search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Understanding"

  • புரிதல் இருந்தால் தான் உறவு நீண்ட காலம் நீடிக்கும்.
  • புரிதல் இல்லாத உறவுகள் விரைவில் மனக்கசப்புகளால் அறுபடும்.

  கணவன் மனைவி உறவில் புரிதல் இருந்தால் தான் அந்த உறவு நீண்ட காலம் அவர்களை ஒன்றிணைத்து வைத்திருக்கும். புரிதல் இல்லாத உறவுகள் விரைவில் மனக்கசப்புகளால் அறுபடும். அந்த உறவில் இடைவெளி உண்டாகும். தம்பதிகளுக்குள் புரிந்துகொள்ளும் பக்குவம் இல்லாமல் போனாலும், சிறு சிறு விட்டுக்கொடுத்தல்கள் தவிர்க்கப்படும் போதும் தான் இடைவெளி உண்டாகிறது. இதனை விளக்கும் ஒரு அருமையான கதை உங்களுக்காக...

  மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த ஒரு தம்பதியரில் மனைவிக்கு ஒரு சந்தேகம். இவ்வளவு நாள் இந்த மனுஷனோடு சேர்ந்து வாழ்ந்திருக்கிறோம். தன்னுடைய கணவனுக்கு தன்னுடனான வாழ்க்கை அலுப்பு தட்டி இருக்குமோ என்று ஒரு யோசனை. அதனை சோதிக்க நினைத்தாள் மனைவி. ஒருவேளை தான் விலகிப்போய்விட்டால் கணவன் எப்படி நடந்துகொள்வான் என்பதை பார்க்க ஆர்வம் கொண்டாள்.

  எனவே அன்று தன் கணவன் வீடு திரும்பும் முன்னர், ஒரு சின்ன காகிதத்தில் ஒரு குறிப்பை எழுதி அவன் பார்வையில் படும் இடத்தில் வைத்துவிட்டு கட்டிலுக்கு அடியில் சென்று ஒளிந்துகொண்டாள்.

  கணவன் வழக்கம் போல வீடு திரும்பினான். மேஜையின் மீது இருந்த குறிப்பில் உன்னுடனான வாழ்க்கை சலித்துவிட்டது. நான் உன்னை விட்டு விலகி செல்கிறேன். என்னை தேட வேண்டாம் என்று எழுதி இருந்தது. கணவன் குறிப்பை படித்துவிட்டு குறிப்பின் பின்புறத்தில் ஏதோ கிறுக்கிவிட்டு தன் செல்போனை எடுத்து பேசினான்.

  அதில் பேசும்போது, கடைசியாக அவள் போய்விட்டாள். நமக்கு இருந்த ஒரு தடையும் நீங்கிவிட்டது. நான் உன்னை சந்திக்க வருகிறேன். தயாராக இரு என்று சொல்லிக்கொண்டே கதவை பூட்டிவிட்டு வெளியேறினான்.

  உடனே அவனது மனைவி அழுதுகொண்டே கட்டிலுக்கு அடியில் இருந்து வெளியே வந்தவள், அவர் நம்மை தேடவில்லை, கொஞ்சம் கூட வருத்தப்படவில்லை என்று எண்ணிக்கொண்டு கோபத்துடன் குறிப்பின் பின்னால் அவன் என்ன எழுதினான் என்று பார்க்க அந்த குறிப்பை எடுத்து பார்த்தால்.

  அதில், ஏ! பைத்தியம் நீ கட்டிலுக்கு அடியில் ஒளிந்து இருக்கிறதை நான் பார்த்துவிட்டேன். எனக்கு பசிக்குது, கடைக்கு போய் பிரட் வாங்கி வருகிறேன். நீ எனக்கு பிரட் ஆம்லெட் போட்டு கொடு சாப்பிடுறேன். உனக்கு ஏதாவது வேண்டும்னா, எனக்கு போன் பண்ணு. இந்த உலகத்தில் மற்றவர்களை விட நான் உன்னை தான் அதிகமாக நேசிக்கிறேன். என் அன்பு முத்தங்கள்! என்று எழுதி இருந்தான். இதைக்கண்டதும் மனைவிக்கும் ஒரே ஆனந்தம்.

  கணவன் மனைவிக்கு இடையே உள்ள உறவை இருவருமே பராமரித்தால் மட்டுமே அது உயிர்ப்போடு நீடிக்கும். தொடர்ச்சியாக ஒருவரை ஒருவர் ஈர்க்க உழைப்பும், அக்கறையும் தேவைப்படுகிறது. அந்த பராமரிப்பு பற்றி கணவனும் மனைவியும் யோசிக்க ஆரம்பித்தாலே நல்ல நண்பர்களாக, ஒருவருக்கொருவர் சுவாரசியமிக்க துணையாக இருக்கலாம்.

  • அல்ஷிபா கல்லூரி முதல்வர் பாபு, பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரி முதல்வர் ஷீலா ஆகியோர் கூட்டாக ைகயெழுத்திட்டனர்.

  ஊட்டி,

  பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியின் ஆங்கில இலக்கியம் முதுகலை மற்றும் ஆராய்ச்சித் துறையும், பெருந்தல்மன்னா அல்ஷிபா கல்லூரியும் இணைந்து மாணவர், ஆசிரியர் திறன் மேம்பாடு, ஆசிரியர்-மாணவர் பரிமாற்றம் ஆய்வு நூல் வெளியீடு உள்ளிட்ட கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு கல்லூரி சார்பாக கையெழுத்திட்டது.

  அல்ஷிபா கல்லூரி முதல்வர் பாபு, பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரி முதல்வர் ஷீலா ஆகியோர் கூட்டாக ைகயெழுத்திட்டனர். நிகழ்ச்சியில் உள்தர மதிப்பீட்டு மையம் ஒருங்கிணைப்பாளர் மிதுலஜ், துறை தலைவர் புவனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.  

  • காளீஸ்வரி கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • உதவி பேராசிரியர் கிருபா சேகர் நன்றி கூறினார்.

  சிவகாசி

  சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் கணினி பயன்பாட்டியல் துறையின் திருத்தங்கள் தமிழா மென்பொருள் நிறுவனம் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது.

  கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் முத்துலெட்சுமி வாழ்த்துரை வழங்கினார்.

  உதவி பேராசிரியர் முத்து சீனிவாசன் வரவேற்றார். மென்பொருள் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரி தமிழா கார்த்திக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

  உதவி பேராசிரியர் கிருபா சேகர் நன்றி கூறினார்.

  • சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
  • பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர். சோலைசாமி தலைமை தாங்கினார்.

  சிவகாசி

  சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி மற்றும் சென்னையில் உள்ள குளோபல் நோட்ஸ் என்ஜினீயரிங் சொல்யூசன்ஸ் தனியார் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

  பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர். சோலைசாமி தலைமை தாங்கினார். இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் விஷ்ணுராம், டீன் மாரிசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  நிகழ்ச்சியில் உயிர்த் தொழில் நுட்பவியல் துறை தலைவர் சபருன்னிஷாபேகம் வரவேற்றார். பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் மற்றும் குளோபல் நோட்ஸ் என்ஜினீயரிங் சொல்யூசன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்-பொறியாளர் ராஜீ கோவிந்தராஜன் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

  இந்த ஒப்பந்தம் மூலமாக கல்லூரி மாணவர்களுக்கு உயிர்செல் முறைகளுக்கு கணக்கீட்டு திரவ இயக்கவியல் பயிற்சி அளிக்கப்படும். மேலும் திரவ இயக்கவியல் பற்றிய பயிற்சி மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்தும். எடுத்துரைக்கப்பட்டது.

  சிறப்பு விருந்தினரான பொறியாளர் ராஜீ கோவிந்தராஜன் பேசுகையில், உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளான மருந்து தொழிற்சாலை மற்றும் கெமிக்கல் தொழிற்சாலைகளில் உயிர் செயல் முறைகளில் திரவ இயக்கவியலின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக் கூறினார். உருவகப் படுத்துதல், தொழிற்முறை பயன்பாடு ஆகியவற்றை பற்றியும் எடுத்துரைத்தார்.

  திரவ இயக்கவியலில் உள்ள வேலைவாய்ப்புகள் மற்றும் ஆராய்ச்சிகள் குறித்தும் பேசினார். இதனால் மாணவர்கள் திறமையை வளர்த்துக் கொள்வதுடன், இந்த துறை சம்பந்தமாக ஆராய்ச்சிகளில் ஈடுபட திரவ இயக்கவியல் ஆய்வகம் துணைபுரியும் என்றார்.

  இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், ஒருங்கிணைப்பாளர்கள் சுப்பிரமணியன், ராஜேஸ்வரி, சுேரஷ்குமார் மற்றும் துறைப்பேராசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர்.

  ×