என் மலர்

  நீங்கள் தேடியது "TMC"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நாட்டில் உள்ள இளைஞர்கள் பாஜக அலுவலகத்தை பாதுகாக்கும் காவலர்கள் அல்ல.
  • இளைஞர்களின் சக்தி இந்த நாட்டிற்கு சேவை செய்ய விரும்புகிறது.

  அக்னிபாத் திட்டத்தில் பணியாற்றும் வீரர்களுக்கு பணி நிறைவுக்கு பிறகு, பாஜக அலுவலகங்களில் பாதுகாவலர்கள் பணிக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று, அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய் வர்கியா தெரிவித்திருந்தார்.

  அவரது இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து கைலாஷ் விஜய் வர்கியாவுக்கு, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்பட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

  கைலாஷ் விஜய் வர்கியாவின் இந்த கருத்து பாஜகவின் உண்மையான மனநிலையை அம்பலப்படுத்துகிறது என திரிணாமுல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குணால் கோஷ் தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள இளைஞர்கள் பாஜக அலுவலகத்தை பாதுகாக்கும் காவலர்கள் அல்ல என்றும், மோடி அரசை போல் அல்லாமல் இளைஞர்களின் சக்தி இந்த நாட்டிற்கு சேவை செய்ய விரும்புகிறது என்றும் திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

  விஜயவர்கியா, தேசத்தின் இளம் ஆர்வமுள்ள ராணுவ வீரர்களை அவமதித்துள்ளதாகவும், நாட்டைக் காக்கும் ஆயுதப் படைகளின் வீரத்தை சிறுமைப்படுத்தி விட்டதாகவும் மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினர் சுஜன் சக்ரவர்த்தி, தெரிவித்து உள்ளார். விஜயவர்கியாவின் கருத்து குறித்து பாஜக உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

  அக்னி வீரர்கள் பாஜக அலுவலங்களில் வாட்ச்மேனாக மாறும் நிலை குறித்து அஞ்சுவதாக மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இதைப்போல் விஜயவர்கியாவின் கருத்திற்கு டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், பாஜக எம்.பி. வருண்காந்தி உள்ளிட்டோரும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

  ஆனால் தனது கருத்துகளை காங்கிரஸ் கட்சி திரித்து கூறுவதாக கைலாஷ் விஜய் வர்கியா குற்றம் சாட்டியுள்ளார். ராணுவ பணிகளை முடித்தபின் எந்த துறையிலும் அக்னி வீரர்களை பணியில் அமர்த்த முடியும் என்பதையே தான் கூறியதாகவும் அவர் விளக்கம் அளித்து உள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மேற்கு வங்காள மாநில பஞ்சாயத்து துறை மந்திரியாக பதவி வகித்து வந்தவர் சுப்ரதா முகர்ஜி.
  கொல்கத்தா:

  மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சுப்ரதா முகர்ஜி, கடந்த சில தினங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

  இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முகர்ஜி, நேற்று மாலை சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 75.

  தகவலறிந்து மருத்துவமனைக்கு சென்ற முதல் மந்திரி மம்தா பானர்ஜி சுப்ரதா முகர்ஜிக்கு அஞ்சலி செலுத்தினார். சுப்ரதா முகர்ஜியின் இறுதிச்சடங்கு இன்று காலை நடைபெறும் என முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

  மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தா முன்னாள் மேயர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தவர் சுப்ரதா முகர்ஜி என்பது குறிப்பிடத்தக்கது. 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மேற்கு வாங்காளத்தில் கடைசி கட்ட தேர்தல் வாக்குப்பதிவின்போது திரிணாமுல் காங்கிரஸ் - பா.ஜனதா தொண்டர்களில் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது.
  பாராளுமன்ற தேர்தலில் 7-வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் இன்று நடந்து வருகிறது. 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் வாக்காளர்கள் விறுவிறுப்பாக வாக்களித்து வருகின்றனர். மேற்கு வங்காளத்தில் 9 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடந்து வருகிறது. பல இடங்களில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜக-வுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அப்போது பாஜக கட்சியின் 2 வேட்பாளர்களின் கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

  இதேபோல் வடக்கு கொல்கத்தாவில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. சில வாக்குச்சாவடிகளில் பூத்தை கைப்பற்றும் முயற்சியில் கடுமையான வன்முறை நிகழ்ந்தது.  இதனைத்தொடர்ந்து அந்த வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஏற்கனவே 6-கட்ட தேர்தலின் போதும் மேற்கு வங்காளத்தில் வன்முறை ஏற்பட்டது. கடைசி கட்ட பிரச்சாரத்தில் மோதல் ஏற்பட்டதால் பிரசாரம் ஒரு நாளைக்கு முன்பாகவே முடித்துக் கொள்ளப்பட்டது. இதேபோல பஞ்சாபிலும் சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ் மாநில காங்கிரஸ் தொண்டர்கள் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக வந்த தகவல்கள் வடிகட்டின பொய் என கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். #TMC #GKVasan
  சென்னை:

  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் மாநில காங்கிரஸ் தொண்டர்கள், நிர்வாகிகளுக்காக காங்கிரஸ் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கின்றன என தெரிவித்துள்ளார்.

  காங்கிரஸ் தலைவரின் இந்த அறிக்கைக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தனித்தன்மையுடன் செயல்படுகிறது. கட்சியின் வளர்ச்சியை பிடிக்காதவர்களின் சதி இது. பா.ஜ.க.வில் இணைவதாக வந்த செய்திகள் வடிகட்டிய பொய் என தெரிவித்துள்ளார்.

  இரு கட்சி தலைவர்கள் அறிக்கைகள் தமிழக காங்கிரஸ், தமாகா தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #TMC #GKVasan
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ் மாநில காங்கிரஸ் தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு காங்கிரஸ் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கின்றன என மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். #Congress #KSAlagiri
  சென்னை:

  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை பாஜகவுடன் இணைக்க உள்ளதாக நாளேடுகளில் செய்திகள் வெளியாகி உள்ளன.  காங்கிரசில் வாழ்க்கையை தொடங்கியவர்கள் பாஜகவில் இணைவது தற்கொலைக்கு சமம். எனவே, கருத்து வேறுபாட்டால் தமாகாவுக்கு சென்ற தொண்டர்கள் காங்கிரசில் மீண்டும் இணைய வேண்டும். அவர்களுக்காக சத்தியமூர்த்தி பவன் கதவுகள் திறந்தே உள்ளன என தெரிவித்துள்ளார். #Congress #KSAlagiri
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  40 எம்எல்ஏ-க்கள் என்னுடன் தொடர்பில் உள்ளார்கள் என்று பிரதமர் மோடி கூறியதற்கு, திரிணாமுல் காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. #Modi #TMC
  பிரதமர் மோடி இன்று மேற்கு வங்காளத்தில் சுற்றுப் பயணம் செய்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ‘‘திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 40 எம்எல்ஏ-க்கள் என்னுடன் தொடர்பில் உள்ளனர்’’ என்று பிரதமர் மோடி பேசினார்.

  இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. மோடி பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவரான தெரிக் ஓ'பிரைன் கூறுகையில் ‘‘காலாவதியான பிரதமர், உங்களுடன் ஒருவர் கூட வருமாட்டார்கள். ஒரு கவுன்சிலர் கூட வரமாட்டார்.

  நீங்கள் தேர்தல் பிரசாரம் செய்கிறீர்களா? அல்லது குதிரை பேரம் நடத்துகிறீர்களா?. உங்களுடைய காலாவதி தேதி விரைவில் வருகிறது. நீங்கள் குதிரை பேரம் நடத்துவதாக இன்று நாங்கள் தேர்தல் கமிஷனிடம் புகார் அளித்துள்ளோம்’’ என்றார்.  #Modi #TMC
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாராளுமன்ற தேர்தலில் வெளிநாட்டினர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்காக இங்கு தேர்தல் பிரசாரம் செய்வது வெட்கக்கேடானது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். #LSpolls2019 #Mamata #TMC #Modi
  கொல்கத்தா:

  பாராளுமன்ற தேர்தலையொட்டி மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள புனியாட்பூரில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.

  அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாநிலத்தில் ஆளும்  திரிணாமுல் காங்கிரஸ் அரசை கடுமையாக விமர்சித்த மோடி, மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் இங்குள்ள மக்களை வந்தடையாதவாறு உங்கள் முதல் மந்திரி தடைக்கல்லாக இருந்து வருகிறார் என்றும் குற்றம்சாட்டினார்.  மாநிலத்தின் பல பகுதிகளில் பாஜக தொண்டர்களுக்கு எதிரான அராஜகத்தை மம்தா கட்டவிழ்த்து விடுவதாக குறிப்பிட்ட அவர், குற்றவாளிகள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள் என எச்சரித்தார்.

  மேலும், அண்டைநாடான வங்காளதேசத்தில் மிகவும் பிரபலமான நடிகர்கள் மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ததை சுட்டிக்காட்டிய மோடி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்காக வெளிநாட்டினர் இங்கு வந்து தேர்தல் பிரசாரம் செய்வது வெட்கக்கேடானது என்றும் குறிப்பிட்டார்.

  இங்கு நடந்து முடிந்த இருகட்ட வாக்குப்பதிவால் மம்தா தூக்கத்தை தொலைத்து தவிக்கிறார். எனவே, வெளிநாட்டில் பிரபலமானவர்களை வைத்து சிறுபான்மையினத்தவர்களின் ஓட்டுகளை கவர்ந்து விடலாம் என்ற கற்பனையில் மம்தா மிதக்கிறார் என்றும் மோடி தெரிவித்தார். #LSpolls2019 #Mamata #TMC #Modi
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மேற்கு வங்காளத்தின் தினாஜ்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி பேசுகையில், பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு ரசகுல்லாதான் கிடைக்கும் என கிண்டலாக குறிப்பிட்டார். #LokSabhaElections2019 #MamataBanerjee
  கொல்கத்தா:

  மேற்கு வங்காளம் மாநிலத்தின் தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள பாலுர்காட் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் பிரசாரம் நடைபெற்றது. இதில் திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்காள முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

  பிரதமர் மோடி இந்த தேர்தலில் பா.ஜ.க. அதிகப்படியான இடங்களை கைப்பற்றும் என பகல் கனவு கண்டுகொண்டிருக்கிறார். ஆனால் அவருக்கு ரசகுல்லா தான் கிடைக்கும்.

  இந்த தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஒட்டுமொத்தமாக 100 இடங்களுக்கு மேல் கிடைக்காது. குறிப்பாக ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் ஒரு தொகுதியில் கூட பா.ஜ.க. வெற்றி பெறாது என தெரிவித்தார்.

  இனிப்பு வகையில் ஒன்றான ரசகுல்லா வங்காளதேசத்தில் மிகவும் பிரபலமானது. மேலும் மாணவர்கள் தேர்வில் பூஜ்யம் வாங்கினால் உள்ளூர் மக்கள் பூஜ்யத்தை ரசகுல்லா எனக்கூறி கேலி செய்வது வழக்கமாக உள்ளது நினைவிருக்கலாம். #LokSabhaElections2019 #MamataBanerjee
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மத்தியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைமையில் புதிய அரசு அமையும் என்று மம்தா பானர்ஜி கூறினார். #MamataBanerjee #TMC
  கொல்கத்தா:

  பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணிக்கோ அல்லது காங்கிரஸ் கூட்டணிக்கோ பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் பிரதமர் பதவியை கைப்பற்ற முயற்சிக்கலாம் என்ற எண்ணம் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, மேற்கு வங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட சில தலைவர்களுக்கு உள்ளது.

  பாரதீய ஜனதாவையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து வரும் மம்தா பானர்ஜி, மேற்கு வங்காளத்தில் உள்ள 42 தொகுதிகளில் அதிக தொகுதிகளை கைப்பற்றிவிட வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக இருக்கிறார். அங்கு திரிணாமுல் காங்கிரசுக்கும், பாரதீய ஜனதாவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

  இந்த நிலையில், மேற்கு வங்காள மாநிலம் அலிபூர்தார் மாவட்டத்தில் உள்ள பரோபிஷா என்ற இடத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசினார்.

  அப்போது அவர் கூறியதாவது:-

  கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளில் எதையும் பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை. கடந்த 5 ஆண்டுகளாக அவர் பொய் சொல்லிக்கொண்டு இருக்கிறார். தனது மனைவியை கவனித்துக்கொள்ள முடியாத ஒருவரால், இந்த நாட்டு மக்களை எப்படி காப்பாற்ற முடியும்.

  மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவு சட்டம், குடியுரிமை திருத்த மசோதா ஆகியவை இந்த நாட்டில் உள்ள சட்ட ரீதியிலான குடிமக்களை அகதிகள் ஆக்கும் சதித்திட்டம் ஆகும்.

  இந்த நாட்டையும், மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்றால் இந்த தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி தோற்கடிக்கப்படவேண்டும். தேர்தலுக்கு பிறகு மத்தியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைமையில் புதிய அரசு அமையும்.

  இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார். #MamataBanerjee #TMC
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தஞ்சாவூர் தொகுதியில் ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. #NRNatarajan #ThanjavurLSseat #TMCcandidate #Thanjavurcandidate #Auto
  சென்னை:

  பாராளுமன்ற தேர்தலை அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சந்திக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தஞ்சாவூர் தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்த தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக எஸ்.எஸ். பழனிமாணிக்கம் நிறுத்தப்பட்டுள்ளார். 

  இதற்கிடையே, தஞ்சாவூர் தொகுதியில் என்.ஆர்.நடராஜன் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்தார். தமாகா கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.  இந்நிலையில், தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட உள்ள என் ஆர் நடராஜனுக்கு ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

  இரண்டு இடங்களில் போட்டியிட்டால் மட்டுமே சைக்கிள் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டதில் மகிழ்ச்சிதான் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். #NRNatarajan #ThanjavurLSseat  #TMCcandidate #Thanjavurcandidate #Auto
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விண்வெளியில் செயற்கைக் கோளை சுட்டு வீழ்த்தியதில் விண்வெளித்துறை ஆராய்ச்சியாளர்கள் நிகழ்த்திய சாதனைக்கு பிரதமர் மோடி உரிமை கோருவதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. #PMModi #SpaceScientists #MissionShakthi
  புதுடெல்லி:

  நாட்டு மக்களுக்கு இன்று மிக முக்கிய உரையாற்றப் போவதாக தெரிவித்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, விண்ணில் செயற்கைக் கோளை சுட்டு வீழ்த்தும் மிஷன் சக்தி சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக தனது உரையில் இன்று அறிவித்தார்.  இதை விண்வெளித்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் இந்தியாவின் மிகப்பெரிய சாதனை என்று அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பெருமிதம் கொண்டாடிவரும் அதேவேளையில் எதிர்க்கட்சி தலைவர்கள் விண்வெளித்துறை ஆராய்ச்சியாளர்கள் நிகழ்த்திய சாதனைக்கு பிரதமர் மோடி உரிமை கோருவதாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

  1961-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் உருவாக்கப்பட்ட இந்திய விண்வெளி திட்டம் மற்றும் பின்னர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் ஏற்படுத்தப்பட்ட இந்திய விண்வெளி ஆய்வுத்துறை எப்போதுமே பெருமைக்குரிய சாதனைகளை படைத்து இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளது.

  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் முன்னெடுப்பினால் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோளை விண்வெளியில் தாக்கி அழிக்கும் ஆராய்ச்சி திட்டம் இன்று முழுப்பலனை தந்துள்ளது என காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் குறிப்பிட்டுள்ளது.

  இந்த சாதனைக்காக இந்திய விண்வெளித்துறை ஆராய்ச்சியாளர்களை பாராட்டுவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு சர்வதேச ‘நாடக நாள்’ (1961-ம் ஆண்டிலிருந்து மார்ச் 27-ம் தேதி சர்வதேச நாடக அரங்க நாளாக கொண்டாடப்படுகிறது) வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

  செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்துவது நமது விண்வெளித்துறை ஆராய்ச்சியாளர்கள் நிகழ்த்திய சாதனை. ஆனால், தேர்தல் நேரத்தில் மக்களை முட்டாள்களாக்க இதையெல்லாம் முன்வைத்து மற்றவர்களின் பணிகளுக்காக உரிமை கோருவதை பிரதமர் மோடி நிறுத்திக்கொள்ள வேண்டும் என மேற்கு வங்காள மாநில நிதிமந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான பிர்ஹாட் ஹக்கிம் தெரிவித்துள்ளார்.

  நாட்டில் உள்ள வேலைவாய்ப்பின்மை, பெண்களுக்கான பாதுகாப்பின்மை என பூமியில் நம்மை சுற்றியுள்ள பல பிரச்சனைகளை மறைக்கும் வகையில் இந்த நாட்டு மக்களின் கவனத்தை ஒருமணி நேரம் விண்வெளியின் பக்கம் திசை திருப்பியுள்ளார் பிரதமர் மோடி என உத்தரப்பிரதேசம் முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

  செயற்கைக்கோள் விவகாரத்தை வைத்து அரசியல் விளையாட்டு நடத்தும் மோடியை தேர்தல் ஆணையம் கவனிக்க வேண்டும் என உத்தரப்பிரதேசம் முன்னாள் முதல் மந்திரி மாயாவதியும் குறிப்பிட்டுள்ளார். #PMModi #SpaceScientists #MissionShakthi
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print