என் மலர்
உள்ளூர் செய்திகள்

ப்ரண்ட்லைன் நியூஜென் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்களுக்கு - தங்கப்பதக்கம் பரிசு
- போட்டிகளில் ஒவ்வொரு மாணவரும் அவரவரின் தனித் திறமையை வெளிப்படுத்தினர்.
- போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளிசெயலாளர் சிவகாமி பதக்கங்கள் வழங்கினார்.
திருப்பூர் :
திருப்பூர் தாராபுரம் சாலை பெருந்தொழுவு ரோட்டில் அமைந்துள்ள பிரண்ட்லைன் நியூஜென் இன்டர்நேஷனல் பள்ளியில் மாணவர்களுக்கான தடகளப்போட்டிகள் 3 நாட்கள் நடைப்பெற்றன. இந்நாட்களில் மாணவர்களுக்கான ஓட்டப்பந்தயம், தடைகளைத் தாண்டி ஓடுதல், தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் போன்ற பல போட்டிகள் நடைபெற்றன.
இப்போட்டிகளில் ஒவ்வொரு மாணவரும் அவரவரின் தனித் திறமையை வெளிப்படுத்தினர். இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளிசெயலாளர் சிவகாமி பதக்கங்கள் வழங்கினார்.
மேலும் இவர்களை பள்ளித்தாளாளர் சிவசாமி, இயக்குனர் சக்தி நந்தன் மற்றும் துணை இயக்குனர் வைஷணவி நந்தன் ஆகியோர் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இறுதியாக, அனைத்து போட்டிகளிலும் கலந்து கொண்டு முதல் இடம் பெற்ற அக்வா அணிக்கும், 2-ம் இடம் பிடித்த ஏரிஸ் அணிக்கும் பள்ளித்தலைமை ஆசிரியை சியாமளா தேவி கோப்பைகள் வழங்கி பாராட்டினார்.






