பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

அல்ஷிபா கல்லூரி முதல்வர் பாபு, பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரி முதல்வர் ஷீலா ஆகியோர் கூட்டாக ைகயெழுத்திட்டனர்.
பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்
Published on

ஊட்டி,

பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியின் ஆங்கில இலக்கியம் முதுகலை மற்றும் ஆராய்ச்சித் துறையும், பெருந்தல்மன்னா அல்ஷிபா கல்லூரியும் இணைந்து மாணவர், ஆசிரியர் திறன் மேம்பாடு, ஆசிரியர்-மாணவர் பரிமாற்றம் ஆய்வு நூல் வெளியீடு உள்ளிட்ட கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு கல்லூரி சார்பாக கையெழுத்திட்டது.

அல்ஷிபா கல்லூரி முதல்வர் பாபு, பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரி முதல்வர் ஷீலா ஆகியோர் கூட்டாக ைகயெழுத்திட்டனர். நிகழ்ச்சியில் உள்தர மதிப்பீட்டு மையம் ஒருங்கிணைப்பாளர் மிதுலஜ், துறை தலைவர் புவனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.  

X

Maalai Malar
www.maalaimalar.com