search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Quiz"

    • அரசுப்பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்த அரசின் முன்னோடி திட்டங்களில் ஒன்றாக மாநில மதிப்பீட்டு புலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • ஹைடெக் லேப் என்னும் உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள் அமைந்துள்ள அனைத்து பள்ளிகளிலும் கணினி வழி வினாடி -வினா நடத்தப்பட உள்ளது.

    சேலம்:

    தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்த அரசின் முன்னோடி திட்டங்களில் ஒன்றாக மாநில மதிப்பீட்டு புலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி, ஹைடெக் லேப் என்னும் உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள் அமைந்துள்ள அனைத்து பள்ளிகளிலும் கணினி வழி வினாடி -வினா நடத்தப்பட உள்ளது. குறிப்பாக மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள் அமைந்துள்ள அனைத்து அரசுப்பள்ளிகளி லும் இன்று முதல் படிப்படி யாக 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான வினாடி- வினா போட்டியை நடத்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்ப ட்டுள்ளது. வருகிற 21-ந்தேதி வரை போட்டிகள் நடத்த தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் முதல் நாளான இன்று 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு வினாடி- வினா போட்டி தொடங்கியது. இதில் 6-ம் வகுப்பு மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதற்காக உயர் தொழில் நுட்ப ஆய்வகம் உள்ள பள்ளிகளில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கு நேற்று முன்தினம் பயிற்சி அளிக்கப்பட்டது

    நாளை 7-ம் வகுப்பு, வருகிற 12-ந்தேதி 8-ம் வகுப்பு, 13-ந்தேதி 9-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு நடத்தப்படுகிறது. இதில் வருகை தராத இந்த 4 வகுப்பு மாணவ- மாணவிகளுக்கும் வ 13-ந்தேதி வினாடி வினா நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 17-ந்தேதி 10-ம் வகுப்பு, 18, 19-ந்தேதிகளில் பிளஸ்-1, 20,21-ந்தேதிகளில் பிளஸ்-2 வகுப்புகளுக்கு வினாடி- வினா போட்டி நடத்தப்படுகிறது.

    இந்த போட்டியின்போது உயர் தொழில் நுட்ப ஆய்வகத்தில் ஏற்படும் தொழில் நுட்ப குறைபாடுகள், வினாத்தாள்களை உருவாக்கும்போது ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வு காண, 14417 என்ற கட்டணமில்லா தொலைபேசி சேவையை பயன்படுத்த வேண்டும்.

    உயர் தொழில் நுட்ப ஆய்வகம் அமைந்துள்ள பள்ளிகளில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் போட்டி நடத்துவதற்கான வழிமுறைகளில் புலமை பெற்றிருப்பதை உறுதி செய்ய வேண்டும். உயர் தொழில் நுட்ப ஆய்வகம் வழியாக தொடர்ச்சியாக வினாடி வினா, வளரறி மதிப்பீடுகள் நடைபெறுவதை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் வினாடி-வினா போட்டி நடக்கிறது.
    • முதல் சுற்று எழுத்துத் தேர்வாக நிகழ்ந்தது.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் வினாடி-வினா மன்றம் சார்பில் பல்வேறு துறைகளுக்கு இடையேயான வினாடி-வினா போட்டி நடந்தது.

    வணிகவியல் துறை தலைவர் எம்.குருசாமி போட்டியை தொடங்கி வைத்தார். அவர் பேசுகையில், இந்த வினாடி-வினா போட்டி மாணவர்களின் அறிவுத் திறனை வளர்ப்பது மட்டுமின்றி எதிர்காலத்தில் பலதரப்பட்ட போட்டித் தேர்வுகள் எழுதுவதற்கு மாணவர்களுக்கு உதவும் என்றார்.

    வினாடி-வினா மன்ற ஒருங்கிணைப்பாளர்- வணிகவியல் துறை உதவி பேராசிரியர் ஆர்.கீதா போட்டியை நடத்தினார். வினாடி-வினா போட்டி 2 சுற்றுகளாக நடந்தன. முதல் சுற்று எழுத்துத் தேர்வாக நிகழ்ந்தது.

    அதில் 23 குழுக்களாக மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெ ண்கள் அடிப்படை யில் 8 குழுக்கள் தேர்ந்தெடு க்கப்பட்டு இறுதிச் சுற்றில் பங்கேற்றனர். இறுதிச் சுற்றில் வரலாறு, பொது அறிவு, அரசியல் மற்றும் விளையாட்டு குறித்த கேள்விகள் கேட்கப்பட்டன.போட்டியின் முடிவில் முதல் பரிசை 3-ம் ஆண்டு வணிகவியல் துறை (நிறுமச் செயலர்) மாணவிகளான ஆர்.ஜனனி, எஸ்.சுவாதி ஆகியோர் வென்றனர். 2-ம் பரிசை 3-ம் ஆண்டு ஆங்கிலத்துறை மாணவிகள் எம்.தேவதர்சினி, கே.எம்.ஹரிணி ஆகியோர் வென்றனர்.

    3-ம் பரிசை 2-ம் ஆண்டு வேதியியல் துறை மாணவர் ஆர்.விஷ்வா, முதலாமாண்டு வேதியியல் துறை மாணவர் எம்.மணிபாலன் ஆகியோர் பெற்றனர். இளங்கலை வேதியியல் துறை 3-ம் ஆண்டு மாணவர்

    கே.தினேஷ் குமார் வரவேற்றார். இளங்கலை வேதியியல் துறை 3-ம் ஆண்டு மாணவர் ஜி.பால சுந்தர் நன்றி கூறினார்.வினாடி-வினா, காளீஸ்வரி கல்லூரி, Quiz, Kalishwari College

    • கோவில்பட்டி கவுணியன் மெட்ரிக் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு வினாடி - வினா போட்டி நடைபெற்றது.
    • தமிழ் மற்றும் ஆங்கில வழி கல்வி மாணவர்களுக்கு தனித்தனியே போட்டிகள் நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி கவுணியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தூத்துக்குடி மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான வினாடி - வினா போட்டி நடைபெற்றது. இப்போட்டிக்கு பேராசிரியர் சுரேஷ்பாண்டி தலைமை தாங்கினார். கவுணியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் பாலு, தமிழ்நாடு அறிவியல் இயக்க தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலர் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். விஞ்ஞானத் துளிர் பொறுப்பாசிரியர் பாலகிருஷ்ணன் வினாடி - வினா போட்டியை தொடங்கி வைத்தார்.

    தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாநிலச் செயலர் பரமசிவம், ஜெய் கிரிஸ்ட் அறக்கட்டளையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர், சமூக ஆர்வலர் செண்பகராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர். இப்போட்டியில் கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் 160-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு தனித்தனியே போட்டிகள் நடைபெற்றது. மேலும் தமிழ் மற்றும் ஆங்கில வழி கல்வி மாணவர், மாணவிகளுக்கு தனித்தனியே போட்டிகள் நடைபெற்றது.

    வினாடி - வினா போட்டியில் முதல் 2 இடங்களைப் பிடித்த அணியினர் திருவண்ணாமலை மாவட்டத்தில் டிசம்பர் மாதம் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். விழாவில் கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, வெற்றி பெற்ற பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டிப் பேசினார். இதில் அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஒன்றியச் செயலர் அன்புராஜ், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் பழனிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • நமது இந்தியா உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் மாணவர்களின் நுண்ணறிவைச் சோதிக்கும் விதமாக வினாடி- வினா போட்டி நடைபெற்றது.
    • வெற்றி பெற்ற அணியினருக்கு துணை முதல்வர் பாலசுந்தர் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார்.

    தென்காசி:

    இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒலிம்பியாட் வினாடி- வினா போட்டி நடைபெற்றது. மனித உடலின் பாகங்கள், அரசு ஆவண தொகுப்பு, ஆரோக்கிய உணவுகள் , அறிவியல் கண்டுபிடிப்பு மற்றும் புதுமை விண்வெளித் தொழில் நுட்பம், விலங்குகள், பறவைகள், தாவரங்களின் வாழ்க்கை, நமது இந்தியா உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் மாணவர்களின் நுண்ணறிவைச் சோதிக்கும் விதமாக வினாடி- வினா போட்டி நடைபெற்றது.

    இதில் திரிசன்னா குழுவினர் 35 புள்ளிகள் பெற்று முதலிடமும், தமிழ் மதி குழுவினர் 25 புள்ளிகள் பெற்று 2-ம் இடமும், பாவனா குழுவினர் 20 புள்ளிகள் பெற்று 3-ம் இடமும் பெற்றனர். வெற்றி பெற்ற அணியினருக்கு துணை முதல்வர் பாலசுந்தர் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார். ஒலிம்பியாட் வினாடி- வினாவில் வெற்றி பெற்றவர்களை பாரத் கல்விக்குழுத் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், இயக்குநர் ராதாபிரியா ஆகியோர் பாராட்டினர்.

    ×