என் மலர்
நீங்கள் தேடியது "ஆசிரியர்"
- பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை குறித்து புகார் அளித்தார்
- மாவட்ட எஸ்.பி. வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
கர்நாடகா மாநிலம் சாமராஜ்நகர் மாவட்டம் கொல்லேகலில் உள்ள ஒரு தனியார் பேச்சு மற்றும் செவிப்புலன் பள்ளியில் ஆசிரியர் ஒருவர், பேச்சு, செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு 13 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்துவந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட குழந்தைகளால் பேச முடியாததால், அவர்களில் நிலையைப் பயன்படுத்தி இக்கொடூரச் செயலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கொடுத்து புகாரின் பேரில் மாவட்ட எஸ்.பி. வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
- மாலை 6 மணியளவில் பள்ளி வளாகத்தில் ஆசிரியர் குடிபோதையில் மயங்கி விழுந்து கிடந்தார்.
- இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது
ராஜஸ்தான் மாநிலம் பார்மேர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளி பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் குடிபோதையில் பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாலை 6 மணியளவில் பள்ளி வளாகத்தில் ஆசிரியர் குடிபோதையில் மயங்கி விழுந்து கிடந்ததை கிராம மக்கள் பள்ளி ஊழியர்களுக்கு தெரிவித்துள்ளனர். மேலும் இதனை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பள்ளி முதல்வர் ஆசிரியரை பணிநீக்கம் செய்தார்.
முன்னதாக, ஆசிரியர் தனது மொபைல் எண்ணை ஒரு மாணவியின் நோட்டில் எழுதியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், முதல்வர் அவரைக் கண்டித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அட்டர் சிங் கையெழுத்திட்ட அந்த காசோலையில் 7,616 ரூபாய் என எழுதப்பட்டது.
- அந்த காசோலையை யாரோ புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
சிம்லா:
இமாச்சல பிரதேச மாநிலத்தில் பள்ளி தாளாளர் ஒருவர் காசோலையில் 7,616 ரூபாய் என்பதை ஆங்கில எழுத்து வடிவில் எழுதியது சமூக வலைதளத்தில் வைரலானது.
அரசு பள்ளி தாளளர் கையெழுத்திடப்பட்ட காசோலையில் எழுதப்பட்டிருந்தது அனைவரையும் வினோதத்தில் ஆழ்த்தியுள்ளது.
அட்டர் சிங் கையெழுத்திட்ட அந்த காசோலையில் 7,616 ரூபாய் என எழுதப்பட்டுள்ளது. அதற்கு ஆங்கிலத்தில் seven thousand six hundred and sixteen என்பதற்குப் பதிலாக, Saven Thursday six harendra sixty Rupees Only என எழுதியுள்ளார்.
Seven-க்குப் பதிலாக saven எனவும், Thousand என்பதற்கு பதிலாக Thursday எனவும் எழுதப்பட்டுள்ளது. hundred என்பதற்கு பதிலாக, harendra என எழுதப்பட்டுள்ளது.
அந்தக் காசோலையை யாரோ புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு விட்டனர். இதனால் அட்டர்சிங், நெட்டிசன்களின் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளானார்.
இத்தகவல் பள்ளி கல்வி இயக்குனரகத்தின் கவனத்துக்குச் சென்றது. பள்ளி முதல்வர், ஆசிரியர் அட்டர் சிங் ஆகியோரிடம் இயக்குனரகம் விரிவான விளக்கம் கேட்டது. பள்ளி கல்வி இயக்குனர் ஆஷிஷ் கோஹ்லி முன்பு ஆஜராகுமாறு அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
இந்நிலையில், நேரில் ஆஜரான அட்டர் சிங் கவனக்குறைவால் தெரியாமல் தவறு செய்து விட்டதாக ஒப்புக்கொண்டார். ஆனால் அவரது விளக்கத்தை இயக்குனர் ஏற்றுக்கொள்ளவில்லை. அட்டர் சிங்கை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
- கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து கடந்த 12-ந்தேதி கல்லூரிக்குள் மாணவியுடன் சேர்ந்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
- திடீரென முதல்வர் அலுவலகத்தின் அருகே தன் மீது பெட்ரோல் ஊற்றி, மாணவி தீக்குளித்தார்.
ஒடிசா மாநிலத்தின் பாலசோர் நகரில் உள்ள கல்லூரி ஒன்றில் மாணவிக்கு பேராசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். பேராசிரியரின் தகாத நடவடிக்கை குறித்து கல்லூரி புகார் குழுவிடம் ஜூலை 1 ஆம் தேதி மாணவி புகார் அளித்தார். அந்த புகாரில் பேராசிரியர் தனக்கு பாலியல் ரீதியாக தொல்லையளித்ததாகவும், மிரட்டியதாகவும் மாணவி தெரிவித்திருந்தார். இருப்பினும், தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை ஆசிரியர் சமீர்குமார் சாஹு மறுத்தார்.
அதனை தொடர்ந்து ஒரு வாரத்துக்குள் இந்த புகார் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்லூரி நிர்வாகம் உறுதியளித்தாலும், நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து கடந்த 12-ந்தேதி கல்லூரிக்குள் மாணவியுடன் சேர்ந்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து, திடீரென முதல்வர் அலுவலகத்தின் அருகே தன் மீது பெட்ரோல் ஊற்றி, மாணவி தீக்குளித்தார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த மாணவியை மீட்டு புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மாணவி 95 சதவீத தீக்காயங்களுடன் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், அவரது நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்தனர்.
இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக ஒடிசா காவல்துறை தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
இந்த நிலையில், தீக்குளித்த 22 வயது கல்லூரி மாணவி, 3 நாட்களாக உயிருக்கு போராடிய நிலையில், நேற்று இரவு உயிரிழந்தார்.
இதற்கிடையே, புகாரை வாபஸ் பெறும் படி, கல்லூரியின் முதல்வரும், புகார்கள் குழு உறுப்பினர்களும் அழுத்தம் கொடுத்ததாக மாணவியின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார். மேலும் புகாரை வாபஸ் பெறவில்லை என்றால் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும் என்றும் கைது செய்யப்படுவீர்கள் என்றும் மிரட்டல் விடுத்ததாகவும் கூறினார்.
இதனை தொடர்ந்து, கல்லூரியின் துறைத் தலைவர் மற்றும் முதல்வர் திலீப் கோஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இதற்கிடையே, மாணவியின் மறைவுக்கு முதலமைச்சர் மோகன் சரண் மாஜி இரங்கல் தெரிவித்ததோடு, குற்றவாளிகள் அனைவரும் கடுமையான தண்டனையை எதிர்கொள்வார்கள் என்று அவரது குடும்பத்தினருக்கு உறுதியளித்துள்ளார்.
- 8, 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் படிக்கும் 24 சிறுமிகளை அவர் துன்புறுத்தினார்
- ஆசிரியரின் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால், பாதிக்கப்பட்ட அனைத்து சிறுமிகளும் ஒன்றாக புகார் அளித்தனர்.
இமாச்சல பிரதேசத்தில் பள்ளியில் படிக்கும் 24 சிறுமிகளை ஆசிரியர் பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
இந்த விஷயம் காவல்துறைக்கு தெரிய வந்து ஆசிரியரை கைது செய்தனர். இந்த சம்பவம் சிர்மௌர் மாவட்டத்தில் நடந்தது.
இமாச்சலப் பிரதேசத்தின் சிர்மௌர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு உயர்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியர் ஒருவர் மாணவர்களிடம் தவறாக நடந்து கொண்டார். 8, 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் படிக்கும் 24 சிறுமிகளை அவர் துன்புறுத்தினார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
ஆசிரியரின் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால், பாதிக்கப்பட்ட அனைத்து சிறுமிகளும் ஒன்றாகச் சென்று பள்ளி முதல்வர் காந்தா தேவியிடம் புகார் அளித்தனர்.
இந்த புகாரை முதல்வர் பாலியல் துன்புறுத்தல் தடுப்புக் குழுவிற்கு அனுப்பினார். அதே நேரத்தில், காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். ஆசிரியரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் உண்மை என கண்டறியப்பட்டால் ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மூத்த கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியதை அறிந்த பெற்றோர்கள், பள்ளிக்கு பெருமளவில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியரை உடனடியாக இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரினர்.
- ஆசிரியரான லால் நவீன் பிரதாப் சிங், மது குடித்துவிட்டு பள்ளிக்கு வந்துள்ளார்.
- வகுப்பறையில் மாணவர்களுக்கு ஆசிரியர் மது ஊற்றி குடிக்க கொடுத்துள்ளார்.
மத்தியபிரதேச மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர் ஒருவர் மது ஊற்றி குடிக்க கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு தொடக்க பள்ளி ஆசிரியரான லால் நவீன் பிரதாப் சிங், மது குடித்துவிட்டு பள்ளிக்கு வந்துள்ளார். பின்னர் வகுப்பறையில் மாணவர்களுக்கு மது ஊற்றி குடிக்க கொடுத்துள்ளார். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, உத்தரப் பிரதேசத்தில் சளி, இருமலுக்கு சிகிச்சை பெற வந்த சிறுவனை மருத்துவர் சிகரெட் பிடிக்க வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
- மாணவர்கள் ஏ.ஐ. ரோபோட்டிடம் பல்வேறு கேள்விகள் கேட்டனர்.
- மாணவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்.
ராமேசுவரம்:
உலகம் முழுவதும் தற்போது செயற்கை நுண்ணறிவு எனும் ஏ.ஐ. தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. தற்போது செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கக்கூடிய மார்க்ரேட் என்று பெயரிடப்பட்ட ஏ.ஐ. ரோபோடிக் ஆசிரியர் ராமேசுவரத்தில் செயல்படும் கிரைஸ்ட் தி கிங் சீனியர் செகண்டரி இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ. பள்ளியில் கற்பித்தல் பணிக்காக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இதற்கான அறிமுக நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, நகரசபை சேர்மன் நாசர் கான் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். பள்ளி தாளாளர் பில்லி கிரகாம் அனைவரையும் வரவேற்றார்.
இது குறித்து பள்ளி முதல்வர் ஷாலினி பில்லி கிரஹாம் கூறியதாவது.:- மனித உருவத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த ஏ.ஐ. ஆசிரியை பள்ளி மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது. மாணவர்களின் கல்வித்திறனை ஊக்குவிப்பதற்காகவே பள்ளியில் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் இயங்கும் இந்த ரோபோடிக் ஆசிரியை தொடங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
நிகழ்ச்சியில் தாசில்தார்கள் முரளிதரன், அப்துல் ஜபார், டி.ஆர்.ஓ. நேர்முக உதவியாளர் சாமிநாதன், கடற்படை கமாண்டர் தினேஷ்குமார், மீனவ பிரதிநிதி சேசுராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் ஏ.ஐ. ரோபோட்டிடம் பல்வேறு கேள்விகள் கேட்டனர். அதற்கு ரோபோட்டிக் ஆசிரியை பதில் அளித்தது. இதனை மாணவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்.
- கொல்கத்தா ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை உறுதிசெய்து 25,753 ஆசிரியர்கள் நியமனத்தை ரத்துசெய்தது.
- நியமனத்தில் குறைபாடு மற்றும் களங்கம் இருப்பதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தில் கடந்த 2016-ம் ஆண்டு அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கான ஆசிரியா்கள், அலுவலா் பணி நியமனங்களில் முறைகேடு நடைபெற்றதாக வழக்குகள் தொடரப்பட்டன. இதை விசாரித்த கொல்கத்தா ஐகோர்ட் முறைகேட்டை உறுதி செய்து 25,753 ஆசிரியா், அலுவலா் பணி நியமனங்களை ரத்துசெய்து கடந்த ஆண்டு ஏப்ரலில் தீர்ப்பளித்தது. அதில் சட்டவிரோத பணி நியமனத்திற்கு உதவிய மேற்கு வங்காள அரசு அதிகாரிகள் யாா் என்பது குறித்து சி.பி.ஐ. விசாரிக்க இருப்பதாக ஐகோர்ட் தெரிவித்து இருந்தது.
இந்த தீா்ப்புக்கு எதிராக மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தது. கொல்கத்தா ஐகோர்ட் நியாயமின்றி ஆசிரியா் மற்றும் அலுவலா் பணி நியமனங்களை ரத்துசெய்ததாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு அப்பீல் வழக்கில் நேற்று தீர்ப்பளித்தது.
கொல்கத்தா ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை உறுதிசெய்து 25,753 ஆசிரியர்கள் நியமனத்தை ரத்துசெய்து உத்தரவிட்டது. நியமனங்கள் ரத்து செய்யப்பட்டவர்கள் தங்கள் சம்பளம் மற்றும் பிற ஊதியங்களை திருப்பி தரவேண்டிய அவசியம் இல்லை. மனிதாபிமான அடிப்படையில் மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு தளர்வு அளித்து அவர்கள் பணியில் நீடிப்பார்கள் என தெரிவித்தனர்.
மேலும், புதிய தேர்வு செயல்முறையை தொடர்ந்து 3 மாதங்களுக்குள் முடிக்கவும் மேற்கு வங்காள அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு மம்தா பானர்ஜிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், இந்த தீர்ப்பு தொடர்பாக மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி கூறுகையில், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அதேநேரத்தில் மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளும். மீண்டும் பணியாளர்களை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் பா.ஜ.க.வும் கம்யூனிஸ்ட்டும் சதி செய்துள்ளன என தெரிவித்தார்.
- நான் எப்போதும் ஒரு ஆணாக இருக்கவே விரும்பினேன்.
- அவர் அறுவை சிகிச்சை செய்யாவிட்டாலும், நான் அவரை திருமணம் செய்திருப்பேன்.
ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியையாக பணிபுரிந்தவர் மீரா. பள்ளியில் உடற்கல்வி வகுப்புகளின்போது மீரா மாணவி கல்பனாவை சந்தித்துள்ளார். அப்போது அவர் கல்பனா மீது காதல் வயப்பட்டுள்ளார்.
பள்ளி காதல் நீண்ட ஆண்டுகளாக தொடர்ந்த நிலையில், கல்பனாவை திருமணம் செய்துக்கொள்ள தான் ஆணாக மாற மீரா பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துக்கொண்டுள்ளார்.
"காதலில் எல்லாம் நியாயமானது. அதனால்தான் நான் என் பாலினத்தை மாற்றிக் கொண்டேன்" என்று ஆணாக மாறி ஆரவ் என்று பெயர் மாற்றிக்கொண்ட மீரா தெரிவித்துள்ளார்.
மேலும் ஆரவ் கூறுகையில், "நான் பெண்ணாக பிறந்தேன். ஆனால் நான் எப்போதும் ஒரு ஆணாக இருக்கவே விரும்பினேன். இதற்காக பாலினத்தை மாற்ற அறுவை சிகிச்சை செய்து கொள்ள திட்டமிட்டேன். கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் எனது முதல் அறுவை சிகிச்சையை செய்தேன்" என்றார்.
இதுகுறித்து கல்பனா கூறுகையில், " நான் அவரை ஆரம்பத்திலிருந்தே விரும்பினேன். அவர் இந்த அறுவை சிகிச்சை செய்யாவிட்டாலும், நான் அவரை திருமணம் செய்திருப்பேன். அறுவை சிகிச்சைக்கு அவருடன் சென்றேன்," என்றார்.
கல்பானா மாநில அளவில் கபடி விளையாடிய நிலையில், வரும் ஜனவரி மாதம் நடைபெற இருக்கும் சர்வதேச கபடி போட்டிக்காக துபாய் செல்லவுள்ளார்.
- பாலியல் தொல்லை வழக்கில் சாட்சியை மாற்றி கூறும்படி மாணவிக்கு மிரட்டல் வருகிறது.
- இந்த சம்பவம் முதுகுளத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள திருவரங்கம் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர், அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
அவருக்கு, அங்கு பணிபுரியும் ஒரு ஆசிரியர் பாலியல் ெதால்லை கொடுத்ததாக கூறப்படு கிறது. இது தொடர்பாக அதே பள்ளியில் படிக்கும் மற்றொரு மாணவி, பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக சாட்சி கூறி இருந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்து வரும் முதுகுளத்தூர் மகளிர் போலீசார், ஆசிரியருக்கு எதிராக சாட்சி கூறிய மாணவியை மிரட்டி அவரது புகாரை மாற்றி கூறும்படி வற்புறுத்தியதாக புகார் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் முதுகுளத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஆசிரியர் எவ்வளவோ எடுத்து சொல்லியும் மாணவரின் பெற்றோர் கேட்க மறுத்தனர்.
- உங்களின் வறுமை நிரந்தரமாக நீங்கவே, நான் உங்களை வற்புறுத்துகிறேன் என்று கல்வியின் முக்கியத்துவத்தை புரிய வைத்தார்.
ஐதராபாத்:
தெலங்கானா மாநிலம், சித்திபேட்டை மாவட்டம், பெஜ்ஜிங்கி உயர்நிலைப்பள்ளியில் மொத்தம் 64 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.
இதில், வரும் மார்ச் மாதத்தில் 6 மாணவர்கள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ளனர். இவர்களில் நவீன் என்ற மாணவன் கடந்த 10 நாட்களாக பள்ளிக்கு வரவில்லை. தலைமையாசிரியர் உத்தரவின் பேரில், ஆங்கில ஆசிரியர் பிரவீன் குமார், நவீன் வீட்டிற்கு சென்று விசாரித்தார்.
குடும்ப வறுமை காரணமாக நவீனை பள்ளிக்கு அனுப்ப அவனது பெற்றோர் மறுத்துவிட்டனர்.
ஆசிரியர் எவ்வளவோ எடுத்து சொல்லியும் மாணவரின் பெற்றோர் கேட்க மறுத்தனர். இதனால், மாணவரின் வீட்டுமுன் தரையில் அமர்ந்து ஆசிரியர் பிரவீன் குமார் தர்ணாவில் ஈடுபட்டார்.
உங்களின் வறுமை நிரந்தரமாக நீங்கவே, நான் உங்களை வற்புறுத்துகிறேன் என கூறி கல்வியின் முக்கியத்துவத்தை புரிய வைத்தார்.
அதன் பிறகு நவீனை பள்ளிக்கு அனுப்ப அவனது பெற்றோர் ஒப்புக் கொண்டனர். நவீனை பள்ளிக்கு அழைத்து வந்த பிரவீன் குமாரை, தலைமை ஆசிரியர் உட்பட பலரும் பாராட்டினர்.
- கீழ்வேளூரை அடுத்த தென்மருதூரை சேர்ந்தவர் தேவதாஸ் ஆந்தகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார்.
- அங்குள்ள 5-ம்வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக புகார் எழுந்தது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த தென்மருதூரை சேர்ந்தவர் தேவதாஸ் (வயது 38).
இவர் ஆந்தகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் அவர் அங்குள்ள 5-ம்வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கார்த்திகேயன் விசாரணைக்கு உத்த ரவிட்டார்.
விசாரணையில் ஆசிரியர் தேவதாஸ் மீது கூறப்பட்ட புகாரில் உண்மை இருப்பது தெரியவந்தது.
அதனைத்தொடர்ந்து அவரை சஸ்பென்ட் செய்து மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகேயன் உத்தரவிட்டார்.
இது குறித்து வட்டார கல்வி அலுவலர் மணிகண்டன் கீழ்வேளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகார் மனு நாகப்பட்டினம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்த தகவல் அறிந்ததும் ஆசிரியர் தேவதாஸ் தப்பியோடி விட்டார்.
அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் பாதிப்புக்கு உள்ளான ஆந்தகுடி தொடக்க பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் பாலியல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தினர் நாகை அருகே அரசு பள்ளியில் ஆசிரியர் 5-ம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் தீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






