என் மலர்
இந்தியா

மாணவி அங்கு செல்லாமல் இருந்திருந்தால் பாலியல் குற்றம் நடந்திருக்காது - திரிணாமுல் காங்கிரஸ் MLA
- சட்டக் கல்லூரியில் மாணவர்கள் சேர்ந்து மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.
- இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள சட்டக் கல்லூரியில் மாணவியை இரண்டு மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர் ஒருவர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வலுக்கட்டாயமாக கற்பழித்ததாகவும், படம் பிடித்து மிரட்டியதாகவும், கொடூரமாக கடித்ததற்கான அடையாளங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதனிடையே நண்பர்களே நண்பரை (பெண் தோழி) பாலியல் வன்கொடுமை செய்தால் என்ன செய்வது? என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சர்ச்சை அடங்குவதற்குள் இது தொடர்பாக கருத்து தெரிவித்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மதன் மித்ரா, "மாணவி அந்த இடத்திற்கு சென்றிருக்காவிட்டால், இந்த குற்றம் நடந்திருக்காது. அப்பெண் அங்கு செல்வதற்கு முன்பு யாரிடமாவது தெரிவித்திருந்தால் அல்லது தன்னுடன் இரண்டு நண்பர்களை அழைத்துச் சென்றிருந்தால், இது நடந்திருக்காது" தெரிவித்தது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதே சமயம் தனது கட்சியின் எம்.பி. கல்யாண் பானர்ஜி மற்றும் எம்.எல்.ஏ. மதன் மித்ராவின் கருத்துக்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.






