என் மலர்

  நீங்கள் தேடியது "Commonwealth Games"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • காயத்தில் இருந்து முழுமையாக மீளாத முன்னாள் கேப்டன் ராணி ராம்பால் பெயர் அணி தேர்வில் மீண்டும் பரிசீலிக்கப்படவில்லை.
  • கோல்கீப்பர் பிச்சுதேவி கரிபாம், நடுகள வீராங்கனை சோனிகா ஆகியோர் மட்டும் நீக்கப்பட்டுள்ளனர்.

  புதுடெல்லி:

  22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் ஜூலை 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்கிறது. இதில் பெண்களுக்கான ஹாக்கி போட்டியில் பங்கேற்கும் 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்திய அணி 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ளது.

  இங்கிலாந்து, கனடா, வேல்ஸ், கானா ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும். இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் ஜூலை 29-ந் தேதி கானாவை சந்திக்கிறது. காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான 18 பேர் கொண்ட இந்திய பெண்கள் ஹாக்கி அணி நேற்று அறிவிக்கப்பட்டது. உலக கோப்பை போட்டிக்கான அணியில் இடம் பிடித்துள்ள பெரும்பாலானவர்கள் அப்படியே தொடருகிறார்கள்.

  கோல்கீப்பர் பிச்சுதேவி கரிபாம், நடுகள வீராங்கனை சோனிகா ஆகியோர் மட்டும் நீக்கப்பட்டுள்ளனர். கோல்கீப்பர் சவிதா கேப்டனாகவும், பின்கள வீராங்கனை தீப் கிரேஸ் எக்கா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். காயத்தில் இருந்து முழுமையாக மீளாத முன்னாள் கேப்டன் ராணி ராம்பால் பெயர் அணி தேர்வில் மீண்டும் பரிசீலிக்கப்படவில்லை.

  இந்திய அணி வருமாறு:-

  சவிதா (கேப்டன்), ரஜனி எதிமர்பு (கோல்கீப்பர்கள்), தீப் கிரேஸ் எக்கா, குர்ஜித் கவுர், நிக்கி பிரதான், உதிதா (பின்களம்), நிஷா, சுஷிலா சானு, மோனிகா, நேஹா, ஜோதி, நவ்ஜோத் கவுர், சலிமா டெடி (நடுகளம்), வந்தனா கட்டாரியா, லாம்ரெம்சியாமி, நவ்னீத் கவுர், ஷர்மிளா தேவி, சங்கீதா குமாரி (முன்களம்).

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இந்திய பெண்கள் குத்துச்சண்டை அணியை தேர்வு செய்ய டெல்லியில் தகுதிச்சுற்று போட்டி நடக்கிறது
  • காமன்வெல்த் போட்டிக்கு இந்த முறை மேரி கோம் செல்ல முடியாது.

  புதுடெல்லி:

  பயிற்சி போட்டியில் இருந்து விலகியதன் மூலம் காமன்வெல்த் போட்டிக்கு இந்த முறை மேரி கோம் செல்ல முடியாது.

  இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் அடுத்த மாதம் 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் பங்கேற்கும் இந்திய வீரர்-வீராங்கனைகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

  இந்த போட்டிக்கான இந்திய பெண்கள் குத்துச்சண்டை அணியை தேர்வு செய்வதற்கான தகுதிச் சுற்று போட்டி டெல்லி இந்திரா காந்தி சர்வதேச மைதானத்தில் நடந்து வருகிறது. 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம் மற்றும் பல்வேறு நட்சத்திர வீராங்கனைகள் இதில் பங்கேற்றுள்ளனர்.

  இதில் நேற்று நடந்த 48 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதியில் மேரி கோம், அரியானாவின் நிதுவை சந்தித்தார். முதல் ரவுண்டில் 39 வயதான மேரிகோம் எதிராளிக்கு குத்துவிட முயற்சித்த போது, நிலை தடுமாறி விழுந்தார். இதில் அவருக்கு இடது கால்முட்டியில் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போட்டியை நடுவர் நிறுத்தினார். உடனடியாக மேரிகோம் மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். 

  மேரி கோம் போட்டியில் இருந்து பாதியில் விலகியதால், அவரை எதிர்த்து மோதிய நிது வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். எனவே, இந்த முறை காமன்வெல்த் போட்டிக்கு மேரி கோம் செல்ல முடியாது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காமன்வெல்த் டேபிள் டென்னிஸில் நான்கு பதக்கம் வென்ற டெல்லி வீராங்கனை இன்னும் ஊக்கத்தொகை கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். #ManikaBatra
  ஆஸ்திரேலியாவின் கடற்கரை நகரமான கோல்டு கோஸ்டில் காமல்வெல்த் போட்டி நடைபெற்றது. இதில் பெண்களுக்கான டென்னிஸில் டெல்லி வீராங்கனை மணிகா பத்ரா அசத்தினார். அவர் பெண்கள் அணி மற்றும் தனிநபர் பிரிவில் தங்கப்பதக்கமும், இரட்டையர் பிரிவில் வெள்ளியும், கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கல பதக்கமும் வென்றார்.

  பெரிய பெரிய தொடரில் சாதிக்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு அந்தந்த மாநிலங்கள் ஊக்கத்தொகை அறிவிக்கும்.

  வெளிமாநிலங்கள் அதிகத் தொகை கொடுத்த போதிலும் டெல்லி அரசு தங்கத்திற்கு 14 லட்சம் ரூபாயும், வெள்ளிக்கு 10 லட்சம் ரூபாயும், வெண்கலத்திற்கு 6 லட்சம் ரூபாயும் கொடுத்து வந்தது. இது மிகவும் குறைவு என்பதால் ஊக்கத்தொகையை அதிகரித்து டெல்லி அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

  பரிந்துரையின்படி மணிகா பத்ராவிற்கு நான்கு பதக்கத்திற்கான தொகையாக 1.7 கோடி ரூபாய் டெல்லி அரசு வழங்க வேண்டும். ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை. டெல்லியில் நேற்று நடந்த டேபிள் டென்னிஸ் பெடரேசன் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் இதை மணிகா பத்ரா தெரிவித்தார்.  இதுகுறித்து மணிகா பத்ரா கூறுகையில் ‘‘இதுவரை ஏன் பணம் வரவில்லை என்று எனக்குத் தெரியாது. ஆனால், பணம் கிடைக்கும் என்பது எனக்குத் தெரியும்’’ என்றார்.

  டெல்லி அரசின் கல்வித்துறைக்கான (விளையாட்டு) துணை இயக்குனர் தர்மேந்தர் சிங், மணிகா பத்ரா ஃபைல் கேபினட் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது என்றார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காமன்வெல்த் போட்டியில் அறைகளை சேதப்படுத்தியது தொடர்பாக இந்திய ஒலிம்பிக் சங்கம் ரூ.74 ஆயிரத்தை அபராதமாக செலுத்த வேண்டும் என்று காமன்வெல்த் விளையாட்டு கமிட்டி கடிதம் அனுப்பி உள்ளது. #Commonwealthgames
  புதுடெல்லி:

  காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி கடந்த ஏப்ரல் மாதம் ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட் நகரில் நடந்தது.

  இந்தியா சார்பில் 15 போட்டிகளில் 216 வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்றனர். 26 தங்கம், 20 வெள்ளி, 20 வென்கலம் ஆக மொத்தம் 66 பதக்கங்களுடன் 3-வது இடத்தை பிடித்தது.

  இந்த நிலையில் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர்கள் அறைகளை சேதப்படுத்தி இருந்த தகவல் தற்போதுதான் வெளியாகி உள்ளது. கதவுகள், மின் விளக்கு, நாற்காலி, குளிர் சாதன பெட்டி உள்ளிட்ட பொருட்கள் சேதம் அடைந்ததாக காமன்வெல்த் விளையாட்டு கமிட்டி தெரிவித்துள்ளது.

  இதற்காக இந்திய ஒலிம்பிக் சங்கம் ரூ.74 ஆயிரத்தை அபராதமாக செலுத்த வேண்டும் என்று காமன்வெல்த் விளையாட்டு கமிட்டி இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு கடிதம் அனுப்பி உள்ளது.

  கூடைப்பந்து, தடகளம், துப்பாக்கி சுடுதல், பளுதூக்குதல், ஸ்குவாஷ், டேபிள் டென்னிஸ் ஆகிய வீரர்கள் தங்கிய அறைகள் சேதமடைந்ததாகவும், அந்த சங்கத்தினர் இந்த அபராத தொகையை ஏற்றுக்கொள்ள இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவுறுத்தி உள்ளது.

  அதிகபட்சமாக கூடைப்பந்து சங்கத்துக்கு ரூ.20 ஆயிரத்து 400 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. #Commonwealthgames
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற சஞ்ஜிதா பானு ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்துள்ளார். இதனால் பதக்கத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
  ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்டில் கடந்த மாதம் காமன்வெல்த் போட்டி நடைபெற்றது. இதில் பெண்களுக்கான 53 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட குமுக்சம் சஞ்ஜிதா சானு தங்கப் பதக்கம் வென்றார்.

  போட்டியில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் ரத்தம் மற்றும் சிறுநீர் சோதனைகளுக்காக மாதிரி எடுத்து வைப்பது வழக்கம். அப்படி எடுக்கப்பட்ட சஞ்ஜிதா சானு மாதிரியில் தடைசெய்யப்பட்ட அனபோலிக் ஸ்டீராய்டு என்ற ஊக்கமருந்தை பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது.  இதை சர்வதேச பளுதூக்குதல் பெடரேசன் தெரிவித்துள்ளது. அனபோலிக் ஸ்டீராய்டு என்பது தசையை வளர்ச்சி அடைய வைக்கும் ஒருவகை ஊக்கமருந்து.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காமன்வெல்த் போட்டிக்காக கோல்டு கோஸ்ட் சென்றவர்களில் 50 பேரை காணவில்லை என்றும், அவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் கடந்த மாதம் 4-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை காமன்வெல்த் கேம்ஸ் நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 6600 வீரர்கள் மற்றும் அணி பயிற்சியாளர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

  இவர்கள் தொடர் முடிந்தவுடன் சொந்த நாடு திரும்பினார்கள். ஆனால், சிலர் இன்னும் சொந்த நாடு திரும்பவில்லை. அவர்கள் ஆஸ்திரேலியாவில் சுற்றிக் கொண்டிருக்கலாம். அதேபோல் சிலர் ஆஸ்திரேலியாவில் தஞ்சமடை கோரிக்கை விடுத்துள்ளனர்.  இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் உள்நாட்டு விவகாரத்துறை மந்திரி டுட்டோன் கூறுகையில் ‘‘கோல்டு கோஸ்ட் காமன்வெல்த் போட்டிக்கு வந்தவர்களில் 190 பேர் அகதிகள் விசா கேட்டுள்ளார்கள். 50 பேரை காணவில்லை. அவர்களை தேடும்பணி நடைபெற்று வருகிறது. அவர்களை கண்டுபிடித்து, குடியேற்ற தடுப்புக்காவலில் வைத்து, நாடு கடத்தப்படுவார்கள்’’ என்றார்.

  காமன்வெல்த் போட்டிக்கு செல்பவர்கள் மாயமாவது இது புதிதல்ல. 2006-ம் அண்டு மெல்போர்ன்  2002 மான்செஸ்டர், 2014 கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகளில் கலந்து கொண்டவர்களும் டஜன் கணக்கில் மாயமானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.ustralia Searching for 50 Athletes Officials Missing After Commonwealth Games
  ×