search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "international competition"

    • இதுவரை 110 டெஸ்ட், 274 ஒரு நாள் போட்டி மற்றும் 115 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி உள்ளார்.
    • 500-வது சர்வதேச போட்டியில் விளையாடும் 4-வது இந்திய வீரர் கோலி ஆவார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இன்று தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் கோலிக்கு அது 500-வது சர்வதேச போட்டியாகும்.

    அவர் இதுவரை 110 டெஸ்ட், 274 ஒரு நாள் போட்டி மற்றும் 115 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி உள்ளார்.

    500-வது சர்வதேச போட்டியில் விளையாடும் 4-வது இந்திய வீரர் கோலி ஆவார். ஒட்டுமொத்தமாக 10-வது வீரராக உள்ளார்.

    கிரிக்கெட் ஜாம்பவான் தெண்டுல்கர் 664 போட்டிகளில் விளையாடி உள்ளார். டோனி 538 போட்டிகளிலும், ராகுல் டிராவிட் 509 போட்டிகளிலும் விளையாடி உள்ளனர்.

    கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களில் கோலி 100-க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடி இருக்கிறார். 500-வது சர்வதேச போட்டியில் விளையாடும் கோலிக்கு இந்நாள், முன்னாள் வீரர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    • சர்வதேசப் போட்டியில் மேலூர் மாணவி தங்கப்பதக்கம் வென்றார்.
    • சிறு வயது முதல் விளையாட்டில் ஆர்வம் கொண்ட அவர் கால் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள வெள்ளரிப்பட்டியை சேர்ந்தவர் ராஜபாண்டி, விவசாயி. இவரது மனைவி கவிதா. இவர்களது மகள் வர்ஷினி டெல்லியில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று வெற்றி பெற்று தங்கப்பதக்கம் பெற்றார். வெற்றி பெற்ற அவர் தனது சொந்த கிராமத்திற்கு இன்று வந்தார். அவரை வெள்ளரிப்பட்டி டோல்கேட்டில் கிராம மக்கள் வரவேற்றனர்.

    அப்போது பட்டாசு வெடித்து, ஆரத்தி எடுத்து, அவருக்கு மாலை அணிவித்தனர். வர்ஷினி அரசு பள்ளியில் படித்த மாணவி ஆவார். அவர் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மேலூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்துள்ளார். தற்போது அவர் மதுரை மீனாட்சி கல்லூரியில் இளங்கலை 3-ம் ஆண்டு படித்து வருகிறார். சிறு வயது முதல் விளையாட்டில் ஆர்வம் கொண்ட அவர் கால் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். அவருக்கும், பயிற்சியளித்த ரஞ்சித் மற்றும் பிரேம் ஆகியோருக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    • அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நாசா, விண்வெளி ஆய்விற்கான கைப்பேசி செயலி வடிவமைப்பு போட்டியை சர்வதேச அளவில் 2012-ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது
    • 87 நாடுகளைச் சேர்ந்த சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

    கோவில்பட்டி:

    சர்வதேச அளவில் நடைபெறவுள்ள போட்டியில் கோவில்பட்டி என்.இ.சி. கல்லூரி மாணவர் பங்கேற்ற அணி தகுதி பெற்றுள்ளது.

    அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நாசா, விண்வெளி ஆய்விற்கான கைப்பேசி செயலி வடிவமைப்பு போட்டியை சர்வதேச அளவில் 2012-ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது. இந்தாண்டு ஆஸ்திரேலியா, பிரேசிலிய, கனேடிய, ஐரோப்பிய, பராகுவே ஆகிய விண்வெளி நிறுவனம் மற்றும் ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம், தேசிய விண்வெளி செயல்பாடுகள் ஆணையம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், மெக்சிகன் விண்வெளி ஏஜென்சி, அர்ஜென்டினா, பஹ்ரைனின் தேசிய விண்வெளி அறிவியல் நிறுவனம், தென்ஆப்ரிக்கா தேசிய விண்வெளி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து இப்போட்டியை நடத்துகிறது. 87 நாடுகளைச் சேர்ந்த சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

    இந்திய அளவில் இம்மாதம் 1, 2-ந்தேதிகளில் நடைபெற்ற கைப்பேசி செயலி வடிவமைப்பு போட்டியில் கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியின் மின்னணு மற்றும் தொடர்பு பொறியியல் துறை மாணவர் குருபிரசாத் டீம் சிங்குளாரிட்டி எனும் குழுவில் இடம்பெற்று ஆக்குமெண்டேட் ரியாலிட்டி மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி கணினி தொழில்நுட்பத்தின் மூலம் தயாரித்து சமர்ப்பித்திருந்த செயலி, படைப்பு அகில இந்திய அளவில் முதல் பரிசை வென்று சர்வதேச அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளது. இதில் இந்தியா அளவில் 1200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, தங்களது படைப்புகளை சமர்ப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இப்போட்டியில் முதல் பரிசு பெற்ற குழுவில் இடம் பெற்றிருந்த மாணவர்களை நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

    மேலும் நேஷனல் பொறியியல் கல்லூரி மாணவர் குருபிரசாத்தை கே.ஆர்.குழுமம் மற்றும் கல்வி நிறுவனங்களின் தலைவர் சென்னம்மாள் ராமசாமி, துணைத் தலைவர் கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம், கல்லூரி இயக்குநர் சண்முகவேல், முதல்வர் காளிதாசமுருகவேல் மற்றும் துறைத் தலைவர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பாராட்டி, சர்வதேச அளவில் நடைபெறும் போட்டியில் வெற்றி பெற வாழ்த்தினர்.

    • சாகுபுரம் கமலாவதி மாணவர்கள் இளம் ஐன்ஸ்டீன் விருது பெற்றுள்ளனர்.
    • பள்ளி மாணவர்களுக்கான ஜூனியர் ஐன்ஸ்டீன் தளத்தில் 43 படைப்புகள் காட்சிப்படுத்தினர்.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகே உள்ள சாகுபுரம் கமலாவதி சீனியர் செகன்டரி பள்ளி மாணவர்கள் புதிய அறிவியல் சாதன கண்டுபிடிப்பு மற்றும் கண்காட்சி போட்டியில் சர்வதேச அளவில் சாதனை படைத்து இளம் ஐன்ஸ்டீன் விருது பெற்றுள்ளனர்.

    அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மின் மற்றும் மின்னணு பொறியாளர்கள் நிறுவனம், நீடித்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும் இளைஞர்களின் கண்டுபிடிப்புகளை சமூகத்திற்கு கொண்டு வரும் வகையில் இந்த போட்டி அறிவிக்கப்பட்டது. இதற்கான தகுதி சுற்றுப் போட்டிகள் கடந்த மாதம் சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் நடைபெற்றன.

    இதன் இறுதி போட்டி பெங்களுர் ஸ்ரீவெங்கடேஸ்வரா என்ஜினியரிங் கல்லூாயில் நடைபெற்றது. இதில் இந்தியா, ஜப்பான், இந்தோனோஷியா எகிப்து போன்ற நாடுகளில் இருந்து 20-க்கும் மேற்பட்ட மின்னணு படைப்புகள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களால் காட்சிபடுத்தப்பட்டன. இதன்படி பள்ளி மாணவர்களுக்கான ஜூனியர் ஐன்ஸ்டீன் தளத்தில் 43 படைப்புகள் காட்சிப்படுத்தினர்.

    சர்தேச அளவில் நடந்த இப்போட்டியில் கமலாவதி சீனியர் செகன்டரி பள்ளி சார்பில் 8 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 11-ம் வகுப்பு மாணவர் அனிஷ்சங்கர் தயாரித்த தானியங்கி கழிவு அகற்றும் கருவிக்கான படைப்பு முதல் பரிசை வென்றது.

    300 அமெரிக்க டாலரையும் பெற்றது. 10-ம் வகுப்பு பயிலும் அபிஷேக்ராமின் 'செயற்கை நுண்ணறிவு இயக்கம்' என்கிற படைப்பு கவுரவ விருதை பெற்றது.

    மேலும் 12-ம் வகுப்பு மாணவர் செய்யது முகம்மது புஹாரியின் 'பார்வையற்றோ–ருக்கான காலணி' படைப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இப்போட்டியில் அதிகப்படியாக 3 பரிசுகளை வென்றதற்காக கமலாவதி பள்ளிக்கு 'தி ஹால் ஆப் பேம்' என்ற விருதும் கிடைத்துள்ளது.

    இந்த வெற்றிகளுக்கு காரணமான மாணவர்கள் மற்றும் அடால் டிங்கரிங் ஆய்வக ஆசிரியை சேர்மசக்தி ஆகியோரை பள்ளியின் அறங்காவலர்களான டி.சி.டபிள்யூ நிறுவன மூத்த செயல் உதவித் தலைவர் ஜி.சீனிவாசன், மூத்த பொது மேலாளர் பி.ராமச்சந்திரன், பள்ளி முதல்வர் அனுராதா, தலைமை ஆசிரியர்கள் ஸ்டீபன் பாலாசீர், சுப்புரத்தினா, அட்மினிஸ்ட்ரேட்டர் மதன் ஆகியோர் பாராட்டினர்.

    • சர்வதேச அளவில் சிலம்பாட்ட போட்டியில் வெற்றி பெற்றவருக்கு பாராட்டு விழா தேனியில் நடைபெற்றது.
    • இந்நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.

    தேனி:

    தேனி மாவட்ட விளையாட்டு கழகம், தேனி வைகை அரிமா சங்கம் சார்பில் கவிஞர் அம்மு ராகவ் எழுதிய ஆதிலா கவிதை நூல் குறித்த ஆய்வுரை மற்றும் சர்வதேச அளவில் சிலம்பாட்ட போட்டியில் வெற்றி பெற்றவருக்கு பாராட்டு விழா தேனியில் நடைபெற்றது.

    விழாவுக்கு தேனி மாவட்ட விளையாட்டு கழக தலைவர் வக்கீல் முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். துணை தலைவர் பெஸ்ட் ரவி முன்னிலை வகித்தார். வெளிச்சம் அறக்கட்டளை நிறுவனத்தலைவர் சிதம்பரம் வரவேற்றார்.

    தேனி வைகை அரிமா சங்கத் தலைவர் கண்ணன், தேனி மாவட்ட விளையாட்டு கழக பொருளாளர் சின்னசாமி, வைகை தமிழ்ச்சங்க இளங்குமரன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

    விழாவில் தேனி மாவட்ட விளையாட்டு கழக கவுரவ தலைவர் கலா பாண்டியன் கலந்து கொண்டு கவிதை நூல் ஆய்வுரை செய்த கவிஞர் அம்மு ராகவ் மற்றும் சர்வதேச அளவில் சிலம்பாட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டி பரிசுகளை வழங்கினார். முடிவில் தேனி மாவட்ட விளையாட்டு கழக செயலாளர் சிவக்குமார் நன்றி கூறினார்.

    ×