search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Schoolgirl"

    • ஆட்டோ டிரைவர் 10ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியிடம் நட்பாக பழகி பலாத்காரம் செய்தார்.
    • புகாரின் பேரில் வெளியூருக்கு தப்பிச்சென்ற ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள கோப்பம்பட்டியை சேர்ந்தவர் கணேசன் மகன் உதயராயன் (23). கூலித்தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியிடம் நட்பாக பழகி வந்தார். பின்னர் காதலிப்ப தாகக் கூறி எல்லை மீறினார். பல இடங்களில் வெளி யிடங்களுக்கு அழைத்துச் சென்று 2 பேரும் உல்லாச மாக இருந்துள்ளனர்.

    இதனால் மாணவி கர்ப்பம் அடைந்தார். அவரது பெற்றோர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்த போது அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். இதற்கு யார் காரணம் என விசாரித்த போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    மாவட்ட எஸ்.பி. உத்தரவின் பேரில் வேடசந்தூர் டி.எஸ்.பி. துர்காதேவி அறிவுரையின் பேரில் வடமதுரை இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அதில் உதயராயன் தனது காதலியான மாணவியை உல்லாசம் அனுபவித்ததோடு மட்டுமின்றி தனது நண்பர்களுக்கும் அவரை விருந்தாக்கி உள்ளார்.

    மாணவியான சிறுமி தனக்கு என்ன நடக்கிறது என்றேதெரியாமல் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்த போதுதான் உண்மை வெளிவந்தது. இதனையடுத்து கடந்த 2 வாரங்களுக்கு முன்பு உதயராயனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவ த்தில் ஈடுபட்ட மேட்டுப்பட்டி கொல்லபட்டியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான திரவிய கோடீஸ்வரன் (29) என்பவரை தேடி வந்தபோது அவர் தலைமறைவானார்.

    வெளியூரில் இருந்து ஊருக்கு வந்த அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவ த்தில் மேலும் சிலர் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிப்பதால் அவர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • தேனியில் வெவ்வேறு பிரச்சினைகளில் மாணவி உள்பட 3 பேர் மாயமாகினர்.
    • புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே கடமலை க்குண்டு தர்மராஜபுரத்தை சேர்ந்தவர் அன்பழகன் மகள் அனுசியா(17). இவர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். சரியாக படிக்கா ததால் அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர்.

    இதனால் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளி யேறிசென்றவர் வீடு திரும்பவில்லை.அக்கம்ப க்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் கடமலைக்குண்டு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

    கூடலூரை சேர்ந்தவர் குமணன் மனைவி பிரியா(23). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கருத்துவேறுபாடு காரண மாக இவர்களுக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதனால் கோபித்துகொண்டு சென்ற பிரியா இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் இதுகுறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளிக்கப்பட்டது. எஸ்.பி உத்தரவின்பேரில் கூடலூர் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து பிரியாவை தேடி வருகின்றனர்.

    உத்தமபாளையம் அருகே ஓடைப்பட்டியை சேர்ந்தவர் வனராஜ் மகன் முத்துச்செல்வம்(16). இவர் ராயப்பன்பட்டி பகுதியில் உள்ள பள்ளிவிடுதியில் தங்கி 11-ம் வகுப்பு படித்து வருகிறார். விடுமுறைக்காக வீட்டுக்கு சென்ற அவர் அதன்பிறகு கல்லூரிக்கு வரவில்லை.

    பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் விடுதி கண்காணிப்பாளர் எபினேசர் ராயப்பன்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாணவனை தேடி வருகின்றனர்.

    • மாணவி, கண்டக்டரிடம் பாக்கி சில்லறையை தருமாறு கேட்டபடி இருந்தார்.
    • சம்பவ இடத்தில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று மாணவி தனது வீட்டை அடைந்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ளது நெடுமங்காடு. இங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் மாணவி ஒருவர் சம்பவத்தன்று தனது வீட்டிற்கு வருவதற்காக நெடுமங்காடு டெப்போவில் இருந்த அரசு பஸ்சில் ஏறினார்.

    பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்று கொண்டிருந்தபோது, மாணவி தன்னிடம் இருந்த 100 ரூபாயை கொடுத்து டிக்கெட் எடுத்துள்ளார். மாணவியிடம் டிக்கெட்டை கொடுத்த கண்டக்டர், கட்டணம் போக மீதி தொகையை திருப்பி கொடுக்கவில்லை. சற்று நேரத்தில் தருவதாக கூறி இருக்கிறார்.

    ஆனால் கண்டக்டர் சில்லறை பாக்கியை தரவில்லை. இதனால் மாணவி, கண்டக்டரிடம் பாக்கி சில்லறையை தருமாறு கேட்டபடி இருந்தார். இதில் ஆத்திரமடைந்த அந்த கண்டக்டர், மாணவியை திட்டி அவமானப்படுத்தி இருக்கிறார்.

    மேலும் பாக்கி சில்லறையை கொடுக்காமல், அந்த மாணவியை நடுவழியிலேயே பஸ்சில் இருந்து வலுக்கட்டாயமாக இறங்க செய்தார். மாணவியிடம் வேறு பணம் இல்லாததால், வேறு பஸ்சில் வீட்டுக்கு செல்ல முடியாமல் தவித்தார். அவர், கண்ணீர் வடிந்தபடியே தனது வீட்டிற்கு நடந்து சென்றார்.

    சம்பவ இடத்தில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று தனது வீட்டை அடைந்தார். தன்னிடம் அரசு பஸ் கண்டக்டர் நடந்த விதம் குறித்து தனது பெற்றோரிடம் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

    இதையடுத்து மாணவியின் தந்தை சம்பந்தப்பட்ட பஸ் டெப்போவுக்கு சென்று, மாணவியை நடுவழியில் இறக்கி விட்ட கண்டக்டரை சந்தித்து தட்டிக்கேட்டார். அப்போது மாணவியின் தந்தையையும் அந்த கண்டக்டர் தகாத வார்த்தைகளால் திட்டி இருக்கிறார்.

    இந்த சம்பவம் குறித்து போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் புகார் செய்ய மாணவியின் பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.

    • கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்தனர்.
    • ஷாலினி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    திருவாரூர்:

    திருவாரூர் நகரத்திற்குட்பட்ட அண்ணா காலணி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் மகேஸ்வரி.இவரது கணவர் கலிய பெருமாள்.இவர் கோயம்பு த்தூரில் கொத்தனராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 5 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. ஷாலினி அங்குள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    மேலும் மகேஸ்வரி திருவாரூரில் உள்ள நகைக்கடை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் மகேஸ்வரி நகை கடைக்கு சென்று விட ஷாலினி தனது பள்ளிக்கு சென்றுள்ளார். வேலை முடிந்து மகேஸ்வரி வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது ஷாலினி மின்விசிறியில் தனது துப்பட்டாவின் மூலம் தூக்கு போட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது.

    இது குறித்து திருவாரூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விசாரணையில் முதற்கட்டமாக ஷாலினி அடிக்கடி மொபைல் போனில் பேசி வந்ததாகவும் இதுகுறித்து மகேஸ்வரி கண்டித்த காரணத்தினால் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்று தெரிய வருகிறது.

    மேலும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    • நாள் ஒன்றுக்கு பகல்-இரவு ஆட்டம் என 100-க்கும் மேற்பட்ட சூதாட்ட சுற்றுகள் நடைபெற்று வருகிறது.
    • விவசாயிகள் மற்றும் குடியிருப்பு பெண்கள், பள்ளி கல்லூரி மாணவிகள், கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தொப்பூர்:

    தருமபுரி மாவட்டம், தொப்பூர் அருகே கம்மம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சேவேரிக்கொட்டாய், சோழியானூர், மூலக்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள கரடு சார்ந்த பகுதியில், விவசாய நிலங்கள்,

    கிராமப்புற வீடுகள் நிறைந்த பகுதிகளுக்கு மத்தியில், ஒரே நேரத்தில் 100 பேர் அமர்ந்து சூதாட்ட த்தில் ஈடுபடுவது போன்று, சிமெண்ட் அட்டை குடில்கள் அமைத்து, மதுவிருந்து மற்றும் கறி விருந்தோடு இரவு-பகலாக லட்சகணக்கில் பகிரங்கமாக சூதாட்டத்தை கும்பல் நடத்தி வருகிறது.

    இந்த சூதாட்டத்தில் தருமபுரி, சேலம், நாமக்கல், பெங்களூர் ஆகிய பல்வேறு பகுதிகளை சேர்ந்த சூதாட்ட பித்துக்கள் கலந்து கொண்டு, பல லட்சங்களை, சூதாட்டத்தில் இழந்து வருகின்றனர்.

    நாள் ஒன்றுக்கு பகல்-இரவு ஆட்டம் என 100-க்கும் மேற்பட்ட சூதாட்ட சுற்றுகள் நடைபெற்று வருகிறது.

    ஒரு கட்டத்தில் அதிகளவு பணம் இழந்தவர்கள் மற்றும் சூதாட்ட கும்பலுக்கிடையே சண்டை ஏற்படும் போது, அடியாட்கள் கொண்டு பணம் இழந்தவர்களை அங்கிருந்து மிரட்டி வெளியேற்றும் சம்பவமும் அவ்வப்போது நடைபெறுகிறது.

    இந்த சூதாட்டத்தால் விவசாய பணிக்கு செல்லும் பெண்கள், பள்ளி கல்லூரிக்கு சென்று விட்டு வீடு திரும்பும் மாணவிகள் முதல் நாள்தோறும் அச்ச நிலையில் இருந்து வருகின்றனர்.

    பல குடும்பங்கள் சீரழிய காரணமாக உள்ள சூதாட்டத்தை தடுத்து தக்க நடவடிக்கை எடுப்பதுடன், அடியாட்களோடு லட்ச கணக்கில் நடக்கும் சூதாட்டத்தை, தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் மற்றும் குடியிருப்பு பெண்கள், பள்ளி கல்லூரி மாணவிகள், கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.
    • திருப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே தொங்குட்டிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மசநல்லாம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்ரமணி (வயது 45). இவரது மகள் வைஷ்ணவி (13). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை தங்களது மகளை காணவில்லை என பெற்றோர் பல இடங்களில் தேடி உள்ளனர். அப்போது அருகில் இருந்த தனியாருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தின் கிணற்றில் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக இதுகுறித்து திருப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து தேடியதில் கிணற்றில் வைஷ்ணவியின் உடலை கண்டுபிடித்து மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

    இது குறித்து அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவி வைஷ்ணவி உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவி இறந்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • பாதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.
    • டெல்லியில் இனிமேல் ஆசிட் விற்பனை நடைபெறாது என வியாபாரிகள் உறுதி,

    டெல்லியின் தெற்கு துவாரகா பகுதியில் பள்ளிக்கு செல்வதற்காக சாலையில் நடந்து சென்ற 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவி மீது பைக்கில் வந்த இருவர் ஆசிட்டை வீசி விட்டு தப்பிச் சென்றனர். வலி பொறுக்க முடியாமல் கதறியபடி அந்த மாணவி சாலையில் கீழே விழுந்தார். இந்த கொடூர தாக்குதலில் அவரது முகம் மற்றும் கண்களில் பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அந்த மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ஆசிட் வீசிய சம்பவத்தில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் அதன் அடிப்படையில் முக்கிய குற்றவாளி உள்பட 3 பேரை கைது செய்துள்ளனர். ஆன்லைன் மூலம் நைட்ரிக் அமிலத்தை வாங்கி அந்த குற்றவாளிகள் மாணவி மீது வீசியிருக்கலாம் என்றும், தடயவியல் பரிசோதனையின் பின்னரே அது உறுதிப்படுத்தப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். 


    இந்நிலையில் மாணவி மீதான ஆசிட் வீச்சிற்கு டெல்லி வியாபாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். டெல்லியில் இனிமேல் ஆசிட் விற்பனை நடைபெறாது என்றும் அவர்கள் உறுதியளித்துள்ளனர்.ஆசிட் விற்பனையைத் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்றும், ஆசிட் வாங்க வருபவர்களை கண்காணிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    பள்ளி மாணவி மீதான ஆசிட் வீச்சிற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பாஜக எம்.பி.யுமான கவுதம் கம்பீர் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், வெறும் வார்த்தைகளால் எந்த நீதியையும் நம்மால் வழங்க முடியாது, இந்த மிருகங்களுக்கு அளவிட முடியாத வலியைப் பற்றிய பயத்தை நாம் ஏற்படுத்த வேண்டும். துவாரகாவில் பள்ளி மாணவி மீது ஆசிட் வீசிய இளைஞர்களை பொதுவெளியில் பகிரங்கமாக தூக்கிலிட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • உடுமலை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.
    • 1098 எண்ணுக்கு தொடர்பு கொண்டு குழந்தைகள் உதவி மையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளி தலைமை ஆசிரியை அந்த மாணவியை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து உடுமலை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து 1098 எண்ணுக்கு தொடர்பு கொண்டு குழந்தைகள் உதவி மையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.அவர்களின் விசாரணையைத் தொடர்ந்து நீண்ட இழுபறிக்கு பிறகு அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை மீது உடுமலை மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால் அது ஒருதலைபட்சமாக இருப்பதாக கூறி மாணவியின் தாயார் வக்கீல் உதவியுடன் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு கொடுத்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வேப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் 10-ம் வகுப்பு பயிலும் 15 வயது மாணவி.
    • 17 வயதுடைய முதலாமாண்டு பாலிடெக்னிக் மாணவர் கடத்திச் சென்றார்.

    கடலுார்:

    வேப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் 10-ம் வகுப்பு பயிலும் 15 வயதுமாணவி. இவர், பள்ளிக்கு சென்ற போது, 17 வயதுடைய முதலாமாண்டு பாலிடெக்னிக் மாணவர் கடத்திச் சென்றார். இதனால் பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் சிறுபாக்கம் போலீசார் நேற்று வழக்குப் பதிந்து இருவரையும் தேடி வருகின்றனர்.

    ×