என் மலர்
நீங்கள் தேடியது "Deaf and dum"
- பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை குறித்து புகார் அளித்தார்
- மாவட்ட எஸ்.பி. வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
கர்நாடகா மாநிலம் சாமராஜ்நகர் மாவட்டம் கொல்லேகலில் உள்ள ஒரு தனியார் பேச்சு மற்றும் செவிப்புலன் பள்ளியில் ஆசிரியர் ஒருவர், பேச்சு, செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு 13 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்துவந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட குழந்தைகளால் பேச முடியாததால், அவர்களில் நிலையைப் பயன்படுத்தி இக்கொடூரச் செயலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கொடுத்து புகாரின் பேரில் மாவட்ட எஸ்.பி. வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
- மாதாந்திர உதவித் தொகையை 3000 ரூபாயாக உயர்த்தி வழங்கிட வேண்டும்
- 19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
திருப்பூர் :
காது கேளாதவருக்கான மாதாந்திர உதவித் தொகையை 3000 ரூபாயாக உயர்த்தி வழங்கிட வேண்டும் , காது கேளாதவருக்கான ஓட்டுநர் உரிமம் வழங்கும் முகாம் நடத்திட வேண்டும் , ஆவின் பாலகம் அமைத்துக் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட 19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக திருப்பூர் மாவட்ட காதுகேளாதோர் நலச்சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் அடங்கிய வாசகங்களை கொண்ட பதாகைகளை ஏந்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.






