search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Guidance Program"

    • விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சென்னை விநாயகா மிஷன்ஸ் சட்ட கல்லூரி சார்பாக உயர் கல்வியில் சட்ட கல்வி குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பேராசிரியர் சங்கமித்ரா உயர் கல்வியில் சட்ட கல்வி குறித்தும், அதன் அவசியம் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

    விளாத்திகுளம்:

    பள்ளி மாணவர்களுக்கு இந்திய சட்டங்கள் குறித்தும், சட்ட கல்வி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளாத்திகுளத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சென்னை விநாயகா மிஷன்ஸ் சட்ட கல்லூரி சார்பாக உயர் கல்வியில் சட்ட கல்வி குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த வழிகாட்டல் நிகழ்ச்சியில் பேராசிரியர் சங்கமித்ரா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உயர் கல்வியில் சட்ட கல்வி குறித்தும், அதன் அவசியம் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். சட்ட கல்விக்கான வழிகாட்டுதல் குறித்த கருத்துக்களையும் கூறினார். இதில் சரவண பெருமாள், மகேந்திரன், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • மாணவர்கள் வேலைவாய்ப்புகளை பெறுவதற்கு தேவையான தொழிற்பயிற்சிகளை பெற வேண்டும் என்பதால் நான் முதல்வன், கல்லூரி கனவு போன்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளார்கள்.
    • கல்லூரி புத்தகங்கள் தவிர உலக அளவில் நல்ல புத்தகங்களை வாங்கி வாசித்து கூடுதல் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வ.உ.சி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உயர்கல்வித்துறை சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பிளஸ்-2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உயர்வுக்கு படி மற்றும் கல்லூரி கனவு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கி பேசியதாவது:-

    தொழில்நுட்ப பயிற்சி

    முதல்-அமைச்சர் கொண்டு வந்துள்ள நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு தேவையான தொழிற் பயிற்சிகளை பெற்றுக் கொள்ளலாம். கல்லூரிக் காலம் உங்களை பட்டை தீட்டிக் கொள்ளும் காலமாகும். வேலைவாய்ப்பு பெறுவதற்கும், தொழிலதிபராவதற்கும் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கான திட்டம் தான் நான் முதல்வன் திட்டமாகும். மாணவர்கள் வேலைவாய்ப்புகளை பெறுவதற்கு தேவையான தொழிற்பயிற்சிகளை பெற வேண்டும் என்பதால் நான் முதல்வன், கல்லூரி கனவு போன்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளார்கள்.

    மேலும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.32 கோடி மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப பயிற்சி பெறுவதற்கான உபக ரணங்களை நிறுவி யுள்ளார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, நாகலாபுரம், திருச்செந்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நவீன தொழில்நுட்ப பயிற்சி பெறுவதற்கான உபகரணங்கள் நிறுவப்பட்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இவர்கள் படித்து முடித்தவுடன் டாடா நிறுவனம் நேரடியாக வேலைவாய்ப்பு அளிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு ள்ளது.

    புதுமைப்பெண் திட்டம்

    புதுமைப்பெண் திட்டம் மூலம் அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு உயர்கல்வி படிப்பதற்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. எதிர்கால தலைவர்களாகிய தமிழ் சமுதாயமாகிய உங்களை பெருமைமிக்கவர்களாக உருவாக்க வேண்டும் என்பதற்காக கல்வியும், மருத்துவமும் இரு கண்கள் என்று அறிவித்து பல்வேறு சிறப்பான திட்டங்களை முதல்-அமைச்சர் செயல்படுத்தி வருகிறார்.

    கல்விச்செல்வத்தை யாரும் பறித்துக்கொள்ள முடியாது. மாணவ, மாணவிகள் மனது வைத்தால் சாதிக்கக்கூடிய வயது இதுவாகும். கல்லூரி புத்தகங்கள் தவிர உலக அளவில் நல்ல புத்தகங்களை வாங்கி வாசித்து கூடுதல் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். மதிப்பெண்கள் மட்டுமே முக்கியமல்ல. நீங்கள் அறிவாற்றலை பெற்று சிந்தனை மிக்கவர்களாக, தன்னம்பிக்கை உள்ள வர்களாக, தைரியமுள்ள வர்களாக இருந்தால் வாழ்க்கை எளிதாகும். வானம் வசப்படும். உங்களால் எல்லா வகையிலும் முன்னேற முடியும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக அமைச்சர் கீதாஜீவன், நான் முதல்வன், – உயர்வுக்குப்படி உடனடி சேர்க்கை பெற்றதற்கான ஆணையை 10 பேருக்கும், கல்விக்கடன் பெறுவதற்கான ஆணையை 14 பேருக்கும், சத்துணவுப் பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 9 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை ஆகியவற்றை வழங்கினார்.

    மேலும், புதுமைப்பெண் - திட்ட விளக்க கையேடுகள் 10 பேருக்கு, நான் முதல்வன் - உயர்வுக்குப்படி புத்தகங்கள் 10 பேருக்கும் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, பயிற்சி கலெக்டர் பிரபு, சமூகநல அலுவலர் ரதிதேவி, தாசில்தார் பிரபாகர், துணை மேயர் ஜெனிட்டா, மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செ யலாளர் கீதா முருகேசன், மண்ட லத்தலைவர் அன்ன லட்சுமி, பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூரிதங்கம், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாநகர மகளிர் அணி அமைப்பாளர் ஜெயக்கனி, இலக்கிய அணி தலைவர் சக்திவேல், துணை அமைப்பாளர் பால்ராஜ், நெசவாளர் அணி துணை அமைப்பாளர் குமரன், தொண்டரணி துணை அமைப்பாளர் முத்துபாண்டி, கவுன்சிலர்கள் சரவணக்குமார், இசக்கிராஜா, பவாணி மார்ஷல், வைதேகி, நாகேஸ்வரி, ஜெயசீலி, வட்ட ச்செயலாளர் முத்துராஜா, மகளிர் அணி ரேவதி, சந்தன மாரி, சத்யா, உமாமகேஸ்வரி மற்றும் கருணா, மணி, பிரபாகர், அல்பட் மற்றும் மாணவ -மாணவிகள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி முதல்வர் வீரபாகு நன்றி கூறினார்.

    • உயர் கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி நாளை நடக்கிறது.
    • மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களு டன் வந்து கலந்து கொண்டு பயன டையுமாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக் டர் சங்கீதா வெளியிட் டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர் கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவர் களுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்குவது தொடர்பாக தமிழக அரசால் நான் முதல்வன் உயர்வுக்கு படி என்ற சிறப்பு விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற வுள்ளது.

    மேற்படி சிறப்பு விழிப் புணர்வு மற்றும் வழிகாட்டு தல் நிகழ்ச்சிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மதுரை சமூக அறிவியல் கல்லூரியில் மாவட்ட கலெக்டர் தலை மையில் நடைபெறவுள்ளது.

    மேற்படி நிகழ்ச்சியில், மாணவர்களின் உயர்கல்வி தொடர்பான ஆலோசனை கள் மற்றும் வழிகாட்டுதல் களை பல்வேறு துறை சார்ந்த அலுவவர்கள் வழங்க வுள்ளார்கள். மேலும், பொறி யியல் கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிப்பது தொடர் பாகவும் கல்விக்கடன், கல்வி உதவித் தொகை பெறுவது தொடர்பாக ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும். உயர்கல்வி பயிலுவதற்கு தேவையான சாதிச்சான்று, வருமானச் சான்று உட்பட இணைய வழிச்சான்றுகள் அங்கேயே அமைக்கப் பட்டுள்ள இரு சேவை மையம் மூலமாக வழங்க ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சிக்கு மாண வர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களு டன் வந்து கலந்து கொண்டு பயன டையுமாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கல்லிடைக்குறிச்சி திலகர் மேல்நிலைப்பள்ளியில் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
    • சிறப்பு விருந்தினர்களாக ஆண்டனி பாபு, ஜோசபின் விமலா, ஆதிமூலம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

    கல்லிடைக்குறிச்சி :

    கல்லிடைக்குறிச்சி திலகர் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. நெல்லை ரோட்டரி சங்கமும், கல்லிடைக்குறிச்சி வித்யா சங்கமும் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் பண்டாரசிவன் வரவேற்று பேசினார்.

    பள்ளிச்செயலர் சங்கர், ரோட்டரி சங்க தலைவர் ஆவுடையப்ப குருக்கள் ஆகியோர் தலைமை தாங்கி வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினர்களாக ஆண்டனி பாபு, ஜோசபின் விமலா, ஆதிமூலம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். நிகழ்ச்சியை தமிழாசிரியர் சந்தோஷ் தொகுத்து வழங்கினார். உதவி தலைமை ஆசிரியர் சுபா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் போட்டித் தேர்வுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
    • தமிழியல் துறை உதவிப்பேராசிரியர் கோமதி அழகு நன்றி கூறினார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் தமிழியல் துறை சங்கப் பலகை இலக்கிய மன்றமும், முன்னாள் மாணவர் சங்கமும் இணைந்து போட்டித் தேர்வுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியை நடத்தியது. இதில் கல்லூரியின் முன்னாள் மாணவரும், மகாராசபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியின் முதுகலைத் தமிழாசிரியருமான ஜான்சன் ரத்தினராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவர் பேசுகையில் மாணவர்கள் தங்கள் அனுபவத்தைப் பள்ளியில் படிக்கும் போதே பெறுகின்றனர். கல்லூரியில் படிக்கும் போது போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் அனுபவத்தையும் பெறுகின்றனர்.

    படிக்கும்போதே வாழ்க்கை முழுவதும் பயன்படும் கல்வி என்பதை உணர்ந்தே படிக்க வேண்டும். கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே போட்டித்தேர்வுக்கான வழிகாட்டுதல்களையும் மாணவர்கள் பின்பற்ற வேண்டும். மாணவர்கள் தங்கள் நேரத்தை முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்-அப் ஆகியவற்றில் செலவழிக்காமல் போட்டித் தேர்வுகளுக்காக தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

    தமிழியல் துறை உதவிப்பேராசிரியர் சங்கர் வரவேற்றார். துறைத்தலைவர் அமுதா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். தமிழியல் துறை உதவிப்பேராசிரியர் கோமதி அழகு நன்றி கூறினார். இதில் தமிழியல் துறையைச் சேர்ந்த 78 மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    ×