என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "higher education"

    • ஜூன் மாத இறுதியில் 6 பேர் ஓய்வு பெற்றதால் காலியிடங்களின் எண்ணிக்கை 96 ஆக உயர்ந்துள்ளது.
    • தமிழகம் முழுவதும் 13 கல்லூரிகளின் முதல்வர் பணியிடங்கள் மட்டுமே காலியாக இருந்தன.

    96 கல்லூரிகளில் முதல்வர்கள் இல்லை. 9000 பேராசிரியர் பணியிடங்கள் காலி. உயர்கல்விக்கு முடிவுரை எழுதும் திமுக அரசு என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 180 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 96 கல்லூரிகளின் முதல்வர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் அரசு கல்லூரிகளில் நிர்வாகமும், கல்வித்தரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயிலும் அரசு கல்லூரிகளில் முதல்வர்களை நியமிக்காமல் அவை சீரழிவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

    முதல்வர்கள் இல்லாத கல்லூரிகளில் 60-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் ஓராண்டுக்கும் மேலாக காலியாக கிடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 2024&-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தமிழகம் முழுவதும் 13 கல்லூரிகளின் முதல்வர் பணியிடங்கள் மட்டுமே காலியாக இருந்தன.

    2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்த எண்ணிக்கை 30 ஆகவும், 2024 ஜூன் மாதத்தில் 60க்கும் அதிகமாகி விட்டன. கடந்த மாதத்தில் இந்த எண்ணிக்கை 90 ஆக உயர்ந்திருந்த நிலையில், ஜூன் மாத இறுதியில் 6 பேர் ஓய்வு பெற்றதால் காலியிடங்களின் எண்ணிக்கை 96 ஆக உயர்ந்துள்ளது.

    கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்களை நிரப்புவது என்பது கடினமான பணி அல்ல. கல்லூரி முதல்வர்கள் பணி மூப்பு அடிப்படையில் தான் நியமிக்கப்படுகிறார்கள். கல்லூரி ஆசிரியர்களின் பணி மூப்புப் பட்டியல் தயார் நிலையில் உள்ளது.

    அதன் அடிப்படையில் ஒரே நாளில் அனைத்துக் கல்லூரிகளுக்கும் முதல்வர்களை நியமிக்க முடியும். ஒவ்வொரு ஆண்டும் ஓய்வு பெறும் முதல்வர்கள் யார், யார்? என்பது அரசுக்கு முன்கூட்டியே தெரியும். ஆனாலும், அவற்றை நிரப்பாமல் அரசு வேறு என்ன செய்து கொண்டிருக்கிறது என்பது தெரியவில்லை.

    ஒருபுறம் தமிழக அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் சுமார் 10,500 பணியிடங்கள் உள்ள நிலையில், அவற்றில் 9000-க்கும் கூடுதலான பணியிடங்கள் காலியாக உள்ளன. தமிழ்நாட்டில் அனைத்து அரசு கல்லூரிகளுமே கவுரவ விரிவுரையாளர்களை மட்டுமே நம்பியிருக்கின்றன.

    இத்தகைய சூழலில் முதல்வர்களும் இல்லை என்றால் அரசு கல்லூரிகளில் கட்டிடங்கள் மட்டும் தான் இருக்கும்; கல்வி இருக்காது. விளம்பர வெளிச்சத்தில் மட்டுமே பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் திராவிட மாடல் அரசுக்கு இந்த அடிப்படை உண்மை கூட தெரியவில்லை.

    அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்பும் வகையில் 4000 புதிய உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று ஆட்சிப் பொறுப்புக்கு வந்த நாள் முதல் திமுக அரசு தொடர்ந்து கூறி வருகிறது.

    அதன் பின்னர் காலியிடங்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தைத் தாண்டி விட்ட பிறகும் புதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்ற அக்கறையும், பொறுப்பும் திமுக அரசுக்கு இல்லை.

    அரசு கல்லூரிகளில் முதல்வர் பணியிடம் காலியாக இருந்தால், அந்த இடத்தில் பொறுப்பு முதலமைச்சராக நியமிக்கப்படும் மூத்த இணைப் பேராசிரியருக்கு மாதம் ரூ.40,000 வரை கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும்.

    இதனால் மாதத்திற்கு சுமார் ரூ.38.40 லட்சம் வீதம் ஆண்டுக்கு ரூ.4.60 கோடி வரை கூடுதலாக செலவு ஏற்படும். ஆனாலும், இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் திமுக அரசு உறங்கிக் கொண்டிருக்கிறது.

    உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் முதலிடத்தில் இருப்பதாக பெருமை பேசுவதில் மட்டும் பயனில்லை. 4 ஆண்டுகளாக அரசு கல்லூரிகளுக்கு ஒரே ஒரு உதவிப் பேராசிரியர் கூட நியமிக்கப் படவில்லை; இரு ஆண்டுகளாக கல்லூரி முதல்வர்களை நியமிக்கவில்லை. அப்படியானால் தமிழகத்தில் யாருக்கும் பயனில்லாத இப்படி ஓர் அரசு எதற்காக தொடர வேண்டும் என்ற வினா தான் எழுகிறது.

    உயர்கல்வியை மேம்படுத்துவதற்கு பதிலாக அதற்கு சவக்குழி தோண்டும் செயல்களில் திமுக அரசு ஈடுபடக் கூடாது. தமிழகத்தில் காலியாக உள்ள 96 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்கள் பணியிடங்களை அரசு உடனடியாக நிரப்ப வேண்டும்.

    அதேபோல், அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள 9000&க்கும் கூடுதலான உதவிப் பேராசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 2024-25-ம் நிதியாண்டில் மொத்தம் 9 ஆயிரத்து 106 சிறைவாசிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
    • 24 பேர் வணிக மேலாண்மை இளங்கலை பட்டப்படிப்பையும், 268 பேர் பட்டய படிப்பையும் படித்து வருகின்றனர்.

    சென்னை:

    சிறைவாசிகளுக்கு 100 சதவீத கல்வி அறிவை புகட்டும் விதமாக தமிழக அரசும், மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும் ஒருங்கிணைந்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    அதன்படி, அனைத்து சிறைகளிலும் எழுதப்படிக்க தெரியாத சிறைவாசிகளுக்கு பள்ளி கல்வித்துறையின் சிறப்பு கல்வியறிவு திட்டத்தின் மூலமாக அடிப்படை கல்வி கற்றுக்கொடுக்கப்படுகிறது.

    இந்த திட்டத்தால் பயன் அடைந்து வரும் சிறை கைதிகள் குறித்து சிறைத்துறை உயர் அதிகாரி கூறியதாவது:-

    அனைத்து மத்திய சிறைகள், பெண்கள் தனி சிறைகள் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட சிறை ஆகியவற்றில் தகுதிவாய்ந்த ஆசிரியர்களை கொண்ட ஆரம்ப பள்ளிகள் மற்றும் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மகாத்மா காந்தி சமுதாய கல்லூரியும் செயல்பட்டு வருகின்றன.

    2024-25-ம் கல்வி ஆண்டில் சிறை கைதிகளில் 135 பேர் பிளஸ்-2 தேர்வும், 137 பேர் பிளஸ்-1 தேர்வும், 247 பேர் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வும், 232 பேர் 8-ம் வகுப்பு தேர்வும் எழுதி உள்ளனர்.

    2024-25-ம் நிதியாண்டில் மொத்தம் 9 ஆயிரத்து 106 சிறைவாசிகள் கல்வி பயின்று வருகின்றனர். இதில் 24 பேர் வணிக மேலாண்மை முதுகலை பட்டப்படிப்பும், 3 பேர் கலை அறிவியல் முதுகலை படிப்பும் படித்து வருகின்றனர். ஒருவர் கணினி முதுகலை பட்டப்படிப்பும் படித்து வருகிறார்.

    120 பேர் கலை, அறிவியல், வணிகவியல், இலக்கியம் ஆகியவற்றில் இளங்கலை பட்டப்படிப்பும், 24 பேர் வணிக மேலாண்மை இளங்கலை பட்டப்படிப்பையும், 268 பேர் பட்டய படிப்பையும் படித்து வருகின்றனர்.

    'கத்தியை தீட்டாதே...புத்தியை தீட்டு' என்ற அறிவுரையை ஏற்று சிறை கைதிகள் மனம்மாறி கல்வி கற்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை இறுதி கட்ட கலந்தாய்வு வருகிற 18-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
    • மாணவ-மாணவிகள் நேரடியாக கல்லூரியில் சேர அரசு இறுதி வாய்ப்பு அளித்துள்ளது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் ரிஷிவந்தியம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022- 23-ம் கல்வி ஆண்டுக்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை இறுதி கட்ட கலந்தாய்வு வருகிற 18-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இளம் அறிவியல், புள்ளியியல், கணினி அறிவியல், வணிகவியல், பொருளியல் போன்ற பாடப்பிரிவுகளுக்கு சேர்க்கை நடைபெற உள்ளது.

    12-ம் வகுப்பில் கணிதம் படித்த மாணவர்கள் மட்டுமே கணினி அறிவியல், புள்ளியில் பாட பிரிவிலும், வணிகவியல் படித்தவர்கள் மட்டுமே இளம் வணிகவியல்(பி. காம்.) பாடப்பிரிவிலும், பொருளியல் படித்தவர்கள் மட்டுமே எக்கனாமிக்ஸ் பாடப்பிரிவிலும் சேர முடியும். ஆகையால் இதுவரை பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் சேர தவறவிட்ட மாணவ-மாணவிகள் நேரடியாக கல்லூரியில் சேர அரசு இறுதி வாய்ப்பு அளித்துள்ளது. இத்தகவலை ரிஷிவந்தியம் அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் ரேவதி தெரிவித்துள்ளார்.

    • 20 மாணவர்களுக்கு கீழுள்ள பள்ளிகள் மூடப்படும்.
    • இனி 15000 உயர்கல்வி நிறுவனங்களாக குறைக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டு விடும்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே கொள்ளிடம் பேருந்து நிலையத்தில் இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி பிரச்சார இயக்கம் நடைபெற்றது.

    தேசிய கல்விக் கொள்கை 2020 ஐ திரும்ப பெற வேண்டும், தன்பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற பிரச்சார இயக்கத்திற்கு தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில துணைத்தலைவர் அசோக்குமார் தலைமை வகித்தார்.

    அப்போது அவர் பேசுகையில், தேசிய கல்விக் கொள்கை 2020ன் படி மும்மொழி கொள்கை என்பது குழந்தைகளின் கல்வி சுமையை அதிகரிப்பதோடு தாய்மொழிக் கல்வியை கேள்விக்குறியாக்கும், 20 மாணவர்களுக்கு கீழுள்ள பள்ளிகள் மூடப்படும் என்பதும், வளாகப் பள்ளிகள் அமைக்கப்படும் என்பதும் ஆரம்பக் கல்வியை முற்றிலும் பாதிக்கக் கூடியதாக அமையும்.

    இந்த கொள்கையின்படி தற்போதுள்ள 850 பல்கலைக்கழகங்கள் மற்றும் 48,000க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இனி 15000 உயர்கல்வி நிறுவனங்களாக குறைக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டு விடும். எனவே தேசிய கல்விக் கொள்கை 2020 உடனடியாக மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்றார்.

    தமிழக ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் கமலநாதன், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் விஜயகுமார், வட்டாரத் தலைவர் ராஜேஷ் மற்றும் அனைத்து ஆசிரிய சங்க பிரதிநிதிகள், ஆசிரியர்கள் திரளாகக்கலந்து கொண்டனர்.

    இதேபோல் தேசியக் கல்விக்கொள்கை 2020 திரும்பப்பெறவேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தி வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சீர்காழி புதிய பேருந்துநிலையத்தில் மாநில துணைத்தலைவர் நா.அசோக்குமார் தலைமையில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது.

    • தேசிய குழந்தைத் தொழிலாளர் சிறப்பு பள்ளிகள் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்று வந்தது.
    • இத்திட்டத்தை மாநில அரசு ஏற்று நடத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஒன்றிய அரசின் நிதி உதவியில் 2005-ம் ஆண்டு முதல் கடந்த மார்ச் மாதம் வரை தேசிய குழந்தைத் தொழிலாளர் சிறப்பு பள்ளிகள் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் இனிவரும் ஆண்டுகளில் இத்திட்டத்தை மாநில அரசு ஏற்று நடத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    14 வயதுக்கு உட்பட்ட குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டவர்கள் மற்றும் பள்ளியில் இடைநின்ற மாணவ, மாணவிகளுக்கான இச்சிறப்பு பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை பயின்றவர்கள் முறைசார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு 10-ம்வகுப்பு முதல் பிளஸ்-2 வரை தொடர்கல்வி பயில்வதை இத்திட்ட பணியாளர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வந்தது.

    தொடர்ச்சியாக தொழிற்பயிற்சி நிலையம், பாலிடெக்னிக்கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, வேளாண்மைக் கல்லூரி போன்றவற்றில் உயர்கல்வி பயிலும் முன்னாள் குழந்தைத் தொழிலாளர் திட்ட சிறப்பு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு மாநில அரசின் ஊக்கத்தொகையாக மாதம் ரூ.500 வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் இத்தொகை இருமடங்காக உயர்த்தப்பட்டு மாதம் ரூ.1000 வீதம் ஆண்டுக்கு ரூ.12 ஆயிரமாக நடப்பாண்டில் உயர்த்தி மாநில அரசின் தொழிலாளர் மற்றும் திறன்வளர்ப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

    ஆகவே இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி இத்திட்டத்தின் முன்னாள் மாணவர்கள் ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் உயர்கல்வி ஊக்கத்தொகை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறது.

    தற்போது பயிலும் கல்லூரி முதல்வரின் அத்தாட்சி சான்று, 10 அல்லது 12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், வங்கிக்கணக்குப்புத்தக நகல், 2 புகைப்படங்கள், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை திட்ட இயக்குநர், குழந்தைத் தொழிலாளர் திட்டம் , 6-வது தளம், மாவட்ட ஆட்சியரகம், ஈரோடு என்னும் முகவரிக்கு நேரில் அல்லது அஞ்சல் வழியாக விரைவில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    • உயர்கல்வி உறுதி திட்டத்தின் மூலம் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க முடியும்.
    • மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை விருதுநகர் கலெக்டர் தொடங்கி வைத்தார்.

    விருதுநகர்

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு 2-ம் கட்டமாக ஊக்கத்தொகை வழங்கும் புதுமைப்பெண் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    அதனை தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில், விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி கலையரங்கத்தில் கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கி உயர்கல்வி உறுதி திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது 993 கல்லூரி மாணவிகளுக்கு தலா ரூ.1000 ஊக்கத்தொகையுடன், வேலைவாய்ப்பு வழிகாட்டி புத்தகம், நிதிக்கல்வி புத்தகம் அடங்கிய "புதுமைப்பெண்" பெட்டகப்பை மற்றும் வங்கி ஏ.டி.எம்.களை வழங்கினார்.

    கலெக்டர் ஜெயசீலன் பேசுகையில், இந்தியா விலேயே தமிழகத்தில் தான் உயர்கல்விக்கு செல்லும் பெண்களின் மொத்த சேர்க்கை விகிதம் 51 சதவீதமாக உள்ளது. உயர்கல்வி உறுதி திட்டத்தின் மூலம் பெண்க ளுக்கான தொழில் வாய்ப்பு களை அதிகரித்தல், பெண்களின் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்தல், அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க வழிவகை செய்தல் ஆகி யவை நோக்கமாகும் என்றார். இதில் எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், ரகுராமன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் இந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • எதிர்காலத்தில் அரசு துறையின் உயர்பதவிகளுக்கு நீங்கள் உயர வேண்டும்.
    • உயர்கல்வி வழிகாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கலெக்டர் மகாபாரதி பார்வையிட்டார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, செம்பனார்கோயிலில் உள்ள கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் தமிழ் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியை கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்து பேசுகையில்:-முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநிலம் முழுவதும் 100 இடங்களில் தலா 1000 மாணவ- மாணவிகள்

    கலந்து கொள்ளும் வகையில் இந்த நிகழ்ச்சியை நடத்த ஆணையிட்டார். அதன்படி, இங்கு நடந்த நிகழ்ச்சியில் 14 கல்லூரிகளை சேர்ந்த 1000 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் தமிழ் மரபும் - நாகரிகமும், சமூக நீதி, பெண்கள் மேம்பாடு, சமூக பொருளாதார முன்னேற்றம், திசைதோறும் திராவிடம், மொழி மற்றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடு, தொல்லியல் ஆய்வுகள். அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, தொழில் முனை–வுக்கான முன்னெடுப்புகள் ஊடகங்களின் தோற்றமும் வளர்ச்சியும், கணித தமிழ்வளர்ச்சி சவால்களும், சுற்றுலா வாய்ப்புகள், நூற்றாண்டு கண்ட கல்வி புரட்சி மற்றும் அரசின் திட்டங்கள் மற்றும் செயல்படுத்தும் முறைகள் குறித்து சொற்பொழிவாளர்களை கொண்டு மாபெரும் தமிழ் கனவு சொற்பொழிவு நடைபெற்றது.

    மாணவ- மாணவிகள் இந்த நிகழ்ச்சியில் சொற்பொழிவாளர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார் மாபெரும் தமிழ் கனவு காணொளியை கண்டும் வரலாற்று சிறப்புகளை அறிந்து கொண்டு எதிர்காலத்தில் அரசு துறையின் உயர்பதவிகளுக்கு நீங்கள் உயர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக கல்லூரி வளாகத்தில் மாவட்ட நூலகத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த புத்தக கண்காட்சி, பள்ளி கல்வித்துறை சார்பில் நான் முதல்வன் திட்டம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் உயர்கல்வி வழிகாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கலெக்டர் மகாபாரதி பார்வையிட்டார்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக சொற்பொழிவாளர்கள் அறிவுமதி, நந்தலாலா ஆகியோர் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினர்.

    அதனை தொடர்ந்து தமிழ் பெருமிதம் குறித்தும், கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளக்கம் தந்து மற்றும் வினாக்கள் கேட்ட 8 மாணவ- மாணவிகளுக்கு கலெக்டர் மகாபாரதி பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், வருவாய் கோட்டாட்சியர்கள் யுரேகா, அர்ச்சனா, கல்லூரி நிர்வாக இயக்குனர் குடியரசு, பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • மாணவர்கள் வேலைவாய்ப்பிற்கு தேவையான வழிகாட்டுதல்கள் வல்லுநர்கள் மூலம் எடுத்துரைக்கப்படுகிறது.
    • பல்வேறு போட்டி தேர்வுகளுக்கும் கல்லூரி படிப்பே அடிப்படையானது.

    திருவாரூர்:

    திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட வேலுடையார் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவிகளுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் "கல்லூரிக் கனவு-2023" மாவட்டக் கருத்தாளர்களுக்கு நடைபெற்ற பயிற்சி முகாமில் மாவட்ட கலெக்டர் தி.சாருஸ்ரீ கலந்து கொண்டார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-

    மாணவ, மாணவியர்கள் தங்கள் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்கு தேவையான வழிகாட்டு தல்கள் துறைசார்ந்த வல்லுநர்கள் மூலம் எடுத்துரைக்கப்படுகிறது.

    இம்முயற்சியின் நோக்கம் 12ஆம் வகுப்பிற்கு பிறகு அவர்களது கல்லூரி படிப்பிற்கு உறுதுணையாக அமையும். அரசு தேர்வாணை யத்தால் நடத்தப்படும் சில தேர்வுகளுக்கும், பல்வேறு போட்டி தேர்வுகளுக்கும் கல்லூரி படிப்பே அடிப்படையானது.

    கல்வி ஒன்றே மாணவர்களது வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும் என்பதனை அவர்களுக்கு உணர்ந்த வேண்டும்.

    கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்து, அவர்களது பெற்றோர்களின் உழைப்பை மனதிற்கொண்டு சிறப்பாக பயின்று அவர்களின் கல்வி திறனை மேன்மேலும் உயர்த்தி கொள்ள நம் முயற்சிக்க வேண்டும்.

    இந்நிகழ்ச்சியில் பொறியியல், மருத்துவம், மருத்துவம் சார்ந்த துணை அறிவியல் படிப்புகள், கலை மற்றும் அறிவியல், வணிகவியல் மற்றும் கணக்குப்பதிவியல், சட்டம், கால்நடை, வேளாண்மை, மீன்வளம் ஆகிய துறைகளில் உள்ள உயர்கல்விப் படிப்புகள் சார்ந்தும் அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்தும் இப்படிப்புகள் படிப்பதற்கான வங்கிக டன்கள் பெறுவது குறித்தும் மற்றும் கல்வி உதவித்தொகை பெறுவது குறித்தும் சிறந்த வல்லுநர்களால் வழிகாட்டல் வழங்கப்படவுள்ளது.

    இதனை மாணவ, மாணவியர்களிடம் நீங்கள் கொண்டு சேர்க்க வேண்டும். மாணவ, மாணவியர்கள் எந்த துறையில் சிறப்பாக விளங்கிடலாம் என்பதனை அவர்களின் விருப்பத்திற்கேற்ப அறிந்து அவர்களுக்கு அத்துறையில் கல்விபயிலவும், தங்களின் திறமையை மேம்படுத்திக்கொள்ளவும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

    பொதுத்தேர்வில் ஏதேனும் சில பாடங்களில் தவறவிட்டாலும் கலங்காது துணைத்தேர்வில் நல்ல முயற்சி மேற்கொண்டு வெற்றி பெற நாம் உறுதுணையாக இருந்து அவர்கள் உயர்கல்வி பெற்றிட நாம் உதவி வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, மாவட்ட கல்வி அலுவலர் மாதவன், வேலுடையார் கல்வி நிறுவனங்கள் நிர்வாகி திரு.தியாகபாரி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், திருவாரூர் ஒன்றியத்திற்குட்பட்ட மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், பெற்றோர், ஆசிரியர் கழக உறுப்பினர்கள், பள்ளி முன்னாள் மாணவர்கள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

    • அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடந்தது.
    • பாத்திமா கனி ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள சாகீர்உசேன் கல்லூரியில் ''நம் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம்'' சார்பில் தமிழக அரசின் ''நான் முதல்வன்'' திட்டத்தின் கீழ் "கல்லூரிக்கனவு-2023" என்னும் தலைப்பில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் திருப்புவனம், அல்லிநகரம், சாலைகிராமம், முனைவென்றி, அனுமந்தகுடி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி பயிலுவதின் முக்கியத்துவம் மற்றும் உயர்கல்வி பாடப்பிரிவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் பீர் முகம்மது, அப்ரோஸ்சேக் அப்துல்லா, பாத்திமா கனி ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர்

    • தேசிய தரவரிசை பட்டியலில் புதுவையில் 4 கல்வி நிறுவனத்தை தவிர்த்து சொல்லிக்கொள்ளும்படி ஒன்றுமில்லை.
    • ஒட்டுமொத்தமாக புதுவை அரசின் கீழ் உள்ள உயர்கல்வித்துறை சீரழிந்து வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் எம்.பி. ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

     தேசிய தரவரிசை பட்டியலில் புதுவையில் 4 கல்வி நிறுவனத்தை தவிர்த்து சொல்லிக்கொள்ளும்படி ஒன்றுமில்லை. புதுவையில் உள்ள பல் மருத்துவம், மேலாண்மை, ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட எந்த கல்லூரியில் தரவரிசை பட்டியலில் இல்லை. ஒட்டுமொத்தமாக புதுவை அரசின் கீழ் உள்ள உயர்கல்வித்துறை சீரழிந்து வருகிறது.

    பல ஆயிரம் கோடி மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து சமுதாயத்துக்கு உரிய எந்த பலனும் இத்துறையில் ஏற்படவில்லை. இதை உணராமல் தன் இயலாமையை புகழ்பாடி கொண்டிராமல் சரியான நடவடிக்கைகளில் அரசு இறங்க வேண்டும்.

    தற்போதுள்ள நிலையில் புதிய நிறுவனங்களை தொடங்குவதை காட்டிலும், இருக்கும் நிறுவனங்களை சீர்செய்வதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். அனைத்து கல்லூரிகளையும் தேசிய தரக்கட்டுப்பாடு வாரியத்தால் மதிப்பீடு செய்யப்பட்டு குறைகள் களையப்பட வேண்டும்.

    புதுவையில் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்துக்கு கவர்னர் உடனடியாக ஆட்சிமன்ற குழுவை உருவாக்க வேண்டும். அரசாங்கம் நன்கு திறன் வாய்ந்த ஆசிரியர்களை நியமிக்க வும், கல்லூரிகளின் அக கட்டு மானத்தை வலுப்படுத்தவும், ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கைகளை தீர்த்து வைக்க வேண்டும்.

    ஒவ்வொரு கல்லூரிகளிலும் ஒரு தர கட்டுப்பாட்டு மையம் வைப்பதும், ஆசிரியர்களை மாணவர்கள் மதப்பீடு செய்யும் முறையை கொண்டுவர வேண்டும். அவர்களின் கருத்துக்களை கேட்பதும், கற்பித்தலில் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவது, தொழிற்சாலை கல்லூரி இணைந்த செயல்பாடு போன்ற நடவடிக்கைகளால் வரும் காலத்தில் மத்திய அரசின் மதிப்பீட்டின் தரவரிசையில் முன்னேற முடியும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மத்திய அரசின் ரூசா நிதியுதவி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டது.
    • புதுவை மாநில உயர்கல்வி கவுன்சலின் முதலாவது கவுன்சில் பதவிக்காலம் கவர்னர் ஒப்புதலின்பேரில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    மத்திய அரசின் ரூசா நிதியுதவி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட புதுவை மாநில உயர்கல்வி கவுன்சலின் முதலாவது கவுன்சில் பதவிக்காலம் கவர்னர் ஒப்புதலின்பேரில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு டிசம்பர் 15-ந் தேதி முதல் ஓராண்டு அல்லது மாநில உயர்கல்வி கவுன்சில் கூட்டம் இயற்றப்பட்ட பின் சட்டப்பூர்வ கவுன்சில் அமைக்கும் வரை இந்த குழு பதவியில் இருக்கும்.

    இதற்கான உத்தரவை உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி சார்பு செயலர் சவுமியா பிறப்பித்துள்ளார்

    • கனடாவில் உள்ள எம்.பி.க்களும் கட்சி வித்தியாசமின்றி, இந்திய மாணவர்களுக்கு ஆதரவாக நின்றனர்.
    • மாணவர்களுக்கு நியாயம் கிடைப்பதில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆதரவு தெரிவித்தார்.

    புதுடெல்லி :

    இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 700 மாணவர்கள் கனடாவில் உயர் கல்வி கற்பதற்காக சென்றனர். ஆனால் அவர்கள் அங்கு படிப்பதற்கு செல்வதற்கு ஏற்பாடு செய்த ஜலந்தரைச் சேர்ந்த ஏஜெண்டு, போலி சேர்க்கை கடிதங்களையும், ஆவணங்களையும் கொடுத்து ஏமாற்றி உள்ளார்.

    முதலில் இது அவர்களுக்கு தெரியவில்லை. பின்னால்தான் தெரிய வந்தது.

    இந்த போலி சேர்க்கை கடிதங்களால் அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியானது.

    அவர்களை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு டொராண்டோவில் உள்ள சி.பி.எஸ்.ஏ. என்று அழைக்கப்படுகிற கனடா எல்லை பாதுகாப்பு முகமை நடவடிக்கை எடுத்தது. அவர்கள் நாடு கடத்தப்படுவதற்கான நோட்டீசுகளும் வழங்கப்பட்டன.

    தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டதை அறிந்த மாணவர்கள் அங்கே வீதியில் இறங்கி போராடினார்கள்.

    இந்த விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. குறிப்பாக, மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், கனடா வெளியுறவு மந்திரியிடம் பிரச்சினையை எடுத்துச்சென்றார். மேலும் வெளியுறவுத்துறை செயலாளர் (கிழக்கு), கடந்த ஏப்ரல் மாதம் கனடா சென்றிருந்தபோது இந்த விவகாரத்தை அந்த நாட்டின் அரசிடம் எழுப்பினார். இது தொடர்பாக டொராண்டாவில் உள்ள இந்திய தூதரகமும், பிரச்சினைக்குள்ளான இந்திய மாணவர்களைச் சந்தித்தது.

    இந்த பிரச்சினையில் தவறு மாணவர்கள் பக்கம் இல்லை என்பதால் மனிதநேய அடிப்படையில் நடந்து கொள்ள வேண்டும் என்று கனடா அரசிடம் மத்திய அரசு மீண்டும் மீண்டும் முறையிட்டது. கனடாவில் உள்ள எம்.பி.க்களும் கட்சி வித்தியாசமின்றி, இந்திய மாணவர்களுக்கு ஆதரவாக நின்றனர்.

    அதைத் தொடர்ந்து கனடா குடியேற்றத்துறை மந்திரி சியான் பிரேசியர், கனடாவில் நிச்சயமற்ற தன்மையை சந்தித்து வருகிற சர்வதேச மாணவர்களின் பிரச்சினையில் தீர்வு காண்பதற்கு கனடா அரசு தீவிரமாக பரிசீலிக்கிறது என தெரிவித்தார். மாணவர்களுக்கு நியாயம் கிடைப்பதில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆதரவு தெரிவித்தார்.

    அதைத் தொடர்ந்து கனடாவில் இருந்து இந்திய மாணவர்களை நாடு கடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கையில், "கனடாவில் உள்ள இந்திய மாணவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சினையில், கனடா அரசு மனிதநேய அணுகுமுறையை பின்பற்றியதற்கு காரணம், இந்திய அரசு தொடர்ந்து எடுத்து வந்த முயற்ஙசிகள்தான். இதை வரவேற்கிறோம்" என தெரிவித்தன.

    ×