என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ahmedabad"
- வாரணாசியில் இருந்து புறப்பட்ட சபர்மதி பயணிகள் விரைவு ரெயில் [19168] இன்று அதிகாலை கான்பூர் அருகே தடம்புரண்டது.
- தீயணைப்பு மற்றும் ஆபுலன்ஸ் வாகனங்கள் அங்கு விரைந்துள்ளன
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து புறப்பட்ட சபர்மதி பயணிகள் விரைவு ரெயில் [19168] இன்று[ஆகஸ்ட் 17] [சனிக்கிழமை] அதிகாலை கான்பூர் அருகே தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. வாரணாசியிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு குஜராத் மாநிலம் அகமதாபாத் சென்றுகொண்டிருந்த சபர்மதி விரைவு ரெயில் உ.பியின் கான்பூர் மற்றும் பீம்சென் நிலையத்துக்கு இடையில் தண்டவாளத்தில் இருந்த தடையில் இடித்துள்ளது.
இதில் ரெயிலின் 20 பெட்டிகள் தடம் புறண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்து நடந்ததை அறிந்து தீயணைப்பு மற்றும் ஆபுலன்ஸ் வாகனங்கள் அங்கு விரைந்துள்ளன. இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பயணிகளை பேருந்தில் ஏற்றி அருகில் உள்ள ரெயில் நிலையத்துக்கு அழைத்துச்சென்று சிறப்பு ரெயிலில் அதிகாரிகள் அகமதாபாத் அனுப்பிவைத்தனர்.
- மும்பை-அகமதாபாத் புல்லட் ரெயில் வழித்தடத்தின் மொத்த நீளம் 508 கிமீ ஆகும்.
- இந்த அதிவேக ரெயில் பாதையில் மொத்தம் 12 ரெயில் நிலையங்கள் இருக்கும்.
மும்பை-அகமதாபாத் இடையே இந்தியாவின் முதல் புல்லட் ரெயில் இயக்கப்படவுள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 14, அன்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே ஆகியோரால் இந்த திட்டத்தின் அடிக்கல் நாட்டப்பட்டது.
மும்பை-அகமதாபாத் புல்லட் ரெயில் வழித்தடத்தின் மொத்த நீளம் 508 கிமீ ஆகும். இதில் 348 கிமீ குஜராத்திலும் 156 கிமீ மகாராஷ்டிராவிலும் அடங்கும். மணிக்கு 320 கிமீ வேகத்தில் செயல்படக்கூடிய புல்லட் ரெயில் மும்பை-அகமதாபாத் இடையேயான தூரத்தை வெறும் இரண்டு மணி நேரத்தில் கடக்கும்.
இந்த அதிவேக ரெயில் பாதையில் மொத்தம் 12 ரெயில் நிலையங்கள் இருக்கும். இந்த 12-ல், 8 ரெயில் நிலையங்கள் குஜராத்திலும், 4 ரெயில் நிலையங்கள் மகாராஷ்டிராவிலும் இருக்கும். இந்த ரெயில் மும்பை மற்றும் அகமதாபாத் இடையே வரையறுக்கப்பட்ட நிறுத்தங்களுடன் பயணிக்க தோராயமாக 2.07 மணிநேரம் எடுக்கும், மொத்த நிறுத்தங்களுடன் 2.58 மணிநேரம் ஆகும்.
புல்லட் ரெயில் நிலையங்கள் சீரமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. குஜராத்தில் உள்ள 8 ரெயில் நிலையங்களிலும் அடித்தளம் அமைக்கும் பணி முடிவடைந்து, மேல்கட்டமைப்புகள் கட்டும் பணி மேம்பட்ட நிலையில் உள்ளது.
குஜராத்தில் அமைந்துள்ள வாபி, பிலிமோரா, சூரத், ஆனந்த், அகமதாபாத் ஆகிய 5 புல்லட் ரெயில் நிலையங்களின் கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளன . இந்த புல்லட் ரெயில் நிலையங்களின் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- சாலையில் இழுத்துச் செல்லப்பட்டபோது நாய் இறந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- இந்த கொடூரமான வீடியோவை பகிர்ந்து பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நெடுஞ்சாலையில் டொயோட்டா இன்னோவா என அடையாளம் காணப்பட்ட எஸ்யூவியின் பின்புறத்தில் தெருநாய் ஒன்று கட்டப்பட்டு இழுத்துச் செல்லப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.
சாலையில் இழுத்துச் செல்லப்பட்டபோது நாய் இறந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் நடந்த இடம் இன்னும் சரியாக தெரியவில்லை. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக போலீஸ் நடவடிக்கை குறித்து எந்த தகவலும் இல்லை என்று கூறப்படுகிறது.
இந்த கொடூரமான வீடியோவை பகிர்ந்து பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
- இரவு உணவிற்காக, உணவு ஆர்டர் செய்யும் செயலி மூலம் பன்னீர் டிக்கா சாண்ட்விச்சை நீராலி என்பவர் ஆர்டர் செய்துள்ளார்.
- அவருக்கு பன்னீர் டிக்கா சாண்ட்விச்சிற்கு பதிலாக சிக்கன் சாண்ட்விச் அனுப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் சாமுண்டாநகர் என்ற பகுதியில் வசித்து வரும் நீராலி, கடந்த வெள்ளிக்கிழமை இரவு உணவிற்காக, உணவு ஆர்டர் செய்யும் செயலி மூலம் பன்னீர் டிக்கா சாண்ட்விச்சை ஆர்டர் செய்துள்ளார்.
அவருக்கு பன்னீர் டிக்கா சாண்ட்விச்சிற்கு பதிலாக சிக்கன் சாண்ட்விச் அனுப்பட்டுள்ளது. அதை அறியாமல் அதை அவர் சிறிது சாப்பிட்டுள்ளார். பின்னர் இது சிக்கன் சாண்ட்விச் என்று தெரிந்ததும் ஆத்திரமடைந்த அவர் அகமதாபாத் மாநகராட்சியின் சுகாதாரத்துறையில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.
தனக்கு இழப்பீடாக அந்நிறுவனம் 50 லட்சம் வழங்கவேண்டும் என்று அந்த புகார் மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இதனை விசாரித்த சுகாதாரத்துறை VRYLY வென்ச்சர்ஸ் உணவு நிறுவனம் இந்த தவறுக்காக நீராலிக்கு ரூ.5000 அபராதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் இதே தவறை மீண்டும் செய்தால், உங்கள் நிறுவனத்திற்கு சீல் வைக்கப்படும்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
- பாபநாசத்திற்கு காலை 7.25-க்கு வந்து சேரும், பின்னர் சென்னை வழியாக அகமதாபாத்திற்கு புறப்படும்.
- சென்னை, திருப்பதி (ரேணிகுண்டா), புனே, கல்யாண், (மும்பை), சூரத் வழியாக அகமதாபாத் போன்ற ஊர்களுக்கு செல்லலாம்.
பாபநாசம்:
அகமதாபாத்தில் இருந்து சூரத், புனே, சென்னை, விழுப்புரம், மயிலாடுதுறை வழியாக திருச்சிக்கு சிறப்பு விரைவு ரெயில் வண்டி
(வண்டி எண்: 09419/09420 வருகின்ற ஜனவரி மாதம் 29-ந்தேதி வரை இயக்கப்படுகிறது. இந்த ரெயில் இரு மார்க்கங்களிலும் பாபநாசத்தில்
நின்று செல்லும்.
இந்த ெரயில் வருகின்ற 25.12.22, 1.1.23, 8.1.23, 15.1.23, 22.1.23, 29.1.23 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் திருச்சியிலிருந்து காலை 5.45 மணிக்கு புறப்பட்டு பாபநாசத்திற்கு காலை
7.25-க்கு வந்து சேரும், பின்னர் சென்னை வழியாக அகமதாபாத்திற்கு புறப்படும். மறுமார்க்கத்தில் 23.12.22, 30.12.22, 6.1.23, 13.1.23, 20.1.23, 27.1.23 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் சென்னையில் இருந்து மாலை 4.25 மணிக்கு புறப்பட்டு இரவு 11.45-க்கு பாபநாசம் வந்து சேரும்.
இந்த வண்டியின் மூலம் சென்னை, திருப்பதி (ரேணிகுண்டா), புனே, கல்யாண், (மும்பை), சூரத் வழியாக அகமதாபாத் போன்ற ஊர்களுக்கு செல்லலாம்.
சீரடி மற்றும் ராகவேந்திரர் மடம் அமைந்துள்ள மந்திராலயம் செல்லும் பக்தர்களுக்கு இந்த ரெயில் இணைப்பு வண்டியாக இருக்கும். இத்தகவலை திருச்சி தென்னக ரெயில்வே கோட்ட ஆலோசனை குழு உறுப்பினரும் பாபநாசம் ரெயில் பயணிகள் சங்க செயலாளருமான சரவணன் தெரிவித்துள்ளார்.
- கேரளா கடவுளின் தேசம் என அழைக்கப்படுவதாக டைம் இதழ் தெரிவித்துள்ளது.
- அகமதாபாத் நகரம் கலாச்சார சுற்றுலாவுக்கான ஒரு மெக்கா என டைம் இதழ் குறிப்பிட்டுள்ளது.
நியூயார்க்:
அமெரிக்காவில் இருந்து வெளியாகும் டைம் இதழ் 2022-ம் ஆண்டின் உலகின் சிறந்த 50 இடங்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் இந்தியாவின் கேரளா மற்றும் குஜராத்தின் அகமதாபாத் ஆகியவை டைம் இதழில் இடம் பெற்றுள்ளன.
கண்கவர் கடற்கரைகள், கோயில்கள், அரண்மனைகள் என கேரளா கடவுளின் தேசம் என அழைக்கப்படுகிறது. இங்குள்ள படகு வீடுகள் சிறந்த சுற்றுலா அனுபவத்தினை தருகிறது. சுற்றுலா பயணிகள் கேரளாவின் கடற்கரை அழகை கண்டு அனுபவிக்க தொடங்கி உள்ளனர். என டைம் இதழ் தெரிவித்துள்ளது.
இதேபோல், அகமதாபாத் நகரம் கலாச்சாரச் சுற்றுலாவுக்கான ஒரு மெக்கா எனவும் டைம் இதழ் குறிப்பிட்டுள்ளது.
இதுதொடர்பாக, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா டுவிட்டரில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், இந்தியாவின் முதலாவது யுனெஸ்கோ உலக பாரம்பரிய நகரான அகமதாபாத், டைம் பத்திரிகையால் 2022-ன் உலகின் 50 மகத்தான இடங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பது ஒவ்வொரு இந்தியருக்கும் குறிப்பாக, குஜராத் மக்களுக்கு மிகுந்த பெருமைக்குரிய விஷயமாகும் என பதிவிட்டுள்ளார்.
முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டி கொச்சியில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ், யு மும்பா வாலி (மும்பை), கோழிக்கோடு ஹீரோஸ், சென்னை ஸ்பார்ட்டன்ஸ், ஆமதாபாத் டிபென்டர்ஸ், ஐதராபாத் பிளாக்ஹாக்ஸ் ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
இந்த நிலையில் கொச்சியில் நேற்று இரவு நடந்த 3-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் பிளாக்ஹாக்ஸ்-ஆமதாபாத் டிபென்டர்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் மாறி, மாறி 2 செட்களை தன்வசப்பத்தியது. இதனால் வெற்றி யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 5-வது செட்டில் அனல் பறந்தது. முடிவில் ஐதராபாத் அணி 15-11, 13-15, 15-11, 14-15, 15-9 என்ற செட் கணக்கில் ஆமதாபாத்தை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது.
இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணிக்கு நடைபெறும் 4-வது லீக் ஆட்டத்தில் ஜெரோம் வினித் தலைமையிலான கோழிக்கோடு ஹீரோஸ் அணி, திபேஷ் சின்ஹா தலைமையிலான யு மும்பா வாலி (மும்பை) அணியை எதிர்கொள்கிறது. கோழிக்கோடு அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்தி இருந்தது. மும்பை அணி தொடக்க லீக் ஆட்டத்தில் கொச்சி அணியிடம் தோல்வி கண்டு இருந்தது. இந்த போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென்3 சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன.
குஜராத் மாநிலம் கரஞ்ச் போலீஸ் நிலைய பகுதியில் உள்ள பங்கோர் நாகா என்ற இடத்தில் ஒரு கட்டிடத்தில் போலி கால்சென்டர் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த கட்டிடத்தின் மாடியில் இயங்கி வந்த அந்த அலுவலகத்துக்கு சென்று சோதனை நடத்தினர்.
போலீஸ் சோதனையில் அங்கு அமெரிக்காவில் வாழும் மக்களின் தனிப்பட்ட தகவல்களை ‘மேஜிக் ஜேக்’ என்ற நவீன கருவி மூலம் திருடி, பல்வேறு சமூக வலைத்தள இணையதளங்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று ஏமாற்றி ஆன்லைனில் பணம் பெற்றது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அந்த கால்சென்டரை நடத்தி வந்த ஷாஹேசாத் பதான், புருசோத்தம் சிங் ஆகிய 2 பேரை கைது செய்தனர். அங்கு இருந்த மேஜிக் ஜேக் கருவி, லேப்டாப்கள், 3 செல்போன்கள் உள்பட பல கருவிகளையும் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வங்காளதேசத்தில் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளில், அன்சாருல்லா பங்ளா குழுவும் ஒன்று. இந்த இயக்கத்துடன் தொடர்புடைய அசோம் சம்சு ஷேக் என்கிற பக்கிர் (வயது 52), கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவுக்கு தப்பி ஓடினார். இது தொடர்பாக இருநாட்டு அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அப்போது தீவிரவாதி பக்கிர், குஜராத் மாநிலம் பரூச்சில் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவரது நடமாட்டம் குறித்து உளவுத்துறை அதிகாரிகள் கண்காணித்து அளித்த தகவல்களின் அடிப்படையில் நேற்று ஆமதாபாத்தில் வைத்து போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
பின்னர் அவரிடம் விசாரணை நடத்திய போது, பக்கிர் கடந்த 15 ஆண்டுகளாக குஜராத்தில் தலைமறைவாக வசித்து வந்ததும், இந்திய முகவரியில் ஆதார் அட்டை, பான் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்ததும் தெரிய வந்தது. பல்வேறு தீவிரவாத சம்பவங்களில் தொடர்புடைய அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்