என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மல்லர் கம்பம் போட்டி:  விழுப்புரம் வீரர் சாதனை
    X

    அஸ்ஸாம் மாநிலத்தில் நடந்த 2-வது சர்வதேச மல்லர் கம்ப போட்டியில் தங்கம் வென்ற ஹேமசந்திரனை படத்தில் காணலாம்.

    மல்லர் கம்பம் போட்டி: விழுப்புரம் வீரர் சாதனை

    • இந்தியா சார்பில் அஸ்ஸாம் மாநிலத்தில் 2-வது சர்வதேச மல்லர் கம்ப போட்டி கடந்த 9-ந்தேதி தொடங்கி 11-ந் தேதி வரை நடைபெற்றது
    • நட்சத்திர மல்லர் கம்ப விளையாட்டு வீரர் ஹேமசந்திரன் தங்கப்பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளார்.

    விழுப்புரம்:

    இந்தியா சார்பில் அஸ்ஸாம் மாநிலத்தில் 2-வது சர்வதேச மல்லர் கம்ப போட்டி கடந்த 9-ந்தேதி தொடங்கி 11-ந் தேதி வரை நடைபெற்றது. இந்த சர்வதேச மல்லர்கம்ப விளையாட்டு போட்டியில் தமிழகத்திலிருந்து விழுப்புரம் பெரிய காலணி பகுதியை சேர்ந்த நட்சத்திர மல்லர்கம்ப விளையாட்டு வீரர் ஹேமசந்திரன் சர்வதேச மல்லர்கம்பம் தனிநபர் மற்றும் குழு இரு விளையாட்டு பிரிவிலும் தங்கப்பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளார்.

    மேலும் தங்க பதக்கம் வென்ற ஹேமச்சந்திரன் கடந்த 2 ஆண்டில் மட்டும் 36-வது தேசிய விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்கமும், பல்கலைக்க ழகங்களுக்கு இடையிலான போட்டியில் தங்கப் பதக்கமும், கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×