search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kalishwari College"

    • காளீஸ்வரி கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
    • நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை சட்ட விழிப்புணர்வு மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகப்பாண்டி செய் திருந்தார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் சட்ட விழிப்புணர்வு மன்றத்தின் சார்பில் பெண்களுக்கான சட்டங்கள் குறித்த கருத்தரங்கு நடந்தது. கல்லூரி துணை முதல்வரும், கணினி பயன்பாட்டியல் துறை தலைவருமான முத்துலட்சுமி கலந்து கொண்டு இந்தியாவில் பெண்கள் தொடர்பான சட்டங்கள் குறித்து மாணவ-மாணவிகளுக்கு எடுத்து கூறினார். நிகழ்ச்சியில் 2-ம் ஆண்டு மாணவர் ராம்குமார் வரவேற்றார்.

    முடிவில் சிவசுப்பிர மணியன் நன்றி கூறினார். நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை சட்ட விழிப்புணர்வு மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகப்பாண்டி செய்திருந்தார்.

    • காளீஸ்வரி கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது.
    • இந்த நிகழ்ச்சியில் 700-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    சிவகாசி

    சிவகாசி கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி செயலர் செல்வராஜன் தலைமை தாங்கினார். ம முன்னாள் மாணவரும், பேராசிரியருமான கவிதா வரவேற்றார்.முதல்வர் பாலமுருகன், துணை முதல்வர் முத்துலட்சுமி, முன்னாள் முதல்வர்கள் கண்மணி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பேசினர். முன்னாள் மாணவர் சங்க செயலாளரும், பேராசிரியருமான முத்துகுமார் அறிக்கை வாசித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து முன்னாள் மாணவர்களுக்கும் நினைவுப் பரிசுகளை வழங்கப்பட்டது. முடிவில் குலோத்துங்கப் பாண்டியன் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் 700-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • காளீஸ்வரி கல்லூரியில் திறன் மேம்பாட்டு பயிலரங்கு நடந்தது.
    • முடிவில் மாணவி நந்தினி நன்றி கூறினார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் திறன் மேம்பாட்டு பயிலரங்கு நடந்தது. கல்லூரி செயலர் செல்வராஜன் முன்னிலை வகித்தார். திறன் மேம்பாட்டு பயிற்சியாளர் கார்த்திக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசுகையில் வைரம் பட்டை தீட்டப்பட்டு ஜொலிப்பதை போல, ஒருவர் தன்னைத்தானே அறிந்துகொள்ளவும், மற்றவர்களை மிஞ்சி வெற்றிபெறவும் தனித்துவமாக இருக்க முயற்சிக்க வேண்டும் என்றும், வேலைவாய்ப்பைப் பெறுவதை விட வேலைவாய்ப்பை உருவாக்குவது பற்றி சிந்திக்க வேண்டும் என்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.

    நிகழ்ச்சியில் மாணவி ஆகாஷ் செல்வி விருந்தினரை அறிமுகப்படுத்தி பேசினார்.மாணவர் பாலசங்கர் வரவேற்றார். மாணவி ஆகாஷ் செல்வி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். முடிவில் மாணவி நந்தினி நன்றி கூறினார்.

    • காளீஸ்வரி கல்லூரியில் மேலாண்மை சொற்பொழிவு நடந்தது.
    • முடிவில் இளங்கலை மாணவி காயத்ரி நன்றி கூறினார்.

    சிவகாசி

    காளீஸ்வரி கல்லூரியின் தமிழ் துறை சங்கப்பலகை இலக்கிய மன்றம் சார்பில் மேலாண்மை என்னும் தலைப்பில் சொற்பொழிவு நடந்தது. துணை முதல்வர் முத்துலட்சுமி தலைைம வகித்தார்.

    முதல்வர் பாலமுருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தமிழ் துறை தலைவர் அமுதா அறிமுகப்படுத்தி பேசினார். முதுகலை மாணவி சினேகா வரவேற்றார்.

    முடிவில் இளங்கலை மாணவி காயத்ரி நன்றி கூறினார். பேராசிரியை மரியசெல்வி நிகழ்ச்சிைய ஒருங்கிணைத்தார்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரி சார்பில் விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது.
    • இதில் குழந்தைகள் உற்சாகமாக பங்கேற்றனர்.

    தாயில்பட்டி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரியின் உணவக மேலாண்மை மற்றும் கணினி பயன்பாட்டியல் துறைகள் இணைந்து ஸ்ரீவில் லிபுத்தூர் வள்ளலார் இல்லம் என்ற ஆதரவற்றோர் இல்லத்தில் குழந்தைகளுக் கான நிகழ்ச்சிகளை நடத்தி–யது. இதில் குழந்தைகளுக்கு யோகாசனம், மூச்சுப்பயிற்சி, தியானப்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக் கப்பட்டன.

    மேலும் சதுரங்க போட்டி, இசை நாற்காலி போன்ற விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டன. இதில் குழந்தைகள் உற்சாகமாக பங்கேற்றனர். இதையடுத்து துறையின் விரிவாக்க பணி சார்பில் குழந்தைகளுக்கு தேவையான கல்வி உபகர–ணங்களான பேனா, பென் சில் மற்றும் சமைய–லுக்கு தேவையான பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், மின் விசிறி, மின் விளக்கு ஆகியவற்றை மாணவர்கள் வழங்கினர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடு–களை கணினி பயன்பாட்டி–யல் துறை உதவி பேராசி–ரியை குருமகேஸ்வரி, சுற் றுலா மற்றும் உணவக மேலாண்மைத்துறை உதவி பேராசிரியை அபிநயா ஆகி–யோர் செய்திருந்தனர்.

    • காளீஸ்வரி கல்லூரியில் பணி வாய்ப்பு கருத்தரங்கு நடந்தது.
    • முடிவில் வணிகவியல் துறை பேராசிரியர் லட்சுமணகுமார் நன்றி கூறினார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரி மற்றும் பணி வாய்ப்பு மையம் சார்பில் அரசு அலுவலகங்களில் தட்டச்சு மற்றும் ஸ்டெனோகிராபி திறன் கொண்டவர்களுக்கு "வேலைவாய்ப்பு" எனும் தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட குமரேசன் பேசுகையில், அரசு பள்ளிக்கு செல்வதற்குரிய தகுதிகள் தமிழகம் மற்றும் மத்திய தேர்வாணையங்களில் தேர்வுகளுக்கு தயார் செய்யும் வழிமுறைகள் குறித்து எடுத்து கூறினார். நிகழ்ச்சியில் பணி அமர்வு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் மகேசன் வரவேற்றார். முடிவியல் வணிகவியல் துறை பேராசிரியர் லட்சுமணகுமார் நன்றி கூறினார்.

    • சர்வதேச தொழில்முனைவோர் தின நிகழ்ச்சி நடந்தது.
    • ஹாட் கப் நிறுவனர் சுந்தர் ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் அண்ட் டெக்னாலஜி கல்லூரியின் இன்னோவேஷன் கவுன்சில் சார்பில் சர்வதேச தொழில்முனைவோர் தின நிகழ்ச்சி நடந்தது. விவாதங்கள், விளக்க காட்சி, வினாடி-வினா, இணைப்பு விளையாட்டுகள், மைம் ஷோ போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். ஸ்டார்ட் அப் திட்டமிடல் என்ற பெயரில் கருத்தரங்கு நடந்தது. ஹாட் கப் நிறுவனர் சுந்தர் ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தனது வெற்றிக் கதையை மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

    • காளீஸ்வரி கல்லூரியில் கட்டுரை போட்டி நடந்தது.
    • இவ்விழாவிற்குக் கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.

    சிவகாசி

    சுதந்திர தின விழாவை முன்னிட்டு சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் கல்வி வட்டம் சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கட்டுரை, பேச்சுப் போட்டி நடந்தது. கல்வி வட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் கணிதவியல் துறை உதவிப்பேராசிரியர் அனுபாலா வரவேற்றார். இவ்விழாவிற்குக் கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். கல்லூரி துணை முதல்வர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார்.

    சிறப்பு விருந்தினராக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ராமன் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் சாதனைகள் என்னும் தலைப்பில் கட்டுரைப் போட்டியும், இந்தியா வளர்ந்த நாடாக மாற எதிர்கொள்ளும் சவால்கள் என்னும் தலைப்பில் பேச்சுப் போட்டியும் நடைபெற்றது. இப்போட்டிகளில் விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த 33 பள்ளிகளில் இருந்து மொத்தம் 408 மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வெற்றி மாணவர்களுக்கு துணை முதல்வர் பரிசுகளை வழங்கினார். முடிவில் தமிழியல் துறை உதவிப்பேராசிரியர் ஜமுனாராணி நன்றி கூறினார்.

    • காளீஸ்வரி கல்லூரியில் அறிவுசார் சொத்துரிமை பயிலரங்கு நடந்தது.
    • அதிக மனித வளத்தை கொண்ட இந்தியா 40 வது இடத்தில் உள்ளதாக தெரிவித்தார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில், இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் அண்ட் டெக்னாலஜியின் இன்னோவேஷன் கவுன்சில் சார்பில ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான அறிவுசார் சொத்துரிமை மற்றும் ஐபி மேலாண்மை' குறித்த பயிலரங்கு நடந்தது. ராம்கோ இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அருண்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    அவர் பேசுகையில், அறிவுசார் சொத்துரிமை மற்றும் அறிவுசார் சொத்து பாதுகாப்பின் அவசியம் குறித்து விளக்கினார். காப்புரிமை, நகல் உரிமை, வர்த்தக முத்திரை, தொழில் துறை வடிவமைப்புகள், புவியியல் குறியீடுகள் போன்ற பல்வேறு வகையான அறிவுசார் சொத்துக்கள் பற்றிய விவரங்களை பகிர்ந்து கொண்டார்.

    உலகளாவிய கண்டு பிடிப்பு குறியீடு 2022-ல், அதிக மனித வளத்தை கொண்ட இந்தியா 40 வது இடத்தில் உள்ளதாகவும், இந்தியா மற்றும் சீனா ஆகிய 2 நாடுகளில் இருந்து மூன்றில் ஒரு காப்புரிமை விண்ணப்பம் வழங்கப்படுகிறது என்றும் இருப் பினும் இந்தியாவை காட்டிலும் சீனா 25- 30 மடங்கு அதிக காப்புரிமைகளை தாக்கல் செய்கிறது என்றும் தெரிவித்தார்.கண்டுபிடிப்புகள் மற்றும் கண்டுபிடிப்புகளை பாதுகாக்க அறிவுசார் சொத்துரிமைகள் குறித்த விழிப்புணர்வுடன் மாணவர்கள் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

    • காளீஸ்வரி கல்லூரியில் ஆங்கில மொழித்திறன் கருத்தரங்கு நடந்தது.
    • ஒருங்கிணைப்பாளர் அர்ச்சனா தேவி நன்றி கூறினார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் ஆங்கிலத்துறை சார்பில் மொழித்திறன் மற்றும் ஆளுமைத்திறனை மேம்படுத்துதல் என்னும், தலைப்பில் 3 நாள் கருத்தரங்க நிகழ்ச்சி நடைபெற்றது.

    சிவகாசி. வீ கம்யூனிகேட் நிறுவனத்தைச் சேர்ந்த மென்திறன் மற்றும் மொழிப் பயிற்சியாளர்கள் கருத்தரங்கில் கலந்து கொண்டு மாணவர்க ளுக்குப் பயிற்சி வகுப்புகள் நடத்தினர்.

    ஆங்கிலத்துறையைச் சேர்ந்த பேராசிரியை நாகஜோதி வரவேற்றார். கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். ஆங்கிலத்துறைத் தலைவி பெமினா வாழ்த்துரை வழங்கினார். ஆளுமைத்திறன் மற்றும் மொழித்திறனை மேம்படுத்துவது பற்றி ராஜலட்சுமி மென்திறன் பயிற்சியாளர் செயல்முறை பயிற்சிகளுடன் விளக்கம் அளித்தார். 2-ம் நாள் நிகழ்ச்சியில் மென்திறன் பயிற்சியாளர், தீனதயாளன் தலைமைத்துவம் மற்றும் மொழித்திறன் அடிப்படையிலான செயல்பாடுகள் என்ற தலைப்பில் உரையாற்றி மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.

    பயிற்சியாளர்கள் கிட்டி நான்ஸி மற்றும் கல்பனா, ஆகியோரால் ''பேசும் மொழி வடிவம் மற்றும் உடல்மொழி'' குறித்தப் பயிற்சி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

    3-ம் நாள் காளீஸ்வரி கல்லூரி ஆங்கிலத்துறை முன்னாள் மாணவர்கள் மற்றும் வீ.கம்யூனிகேட் நிர்வாகிகளான ஏ.ஆர்.மனோஜ் மற்றும் ஹரிஹரன் கார்ப்பரேட் உலகின் தேவைக்கேற்ப எப்படி திறமைகளை வளர்த்துக் கொள்வது என்னும் தலைப்பில் பயிற்சி வகுப்பு கள் நடத்தினர். கருத்தரங்க பயிற்சியில் சிறப்பாக பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் ஒருங்கி ணைப்பாளர் அர்ச்சனா தேவி நன்றி கூறினார்.

    • காளீஸ்வரி கல்லூரியில் ஆங்கில பேச்சு பயிற்சி நடந்தது.
    • நிறைவு விழாவில் ரோட்டரி மாவட்ட தலைவர் குருசாமி சிறப்புரையாற்றினார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியல் எம்.பி.ஏ. மாணவர்களுக்கு 3 நாள் ஆங்கில பேச்சு பயிற்சி முகாம் நடந்தது. திட்ட தலைவர் சியாம்ராஜா தலைமை தாங்கி மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசுவது குறித்து பயிற்சி அளித்தார்.

    ரோட்டரி தலைவர்கள் ராம்குமார்(சிவகாசி), சண்முகம்(விருதுநகர்) முன்னிலை வகித்தனர். கல்லூரியின் தொழில்நுட்ப நிறுவன இயக்குநர் வளர்மதி சிறப்பு விருந்தினர்களை கவுரவித்தார். சண்முகநடராஜன் வாழ்த்துரை வழங்கினார். 3 நாட்கள் நடந்த இந்த பேச்சு பயிற்சி முகாமில் மாணவர்களுக்கு பயனுள்ள தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. நிறைவு விழாவில் ரோட்டரி மாவட்ட தலைவர் குருசாமி சிறப்புரையாற்றினார்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் எம்.பி.ஏ. மாணவர்களுக்கான கருத்தரங்கு நடந்தது.
    • இதில் திரளான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் எம்.பி.ஏ. மாணவர்களுக்கான கல்வி கருத்தரங்கு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி செயலாளர் செல்வராஜன் முன்னிலை வகித்தார். முன்னாள் மாணவர்களும், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிவரும் பிரவீன் குமார், சிவா தினேஷ், விக்னேஷ் பாபு, சிவராம் பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு எம்.பி.ஏ. மாணவர்களுக்கான தொழில் வாய்ப்புகள், நிதி சேவை, மார்க்கெட்டிங் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பேசினர். ஆங்கில முதுகலை மற்றும் ஆராய்ச்சி துறையைச் சேர்ந்த முத்தமிழ், சகிலா ஆகியோர் ஆங்கில மொழி குறித்து விளக்கினர். டாக்டர் ராஜேஸ்வரி மேலாண்மை குறித்து பேசினார். இதில் திரளான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    ×