என் மலர்
நீங்கள் தேடியது "Kolkata"
- வங்கதேச நிலநடுக்கத்தில் ஆறுபேர் உயிரிழப்பு.
- அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
வங்கதேசத்தில் இன்று காலை 10 மணியளவில் நர்சிங்டி அருகே 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தலைநகர் டாக்காவில் இருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் உள்ள நர்சிங்டி மாவட்டத்தின் கோரஷால் பகுதியில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்துள்ளது. இதில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காலை 10:08 மணிக்கு, நர்சிங்டியிலிருந்து தென்மேற்கே 13 கி.மீ தொலைவில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதன் தாக்கம் கொல்கத்தா, மேற்குவங்கம், அசாமின் குவஹாத்தி போன்ற பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. இந்த நில அதிர்வால் மக்கள் அச்சமடைந்து வீடுகளிலிருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். முன்னதாக, இன்று பாகிஸ்தானில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்திருந்தது. நிலநடுக்கத்தின் மையம் 135 கி.மீ ஆழத்தில் அமைந்திருந்தது. அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
மேலும் இந்திய மற்றும் யூரேசிய டெக்டோனிக் தகடுகளின் மோதல் காரணமாக வடக்கு மற்றும் தென்கிழக்கு வங்கதேசம் பூகம்ப பாதிப்பு மண்டலங்களாக அறியப்பட்டாலும், இன்று நிலநடுக்கம் ஏற்பட்ட மத்திய பகுதியில் நிலநடுக்கங்கள் ஏற்பட குறைவான வாய்ப்புகளே இருக்கும் பகுதி என USGS தெரிவித்துள்ளது.
- ஏர் இந்தியா விமான விபத்தில் 260 பேர் உயிரிழந்தனர்.
- கொல்கத்தாவில் தசரா பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
வடமாநிலங்களில் நவராத்திரி திருவிழா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலகலமாக கொண்டாடப்பட்டது.
துர்கா பூஜை கொண்டாட்டத்தின்போது ஆங்காங்கே ஏற்பட்ட சில பிரச்சினைகள் தொடர்பான செய்திகள் இணையத்தில் வெளியாகி பரவிய வண்ணம் உள்ளன.
அந்த வகையில் கொல்கத்தாவில் துர்கா பூஜையையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்வு இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
மேற்கு வங்காளத்தில் துர்கா பூஜையையொட்டி பூஜை பந்தல் அமைப்பது வாடிக்கை. அவ்வாறு கொல்கத்தாவில் ஏற்படுத்தப்பட்ட பூஜை பந்தல் ஜூன் மாதத்தில் ஏற்பட்ட ஏர் இந்திய விமான விபத்தை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.
260 பேரின் உயிர்களை காவு வாங்கிய அந்த சம்பவத்தை நினைவுகூறும் வகையில் ஏர் இந்தியா விமானம் ஒன்று அடுக்குமாடி கட்டிடத்தை மோதும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. அனைவரும் மறக்க வேண்டிய இந்த கொடூர நிகழ்வை நினைவுப்படுத்தியது ஏன்? என்ற பதிவுகளுடன் இது தொடா்பான வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.
- அதில் பலர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- துர்கா பூஜைக்கான பந்தல்கள் மற்றும் சிலைகள் நீரில் மூழ்கியுள்ளன.
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் பெய்த கனமழை காரணமாக நகரின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த கனமழையால் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் பலர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெள்ளத்தால் விமான, ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, துர்கா பூஜை விடுமுறை முன்கூட்டியே தொடங்கப்பட்டுள்ளது.
வெள்ளம் காரணமாக பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. துர்கா பூஜைக்கான பந்தல்கள் மற்றும் சிலைகள் நீரில் மூழ்கியுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் 251.4 மிமீ மழை பதிவாகியுள்ளது. இது 1986 ஆம் ஆண்டுக்குப் பிறகு அங்கு பதிவான அதிகபட்ச மழைப்பொழிவாகும்.
இந்திய வானிலை ஆய்வு மையம்அதிகபட்சமாக ஒரு மணி நேரத்தில் 98 மிமீ மழை பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இது மேகவெடிப்பு இல்லை என்றும் வானிலை மையம் தெளிவுபடுத்தியுள்ளது.
- விசாரணைக்கு ஒத்துழைக்காததற்காக சாஹா பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
- மேற்கு வங்கத்தில் குரூப் 'சி' மற்றும் 'டி' ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை நியமிப்பதில் பெரும் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மேற்கு வங்கத்தில் ஆசிரியர் பணி நியமன ஊழல் தொடர்பாக ஆளும் திரிணாமுல் காங்கிரஸின், பர்வான் தொகுதி எம்எல்ஏ ஜீபன் கிருஷ்ணா சாஹா அமலாக்கத்துறையால் இன்று கைது செய்தனர்.
முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஜீபன் கிருஷ்ணா தனது மொபைல் போன்களை வீட்டின் பின்னால் உள்ள சாக்கடையில் வீசிவிட்டு, சுவர் ஏறி குதித்து தப்பிக்க முயன்றார்.
இதைத்தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் பாதுகாப்புக்கு வந்திருந்த CRPF வீரர்கள் உதவியுடன் அவரை துரைத்திச் சென்று கைது செய்தனர். பின்னர், சாக்கடையில் இருந்து தொலைபேசிகள் மீட்கப்பட்டன. எம்எல்ஏவை அதிகாரிகள் கைது செய்யும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
விசாரணைக்கு ஒத்துழைக்காததற்காக சாஹா பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 2023 ஆம் ஆண்டு இதே வழக்கில் ஜீபன் கிருஷ்ணா சாஹாவை சிபிஐ கைது செய்தது. பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.
மேற்கு வங்கத்தில் குரூப் 'சி' மற்றும் 'டி' ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை நியமிப்பதில் பெரும் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் அமலாக்கத் துறை இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
இந்த ஊழலில் முன்னாள் மாநில கல்வி அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி, அவரது நெருங்கிய தோழி அர்பிதா முகர்ஜி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ மாணிக் பட்டாச்சார்யா உள்ளிட்ட பல முக்கிய நபர்களை அமலாக்கத் துறை ஏற்கனவே கைது செய்துள்ளது.
- அவருக்கு உணவு மற்றும் பானங்கள் வழங்கப்பட்டது.
- சட்டக் கல்லூரி வளாகத்திற்குள் மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு நடந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள இந்திய இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மேண்ட் (IMM) வளாகத்தில் உள்ள ஆண்கள் விடுதியில் இரண்டாம் ஆண்டு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் நேற்று புகார் அளித்ததை அடுத்து, ஹரிதேவ்பூர் போலீசார், இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவரை நேற்று இரவு போலீசார் கைது செய்தனர்.
மாணவி தனது புகாரில், மன ரீதியான பிரச்சனைக்கு கவுன்சிலிங் கொடுப்பதாக கூறி, ஆண்கள் விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு சென்றதும், அவருக்கு உணவு மற்றும் பானங்கள் வழங்கப்பட்டதாகவும், பின்னர் அவர் சுயநினைவை இழந்ததாகவும், சுயநினைவு திரும்பியபோது, தான் விடுதிக்குள் இருப்பதையும், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதையும் உணர்ந்ததாகவும் கூறினார்.
வெளியே சொன்னால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று குற்றம் சாட்டப்பட்டவர் தன்னை மிரட்டியதாகவும் அவர் கூறினார்.
காவலில் உள்ள நபர் முக்கிய குற்றவாளியா என்பது குறித்து இன்னும் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
தெற்கு கொல்கத்தா சட்டக் கல்லூரி வளாகத்திற்குள் மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு, ஐஐஎம் வளாகத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
- சட்டக்கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- கைதான மனோஜித் மிஸ்ரா பற்றி பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் 24 வயது சட்டக்கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வழக்கில் மனோஜித் மிஸ்ரா, ப்ரோமித் முகர்ஜி, ஜெயித் அகமது, காவலாளி பினாகி பானர்ஜி ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைதானவர்களில் முக்கிய குற்றவாளியான மனோஜித் மிஸ்ரா திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவில் முன்னாள் தலைவர் மற்றும் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார். அவருக்கு இப்போது கட்சியுடன் எந்த தொடர்பும் இல்லை என திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மனோஜித் மிஸ்ரா பற்றி பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 31 வயதான அவர் பெண்களிடம் பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டவர் என கூறப்படுகிறது.
இதனால் கடந்த 2021-ம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவில் இருந்து வெளியேற்றப்பட்டார். இவர் எந்த பெண்களை பார்த்தாலும் என்னை திருமணம் செய்து கொள்கிறாயா என பலமுறை தொல்லை கொடுத்து சைக்கோ போல நடந்து வந்துள்ளார்.
மேலும் பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து நண்பர்களுக்கு பரப்பும் கொடூர மனம் படைத்தவராக இருந்துள்ளார். பெண்களை உடல் ரீதியாக அவமானப்படுத்துவது, தாக்குவது, மிரட்டி பணம் பறிப்பது போன்ற மோசமான நடத்தைகளை கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து மனோஜித் மிஸ்ராவின் முன்னாள் நண்பராக இருந்த டைட்டாஸ் என்பவர் கூறுகையில், 2013-ம் ஆண்டு மனோஜித் ஒரு கேட்டரிங் தொழிலாளியின் விரலை வெட்டினார். இது தொடர்பாக அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கிற்கு பிறகு அமைதியாக காணப்பட்ட அவர் 2016-ம் ஆண்டு மீண்டும் கல்லூரியில் சேர்ந்தார். பின்னர் 2017-ம் ஆண்டு மீண்டும் மாணவர் பிரிவில் சேர முயன்ற போது அவரது குற்ற பின்னணி காரணமாக கட்சி தலைவர்கள் அவரது கோரிக்கையை நிராகரித்தனர்.
பின்னர் 2017-ம் ஆண்டு டிசம்பரில் மனோஜித் மிஸ்ரா 40 ஆதரவாளர்கள் கொண்ட ஒரு கும்பலுடன் கல்லூரி வளாகத்திற்குள் வந்து மாணவர்கள் சங்க உறுப்பினர்களை தாக்கி பணம் பறித்தார் என கூறப்படுகிறது.
இதுபோன்று மனோஜித் மிஸ்ரா பற்றி அவருடன் படித்த முன்னாள் மாணவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதற்கிடையே பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவியை 2 பேர் கல்லூரி வளாகத்தில் இருந்து கல்லூரிக்குள் இழுத்து செல்வது போன்ற சி.சி.டி.வி. காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக கொல்கத்தா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சட்டக் கல்லூரியில் மாணவர்கள் சேர்ந்து மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.
- இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள சட்டக் கல்லூரியில் மாணவியை இரண்டு மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர் ஒருவர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வலுக்கட்டாயமாக கற்பழித்ததாகவும், படம் பிடித்து மிரட்டியதாகவும், கொடூரமாக கடித்ததற்கான அடையாளங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதனிடையே நண்பர்களே நண்பரை (பெண் தோழி) பாலியல் வன்கொடுமை செய்தால் என்ன செய்வது? என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சர்ச்சை அடங்குவதற்குள் இது தொடர்பாக கருத்து தெரிவித்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மதன் மித்ரா, "மாணவி அந்த இடத்திற்கு சென்றிருக்காவிட்டால், இந்த குற்றம் நடந்திருக்காது. அப்பெண் அங்கு செல்வதற்கு முன்பு யாரிடமாவது தெரிவித்திருந்தால் அல்லது தன்னுடன் இரண்டு நண்பர்களை அழைத்துச் சென்றிருந்தால், இது நடந்திருக்காது" தெரிவித்தது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதே சமயம் தனது கட்சியின் எம்.பி. கல்யாண் பானர்ஜி மற்றும் எம்.எல்.ஏ. மதன் மித்ராவின் கருத்துக்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
- சட்டக் கல்லூரியில் மாணவர்கள் சேர்ந்து மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.
- இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள சட்டக் கல்லூரியில் மாணவியை இரண்டு மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர் ஒருவர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வலுக்கட்டாயமாக கற்பழித்ததாகவும், படம் பிடித்து மிரட்டியதாகவும், கொடூரமாக கடித்ததற்கான அடையாளங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் நண்பர்களே நண்பரை (பெண் தோழி) பாலியல் வன்கொடுமை செய்தால் என்ன செய்வது? என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கல்யாண் பானர்ஜி கூறியதாவது:-
சட்டக் கல்லூரியில் நடந்த சம்பவத்திற்கு நான் வக்கீல் அல்ல, ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட வேண்டும். ஒரு சில ஆண்கள் இந்த மாதிரியான குற்றங்களைச் செய்கிறார்கள்... ஆனால் ஒரு நண்பர் தனது நண்பரை பாலியல் வன்கொடுமை செய்தால் என்ன செய்ய முடியும்?. பள்ளிகளில் போலீசார் இருப்பார்களா?. இது மாணவர்களால் மற்றொரு மாணவிக்கு செய்யப்பட்டது. அவரை யார் பாதுகாப்பார்கள்?.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
- கஸ்பா பகுதியில் சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உள்ளார்.
- மாணவியை கல்லூரிக்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலம் கஸ்பா பகுதியில் சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உள்ளார். அந்த மாணவியை 3 மாணவர்கள் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதுதொடர்பாக 3 மாணவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களில் ஒருவர் முன்னாள் மாணவர் ஆவார். மாணவியை கல்லூரிக்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு கொல்கத்தாவில் அரசு மருத்துவமனையில் பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கொல்கத்தாவில் சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.
- கொல்கத்தாவில் முக்கிய இடங்களில் மீது 8 முதல் 10 டிரோன் போன்ற மர்ம பொருள் பறந்ததால் பரபரப்பு.
- உளவு பார்க்க அனுப்பப்பட்டதா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேற்கு வங்க மாநிலம் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள முக்கியமான இடங்களில் 8 முதல் 10 டிரோன் போன்ற மர்ம பொருள் பறந்ததால், உளவு பார்ப்பதற்கான அனுப்பப்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.
தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம் மகேஷ்தலாவில் இருந்து டிரோன் போன்ற மர்மப் பொருட்கள் பறந்து வந்ததாக கூறப்படுகிறது. வித்யாசாகர் கடலில் உள்ள 2-ஆவது ஹூக்ளி பாலம், ராணுவத்தின் கிழக்கு கமாண்ட் தலைமையகம், ஹேஸ்டிங்ஸ் போன்ற இடங்களில் இந்த மர்மபொருள் பறந்துள்ளது.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன. உளவு பார்க்க அனுப்பப்பட்டதா? உள்ளிட்ட அனைத்து கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே இது தொடர்பாக மத்திய அரசு அறிக்கை கேட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவியபோது, இந்தியாவைச் சேர்ந்த பெண் யூடியூபர் உள்ளிட்ட பலர் பாகிஸ்தானுக்காக உளவு பணியில ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
- பள்ளி விடுமுறை விடப்பட்டதால் பிரபு குடும்பத்துடன் சுற்றுலா சென்றார்.
- சுற்றுலா சென்ற இடத்தில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர்:
கரூர் மாவட்டம் உப்பிடமங்கலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பிரபு (வயது 40). இவர் கற்றாழையிலிருந்து கிடைக்கக்கூடிய மூலப்பொருட்களை வைத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். இவரது மனைவி மதுமிதா.
இவர்களது குழந்தைகள் தியா (10), ரிதன் (3). தற்போது பள்ளி விடுமுறை விடப்பட்டதால் பிரபு குடும்பத்துடன் சுற்றுலா சென்றார். பிரபுவின் மாமனார் சென்னை அடையாறை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன்(61) என்பவரும் உடன் சென்றார்.
பல்வேறு பகுதிகளுக்கு சென்ற அவர்கள் நேற்று சென்னை ரெயிலில் திரும்ப திட்டமிட்டனர். அதிகாலையில் ரெயிலில் செல்லவேண்டி இருந்ததால் இரவு சாப்பிட்டு ஓய்வெடுப்பதற்காக கொல்கத்தாவில் உள்ள 5 மாடிகளை கொண்ட தனியார் ஓட்டலில் தங்கினர்.
அப்போது குழந்தைகள், முத்துக்கிருஷ்ணனுக்கு உணவு வாங்குவதற்காக பிரபுவும், மதுமிதாவும் அருகில் உள்ள உணவகத்திற்கு சென்றனர். இந்த வேளையில் ஓட்டலில் திடீரென்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இதில், முத்துகிருஷ்ணன், குழந்தைகள் தியா, ரிதன் ஆகிய 3 பேரும் ஓட்டலில் இருந்து வெளியேற முடியாமல் தீயில் சிக்கி பலியானார்கள். சுற்றுலா சென்ற இடத்தில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- தீ விபத்தில் ஏராளமானோர் சிக்கிக்கொண்ட நிலையில் தீக்காயங்களுடன் பலர் மீட்கப்பட்டுள்ளனர்.
- தீ முழுவதுமாக அணைக்கப்பட்டு விட்டதையடுத்து மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் ஓட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.
கொல்கத்தா நகரின் மையப்பகுதியில் உள்ள ரிதுராஜ் ஓட்டலில் நேற்று இரவு 8.15 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் 10 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தன.
தீ விபத்தில் ஏராளமானோர் சிக்கிக்கொண்ட நிலையில் தீக்காயங்களுடன் பலர் மீட்கப்பட்டுள்ளனர். தீ முழுவதுமாக அணைக்கப்பட்டு விட்டதையடுத்து மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த சம்பவம் தொடர்பாக கொல்கத்தா காவல் ஆணையர் மனோஜ் குமார் வர்மா கூறுகையில, இதுவரை 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த தீ விபத்து தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்காக ஒரு சிறப்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.






