search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gold medal"

    • கேலோ இந்தியா விளையாட்டு வரலாற்றில் கைப்பந்தில் தமிழ்நாடு தங்கப்பதக்கம் வெல்வது இது 4-வது முறையாகும்.
    • பளுதூக்குதலில் 89 கிலோ பிரிவில் தமிழகத்தின் தீர்ஷன் வெண்கலம் வென்றார்.

    சென்னை:

    6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி (18 வயதுக்குட்பட்டோர்) சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இறுதிகட்டத்தை நெருங்கியுள்ள இந்த விளையாட்டு திருவிழாவில் தமிழ்நாடு தொடர்ந்து பதக்கவேட்டையில் முத்திரை பதித்து வருகிறது.

    நேற்று நடந்த கைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் தமிழக அணி 25-20, 25-23, 22-25, 25-15 என்ற செட் கணக்கில் அரியானாவை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கியது. கேலோ இந்தியா விளையாட்டு வரலாற்றில் கைப்பந்தில் தமிழ்நாடு தங்கப்பதக்கம் வெல்வது இது 4-வது முறையாகும்.

    இதன் பெண்கள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் மேற்கு வங்காளம் 23-25, 25-22, 25-13, 25-23 என்ற செட் கணக்கில் ராஜஸ்தானை வீழ்த்தி மகுடம் சூடியது. 3-வது இடத்திற்கான ஆட்டத்தில் தமிழக அணி 25-21, 25-15, 25-6 என்ற நேர் செட்டில் குஜராத்தை துவம்சம் செய்து வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது.

    சைக்கிள் பந்தயத்தில்( 80 கிலோ மீட்டர்) தமிழக வீரர் கிஷோர் 2 மணி 04 நிமிடம் 02.980 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். மற்றொரு தமிழக வீரர் நிதினுக்கு வெண்கலம் கிடைத்தது.

    நீச்சலில் பெண்களுக்கான 100 மீட்டர் பேக்ஸ்டிரோக் பந்தயத்தில் தமிழக வீராங்கனை தீக்சா சிவக்குமார் 1 நிமிடம் 07.91 வினாடிகளில் முதலாவதாக வந்து தங்கப்பதக்கத்துக்கு முத்தமிட்டார். இதே போல் நிதிக் (வெள்ளி), ஸ்ரீநிதி (வெண்கலம்) ஆகியோரும் நீச்சலில் தமிழகத்திற்கு பதக்கம் தேடித்தந்தனர். பளுதூக்குதலில் 89 கிலோ பிரிவில் தமிழகத்தின் தீர்ஷன் வெண்கலம் வென்றார்.

    பதக்கப்பட்டியலில் டாப்-2 இடங்களில் மராட்டியமும் (37 தங்கம் உள்பட 109 பதக்கம்), தமிழ்நாடும் (29 தங்கம் உள்பட 77 பதக்கம்) மாற்றமின்றி நீடிக்கின்றன.

    • இறுதிப் போட்டியில் தமிழ்நாடு-அரியானா அணிகள் மோதுகின்றன.
    • முன்னதாக மாலை 3 மணிக்கு நடைபெறும் பெண்கள் இறுதிப் போட்டியில் மேற்கு வங்காளம்-ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    சென்னை:

    கேலோ இந்தியா விளையாட்டில் கைப்பந்து போட்டிகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.

    இதன் ஆண்கள் பிரிவில் தமிழக அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நேற்று நடந்த அரைஇறுதியில் தமிழக அணி 18-25, 25-22, 23-25, 25-23, 15-11 என்ற கணக்கில் ஆந்திராவை வீழ்த்தியது. மற்றொரு அரை இறுதியில் அரியானா 25-22, 25-17, 25-18 என்ற நேர்செட் கணக்கில் உத்தரபிரதேசத்தை தோற்கடித்தது.

    இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் தமிழ்நாடு-அரியானா அணிகள் மோதுகின்றன. அரியானாவை வீழ்த்தி தமிழக அணி தங்கப் பதக்கம் வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அரியானா அணியும் வலுவாக இருக்கிறது. இதனால் இறுதிப் போட்டி மிகவும் விறு விறுப்புடன் இருக்கும்.

    முன்னதாக மாலை 3 மணிக்கு நடைபெறும் பெண்கள் இறுதிப் போட்டியில் மேற்கு வங்காளம்-ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    அரைஇறுதி ஆட்டங்களில் மேற்குவங்காளம் 25-11, 30-28, 25-19 என்ற கணக்கில் குஜராத்தையும், ராஜஸ்தான் 13-25, 25-20, 25-20 என்ற கணக்கில் தமிழகத்தையும் தோற்கடித்தன.

    • மதுரை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் மாற்றுத்திறனாளிக்கான மாவட்ட அளவில் தடகள போட்டிகள் நடைபெற்றது.
    • சோழவந்தான் கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர் தங்க பதக்கம் வென்றுள்ளார்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் மதுரை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் மாற்றுத்திறனாளிக்கான மாவட்ட அளவில் தடகள போட்டிகள் நடைபெற்றது.

    14 வயதிற்கான கைகள் பாதிப்பிற்குட்பட்ட 50 மீட்டர் ஆடவர் பிரிவில் மதுரை மாவட்டம் சோழவந்தான் கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர் சந்தன பில்கேட்ஸ் பங்கு பெற்று தங்க பதக்கம் வென்றுள்ளார். மேலும் இவர் மாநில அளவிலான மாற்றுத்திறனாளிக்கான தடகள போட்டிகளில் பங்கு பெற தேர்ச்சி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற சந்தன பில்கேட்சை பள்ளி தாளாளர் செந்தில்குமார், பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டி தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்கள்.

    • இந்தோனேசியாவில் சர்வதேச அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது.
    • இதில் சாம்பார்வடகரை சிபுகான் சிட்டோரியோ கராத்தே டு அசோசியேசனில் இருந்து பங்கேற்ற ஜெயச்சந்திரன் என்ற ரவிச்சந்திரன் முதல் பரிசாக தங்கப்பதக்கம் வென்றார்.

    சாம்பவர்வடகரை:

    இந்தோனேசியாவில் சர்வதேச அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகள் கலந்து கொண்டன. இலங்கை, இந்தியா, நேபாளம், ஜப்பான், இந்தோனேசியா, அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கலந்து கொண்டன. இந்திய அணி சார்பாக தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை சிபுகான் சிட்டோரியோ கராத்தே டு அசோசியேசனில் இருந்து பங்கேற்ற ஜெயச்சந்திரன் என்ற ரவிச்சந்திரன் முதல் பரிசாக தங்கப்பதக்கம் வென்றார். இதையடுத்து சிலுக்கான் சிட்டோரியோ கராத்தே டு அசோசியேசன் தொழில்நுட்ப இயக்குனர் டாக்டர் ராஜ மகேந்திரன் தங்கப்பதக்கம் வென்ற வீரரை பாராட்டினார்.

    • கோவாவில் கடந்த செப்டம்பர் மாதம் 27,28,29 ஆகிய தேதிகளில் தேசிய அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றது.
    • தேனியை சேர்ந்த மாணவர்கள் 5 தங்க பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

    தேனி:

    கோவாவில் கடந்த செப்டம்பர் மாதம் 27,28,29 ஆகிய தேதிகளில் தேசிய அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றது.

    இந்த போட்டியில் தமிழக அணியின் சார்பாக தேனி அருகே உள்ள ,கொடுவி லார்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் தீபம் சிலம்பம் தற்காப்பு கலை அறக்கட்டளை மாணவர்கள் அஸ்வின், சர்வேஷ் கோபால், மோகன்தாஸ், மோகித்குமார், வசுநந்தன் ஆகிய வீரர்கள் வயது மற்றும் எடையின் அடி ப்படையில் கலந்து கொண்டு 5 தங்க பதக்கங்களை வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

    தீபம் சிலம்பம் தற்காப்பு கலை அறக்கட்டளை நிறுவனர் மற்றும் சிலம்ப ஆசான் ஈஸ்வரன் மாண வர்களுக்கு சிறந்த பயிற்சி அளிப்பதோடு, மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக வெளி மாநிலங்களில் நடைபெறும் சிலம்பம் போட்டிகளுக்கு அழைத்து சென்று போட்டியில் தங்க பதக்கங்கள் பெறும் அளவிற்கு பயிற்சி கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தேசிய அளவிலான இறகுப்பந்தாட்ட போட்டியில் மாணவி ரேஷிகா தங்க பதக்கம் பெற்றார்.
    • ஆசிய சப்-ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்திய அணி சார்பாக ரேஷிகா தேர்வு பெற்றுள்ளார்.

    நெல்லை:

    தேசிய அளவிலான இறகுப்பந்தாட்ட போட்டி தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் நெல்லை வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ரேஷிகா கலந்து கொண்டு தங்க பதக்கம் பெற்றார்.

    இதன் மூலம் அடுத்த மாதம் சீனாவில் 17-ந்தேதி முதல் 22-ந் தேதி வரை நடைபெற இருக்கும் ஆசிய சப்-ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்திய அணி சார்பாக தேர்வு பெற்றுள்ளார். இந்திய அணிக்கு தேர்வு பெற்றுள்ள மாணவியை பள்ளியின் சேர்மன் சிவசேதுராமன், தாளாளர் முனைவர். திருமாறன், முதல்வர் முருகவேள், ஒருங்கிணைப்பாளர் சண்முகராணி, உடற்கல்வி இயக்குநர் உமாநாத், உடற்கல்வி ஆசிரியர்கள் மோகன்குமார், பூச்சியம்மாள் மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    • தேசிய அளவிலான சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் வலுதூக்கும் போட்டியில் தங்க பதக்கம் வென்றார்.
    • தலைமை நீதிபதியும் ஒரு விளையாட்டு வீரர் என்பது குறிப்பிடத்தக்கது

    புதுச்சேரி:

    புதுவை தீயணைப்பு துறையில் டிரைவராக பணியாற்றி வருபவர் திருநாவுக்கரசு. இவரின் மனைவி சுந்தரி அரசு பள்ளி ஆசிரியை. இவர்களின் மகன் விஷால், மன வளர்ச்சி குன்றியவர். இருப்பினும் நயினார்மண்ட பத்தில் வலு தூக்கும் பயிற்சி பெற்று வந்தார்.

    உள்ளூரில் பல போட்டிகள் பரிசு பெற்ற இவர் ஜெர்மனியில் நடந்த சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றார்.

    இதில் 4 வெள்ளி பதக்கம் பெற்றார். கடந்த 11-ந் தேதி நடைபெற்ற தேசிய அளவிலான சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் வலுதூக்கும் போட்டியில் தங்க பதக்கம் வென்றார். மேலும் இரும்பு மனிதன் என்ற பட்டத்தையும் பெற்றார்.

    இவரை பிரதமர் மோடி பாராட்டி வாழ்த்து தெரிவித்திருந்தார். புதுவை திரும்பிய விஷாலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதுகுறித்து கேள்விப்பட்ட புதுவை தலைமை நீதிபதி செல்வநாதன், விஷாலையும், பயிற்சியாளர் பாக்யராஜையும் தனது அறைக்கு அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    தலைமை நீதிபதியும் ஒரு விளையாட்டு வீரர் என்பது குறிப்பிடத்தக்கது

    • இதே பிரிவில் மற்றொரு மாணவி 11-ம் இடம் பிடித்துள்ளார்.
    • நிகழ்ச்சியில் மாணவ- மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்கும் மாணவி ஜோதிகா பாரதிதாசன் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

    இதே பிரிவில் புவனேஸ்வரி என்ற மாணவியும் 11-ம் இடம் பிடித்துள்ளார்.

    இந்நிலையில், தங்கப்பதக்கம் வென்ற மாணவி ஜோதிகாவுக்கு, கல்லூரியில் பாராட்டு விழா நடைபெற்றது.

    விழாவில் கல்லூரி முதல்வர் காமராஜ் தலைமை தாங்கினார்.

    துணை முதல்வரும், தமிழ் துறை பேராசிரியருமான குமரேசமூர்த்தி முன்னிலை வகித்தார். தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு கல்லூரி முதல்வர் புத்தகம் பரிசாக வழங்கினார்.

    நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் ராஜா, பிரபாகரன், அறிவுச்செல்வன், மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அண்ணா பல்கலைக்கழக தேர்வில் தங்கப்பதக்கம் பெற்ற முகமது சதக் கல்லூரி மாணவரை இயக்குநர்-ஆசிரியர்கள் பாராட்டினர்.
    • தங்க நாணயத்தை பரிசாக வழங்கினார்.

    கீழக்கரை

    அண்ணா பல்கலைக்கழக அளவில் கடல் சார் பொறியி யல் கல்லூரி மாணவர்க ளுக்கு இடையே நடைபெற்ற தேர்வில் தமிழக அளவில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லூரி மாணவர் சோன்ரபிரபு முதலாவதாக தேர்ச்சி பெற்று அண்ணா பல்கலை கழகம் அளவில் தங்கப் பதக்கம் பெற்றார்.

    அண்ணா பல்கலை கழகம் அளவில் முதல் இடத்தை பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவர் சோன்ர பிரபுவுக்கு கல்லூரி நிர்வாக இயக்குனர் பி.ஆர்.எல்.ஹாமிது இப்ராஹிம் மாணவரை பாராட்டி தங்க நாணயம் பரிசு வழங்கினார்.

    மேலும் அவர் கூறுகை யில், அண்ணா பல்கலை கழகம் அளவில் தங்கப் பதக்கம் பெற்ற மாணவர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர். எங்கள் கல்லூரியில் கடல்சார் பொறியியல் துறையில் பயின்று சாதனை புரிந்து தற்போது பெரிய கப்பல் நிறுவனத்தில் பணி யில் சேர்ந்து வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார். இவர் மற்ற மாணவர்களுக்கு ஒரு உதார ணமாக திகழ்கிறார். அவரை அழைத்து பாராட்டுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது, என்றார்.

    மாணவரின் தாயார் மாரியம்மாள், முகம்மது சதக் என்ஜினீயரிங் கல்லூரி சி.இ.ஒ. விஜயகுமார், கல்லூரி முதல்வர் செந்தில் குமார், கல்லூரி கடல்சார் பொறியியல் துறை தலைவர் பேராசிரியர் தங்கவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

    சாதனை மாணவர் சோன்ரபிரபு கூறும்போது, நான் அண்ணா பல்கலை கழகம் அளவில் தங்கப் பதக்கம் பெறுவதற்கு உறு துணையாக இருந்த முகம்மது சதக் பொறியியல் கல்லூரி நிர்வாக இயக்குனர், சி.இ.ஓ.., கல்லூரி முதல்வர், துறை தலைவர், பேராசிரி யர்கள், என் பெற்றோர் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    • அவர் 400 மீட்டர் தடை ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கமும், உயரம் தாண்டும் போட்டியில் வெண்கலப்பதக்கமும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
    • இந்திய, தமிழக மற்றும் சென்னை காவல்துறைக்கு அவர் பெருமை சேர்த்துள்ளார்.

    சென்னை:

    கனடா நாட்டில் கடந்த ஜூலை மாதம் 28-ந் தேதி முதல், ஆகஸ்டு மாதம் 6-ந் தேதி வரை உலக காவல்துறை மற்றும் தீ விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

    இந்த போட்டிகளில் 7 விளையாட்டு பிரிவுகள் (100 மீட்டர் தடை தாண் டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், 800 மீட்டர் ஓட்டப்பந்தயம்) அடங்கிய 'ஹெப்டத்லான்' போட்டியில் சென்னை காவல்துறையில் நவீன கட்டுப்பாட்டு அறையில், காவல்கரங்கள் பிரிவில் பணியாற்றும் பெண் போலீஸ் ஏட்டு லீலாஸ்ரீ தங்க பதக்கம் வென்றுள்ளார்.

    மேலும் அவர் 400 மீட்டர் தடை ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கமும், உயரம் தாண்டும் போட்டியில் வெண்கலப்பதக்கமும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

    இந்திய, தமிழக மற்றும் சென்னை காவல்துறைக்கு அவர் பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு வாழ்த்துகள் குவிகிறது. வரும் 14-ந் தேதி சென்னை திரும்பும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    • இந்தியா சார்பில் அஸ்ஸாம் மாநிலத்தில் 2-வது சர்வதேச மல்லர் கம்ப போட்டி கடந்த 9-ந்தேதி தொடங்கி 11-ந் தேதி வரை நடைபெற்றது
    • நட்சத்திர மல்லர் கம்ப விளையாட்டு வீரர் ஹேமசந்திரன் தங்கப்பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளார்.

    விழுப்புரம்:

    இந்தியா சார்பில் அஸ்ஸாம் மாநிலத்தில் 2-வது சர்வதேச மல்லர் கம்ப போட்டி கடந்த 9-ந்தேதி தொடங்கி 11-ந் தேதி வரை நடைபெற்றது. இந்த சர்வதேச மல்லர்கம்ப விளையாட்டு போட்டியில் தமிழகத்திலிருந்து விழுப்புரம் பெரிய காலணி பகுதியை சேர்ந்த நட்சத்திர மல்லர்கம்ப விளையாட்டு வீரர் ஹேமசந்திரன் சர்வதேச மல்லர்கம்பம் தனிநபர் மற்றும் குழு இரு விளையாட்டு பிரிவிலும் தங்கப்பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளார்.

    மேலும் தங்க பதக்கம் வென்ற ஹேமச்சந்திரன் கடந்த 2 ஆண்டில் மட்டும் 36-வது தேசிய விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்கமும், பல்கலைக்க ழகங்களுக்கு இடையிலான போட்டியில் தங்கப் பதக்கமும், கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆப்கானிஸ்தானை சேர்ந்த 14 ஆயிரம் மாணவ-மாணவிகள் இந்தியாவில் படித்து வருகிறார்கள்.
    • படிப்பு முடிந்ததும் மீண்டும் சொந்த நாட்டுக்கு சென்று வேலை பார்க்க வேண்டும் என்பது தான் எனது கனவு.

    குஜராத்:

    ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கபட்டன. அதிலும் குறிப்பாக மாணவிகளுக்கு கல்வி உரிமை மறுக்கப்பட்டது. இதனால் மாணவிகள் கல்வி கற்க முடியாமல் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.

    தலிபான்களின் இந்த கட்டுப்பாடுகளில் இருந்து மீண்ட ஆப்கானிஸ்தான் மாணவி ஒருவர் இந்தியாவில் எம்.ஏ. பட்டப்படிப்பில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்து உள்ளார். அந்த மாணவியின் பெயர் ரஷியா முராடி. இவர் குஜராத் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ (பொது நிர்வாகம்) படித்தார். இதில் அவர் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்று சாதித்து உள்ளார். குஜராத் மாநிலம் சூரத்தில் நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில் அவருக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. இதனால் ரஷியா முராடி மகிழ்ச்சியுடன் உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது

    கடந்த ஆண்டு நான் எம்.ஏ முடித்தேன். தற்போது பி.எச்.டி படித்து வருகிறேன். எனக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது ரொம்பவே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் இந்த சந்தோஷத்தை எனது பெற்றோருடன் கொண்டாட முடியவில்லையே? என்ற ஏக்கம் இருக்கிறது. ஆப்கானிஸ்தானில் இருக்கும் பெற்றோர்களை பார்த்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுபற்றி நான் அவர்களிடம் தெரிவித்தேன். அவர்கள் சந்தோஷப்பட்டனர். நான் ஆப்கானிஸ்தான் பெண்களின் ஒரு பிரதிநிதியாகவே கருதுகிறேன். தலிபான் அரசுக்கு நான் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். அனைத்து துறையிலும் பெண்கள் சாதிப்பார்கள். இதனை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனக்கு படிக்கும் வாய்ப்பை கொடுத்ததற்கும், சாதனை படைக்க ஊக்குவித்ததற்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஆப்கானிஸ்தானை சேர்ந்த 14 ஆயிரம் மாணவ-மாணவிகள் இந்தியாவில் படித்து வருகிறார்கள். படிப்பு முடிந்ததும் மீண்டும் சொந்த நாட்டுக்கு சென்று வேலை பார்க்க வேண்டும் என்பது தான் எனது கனவு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×