search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gang rape"

    • இந்த செயலை அவர்கள் வீடியோவாக பதிவு செய்து 2 சிறுமிகளையும் மிரட்டி வந்துள்ளனர்.
    • இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் கடம்பூர் பகுதியில் கடந்த வாரம் இயற்கை உபாதையை கழிக்க, வயல்வெளிக்கு இரு சிறுமிகள் சென்றுள்ளனர்.

    அப்போது இந்த சிறுமிகளை செங்கல் சூளையின் காண்டிராக்டர் ராம்பூர் நிஷாத்(48), அவரது மகன் ராஜூ(18) மற்றும் உறவினர் சஞ்சய்(19) ஆகிய 3 பேர் சேர்ந்து கட்டாயமாக மது அருந்த வைத்து, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

    மேலும் இந்த செயலை அவர்கள் வீடியோவாக பதிவு செய்து 2 சிறுமிகளையும் மிரட்டி வந்துள்ளனர். இதனால் சிறுமிகள் இருவரும் கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளனர்.

    இந்நிலையில், கடந்த வாரம் ஒரு மரத்தில் சிறுமிகள் 2 பேரின் உடல்களும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 3 நபர்களையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த வீடியோக்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், குற்றவாளிகள் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    கைது செய்யப்பட்ட ராம்பூர் நிஷாத்-ன் செங்கல் சூளையில் தான் பாதிக்கப்பட்ட சிறுமிகளும், அவர்களுடைய பெற்றோரும் வேலை செய்து வந்துள்ளனர்.

    இந்நிலையில், பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமியின் தந்தையும் நேற்று வீட்டின் அருகே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். காவல்துறை தரப்பில் இது தற்கொலை தான் என்று உறுதி செய்துள்ளனர்.

    பாலியல் வழக்கை வாபஸ் பெற வேண்டுமென்று காவல்துறையினர் அழுத்தம் கொடுத்ததால் தான் அவர் தற்கொலை செய்து செய்து கொண்டார் என அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "உ.பி.யில், இரண்டு சகோதரிகள் பாலியல் பலாத்காரத்திற்குப் பிறகு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர், இப்போது நீதி கிடைக்காததாலும், வழக்கைத் திரும்பப் பெறுவதற்கான அழுத்தத்தாலும், அவர்களின் தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    ம.பி.யில், தனது மனைவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடுமையை எதிர்த்து புகார் கூறிய ஏழை கணவரின் வழக்கு நியாயமாக விசாரிக்கப்படாததால், தனது ௨ குழந்தைகளுடன் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பாஜகவின் டபுள் என்ஜின் ஆட்சியில் நீதி கேட்பது குற்றமாகி உள்ளது. பாஜக ஆட்சியில் ஹத்ராஸ் முதல் உன்னாவ் வரையிலும், மந்த்சௌரிலிருந்து பவுரி வரையிலும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்குப் பிறகு, அவர்களின் குடும்பங்கள் நீதிக்காக போராடின

    இந்த கொடூரமான அநீதிக்கு எதிராக உங்கள் குரலை உயர்த்துங்கள், இல்லையெனில் இன்று இல்லை என்றால் நாளை இந்தக் கொடுமையின் நெருப்பு உங்களையும் சுட்டு விடும்" என்று அவர் பதிவிட்டுள்ளார். 

    • நிவாரண முகாமில் தங்கியிருக்கும் அந்த பெண், தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.
    • அவமானத்தால் வாழ்வை முடித்துக் கொள்ள விரும்பியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.

    இம்பால்:

    மணிப்பூர் மாநிலத்தில் நடந்த வன்முறைக்கு 160க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பாலியல் வன்கொடுமை, வீடுகள் சூறை, தீவைப்பு சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்றன. இதனால் ஏராளமானோர் ஊரை காலி செய்து பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுவிட்டனர். மே 3ம் தேதி தொடங்கி ஜூலை 30ம் தேதி வரை நடந்த வன்முறை தொடர்பாக 6500க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இந்த வன்முறையின் கோரமுகம் ஒவ்வொன்றாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மே மாத துவக்கத்தில் வன்முறையின்போது 2 பெண்கள் நிர்வாணமாக ஊருக்குள் அழைத்து வந்தது தொடர்பான வீடியோ வெளியானபின்னர் மணிப்பூர் விவகாரம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், கலவரம் நடந்த அன்று மேலும் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. வன்முறை கும்பலில் இருந்து உயிர்தப்பி நிவாரண முகாமில் தங்கியிருக்கும் அந்த பெண், தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.

    மே 3ம் தேதி மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 37 வயது நிரம்பிய அந்த பெண், தனது வீடு வன்முறையாளர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டபோது, அந்த வீட்டில் இருந்து தனது இரண்டு மகன்கள், மருமகள் மற்றும் அவரது அண்ணி ஆகியோருடன் தப்பிச் சென்றுள்ளார். அப்போது அவரை வன்முறையாளர்கள் சிலர் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் மனுவில் கூறி உள்ளார்.

    'என்னையும் எனது குடும்பத்தின் கவுரவத்தையும், கண்ணியத்தையும் காப்பாற்றுவதற்காகவும், சமூகத்தில் புறக்கணிக்கப்படக்கூடாது என்பதற்காகவும் இதுவரை தனக்கு நேர்ந்த கொடுமையை வெளியில் சொல்லாமல் இருந்தேன். அவமானத்தால் என் வாழ்வை நானே முடித்துக் கொள்ள விரும்பினேன். பின்னர் பெண்கள் பலர் தாங்கள் அனுபவித்த கொடுமைகளைப் பற்றி பேசும் செய்திகளைப் பார்த்த பிறகு, போலீசில் புகார் அளிப்பதற்கு எனக்கு தைரியம் வந்தது' என அந்த பெண் கூறியிருக்கிறார்.

    அவரது புகார் தொடர்பாக பிஷ்னுபூர் காவல் நிலையத்தில் ஜீரோ எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், அவர் கூறியிருப்பதாவது:-

    நான் என் மருமகளை என் முதுகில் தூக்கிக்கொண்டு என் இரண்டு மகன்களையும் கையில் பிடித்துக்கொண்டு என் அண்ணியுடன் அந்த இடத்திலிருந்து ஓட ஆரம்பித்தேன். அண்ணியும் ஒரு குழந்தையை முதுகில் சுமந்து கொண்டு எனக்கு முன்னால் ஓடிக்கொண்டிருந்தார். அப்போது நான் தடுமாறி சாலையில் விழுந்தேன். அப்போது என் அண்ணி என்னை நோக்கி ஓடி வந்து என் மருமகளை என் முதுகில் இருந்து தூக்கிக் கொண்டு என் இரண்டு மகன்களுடன் தப்பி ஓடினார்.

    பின்னர் ஒரு வழியாக நான் எழுந்திருக்கையில், ஐந்தாறு ஆண்கள் என்னைப் பிடித்துவிட்டனர். அவர்கள் என்னை தகாத வார்த்தைகளால் திட்டித் தாக்கியதுடன் பாலியல் வன்கொடுமை செய்தனர்.

    இவ்வாறு அந்த பெண் தனது புகார் மனுவில் கூறியிருக்கிறார்.

    'ஜீரோ எஃப்ஐஆர்' என்பது எந்த காவல் நிலையத்தில் வேண்டுமானாலும் பதிவு செய்யப்படலாம். குற்றம் நடந்த எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில்தான் பதிவு செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. வழக்குப் பதிவு செய்யப்பட்ட காவல் நிலையம் அந்த எப்.ஐ.ஆரை சரியான அதிகார வரம்பிற்கு அனுப்ப வேண்டும். பின்னர் அந்த காவல்நிலையம் அதை விசாரிக்கும். இந்த வழக்கைப் பொருத்தவரை சுராசந்த்பூரில் உள்ள காவல் நிலையம் விசாரணை நடத்துகிறது.

    • திட்டக்குடி பள்ளி மாணவி கூட்டு பலாத்கார வழக்கில் மேலும் 2 பேருக்கு தொடர்பு போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகிறது.
    • சம்பவத்தில் தொடர்புடைய மாணவி மற்றும் மாணவர்கள் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ப தால், அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    கடலூர்:

    கடலுார் மாவட்டம் திட்டக்குடி பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவியை, அவருடன் படிக்கும் 3 சக மாணவர்கள் கூட்டுபலாத்காரம் செய்தனர். அதை வீடியோ எடுத்து சிலருக்கு அனுப்பினர்.

    இதுகுறித்து மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில் 4 சிறுவர்களை போக்சோ சட்டத்தின் கீழ் ஆவினங்குடி போலீசார் கைது செய்தனர்.

    கடந்த 6-ந் தேதி பள்ளியில் இருந்த மாணவியிடம், 2 வாலிபர்கள் மாணவியின் ஆபாச வீடியோவை காட்டி மிரட்டினர். இதனால் அந்த மாணவிக்கும், அந்த வாலிபர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

    இதனை பார்த்த பள்ளி மாணவர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் சிலர் பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வருவதற்குள்அந்த வாலிபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.இதையடுத்து பள்ளி ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் வீடியோ விவகாரம் தெரிந்ததால், போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் துரிதமாக செயல்பட்டு சம்பவத்தில் தொடர்புடைய 4 சிறுவர்களை கைது செய்தனர்.

    எனினும் பள்ளி வளாகத்திற்குள் வந்து மாணவியை மிரட்டிய வாலிபர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என விசாரித்து அவர்களையும் கைது செய்ய வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவத்தால் அந்த பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

    சம்பவத்தில் தொடர்புடைய மாணவி மற்றும் மாணவர்கள் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ப தால், அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்திற்குள் மாணவியை மிரட்டியவாலிபர்கள் யார்?அவருக்கு வீடியோவை அனுப்பியது யார்? என்பது குறித்துபோலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    அரியானா மாநிலம் ரேவாரி பகுதியில் 19 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், ராணுவ வீரர் உள்பட தேடப்படும் மூன்று குற்றவாளிகளின் புகைப்படங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். #Rewari #RewariRapeCase
    சண்டிகர்:

    அரியானா மாநிலத்தில் சி.பி.எஸ்.சி. தேர்வில் முதலிடம் பிடித்து சமீபத்தில் ஜனாதிபதியிடம் விருது பெற்ற 19 வயது மாணவி,  கோச்சிங் கிளாஸ் சென்று விட்டு தனது கிராமத்துக்கு நடந்து சென்று கொண்டிருக்கும் போது காரில் வந்த சிலர் அவரை கடத்திச் சென்று மறைவிடத்தில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

    பின்னர், அங்குள்ள பஸ் ஸ்டாப் ஒன்றில் மாணவியை தூக்கி வீசி விட்டு அங்கிருந்து அவர்கள் தப்பிச்சென்றுள்ளனர். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் சார்பில் போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவியை இன்று நேரில் சந்தித்த எஸ்.பி. நஷ்னீன் பாசின், பாதிக்கப்பட்ட பெண் தற்போது உடல்நிலை தேரி வருவதாகவும், அவரை பாலியல் வன்கொடுமை செய்த முக்கிய குற்றவாளியை அடையாளம் கண்டுவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும், குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதற்காக தனிப்படை அமைத்து தேடி வருவதாகவும் எஸ்.பி நஷ்னீன் கூறினார்.

    இந்நிலையில், மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் தேடப்பட்டு வரும் ஒரு ராணுவ வீரர் உள்பட மூன்று குற்றவாளிகளின் புகைப்படங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். அவர்களின் பெயர்கள் (இடமிருந்து வலமாக) மனிஷ், நிசு மற்றும் ராணுவ வீரர் பன்கஜ் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், குற்றவாளிகள் குறித்து பொதுமக்கள் தகவல் அளித்தால் 1 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என போலீசார் ஏற்கெனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #Rewari #RewariRapeCase 
    அரியானாவில் சிபிஎஸ்சி தேர்வில் முதலிடம் பிடித்து ஜனாதிபதியிடம் விருது பெற்ற 19 வயது மாணவியை 3 பேர் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. #Haryana
    சண்டிகர்:

    அரியானா மாநிலத்தில் சிபிஎஸ்சி தேர்வில் முதலிடம் பிடித்து சமீபத்தில் ஜனாதிபதியிடம் விருது பெற்ற 19 வயது மாணவி, நேற்று முன் தினம் கோச்சிங் கிளாஸ் சென்று விட்டு தனது கிராமத்துக்கு நடந்து சென்று கொண்டிருக்கும் போது காரில் வந்த மூன்று பேர் அவரை கடத்திச் சென்று மறைவிடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

    பின்னர், அங்குள்ள பஸ் ஸ்டாப் ஒன்றில் மாணவியை தூக்கி வீசி விட்டு அங்கிருந்து அவர்கள் தப்பிச்சென்றுள்ளனர். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் சார்பில் போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து, மாணவி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

    இது தொடர்பாக இன்னும் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படாத நிலையில், குற்றவாளி தெரிந்தும் போலீசார் நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் மாணவியின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குற்றவாளிகளை தேடி வருவதாகவும், சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 
    அசாம் மாநிலத்தில் 11 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. #Assam
    திஸ்பூர்:

    அசாம் மாநிலம் நாகோன் பகுதியில் 11 வயது சிறுமியை 6 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த 6 பேரையும் கைது செய்தனர்.

    சிறுமியை பாலியல் வன்புணர்வு கொலை செய்தது தொடர்பாக நடத்தப்பட்ட நீதிவிசாரணையில், முக்கிய குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும், இதர 5 பேர் மீதான குற்றச்சாட்டுக்கு, போதிய சாட்சியங்கள் இல்லாத காரணத்தால் விடுவிக்கப்படுவதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. #Assam
    ×