என் மலர்
நீங்கள் தேடியது "Pocso act"
- ராகவன், 10ம்வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்து வந்துள்ளார்.
- தற்போது அச்சிறுமி கார்ப்பமாக உள்ளதாக கூறப்படுகிறது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, மருதடி குன்னுமேடு கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் மகன் ராகவன் (20).டிராக்டர் டிரைவர்.
இவர் 10ம்வகுப்பு படிக்கும் மாணவியை கடந்த இரண்டுஆண்டுகளாக காதலித்து வந்துள்ளதாகவும், இதனால் தற்போது அச்சிறுமி கார்ப்பமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் கொடுத்த புகாரின்பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்து ராகவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வாலிபர் மீது புகார் அளிக்கப்பட்டது.
- போலீசார் வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்ததுடன் அவரை சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகில் உள்ள கோனூரை சேர்ந்த சென்ராயன் மகன் சசிக்குமார்(22).
இவர் அதேபகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறினார். இதனையடுத்து ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் சசிக்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்ததுடன் அவரை சிறையில் அடைத்தனர்.
- போக்சோ சட்டம் பாய்ந்தது
- போலீசார் சிறையில் அடைத்தனர்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் 11 வயதுடைய சிறுவன் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார்.
இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 25 வயது வாலிபர் ஒருவர் அச்சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து சிறுவன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக சிறுவனின் தந்தை காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.
- மகள் உறவு சிறுமிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
- இதனையடுத்து அவர் திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டார்.
திண்டுக்கல், ஆக. 5-
திண்டுக்கல் செல்லாண்டி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (வயது 44). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சென்னமநாயக்கன்–பட்டியைச் சேர்ந்த 37 வயது பெண்ணுடன் பழகி வந்துள்ளார். அவருக்கு ஏற்கனவே 2 முறை திருமணமாகியுள்ளது. இதில் 2-வது கணவர் மூலம் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் முருகனை 3-வதாக திருமணம் செய்துள்ளார். அவர் இல்லாத சமயத்தில் தனது மகள் முறை உறவு கொண்ட 11 வயது சிறுமிக்கு முருகன் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இது குறித்து சிறுமி தனது தாயாரிடம் கூறியுள்ளார்.
இதைக் கேட்டதும் அதிர்ச்சியடைந்த அந்த பெண் இது குறித்து தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் முருகன் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதனையடுத்து அவர் திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டார்.
- பிளஸ்-2 படிக்கும் மாணவிக்கு கடந்த சில நாட்களாக சகாய டோனிவளவன் பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார்.
- மாணவியின் பெற்றோர் முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தனர்.
புதுச்சேரி:
புதுவை 100 அடி சாலை அருகே தனியார் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.
இப்பள்ளியில் விலங்கியல் ஆசிரியராக கண்டமங்கலம் இந்திரா நகரை சேர்ந்த சகாய டோனிவளவன் என்பவர் பணிபுரிகிறார். இவர் இப்பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவிக்கு கடந்த சில நாட்களாக பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார். இது குறித்து அந்த மாணவி எதிர்ப்பு தெரிவித்தும் டோனி வளவன் தொடர்ந்து தொந்தரவு அளித்து வந்தார். மேலும் அந்த மாணவியின் செல்போனுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது. அதற்கு அந்த மாணவி எந்த பதிலும் அளிக்காத போதிலும் டோனிவளவன் தொடர்ந்து ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி டார்ச்சர் செய்துள்ளதாக தெரிகிறது.
இந்த தகவல் கிடைத்ததும் சமூக அமைப்பினர் பள்ளி தாளாளரிடம் முறையிட்டுள்ளனர். பின்னர் இதுகுறித்து மாணவியின் பெற்றோர் முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் போக்சோவில் வழக்கு பதிவு செய்து தலைமறைவான ஆசிரியரை தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போக்சோ சட்டத்தில் கைது
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அடுத்த வேட்டவலம் பகுதியைச் சேர்ந்த 20 வயது வாலிபரும் அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 10-ம் படிக்கும் 16 வயது மாணவியும் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாலிபர் அந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த மாணவிக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு மாணவியை அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர். அப்போது அவர் 4 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் மாணவியிடம் கேட்டபோது அவர் நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து மாணவியின் பெற்றோர் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.
புகாரின் பேரில் 10-ம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அங்கு வந்த தர்மராஜ் எனக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக புகரில் சிறுமி தெரிவித்துள்ளார்.
- போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மராஜை தேடி வருகின்றனர்.
திருச்செந்தூர்:
நாசரேத் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் 10-ம் வகுப்பு படித்து வருகிறேன். எங்கள் பகுதிக்கு நாசரேத் பிரகாசபுரத்தை சேர்ந்த வியாபாரியான தர்மராஜ் என்பவர் அடிக்கடி வருவார்.
இதனால் அவர் என்னிடம் சகஜமாக பேசி பழகி வந்தார். அதே போன்று சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அங்கு வந்த தர்மராஜ் எனக்கு பாலியல் தொந்தரவு செய்தார்.
தொடர்ந்து அவர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த சிறுமி கூறியிருந்தார்.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட திருச்செந்தூர் அனைத்து மகளிர் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தர்மராஜை தேடி வருகிறார்கள்.
- 16 வயதுடைய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
- அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விக்னேசை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகாவை சேர்ந்தவர் தினகரன். இவரது மகன் விக்னேஷ் (வயது 23). இவர் 16 வயதுடைய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. தற்போது அந்த சிறுமி 4 மாத கர்ப்பமாக உள்ளார்.
இது தொடர்பாக சிறுமியின் தந்தை பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விக்னேசை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
- 4 வயது சிறுமியை தனியாக அழைத்து சென்று ஐஸ் கொடுத்து பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படுகிறது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமகிருஷ்ணனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திசையன்விளை:
திசையன்விளை அருகே உள்ள விஜய அச்சம் பாட்டை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 24) ஐஸ் வியாபாரி. இவர் அதே ஊரைச் சேர்ந்த 4 வயது சிறுமியை தனியாக அழைத்து சென்று ஐஸ் கொடுத்து பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவர்மீது வள்ளியூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமகிருஷ்ணனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவர் மீது தீண்டாமை வன்கொடுமை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- 17 வயது சிறுமியை காதலித்து பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்த வாலிபர்.
- போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள செந்துறையைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 23).
இவர் அதே பகுதியில் பத்திர எழுத்தராக வேலை பார்த்து வந்தார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த 8ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்த 17 வயது சிறுமியுடன் பழகி வந்தார்.
அவரை காதலிப்பதாக கூறி உல்லாசமாக இருந்துள்ளார். இதில் மாணவி கர்ப்பமானார். அவர் உடல்நிலை மாறுதலடைந்ததைக் கண்டு அவரது பெற்றோர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அப்போது அவர் 3 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து நடந்த விபரங்களை கேட்டபோது அவர் வெங்கடேசன் தன்னை பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார்.
இது குறித்து நத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜ சேகர், மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தின குமாரி ஆகியோர் வழக்குபதிவு செய்து வெங்கடேசனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- எனது கணவர் இறந்து 9 ஆண்டுகள் ஆகிறது. எனக்கு 14 வயது 8-ம் வகுப்பு படிக்கும் மகள் இருக்கிறாள்.
- எனது மகளின் வாழ்க்கையை நாசப்படுத்திய பேச்சிமுத்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
எனது கணவர் இறந்து 9 ஆண்டுகள் ஆகிறது. எனக்கு 14 வயது 8-ம் வகுப்பு படிக்கும் மகள் இருக்கிறாள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேச்சிமுத்து என்ற வாலிபர் எனது மகளை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தைகள் கூறி காதலில் விழ வைத்துள்ளார்.
பின்னர் எனது மகளை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளார். தொடர்ந்து எனது மகளை மிரட்டி பலவந்தப்படுத்தி உள்ளார். மேலும் அதனை போட்டோ எடுத்து மிரட்டி உள்ளார்.
நான் சொல்வதை கேட்காவிட்டால் பேஸ்புக்கில் போட்டு விடுவதாகவும் மிரட்டி உள்ளார். எனது மகளின் வாழ்க்கையை நாசப்படுத்திய பேச்சிமுத்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து பேச்சிமுத்துவை கைது செய்தனர்.
இந்த சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- டாக்டர்கள் விசாரித்தபோது சிறுமிக்கு 17 வயதே ஆவது தெரிய வந்தது. மேலும் சிறுமிக்கு சட்ட விரோதமாக திருமணம் நடைபெற்றதும் தெரிய வந்தது.
- சிறுமியின் கணவர் முருகன் மீது போக்சோ உள்பட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்
சென்னை:
கோயம்பேடு பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவரது மனைவி சுமதி. இவர்களது மகளான 17 வயது சிறுமிக்கும், அதே பகுதியை சேர்ந்த முருகன் (28) என்பவருக்கும் திருமணம் செய்து வைத்தனர்.
அதன்பிறகு இருவரும் அதே பகுதியில் தனியே வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். இதில் சிறுமி கர்ப்பம் அடைந்தார். கடந்த மாதம் 25-ந்தேதி சிறுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
இதையடுத்து அவரை பிரசவத்துக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. டாக்டர்கள் விசாரித்தபோது சிறுமிக்கு 17 வயதே ஆவது தெரிய வந்தது. மேலும் சிறுமிக்கு சட்ட விரோதமாக திருமணம் நடைபெற்றதும் தெரிய வந்தது.
இதுபற்றி திருமங்கலம் மகளிர் போலீசாருக்கு டாக்டர்கள் தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு விரைந்து சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினார்கள். இதில் சிறுமிக்கு 16 வயதாக இருக்கும்போது திருமணம் செய்து வைத்ததும், தற்போது குழந்தை பிறந்திருப்பதும் தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசார் சிறுமியின் கணவர் முருகன் மீது போக்சோ உள்பட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் பதிவு செய்தனர். மேலும் இருவரின் பெற்றோரின் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.
இதையறிந்த முருகன், அவரது பெற்றோர், சிறுமியின் பெற்றோர் என 5 பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.