என் மலர்
இந்தியா

13 வயது சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த 3 சிறுவர்கள்.. வீடியோ எடுத்து மிரட்டல்
- 13-15 வயதுடைய மூன்று சிறுவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
- வீடியோ எடுத்து, அதை வைத்து சிறுமியை மிரட்டினர்.
கர்நாடகாவின் ஹூப்ளியில் 13 வயது சிறுமியை 3 சிறுவர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ஹூப்ளி-தார்வாட் போலீசார் வழக்குப் பதிவு செய்து 13-15 வயதுடைய மூன்று சிறுவர்களையும் போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.
இவர்கள் சிறுமி வசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், வீட்டில் பெற்றோர் இல்லாத சமயத்தில் சிறுமியை அணுகி, தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று இந்த ஈடுபட்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதை வீடியோ எடுத்து, அதை வைத்து சிறுமியை மிரட்டியதாக சிறுமியின் பெற்றோர் புகாரில் தெரிவித்தனர். இதனால் சிறுரவர்களின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
கைது செய்யப்பட்டவர்கள் சிறுவர்கள் என்பதால், அவர்கள் சிறார் நீதி வாரியத்தின் முன் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.






