என் மலர்
நீங்கள் தேடியது "Kovilpatti"
- சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் கேதார கவுரி விரத பூஜை நடைபெற்றது.
- அம்பாளுக்கு விரத நோன்பு சரடு, பழ வகைகள், இனிப்புகள் படைத்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் கேதார கவுரி விரத பூஜை நடைபெற்றது.
இதனையொட்டி காலை 6 மணிக்கு நடை திறக்கபட்டு விநாயகர், முருகன், சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கொலு மண்டபத்தில் சுவாமி அம்பாள் உற்சவர் ரிஷப வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டு கேதார கவுரி விரத பூஜை நடைபெற்றது. அம்பாளுக்கு விரத நோன்பு சரடு, பழ வகைகள், இனிப்புகள் படைத்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. மேலும் வள்ளி தேவசேனா சமேத கல்யாண முருகனுக்கு முதல் நாள் சஷ்டி விரத சிறப்பு பூஜை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்தார். இவ்விழாவில் கோவில் தலைவர் ராஜபாண்டி, பொருளாளர் சுப்பிரமணியன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு விரத சரடு வளையல், இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தேவகி, ரவி நாராயணன், கணேஷ் குமார், ஆனந்தவள்ளி ஆகியோர் செய்தனர்.
- கோவில்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
- பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்திற்குரிய அபராதத் தொகையை செலுத்திய பின் வாகனங்கள் விடுவிக்கப்படும்.
கோவில்பட்டி:
நெல்லை துணை போக்குவரத்து கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவின்படி, கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ் செழியப்பாண்டியன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் சுரேஷ்விஸ்வநாத் மற்றும் அலுவலக பணியாளர்கள் கோவில்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது தகுதிச் சான்று இல்லாமல் அதிக ஆட்கள் ஏற்றிச் சென்ற அனுமதிச் சீட்டு இல்லா சரக்கு வாகனம், தகுதிச் சான்று இல்லாமல் இயங்கிய சுற்றுலா கார், சாலை வரி மற்றும் தகுதிச் சான்று இல்லாமல் சென்ற தனியார் பள்ளி வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து சரக்கு வாகனத்திற்கு ரூ.12 ஆயிரத்து 900-ம், சுற்றுலா காருக்கு ரூ.16 ஆயிரம், தனியார் பள்ளி வாகனத்திற்கு சாலை வரி ரூ. 66 ஆயிரம், அபராதம் ரூ. 29 ஆயிரத்து 900 என மொத்தம் ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 400 அபராதமும் விதித்தனர்.
இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் கூறுகையில், பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்திற்குரிய அபராதத் தொகையை செலுத்திய பின் வாகனங்கள் விடுவிக்கப்படும். வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனத்திற்குரிய அனைத்து வரியினங்களையும் முறையாக செலுத்தி ஆவணங்களை நடப்பில் வைத்துக் கொண்டு வாகனங்களை இயக்கும் படி கேட்டுக் கொண்டார்.
- கோவில்பட்டி அருகே வடக்கு திட்டங்குளத்தில் உள்ள தேவர் சிலைக்கு ம.தி.மு.க. சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
- ஆர்.எஸ்.ரமேஷ், விநாயகா ரமேஷ் ஆகியோர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
கோவில்பட்டி:
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு கோவில்பட்டி அருகே வடக்கு திட்டங்குளத்தில் உள்ள தேவர் சிலைக்கு ம.தி.மு.க. வடக்குமாவட்டச் செயலாளரும் நகர்மன்ற துணைத்தலைவருமான ஆர்.எஸ்.ரமேஷ், மாவட்ட இளைஞரணி செயலாளரும் ம.தி.மு.க. சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் விநாயக ரமேஷ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
நிகழ்ச்சியில் மாநில விவசாய அணி துணை செயலாளர் கோடையடி ராமச்சந்திரன், ம.தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் கேசவ நாரயணன், மாவட்ட பிரதிநிதி முத்துப்பாண்டி, நகர துணை செயலாளர் வனராஜன், கிளை செயலாளர்கள் செண்பகராஜ், நாகராஜ், அரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை மத்திய ஒன்றிய செயலாளர் சரவணன் செய்திருந்தார்.
இதைத்தொடர்ந்து பசும்பொன்னில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு கிளம்பி சென்றனர்.
- கோவில்பட்டி புற்றுக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 25-ந் தேதி தொடங்கியது.
- ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத கல்யாண முருகனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 25-ந் தேதி தொடங்கியது. இதனையொட்டி தினமும் காலையில் சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை, ஸ்பதன கும்ப கலச பூஜை, யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை நடைப்பெற்றது. அதனை தொடர்ந்து ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத கல்யாண முருகனுக்கு 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதணை நடைபெற்றது. நேற்று சஷ்டி நிறைவு விழாவாக காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேக சந்தனகாப்பு அலங்கார தீபாராதனை நடைப்பெற்றது.
இன்று காலை ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத கல்யாண முருகனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. நாளை புஷ்பாஞ்சலி சாந்தாபிஷேகம் நடைபெறுகிறது. பூஜைகளை சுப்பிரமணி அய்யர், செய்திருந்தார். விழாவில் கோவில் தலைவர் ராஜபாண்டி, பொருளாளர் சுப்பிரமணி, நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்றுவட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தேவகி, ரவிநாரயணன், பிரேமா முருகன், சீதா எட்டப்பன் ஆகியோர் செய்திருந்தனர்.
- கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூரணி பெருமாள் கோவிலில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கோவிலுக்குள் வந்து பூட்டை உடைத்தார்.
- கோவில் மூலஸ்தான அறையின் பூட்டை உடைக்கும் போது சத்தம் கேட்டு காவலாளி பார்த்து சத்தம் போட்டுள்ளார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூரணி பெருமாள் கோவிலில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கோவிலுக்குள் வந்து பூட்டை உடைத்து அங்கிருந்த அம்மனின் ஒரு கிராம் பொட்டு தங்கத்தை திருடியுள்ளார். பின்னர் கோவில் மூலஸ்தான அறையின் பூட்டை உடைக்கும் போது சத்தம் கேட்டு காவலாளி பார்த்து சத்தம் போட்டுள்ளார். இதனால் அந்த திருடன் திருட கொண்டு வந்த பொருட்களை கோவிலிலேயே போட்டு விட்டு தப்பி சென்று விட்டான். மேலும் அங்கிருந்த சி.சி.டி.வி உள்ளிட்ட பொருட்களையும் உடைத்து சென்றுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கணபதி பூஜையுடன் தொடங்கி ஸ்தபன கும்ப கலச பூஜை, பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது
- 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது
கோவில்பட்டி:
கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுகோவிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி கணபதி பூஜையுடன் தொடங்கி ஸ்தபன கும்ப கலச பூஜை, யாகசாலை பூஜை,கணபதி ஹோமம் , நவக்கிரக ஹோமம் ,மூலமந்திர ஹோமம் ,பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது. பிறகு ஸ்ரீ கோடி சக்தி விநாயகருக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பிறகு விநாயருக்கு கொழுக்கட்டை, சுண்டல் படைத்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்தார். விழாவில் கோவில் தலைவர் ராஜபாண்டி, பொருளாளர் சுப்பிரமணியன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள், சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு கொழுக்கட்டை பிரசாதம் வழங்கப்பட்டது.
- மனோநாராயணன் கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் தனியார் நீட் கோச்சிங் சென்டரில் படித்து வந்துள்ளார்
- கோச்சிங் சென்டரில் மாதம்தோறும் நடைபெறும் மாதிரி பயிற்சி தேர்வில் தொடர்ந்து குறைவாக மதிப்பெண் பெற்றதாக தெரிகிறது
கோவில்பட்டி:
கோவில்பட்டி அறிஞர் அண்ணா தெருவை சேர்ந்தவர் மனோநாராயணன்(வயது 20). இவர் கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் தனியார் நீட் கோச்சிங் சென்டரில் படித்து வந்துள்ளார்.
ஏற்கனவே ஒருமுறை நீட் தேர்வு எழுதி தேர்ச்சி அடையவில்லை என்பதால் 2-வது முறை தேர்வு எழுத பயிற்சி பெற்று வந்துள்ளார். கோச்சிங் சென்டரில் மாதம்தோறும் நடைபெறும் மாதிரி பயிற்சி தேர்வில் தொடர்ந்து குறைவாக மதிப்பெண் பெற்றதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட மனோ நாராயணன் நேற்று மாலை வீட்டில் இருந்த விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அவரை அவரது குடும்பத்தினர் மீட்டு கோவில்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு சிகிச்சை பலன் இல்லாமல் மனோநாராயணன் உயிரிழந்தார். இது குறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இலுப்பையூரணி அலமேலு மங்கா சமேத வெங்கடாஜலபதி கோவிலில் நடைபெற்றது
- கோவில்பட்டி நகராட்சி சுகாதார ஆய்வாளர் முருகன் சர்க்கரை பொங்கல் பிரசாதத்தை பக்தர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்
கோவில்பட்டி:
கோவில்பட்டி ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பாக 14 -வது மாத அன்னதான நிகழ்ச்சி இலுப்பையூரணி அலமேலு மங்கா சமேத வெங்கடாஜலபதி கோவிலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தொழில் அதிபர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். சண்முகவேல் மற்றும் ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நகர கூட்டுறவு இயக்குநர் லவராஜா வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினர்களாக தொழிலதிபர் அரியமூர்த்தி, மற்றும் மந்திரசூடாமணி ஆகியோர் கலந்து கொண்டனர். கோவில்பட்டி நகராட்சி சுகாதார ஆய்வாளர் முருகன் சர்க்கரை பொங்கல் பிரசாதத்தை பக்தர்களுக்கு வழங்கி ெதாடங்கி வைத்தார்.
அன்னதானத்தை அறக்கட்டளை நிறுவனரும் தொழிலதிபருமான சீனிவாசன் வழங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அறக்கட்டளை தலைவர் ஜெயக்கொடி, செயலாளர் ஜோதி காமாட்சி, பொருளாளர் கார்த்திகேயன், செயற்குழு உறுப்பினர்கள் நடராஜன், பாலமுருகன், சண்முகசுந்தரம், கதிரேசன், மாரிமுத்து, தங்கராஜ், செல்வம், சுப்பிரமணியன், முத்துமாரியம்மன், காளிராஜ், முருகன், உட்பட பலர் கலந்து கொண்டனர். செயற்குழு உறுப்பினர் பாண்டியன் அறக்கட்டளை சார்பாக தமது நன்றி கூறினார்.
- காலபைரவருக்கு மஞ்சள் பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
- பக்தர்களுக்கு தயிர்சாதம் மற்றும் உளுந்து வடை பிரசாதமாக வழங்கப்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது. இதனையொட்டி காலையில் கோவில்நடை திறக்கப்பட்டது. பின்னர் சங்கல்பம், கணபதி பூஜையுடன் தொடங்கி தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து காலபைரவருக்கு மஞ்சள் பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணி அய்யர் செய்தார்.
இவ்விழாவில் கோவில் தலைவர் ராஜபாண்டி, பொருளாளர் சுப்பிரமணியன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டாரப் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தயிர்சாதம் மற்றும் உளுந்து வடை பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தேவகி, ரவிநாரயணன், சரஸ்வதி, ஈஸ்வரி செய்தனர்.
- கோவில்பட்டி கவுணியன் மெட்ரிக் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு வினாடி - வினா போட்டி நடைபெற்றது.
- தமிழ் மற்றும் ஆங்கில வழி கல்வி மாணவர்களுக்கு தனித்தனியே போட்டிகள் நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி கவுணியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தூத்துக்குடி மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான வினாடி - வினா போட்டி நடைபெற்றது. இப்போட்டிக்கு பேராசிரியர் சுரேஷ்பாண்டி தலைமை தாங்கினார். கவுணியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் பாலு, தமிழ்நாடு அறிவியல் இயக்க தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலர் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். விஞ்ஞானத் துளிர் பொறுப்பாசிரியர் பாலகிருஷ்ணன் வினாடி - வினா போட்டியை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாநிலச் செயலர் பரமசிவம், ஜெய் கிரிஸ்ட் அறக்கட்டளையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர், சமூக ஆர்வலர் செண்பகராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர். இப்போட்டியில் கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் 160-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு தனித்தனியே போட்டிகள் நடைபெற்றது. மேலும் தமிழ் மற்றும் ஆங்கில வழி கல்வி மாணவர், மாணவிகளுக்கு தனித்தனியே போட்டிகள் நடைபெற்றது.
வினாடி - வினா போட்டியில் முதல் 2 இடங்களைப் பிடித்த அணியினர் திருவண்ணாமலை மாவட்டத்தில் டிசம்பர் மாதம் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். விழாவில் கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, வெற்றி பெற்ற பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டிப் பேசினார். இதில் அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஒன்றியச் செயலர் அன்புராஜ், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் பழனிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- அம்மா பூமாதேவி ஆலயத்தில் சிறப்பு அன்னதான பூஜை நடைபெற்றது.
- அம்மனுக்கு 21 வகையான பூர்ன கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகர் அம்மா பூமாதேவி ஆலயத்தில் கார்த்திகை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அன்னதான பூஜை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருவனந்தல் திருப்பள்ளியெழுச்சி நடந்தது. அதைதொடர்ந்து காலை 8 மணிக்கு 21 வகையான மஞ்சள், மாபொடி, திரவியம், பால், தேன் மற்றும் சந்தனம் பூர்ன கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மதியம் 12.35-க்கு அன்னதான பூஜையும், சிறப்பு அலங்கார சோடனை தீபாராதனை நடைபெற்றது. லட்சுமணன் சுவாமி தலைமையில், ஆலய அர்ச்சகர் செல்வசுப்பிரமணியன் மாரிஸ் வரன் பூஜைகளை செய்தார்கள். இவ்விழாவில் சுப்பாராஜ், சங்கரேஸ்வரி, மாரியப்பன், ஜெயராம், தனுஷ், திருவிளக்கு பூஜை குழுவினர் மீனாட்சி, பழனியம்மாள், சாந்தி, லட்சுமி, மாரித்தாய் மற்றும் ஊர் பொதுமக்கள் பூஜையில் கலந்து கொண்டனர்.
- பொதுமக்கள் தண்டவாளங்களை எளிதில் கடந்து செல்லும் வகையில், சுரங்க நடைபாதை அமைக்க வேண்டும்.
- கோவில்பட்டி ரெயில்வே ஸ்டேஷனில் மின்தூக்கி (லிப்ட்) மற்றும் எஸ்கலேட்டர் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்.
கோவில்பட்டி:
கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. புதுடெல்லியில் மத்திய ரெயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-
கோவில்பட்டி லட்சுமி மில் ரெயில்வே கேட் முதல் இளையரசனேந்தல் சாலை சுரங்கப்பாதை வரை ரெயில்வே பாதைக்கு இணையாக புதிய சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டும். மேலும், இப்பகுதியில் பொதுமக்கள் தண்டவாளங்களை எளிதில் கடந்து செல்லும் வகையில், சுரங்க நடைபாதை அமைக்க வேண்டும்.
தெற்கு ரெயில்வே மதுரை கோட்டத்தில் மதுரை, நெல்லை ரெயில்வே ஸ்டேஷன்களுக்கு அடுத்தபடியாக அதிக வருவாய் ஈட்டும் ரெயில்வே ஸ்டேஷனாக கோவில்பட்டி திகழ்ந்து வருகிறது. ஏ கிரேடு அந்தஸ்தில் செயல்பட்டு வரும் கோவில்பட்டி ரெயில்வே ஸ்டேஷனில், பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, மின்தூக்கி (லிப்ட்) மற்றும் எஸ்கலேட்டர் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். 2-ம் நடைமேடையில் மேற்கூரை அமைக்க வேண்டும்.
வயதானவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில், பேட்டரி கார் வசதி செய்து கொடுக்க வேண்டும்.
சென்னை - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், திருக்குறள் எக்ஸ்பிரஸ், ஓகா - தூத்துக்குடி எக்ஸ்பிரஸ், மதுரை - புனலூர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் கோவில்பட்டி ரெயில்வே ஸ்டேஷனில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், குருவாயூர் எக்ஸ்பிரஸ், கோயம்புத்தூர் - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், தூத்துக்குடி - மைசூர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் கடம்பூர் ரெயில்வே ஸ்டேஷனில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
எம்.எல்.ஏ., வுக்கு நன்றி
கோவில்பட்டி லட்சுமி மில் ரெயில்வே கேட் முதல் இளையரசனேந்தல் சாலை சுரங்கப்பாதை வரை புதிய சர்வீஸ் ரோடு மற்றும் சுரங்க நடைபாதை அமைக்க வலியுறுத்தி, மத்திய ரெயில்வே அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தமைக்காக, சுப்புராயலு தலைமையில், சீனிவாசன் நகர், இந்திரா நகர் பகுதி பொதுமக்கள், எம்.எல்.ஏ., அலுவலகத்தில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., வை சந்தித்து சால்வை அணித்து நன்றி தரெிவித்தனர்.