்சி நிறுவனம் எங்களுக்கு பெண் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகமாக தர வேண்டும்.

  திருப்பதி:

  ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் செல்போனில் அழைத்த சில நிமிடங்களில் பைக் டாக்சி வந்து நிற்கிறது. அதிலும் டிரைவர்களாக பெண்கள் பணியாற்றி வருகின்றனர். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

  பிரபல பைக் டாக்சி நிறுவனத்தின் கீழ் பெண்கள் பலர் பைக் ஓட்ட தொடங்கியுள்ளனர்.

  இதன் மூலம் இவர்களுக்கு நல்ல வருமானம் கிடைப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். கல்லூரி மாணவிகள் படிப்பு செலவுக்காக பகுதி நேரமாக பைக் டாக்ஸி ஓட்டுகின்றனர்.

  மேலும் திருமணமான பெண்கள் கணவரின் மது பழக்கத்தால் குடும்பம் மற்றும் குழந்தைகளை காப்பாற்றுவதற்காகவும் பைக் டாக்ஸி ஓட்டுவதாக தெரிவித்துள்ளனர்.

  பைக் டாக்சி தொழிலில் குடும்பத்தை நடத்த தேவையான வருமானம் கிடைக்கிறது. எங்கள் நிறுவனம் ஒதுக்க கூடிய வாடிக்கையாளர்களை நாங்கள் ஏற்றி சென்று விடுகிறோம்.

  இதில் சில வாடிக்கையாளர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தகாத முறையில் நடந்து பாலியல் தொல்லை தருகிறார்கள். வேலையை சுற்றியுள்ள ரகசியம் காரணமாக இது போன்ற சம்பவங்களை போலீசில் புகார் அளிப்பது சவாலாக உள்ளது.

  இது போன்ற நிலையை தடுக்க சம்பந்தப்பட்ட டாக்சி நிறுவனம் எங்களுக்கு பெண் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகமாக தர வேண்டும்.

  மேலும் பல பெண்கள் பைக்டாக்சி ஓட்ட தயாராக இருந்தாலும் இது போன்ற இக்கட்ட சூழ்நிலையால் அவர்கள் இந்த தொழிலுக்கு வர பயப்படுகின்றனர்.

  பெண்கள் ஒட்டும் பைக் டாக்ஸியில் செல்வதன் மூலம் பாதுகாப்பான சூழலை உணர முடியும் என்பதால் தற்போது பெண் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

  இவ்வாறு அவர்கள் கூறினர்.

  • தன் மகள் என்றும் பாராமல் தொழிலாளி அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
  • மயக்கமடைந்த சிறுமி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

  திண்டுக்கல்:

  திண்டுக்கல் பேகம்பூர் ஏ.பி. நகரைச் சேர்ந்தவர் 36 வயது கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி, 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். இதில் முதலாவது 12 வயது மகள் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். அவருக்கு தன் மகள் என்றும் பாராமல் தொழிலாளி அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

  இது குறித்து தனது தாயிடம் கூறியபோது அவர் தனது கணவரை கண்டித்தார். இருந்த போதும் அவரது தொல்லை அதிகரித்த வண்ணம் இருந்துள்ளது.

  நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்த போது தனது மகளை வலுக்காட்டாயமாக அவர் பலாத்காரம் செய்தார். இதில் மயக்கமடைந்த சிறுமி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

  இது குறித்து தாலுகா போலீஸ் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விக்டோரியா லூர்து மேரி ஆகியோர் வழக்குப் பதிவு செய்து மகளை பலாத்காரம் செய்த தொழிலாளியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • பாதிக்கப்பட்ட அப்பெண் கடந்த 23-ந் தேதி விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
  • ஆரோக்கிய பாஸ்கர ராஜை கைது செய்து கோர்ட்டு உத்தரவின் பேரில் வேடம் பட்டு சிறையில் அடைத்தனர்.

  விழுப்புரம்:

  விழுப்புரம் அருகே நல்லாப்பாளையம் கிராமத்தில் உள்ள இருளர் குடியிருப்பில் வசித்து வரும் 28 வயது இளம் பெண்ணின் கணவர் கடந்த 2014-ம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அந்த இளம் பெண் 11 வயது மகனுடன் தனியாக வசித்து வருகிறார்.

  இந்நிலையில் கணவரின் இறப்பு சான்றிதழ், விதவை உதவித் தொகை வழங்க கோரி நல்லாப்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கிய பாஸ்கர ராஜை அப்பெண் அணுகியுள்ளார். இதற்காக ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்றுக் கொண்ட கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கிய பாஸ்கரராஜ், அப் பெண்ணிடம் இருந்து செல்போன் எண்ணைக் கேட்டு வாங்கி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

  பாதிக்கப்பட்ட அப்பெண் கடந்த 23-ந் தேதி விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். இந்நிலையில் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் காதர் பாஷா, கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கிய பாஸ்கர ராஜை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் கண்டாச்சிபுரம் போலீசார் பெண்களுக்கு பாலியல்எதிரான வன்கொடுமை மற்றும் சாதியை பற்றி பேசுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கிய பாஸ்கர ராஜை கைது செய்து கோர்ட்டு உத்தரவின் பேரில் வேடம் பட்டு சிறையில் அடைத்தனர்.

  விழுப்புரம்:

  இருளர் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த கிராம நிர்வாக அலுவலர் சஸ்பெண்டு செய்ய ப்பட்டார்.விழுப்புரம் அருகே நல்லா ப்பாளையம் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டி டம் மனு கொடுத்தார். எனது கணவர் 2014-ம் ஆண்டு உடல் நலக் குறைவால் காலமானார். கணவரின் இறப்பு சான்றிதழ் மற்றும் விதவை உதவித் தொகை கேட்டு கிராம நிர்வாக அலுவலரிடம் சென்றேன்.

  அவர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறியிருந்தார். இதையடுத்து பாலியல் புகார் கூறப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கிய பாக்கியராஜை சஸ்பெண்ட் செய்து ஷாகுல் அமீது உத்தரவிட்டுள்ளார்.

  • பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் முருகன் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளதாக தெரிகிறது.
  • துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லையெனில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் எனவும் பெற்றோர்கள் தெரிவித்தனர்.

  ஒட்டன்சத்திரம்:

  திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கொசவபட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுமார் 50 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக முருகன் (வயது 51) என்பவர் பணிபுரிந்து வருகிறார். பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் முருகன் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளதாக தெரிகிறது.

  இது குறித்து மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஒன்று திரண்டு பள்ளிக்கு வந்தனர். அங்கிருந்த தலைமை ஆசிரியர் முருகனை சரமாரியாக தாக்கினர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

  தலைமை ஆசிரியரை சக ஆசிரியர்கள் மீட்டு வேறு ஒரு அறைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் இது குறித்து அம்பிளிக்கை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் தலைமை ஆசிரியரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லையெனில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் எனவும் பெற்றோர்கள் தெரிவித்தனர்.

  இச்சம்பவத்தால் அரசு பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.

  • கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
  • ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  கன்னியாகுமரி:

  கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு பகுதியைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

  இந்தக் கல்லூரியில் உடற்கல்வி ஆசிரியராக நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்த ஜெனிகர் பிரபு (வயது 40) பணியாற்றி வருகிறார். இவர் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

  இந்த சம்பவம் குறித்து கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசில், மாணவி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ஆசிரியர் ஜெனிகர் பிரபு, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

  அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

  இதனை தொடர்ந்து ஆசிரியர் ஜெனிகர் பிரபு கைது செய்யப்பட்டார். கல்லூரி மாணவிக்கு, ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • கடந்த 2021 ம் ஆண்டு, ஜூன் மாதம் வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
  • விசாரணை நடத்திய காவல் துறையினா் குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

  திருப்பூா்:

  திருப்பூரை அடுத்த பல்லடத்தில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து விரைவு மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

  திருப்பூா் மாவட்டம் பல்லடத்தை அடுத்த வடுகபாளையம்புதூரை சோ்ந்தவா் ஆா்.குமாா் (வயது 66), இவா் கடந்த 2021 ம் ஆண்டு, ஜூன் மாதம் வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

  இது குறித்து சிறுமியின் பெற்றோா் பல்லடம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், விசாரணை நடத்திய காவல் துறையினா் குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

  இந்த வழக்கின் மீதான விசாரணை திருப்பூா் விரைவு மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி பாலு தீா்ப்பு வழங்கினாா். இதில் குற்றம் சாட்டப்பட்ட குமாருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும் அபராதத்தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளாா்.இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜமீலா பானு ஆஜரானாா்.

  • அரசு மேல்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியராக ராமமூர்த்தி (60) என்பவர் பணியாற்றி வந்தார். இவர் மாணவிகளிடம் ஆபாசமாக பேசி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது.
  • இதுப்பற்றி ெதரிய வந்ததும் மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளிக்கு திரண்டனர்.

  நாமக்கல்:

  நாமக்கல் புதுச்சத்திரம் அருகே உள்ள காரைக்குறிச்சி புதூரில் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியராக ராமமூர்த்தி (60) என்பவர் பணியாற்றி வந்தார். இவர் மாணவிகளிடம் ஆபாசமாக பேசி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது.

  இதுப்பற்றி ெதரிய வந்ததும் மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளிக்கு திரண்டனர். பின்னர் அவர்கள் ஓவிய ஆசிரியரை கண்டித்து திடீரென பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

  கைது

  இதுப்பற்றி தெரியவந்ததும் நாமக்கல் மாவட்ட வருவாய் அதிகாரி, மாவட்ட கல்வி அலுவலர் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுக வார்த்தை நடத்தினர்.

  . இந்த நிலையில் ஓவிய ஆசிரியர் ராமமூர்த்தியை இன்ஸ்பெக்டர் கோமதி மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து அழைத்து சென்றனர்.

  சஸ்பெண்டு

  பின்னர் ஆசிரியர் ராமமூர்த்தியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் பாலியல் புகாரில் சிக்கி கைதான ஓவிய ஆசிரியர் ராமமூர்த்தியை கல்வி துறை அதிகாரிகள் சஸ்பெண்டு செய்து நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

  • இளம்பெண் இது குறித்து பேரூர் போலீசில் புகார் செய்தார்.
  • வீட்டில் தனியாக இருந்த பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்த டிரைவர் ரமேஷை கைது செய்தனர்.

  கோவை:

  கோவை பேரூர் அருகே உள்ள தீத்திப்பாளையம் அன்பு நகரை சேர்ந்தவர் 40 வயது இளம்பெண். இவர் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

  சம்பவத்தன்று இரவு 10 மணியளவில் இவரது கணவர் சாப்பிட்டு விட்டு இரவு வேலைக்கு சென்றார். இரவு 11 மணியளவில் பக்கத்து வீட்டை சேர்ந்த டிராவல்ஸ் டிரைவர் ரமேஷ் (வயது 32) என்பவர் இளம்பெண் வீட்டில் காலிங் பெல்லை அழுத்தினார். இதனை கேட்டு இளம்பெண் கதவை திறந்தார். அப்போது இளம்பெண் என்னவென்று கேட்டார். அதற்கு ரமேஷ் வீட்டிற்கு பாம்பு வந்துவிட்டது என கூறினார்.

  பின்னர் அவரது செல்போனில் உள்ள டார்ச் லைட்டை அடித்து வீட்டை சுற்றி தேடுவது போல நடித்தார். அப்போது வீட்டில் இளம்பெண் மட்டும் தனியாக இருப்பதை அவர் உறுதி செய்தார். திடீரென டிரைவர் ரமேஷ் தான் அணிந்திருந்த ஆடைகளை களைந்தார். இதனை பார்த்து இளம்பெண் அதிர்ச்சியடைந்தார்.

  அதன் பிறகு ரமேஷ் இளம்பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்தார். ஆனால் இளம்பெண் வர மறுத்துவிட்டார். இளம்பெண் சத்தம் போடவே டிரைவர் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

  பின்னர் 10 நிமிடத்துக்கு பிறகு ரமேஷ் கதவு, ஜன்னலை தட்டியும், வீட்டின் காலிங் பெல்லை அழுத்தியும் தொல்லை கொடுத்தார். ஆனால் இளம்பெண் கதவை திறக்கவில்லை. அதன் பின்னர் அவர் அங்கு இருந்து சென்றார்.

  மறுநாள் காலையில் இளம்பெண் அவரது கணவர் வந்ததும் இது குறித்து கூறினார். பின்னர் இளம்பெண் இது குறித்து பேரூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வீட்டில் தனியாக இருந்த பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்த டிரைவர் ரமேஷை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

  • டி.ஐ.ஜி.யிடம் மனு
  • பொதுமக்கள் குறை தீர்வு முகாம் நடந்தது

  வேலூர்:

  வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்வு முகாம் இன்று காலை நடந்தது. வேலூர் சரக டி.ஐ.ஜி முத்துசாமி தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் புகார்களை மனுக்களாக அளித்தனர்.

  பெறப்பட்ட மனுக்களை அந்தந்த பிரிவு அலுவலர்க ளுக்கும் அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க டி.ஐ.ஜி. உத்தரவிட்டார்.

  திருவலம் அருகே அம்முண்டி கிராமத்தைச் சேர்ந்த திலகவதி (வயது 42) அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

  நான் கேபிள் ஆபரேட்டராக வேலை செய்து வருகிறேன். எனக்கு திருமணமாகி 3 பெண் பிள்ளைகள் மற்றும் ஒரு ஆண் பிள்ளை உள்ளனர். எனது கணவர் உடல்நிலை சரியில்லாமல் ஒரு வருடத்திற்க்கு முன் இறந்துவிட்டார்.

  என்னுடைய மகன் கராத்தே பயிற்சிக்கு அம்முண்டியில் சந்தை அருகே சென்றார்.அப்போது ஆற்காடு அருகில் உள்ள சாத்தூர் கிராமத்தை சேர்ந்த கராத்தே மாஸ்டர்கள் 2 பேரிடம் கராத்தே பயிற்சி மைய விரிவாக்கத்திற்காக ரூ6.75,000 கடனாக கொடுத்தேன்.

  அவர்கள் கடந்த ஜூன் மாதம் ரூ.1 லட்சத்தை திருப்பி கொடுத்தனர். பின்பு மீதமுள்ள தொகையை கேட்கும் போது என்னை அலைக்கழித்து வருகின்றனர். ஒரு சில நேரங்களில் பணத்தை திருப்பிக்கொடுக்க முடியாது என்கின்றனர்.

  என்னுடைய பணம் ரூ5,75,000 பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  திருவலம் அருகே உள்ள சீக்கராஜபுரத்தை சேர்ந்த அசோக்குமார் அளித்துள்ள மனுவில் கூறியிருப்ப தாவது:-

  எனக்கு வேலை வாங்கித் தருவதாக கடந்த 2017-ம் ஆண்டு காட்பாடியை சேர்ந்த பிரபல அரசியல் கட்சி பிரமுகர் ஒருவரிடம் ரூ.9 லட்சம் கொடுத்தேன். ஆனால் அவர் எனக்கு வேலை வாங்கித் தரவில்லை.

  அந்த பணத்தை எனது வீடு மற்றும் நிலத்தை அடமானம் வைத்து கொடுத்தேன். தற்போது நான் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறேன் எனவே அந்த பணத்தை மீட்டுத் தர வேண்டும் என கூறியுள்ளார்.

  வேலூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்ப தாவது:-

  எனது பேத்திக்கு 5 வயது ஆகிறது. இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் சிறுமி அவரது உறவினர் வீடடுக்கு சென்றார்.

  அப்போது உறவினர் ஒருவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.