search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DMK government"

    • தமிழக அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கிய நிதியை தி.மு.க. அரசு முறையாக பயன்படுத்த வேண்டும் என்றார்.

    சென்னை:

    சென்னை ராயப்பேட்டையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    கனமழையால் மக்கள் பாதிக்கப்பட்டதற்கு முழு பொறுப்பு தி.மு.க. அரசுதான்.

    புயல் மழைக்கு அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    5 நாட்கள் கடந்த பின்பும் தற்போது வரை பல பகுதிகளில் மழைநீர் வடியவில்லை.

    வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை தி.மு.க. அரசு அலட்சியப்படுத்தியதால் தான் கடும் பாதிப்பு.

    மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்களை நடத்தவேண்டும்.

    தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்த தேவையான ராட்சத மோட்டார்களை தயார் நிலையில் வைத்திருக்கவில்லை. எங்கு பார்த்தாலும் குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கிய நிதியை தி.மு.க. அரசு முறையாக பயன்படுத்த வேண்டும்.

    அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மழைக்காலங்களில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் பாதிப்புகளை தவிர்த்திருக்கலாம்.

    2015-ம் ஆண்டு புயல் பாதிப்பை அ.தி.மு.க. அரசு திறமையாக சமாளித்தது.

    பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் தகுந்த பதில் அளிப்பார்கள் என தெரிவித்தார்.

    • தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்பிவிட்டு தமிழகத்தில், மீண்டும் முதல்வராக எடப்பாடி பழனிசாமி வருவார்.
    • ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.

    மதுரை

    மதுரையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எழுச்சி மாநாடு சிறப்பாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து பல லட்சம் தொண்டர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

    மாநாட்டின் இறுதியில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செய லாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. நன்றி உரையாற்றினார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    கடந்த சட்டமன்ற தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிட்டது. தி.மு.க. ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் நிம்மதி இன்றி தவித்து வருகிறார்கள். நாளுக்கு நாள் விலையேற்றம், வரி சுமை ஆகியவற்றின் காரண மாக தி.மு.க. அரசு மக்களை வாட்டி வதைக்கிறது. இந்த ஆட்சியின் கொடூர பிடியிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள கழகத்தின் பொதுச் செய லாளர் எடப்பாடி பழனி சாமியை தான் மக்கள் சாமியாக நினைக்கிறார்கள். அதற்கு சாட்சியாக தான் இந்த மாநாட்டில் அலை கடலென மக்கள் வெள்ளம் திரண்டு வந்துள்ளது.

    எனவே தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் நாள் நெருங்கி விட்டது. தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்பிவிட்டு அ.தி.மு.க. ஆட்சியை மீண்டும் ஏற்படுத்தி நமது எடப்பாடி யாரை தமிழகத்தின் அடுத்த முதல்வராக ஆக்க தமிழக மக்கள் தயாராகிவிட்டனர்.

    எனவே இந்த வரலாற்று சிறப்புமிக்க சாதனை மாநாட்டில் கலந்து கொண்ட உங்கள் அனை வருக்கும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கடந்த 2 ஆண்டுகளாக தி.மு.க. அரசு மக்களுக்கு எதுவும் செய்து கொடுக்கவில்லை.
    • சாராயத்தால், போலி மதுபானங்களால் இறப்பு அதிகமாக உள்ளது.

    உடுமலை :

    உடுமலை மத்திய பஸ் நிலையம் முன்பு திருப்பூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    அப்போது உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:- கடந்த 2 ஆண்டுகளாக தி.மு.க. அரசு மக்களுக்கு எதுவும் செய்து கொடுக்கவில்லை. 24 மணி நேரமும் பார் திறந்து வைத்துள்ளது. சாராயத்தால், போலி மதுபானங்களால் இறப்பு அதிகமாக உள்ளது. சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தவறியதால் கொலை, கொள்ளை அதிகரித்து உள்ளது. பொதுமக்களுக்கும் அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு இல்லை. ஒரு அரசு அமைகிறது என்றால் அது மக்களுக்கான அரசாக இருக்க வேண்டும். இந்த அரசு மக்களுக்கான இல்லை. அவர்களுக்கு தேவையான கம்பெனிகளை வைத்துக்கொண்டு வீட்டு வசதி நிலைகளை எடுத்து வியாபாரமாக செய்து வருகிறது. மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றாத செயல்படாத அரசாக தி.மு.க. அரசு உள்ளது. எனவே தமிழகத்தில் மீண்டும் பொற்கால ஆட்சி எடப்பாடியார் தலைமையில் அமைவதற்கு அனைவரும் இரவு பகல் பாராது அயராது உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    அதைத்தொடர்ந்து தி.மு.க. அரசை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பப்பட்டது. இந்தப்போராட்டத்தில் பல்லடம் எம்.எஸ்.ஆனந்தன் எம்.எல்.ஏ. முன்னாள் எம்.எல்.ஏ.பரமசிவம், உடுமலை நகரச்செயலாளர் ஹக்கீம், ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், அன்பர்ராஜன், பிரனேஷ் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரத்தில் தி.மு.க. அரசை கண்டித்து பா.ஜ.க. சார்பில் நூதன போராட்டம் நடந்தது.
    • பல்வேறு நலத்திட்டங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்காமல் தி.மு.க. அரசு துரோகம் செய்கிறது என குறிப்பிடப்பட்டிருந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பா.ஜ.க. பட்டியல் அணி சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து அம்பேத்கர் வேடமிட்டவரிடம் கோரிக்கை மனுக்களை அளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் அரண்மனை முன்பு நடந்த பா.ஜ.க. (எஸ்.சி) அணி போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரமேஷ் கண்ணன் தலைமை தாங்கினார்.

    இதில் பா.ஜனதா மாவட்ட தலைவர் இ.எம்.டி.கதிரவன், மாவட்ட துணைத்தலைவர் முத்துசாமி, ஐகோர்ட்டு வக்கீலும், பா.ஜனதா பிரமுகருமான சண்முகநாதன், மாநில எஸ்.சி. அணி செயலாளர் பிரபு, நகர தலைவர் சுப நாகராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் இளங்கண்ணன், மாநில சிறப்பு செயற்குழு உறுப்பினர் சேகர், ஓ.பி.சி. அணி மாவட்ட தலைவர் பாரதிராஜன், மாவட்ட பொது செயலாளர் காளிராஜா மற்றும் நேதாஜி உள்பட பா.ஜனதா மாநில, மாவட்ட, நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

    அந்த மனுவில், மத்திய அரசு பட்டியல் என சமுதாய மக்களுக்கு ஒதுக்கீடு செய்யும் நிதியை தி.மு.க. அரசு முறையாக செலவு செய்யாமல் திருப்பி அனுப்புகிறது. மேலும் பட்டியலின மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்காமல் தி.மு.க. அரசு துரோகம் செய்கிறது என குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த போராட்டத்தில் நகர தலைவர் பிச்சை, மாவட்ட செயலாளர் உமாரமணி, மாநில செயற்குழு உறுப்பினர் இளங்கண்ணன், கடலாடி தெற்கு ஒன்றிய தலைவர் செந்தில்குமார், கடலாடி கிழக்கு ஒன்றிய தலைவர் ஸ்டாலின் ஹீரோ கார்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

    • தி.மு.க. அரசை பொதுமக்கள் தூக்கி எறியும் காலம் தொலைவில் இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
    • மதுரை மேற்கு-தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. பொறுப்பாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    அலங்காநல்லூர்

    மதுரை மேற்கு யூனியன் அரியூர் கிராமத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க சோழ வந்தான் சட்டமன்ற தொகுதி சார்பில் ஜெயலலிதா 75-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.

    மதுரை மேற்கு-தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. பொறுப்பாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் கல்லணை ரவிச்சந்திரன், கொரியர் கணேசன் வாடிப்பட்டி காளிதாஸ், வாடிப்பட்டி ஒன்றிய சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ்கண்ணா, டாக்டர் சரவணன் முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரதிநிதி சாமிநாதன் வரவேற்றார்.

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    அம்மா உணவகம், தாலிக்கு தங்கம், மாண வர்களுக்கு மடிக்கணினி போன்ற பொது மக்களுக்கு தேவையான எத்தனையோ திட்டங்களை ஜெயலலிதா கொண்டு வந்தார்.இவற்றையெல்லாம் முடக்கி மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளதுதான் தி.மு.க. அரசின் சாதனையாகும். இதனால் மக்களுக்கு வேதனை மட்டுமே மிஞ்சியுள்ளது.

    தி.மு.க. அரசை பொது மக்கள் தூக்கி எறியும் காலம் தொலைவில் இல்லை. தி.மு.க. அரசின் அராஜக போக்கை கண்டு பிரதமர் ஆட்சியை கலைத்து விடுவார் என்பதை தடுப்பதற்காகவே உதயநிதி ஸ்டாலின் பிரதமரை சந்தித்தார். ரூ.600 கோடியை செலவழித்து ஈரோடு கிழக்கில் பெற்ற வெற்றியானது ஜனநாயகத்தின் படுகொலை யாகும். எதிர்வரும் தேர்தல்களில் அ.தி.மு.க. அரசின் சாதனைகளை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறி மகத்தான வெற்றி பெற்று எடப்பாடியார் தலைமையிலான ஆட்சி அமையும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெகதா ராதாகிருஷ்ணன், அம்மு லோகேசுவரன், மாவட்ட பிரதிநிதி சாமிநாதன், ஊராட்சி மன்ற தலைவர் ராசு, கூட்டுறவு சங்க தலைவர் மலர் கண்ணன், எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் குருசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டுறவு வங்கி துணைத் தலைவர்-கிளை செயலாளர் ராகுல் நன்றி கூறினார்.

    • தி.மு.க. ஆட்சியை தூக்கி எறிய மக்கள் தயாராகி விட்டனர் என முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.
    • மக்கள் படும் துயரங்கள் பற்றி கவலைப்படாமல் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஊர் ஊராக பவனி வருகிறார்.

    ராஜபாளையம்

    மின் கட்டணம், சொத்து வரி, பால் விலை உயர்வை ரத்து செய்யக்கோரி ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பேரூராட்சி பஸ்நிலையம் முன்பு அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-

    கட்டுமான பொருட்கள் விலை உயர்வு, ஆவின் பால் விலை, சொத்து வரி, தொழில் வரி, வீட்டு வரி,மின் கட்டணம் உள்ளிட்ட விலைவாசி உயர்வு காரணமாக சாதாரண மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் எந்த விலைவாசியும் உயர்த்தப்ப டவில்லை. ஆனால் இன்று குடிநீர் வரி மற்றும் கழிவுநீர் வரியையும் உயர்த்தி உள்ளனர்.மக்கள் படும் துயரங்கள் பற்றி கவலைப்படாமல் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஊர் ஊராக பவனி வருகிறார்.

    பொதுமக்களின் அன்றாட பிரச்சினை குறித்தும், மின் கட்டண உயர்வு குறித்தும் தெரியாமல் ஆட்சியை தூக்கி எறிய மக்கள் தயாராகி விட்டனர்

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. மான்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராஜவர்மன், சந்திரபிரபா, முன்னாள் அமைச்சர் இன்ப தமிழன், மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாபுராஜ், பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ், ராஜபாளையம் வடக்கு நகர செயலாளர் துரை முருகேசன், தெற்கு நகர செயலாளர் பரமசிவம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பொங்கல் பரிசு வழங்கவே தி.மு.க. அரசு யோசிக்கிறது என முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் பேசினார்.
    • வீடுகளுக்கே நேரடியாக வந்து அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கினர்.

    சிவகங்கை

    சிவகங்கையை அடுத்துள்ள நாட்டரசன் கோட்டையில் சொத்துவரி, பால் விலை உயர்வை கண்டித்து அ.தி.மு.க நகரசெயலாளர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் பங்கேற்று பேசுகையில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு கொரோனா காலத்தில் கூட பொது மக்களுக்கு பொங்கல் பரிசு, உதவி தொகைகளை வழங்கியது. வீடுகளுக்கே நேரடியாக வந்து அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கினர்.

    தற்போதைய தி.மு.க. அரசு பொங்கல் பரிசு வழங்கவே யோசித்து வருகிறது. இன்னும் முடிவு செய்யவில்லை. பொதுமக்கள் இந்த அரசை வீட்டிற்கு அனுப்ப தயாராகுங்கள் என்றார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் நகரசெயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் பழனிச்சாமி, சிவாஜி, கருணா கரன், அருள்ஸ்டிபன் உள்ளிட்ட பலர் பேசினர்.

    நிர்வாகிகள் மாரியப்பன், செல்வம், கவுன்சிலர் சின்ன மருது, தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் சங்கர்ராமநாதன், அவைத்தலைவர் பாண்டி, கேபி.முருகன், கூட்டுறவு சங்க தலைவர்கள் சசிகுமார், பாபு, மாவட்ட பாசறை துணைச்செயலாளர் சதிஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் தி.மு.க. அரசு செயல்படுகிறது என ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேட்டியளித்தார்.
    • சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் மாணவர்களுக்கு அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் கூடல்மலை தெருவில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ரூ.3 லட்சம் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்ட பணியையும், அவனியா புரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ. 10 லட்சம் மதிப்பில் மேஜை, நாற்காலி மற்றும் நவீன வகுப்பறையை திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா திறந்து வைத்தார்.

    அப்போது அவர் நிருபர்க ளிடம் கூறியதாவது:-

    சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் மாணவர்களுக்கு அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மாணவர்களுக்கு டேபிள், சேர், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், நவீன வகுப்பறைகள், பள்ளிக்கூட கட்டிடங்கள் இது போன்ற பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    234 தொகுதிகளில் மக்களின் 10 கோரிக்கைகள நிறைவேற்றும் வகையில் ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்து அரசு அறிவித்தது. அதன்படி திருப்பரங்குன்றம் தொகுதியில் அரசு கலைக்கல்லூரி வேண்டும் என்றும், விவசாயிகளின் கோரிக்கையான வாசனை திரவிய தொழிற்சாலை வேண்டுமென்றும், கைத்தறி நெசவாளர்கள் கோரிக்கையான நிலையூரில் அரசு கைத்தறி கூடம் வேண்டும் என்றும், அதேபோல் நாகமலை புதுக்கோட்டையில் சிப்காட் அமைக்க வேண்டும் உள்பட 10 கோரிக்கைகளை வலியுறுத்தினோம். ஆனால் இதுவரை கோரிக்கைகள் எந்த நிலையில் உள்ளது என்று தெரியவில்லை? மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் தி.மு.க. அரசு செயல்படுகிறது. வரும் தேர்தல் காலங்களில் தி.மு.க. தோல்வி தழுவும், மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமையும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றியசெயலாளர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் மரக்கடை முருகேசன், வட்ட செயலாளர்கள் ஜெய கல்யாணி, நாகரத்தினம், தவுடன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கருமத்தம்பட்டியில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது
    • ஒரு சில சதவீதங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த தி.மு.க மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை

    சூலூர்,

    கோவை கருமத்தம்பட்டியில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு சூலூர் வி.பி.கந்தசாமி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சூலூர் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க செயலாளர் கந்தவேல் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க மற்றும் சட்டமன்ற கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி கலந்து ெகாண்டு பேசியதாவது:-

    அ.தி.மு.க அசைக்க முடியாத எக்கு கோட்டை. ஒரு சில சதவீதங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த தி.மு.க மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. தி.மு.க. அரசின் ஒரே சாதனை அ.தி.மு.க.வினரின் வீடுகளில் ரெய்டு நடத்துவது, பொய் வழக்குகளை போடுவது மட்டும் தான். மக்களின் நலத்திட்டங்களில் திமுக அரசுக்கு கவனம் இல்லை.

    விசைத்தறி தொழில் ஏற்கனவே கடும் நெருக்கடியில் இருந்து வந்தது. அப்படிப்பட்ட நிலையில் மின்சார கட்டண உயர்வு அவர்களுக்கு மிகப்பெரியை பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வருகிற பாராளு மன்ற தேர்தலில் அதிமுக 40-க்கு 40 என்கிற அளவில் அனைத்து தொகுதிகளும் வெற்றி பெறும். மக்கள் வெற்றி பெற வைப்பார்கள். அடுத்த சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற்று எடப்பாடியார் முதல்-அமைச்சராக அமர்வார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் முன்னாள் அமைச்சர் வேலுமணி முன்னிலையில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

    • தி.மு.க. ஆட்சியில் தமிழக மக்களுக்கு பிரயோஜனம் ஆகக் கூடிய ஒரு திட்டம் கூட செயல்படுத்தப்படவில்லை.
    • தி.மு.க. ஆட்சியின் மின்வெட்டு, மின்சார கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு இதையெல்லாம் மூடி மறைக்க சோதனை நடத்துகிறார்கள்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு அரசின் மின்வெட்டு உள்ளிட்ட மக்கள் விரோதப் போக்கினை கண்டித்து, திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் குமரன் சிலை அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் தலைமை தாங்கினார். கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.பி.,யுமான சி.சிவசாமி, திருப்பூர் ஒன்றிய கழக செயலாளரும், திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ.,வுமான கே.என்.விஜயகுமார், திருப்பூர் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான சு.குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றிய திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசும்போது கூறியதாவது :- இந்த ஒன்றரை ஆண்டு தி.மு.க. ஆட்சியில் தமிழக மக்களுக்கு பிரயோஜனம் ஆகக் கூடிய ஒரு திட்டம் கூட செயல்படுத்தப்படவில்லை. ஆனால்தி.மு.க. ஆட்சியின் மின்வெட்டு, மின்சார கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு இதையெல்லாம் மூடி மறைக்க சோதனை நடத்துகிறார்கள். இலங்கை அதிபரான ராஜபட்சே இலங்கையில் இருந்து தப்பிப் பிழைத்தால் போதும் என ஓடினார். அதே நிலைமை தி.மு.க.வின் தலைவர் ஸ்டாலினுக்கு ஏற்படும். அ.தி.மு.க. ஆட்சியின் போது குப்பை வரி உயர்த்துவதாக சொன்னதற்கே கருப்பு சட்டை போட்டுக் கொண்டு இரண்டு அட்டைகளை கையில் வைத்துக் கொண்டு போராட்டம் நடத்திய ஸ்டாலின் இன்று குப்பைக்கு வரி விதித்து இருக்கிறார். தி.மு.க.வுக்கு திருப்பூருக்கும் எப்போதும் ஒத்து வராது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த போதெல்லாம் திருப்பூர் நாசமாக போகிறது. 2010 ல் தொழில் எல்லாம் மூடிப்போய் மக்கள் ஊரைக் காலி செய்யும் நிலை ஏற்பட்டது. ரேசன் கார்டை ஒப்படைத்து விட்டு மக்கள் சென்றார்கள். இன்றைக்கு அதே போல ஒரு நிலை ஏற்பட்டு இருக்கிறது. வரி உயர்வு, தொடர் மின்வெட்டு, மின்கட்டண உயர்வால் திருப்பூர் தொழில் நிலை முடக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இதை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சாய ஆலை பிரச்சினை ஏற்பட்டு திருப்பூர் தொழில் முடங்கிய போது ஜெயலலிதா வட்டியில்லா கடனாக 213 கோடி ரூபாய் கொடுத்து தொழிலை காப்பாற்றினார்கள். ஆனால் மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததால் இப்படி ஒரு நிலை ஏற்பட்டு இருக்கிறது.

    திருப்பூருக்கு இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது குடிநீர் திட்டங்களை அ.தி.மு.க. அரசு தந்து இருக்கிறது. 1300 கோடி செலவில் நான்காவது குடிநீர் திட்டத்தினை கொண்டு வந்து இருக்கிறோம். ஏற்கனவே நிறைவேறி இருக்க வேண்டிய இந்த திட்டத்தினை மு.க.ஸ்டாலின் நிறுத்தி வைத்து இருக்கிறார். ஒரு நன்மையும் மக்களுக்கு செய்யாத தி.மு.க. ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும். உடனடியாக நான்காவது குடிநீர் திட்டப்பணிகளை முடித்து திருப்பூர் மக்களுக்கு திட்டத்தினை செயல்பாட்டுக்கு கொண்டு வரவில்லை என்றால் எடப்பாடியாரின் ஆணையை பெற்று சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவோம்.

    தமிழகத்தில் லஞ்சம் லாவண்யம் அதிகரித்து விட்டது. மின்கட்டணத்தை உடனடியாக குறைக்க வேண்டும். காவல்துறை நியாயமாக நடக்க வேண்டும். இவ்வாறு பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசினார்.

    • அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள் இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்
    • ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு மற்றும் கிளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க வீட்டுவரி உயர்வு முதல் மின்கட்டண உயர்வு வரை தமிழக மக்களை வாட்டி வதைக்கும் தி.மு.க. அரசை கண்டித்து வருகிற 25-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு, நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள் இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    எனவே ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு மற்றும் கிளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராதாபுரம் மேற்கு ஒன்றிய சமூக ரங்கபுரத்தில் கருணாநிதியின் பிறந்தநாள் விழா மற்றும் தி.மு.க.வின் ஓராண்டு சாதனைகள் குறித்து தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் தலைமையில் தமிழகத்தில் மக்கள் முன்னேற்றத்திற்காக எடுத்து வைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ள பல திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறப்பட்டது.

    திசையன்விளை:

    ராதாபுரம் மேற்கு ஒன்றிய சமூக ரங்கபுரத்தில் கருணாநிதியின் பிறந்தநாள் விழா மற்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வின் ஓராண்டு சாதனைகள் குறித்து தெருமுனை கூட்டம் நடைபெற்றது.

    நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் முன்னிலை வகித்தார். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளரும், ஒன்றிய ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவருமான அனிதா பிரின்ஸ் வரவேற்றார். ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ேஜாசப்பெல்சி தலைமை தாங்கினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் முதல்- அமைச்சர் கருணா நிதியின் தலைமையில் தமிழகத்தில் மக்கள் முன்னேற்றத்திற்காக எடுத்து வைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ள பல திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறப்பட்டது.

    மேலும் அதன் வழி தொடர்ச்சியாக தற்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறந்த முறையில் நடைபெற்று வரும் ஆட்சியின் சாதனைகள் குறித்து எடுத்துக் கூறப்பட்டது. மிகச் சிறப்பான முறையில் இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டுமே மகளிருக்கான இலவச பேருந்து திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    மேலும் சாலை விபத்தில் சிகிச்சை பெறுவதற்கான இன்னுயிர் காப்போம் திட்டம், வீடு தேடி மருத்துவம் , அனைவருக்கும் கல்வி, கலைஞர் காப்பீடு போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் மற்றும் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி ஆகியோர் எடுத்து கூறினர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாநில பேச்சாளர் உடன்குடி தனபால் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ஒன்றிய கவுன்சிலர் இசக்கிபாபு நன்றி கூறினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் ஜான்ஸ் ரூபா, ராதாபுரம் மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×