என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அண்ணன் மீது பாலியல் புகார் - சிறுமியை அரிவாளால் வெட்டிய வாலிபர்... சென்னையில் பயங்கரம்
- பாலியல் புகார் அளித்த சிறுமியை பாபு அரிவாளால் வெட்டி உள்ளார்.
- பலத்த காயமடைந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த மதன்குமார் என்ற இளைஞர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் மதன்குமார் மீது பாலியல் புகார் அளித்த சிறுமியை அவரது சகோதரன் பாபு அரிவாளால் வெட்டி உள்ளார். சிறுமியின் முகம், கண், கை, கால், தலை ஆகிய பகுதிகளில் அரிவாளால் பாபு வெட்டி உள்ளார்.
பலத்த காயமடைந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கூட்டாளிகளுடன் சேர்ந்து சிறுமியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிய மதன்குமாரின் சகோதரன் பாபுவை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story






