என் மலர்tooltip icon

    இந்தியா

    1986-க்கு பிறகு பெய்த பேய் மழை - தண்ணீரில் தத்தளிக்கும் கொல்கத்தா - 10 பேர் பலி
    X

    1986-க்கு பிறகு பெய்த பேய் மழை - தண்ணீரில் தத்தளிக்கும் கொல்கத்தா - 10 பேர் பலி

    • அதில் பலர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • துர்கா பூஜைக்கான பந்தல்கள் மற்றும் சிலைகள் நீரில் மூழ்கியுள்ளன.

    மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் பெய்த கனமழை காரணமாக நகரின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்த கனமழையால் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் பலர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வெள்ளத்தால் விமான, ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, துர்கா பூஜை விடுமுறை முன்கூட்டியே தொடங்கப்பட்டுள்ளது.

    வெள்ளம் காரணமாக பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. துர்கா பூஜைக்கான பந்தல்கள் மற்றும் சிலைகள் நீரில் மூழ்கியுள்ளன.

    கடந்த 24 மணி நேரத்தில் 251.4 மிமீ மழை பதிவாகியுள்ளது. இது 1986 ஆம் ஆண்டுக்குப் பிறகு அங்கு பதிவான அதிகபட்ச மழைப்பொழிவாகும்.

    இந்திய வானிலை ஆய்வு மையம்அதிகபட்சமாக ஒரு மணி நேரத்தில் 98 மிமீ மழை பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இது மேகவெடிப்பு இல்லை என்றும் வானிலை மையம் தெளிவுபடுத்தியுள்ளது.

    Next Story
    ×