என் மலர்
நீங்கள் தேடியது "இந்திய அரசியலமைப்பு சட்டம்"
- அரசியலமைப்பின்படி மகளிர் மற்றும் சிறார்களின் அடிப்படை உரிமைகளை மேலோங்க செய்வதில் இவ்வரசு பெருமை கொள்கிறது.
- பள்ளி, கல்லூரிகளில் பேச்சுப் போட்டிகள், கருத்தரங்குகள், வினாடி வினா நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மக்களாட்சித் தத்துவத்தின் மாண்பினை உள்ளடக்கி இந்தியத் திருநாட்டினை வளமான பாதையில் முன்னெடுத்து செல்லும் ஓர் உன்னத உருவாக்கம், அண்ணல் அம்பேத்கர் வடிவமைத்துத் தந்த நமது அரசியலமைப்புச் சட்டமாகும்.
தமிழ்நாடு அரசு, இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளைப் போற்றிப் பாதுகாத்து, சமூகநீதி, சமநிலை மற்றும் மக்கள் நலனிற்காக அயராது பாடுபட்டு வருகிறது.
தமிழ்நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதும், ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு, சகோதரத்துவம் மற்றும் பொதுநலத்தை உறுதிப்படுத்துவதும், தமிழ்நாடு அரசின் தலையாய நோக்கம் ஆகும். கூட்டாட்சிக் கோட்பாடுகளுக்குட்பட்டு, மாநில சுயாட்சியே தமிழ்நாட்டின் நிலைப்பாடாகும். தமிழ்நாடு அரசு, அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளைப் பின்பற்றி மாநிலத்தின் வளர்ச்சி நோக்கி தொடர்ந்து செயல்படும் அரசாக இயங்கி வருகிறது.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான சிறப்பு வழிவகைகளை உருவாக்க மாநில அரசிற்கு அதிகாரம் அளிக்கும் அரசியலமைப்பின் 15 (3)-வது பிரிவின் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்தமையால், தனது செயல்பாடுகளில், விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை வகுத்து சிறப்பான முறையில் அவற்றை செயல்படுத்தி, அரசியலமைப்பின்படி மகளிர் மற்றும் சிறார்களின் அடிப்படை உரிமைகளை மேலோங்க செய்வதில் இவ்வரசு பெருமை கொள்கிறது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 76-வது ஆண்டினை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் நாளை காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்திலுள்ள அனைத்துத் துறைகளிலும், மாண்பமை ஐகோர்ட்டு மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்துத்துறை தலைமை அலுவலகங்கள், அனைத்து சார் நிலை அரசு அலுவலகங்கள், மாநில அரசின் அனைத்து அலுவலகங்கள், தன்னாட்சி அதிகார அமைப்புகள், நிறுவனங்கள், தன்னாட்சி அரசு நிறுவனங்கள், அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்க வேண்டும்.
மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் மற்றும் அரசியலமைப்பு நெறிமுறைகள் பற்றிய பேச்சுப் போட்டிகள், கருத்தரங்குகள், வினாடி வினா நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- நேற்று அனைத்து உறுப்பினர்களுக்கும் அரசியலமைப்பு சட்டத்தின் பிரதி வழங்கப்பட்டது
- 1976ல் இந்திரா காந்தி கொண்டு வந்த திருத்தம் செல்லாது என டாக்டர். சுவாமி வழக்கு தொடர்ந்துள்ளார்
இந்திய தலைநகர் புது டெல்லியில் ரெய்சினா ஹில் பகுதியில் சென்ட்ரல் விஸ்டா எனும் பெயரில் இந்தியா முழுவதிற்குமான மத்திய அரசாங்கத்தின் நிர்வாக அலுவலகங்கள் இருக்கின்றன. இப்பகுதியை மேம்படுத்தும் திட்டத்தின்படி, ஒரு புதிய பாராளுமன்ற கட்டிடமும் கட்டப்பட்டது.
இக்கட்டிடத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த மே 28 அன்று திறந்து வைத்தார். அதிகாரபூர்வமாக அலுவல்களை தொடங்க, புதிய கட்டிடத்திற்குள் நேற்று மதியம் சுமார் 01:00 மணியளவில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினரும் சென்றனர். பழைய பாராளுமன்ற கட்டிடத்திற்கு "சம்விதான் சதன்" என பெயரிட பிரதமர் பரிந்துரை செய்தார்.
அப்போது அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரசியலமைப்பு சட்டத்தின் பிரதி வழங்கப்பட்டது.
இப்பிரதியை கண்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மக்களவை எதிர்கட்சி தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஒரு முக்கிய குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அதில் அவர் கூறியதாவது:
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் "முன்னுரை" (preamble) பகுதியில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் 1976ல் கொண்டு வரப்பட்ட 42-வது திருத்தத்தின்படி சேர்க்கப்பட்ட "செக்யூலர்" மற்றும் "சோஷலிஸ்ட்" எனும் இரு வார்த்தைகள் தற்போது வழங்கப்பட்ட பிரதிகளில் இடம்பெறவில்லை. மதசார்பின்மையை வலியுறுத்தவும் சிறுபான்மையினரின் உரிமைகளை காக்கவும் "செக்யூலர்" எனும் வார்த்தையும், பணக்காரர்களிடமே செல்வம் குவிந்திருக்கும் நிலையை தடுக்கவும், சமதர்மத்தை வலியுறுத்தும் விதமாகவும் "சோஷலிஸ்ட்" எனும் வார்த்தையும் அப்போது சேர்க்கப்பட்டன. தற்போது இவை வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டிருக்கலாம் என அச்சப்படுகிறேன்" இவ்வாறு ஆதிர் ரஞ்சன் தெரிவித்தார்.
"முதல் முதலாக அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்ட போது இப்படித்தான் இருந்தது. அதில் அந்த இரண்டு வார்த்தைகளும் இல்லை. பல வருடங்கள் கழித்து 1976ல் தான் இடையில் அந்த வார்த்தைகள் சேர்க்கப்பட்டன. உறுப்பினர்களிடம் தற்போது முதல்முதலாக உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு சட்டத்தின் பிரதிதான் வழங்கப்பட்டிருக்கிறது" என இதற்கு பதிலளித்த இந்திய சட்ட மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் கூறினார்.
ஏற்கெனவே, பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர். சுப்ரமணியன் சுவாமி, இந்த இரு வார்த்தைகளையும் அரசியலமைப்பு சட்டத்தில் சேர்த்தது சட்டபூர்வமாக செல்லாது என அறிவிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் கடந்த வருடம் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறி உள்ளதா என்பது குறித்து விவாதிக்க வேண்டும்.
- சாதாரண மக்களுக்கு நீதி விலை உயர்ந்ததாக உள்ளது.
சென்னை:
சென்னை பெருங்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கூறியதாவது:
இந்திய அரசியலமைப்பு சட்டம் முழுமை பெறாத ஆவணமாக உள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறி உள்ளதா என்பது குறித்து விவாதிக்க வேண்டும்.
நீதிமன்றங்கள் மட்டுமின்றி சட்ட பல்கலைக்கழகங்களிலும் அரசியலமைப்பு சட்டம் குறித்து விவாதிக்க வேண்டும்.
சுதந்திரத்திற்காக போராடும்போது நாம் ஒற்றுமையாக இருந்தோம். தற்போது, அவரவர் தாய் நிலம் என்றும் தாய்மொழி என்றும் பிரிந்து உள்ளோம்.
மாநிலங்கள் என்ற அளவில் பிரித்து நாம் வைக்கப்பட்டுள்ளோம். நம்மிடையே பிரிவினையை ஏற்படுத்தும் பல்வேறு கருத்துகள் இங்கே பரவி உள்ளது.
சாதாரண மக்களுக்கு நீதி விலை உயர்ந்ததாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பா.ஜ.க. அல்லாத மாநிலங்களில் தொழிலதிபர்களை குறி வைத்து அமலாக்கத்துறையினர் மிரட்டுகின்றனர்.
- ஒரு மசோதாவை நிறைவேற்றினால் 6 வாரங்களுக்குள் அனுமதி தர வேண்டும் என அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது.
நெல்லை:
சபாநாயகர் அப்பாவு இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் இடைத்தரகர்கள் மூலம் என்னை மிரட்டின.
* ஊரை விட்டு எல்லாம் போக சொன்னார்கள், செல்போன் நம்பரை மாற்ற சொன்னார்கள்.
* 3 மாதமாக இடைத்தரகர்கள் பலர் என்னிடம் பேசினார்கள்.
* பா.ஜ.க. அல்லாத மாநிலங்களில் தொழிலதிபர்களை குறி வைத்து அமலாக்கத்துறையினர் மிரட்டுகின்றனர்.
* என்னைப்போன்று எல்லோருக்கும் மத்திய அரசின் புலனாய்வு நிறுவனங்கள் இடைத்தரகர்கள் மூலமாக மிரட்டல் விடுக்கின்றன.
* பண பேரம் பேசி படியவில்லை என்றால் நோட்டீஸ் அனுப்பி அமலாக்கத்துறை எச்சரிக்கிறது.
* நான் சரியாக இருக்கிறேன் என்ன வந்தாலும் மேலே இருப்பவர் பார்த்துக்கொள்வார் என்றேன்.
* ஒரு மசோதாவை நிறைவேற்றினால் 6 வாரங்களுக்குள் அனுமதி தர வேண்டும் என அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது.
* ஆனால் எவ்வளவு காலம் முடியுமோ அவ்வளவு காலம் மசோதாக்களை கவர்னர் கிடப்பில் போடுகிறார்.
* கவர்னர் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
* அரசியல் அமைப்பு சட்டத்தை மீறி மதசார்புடைய நாடு இந்தியா என கவர்னர் பேசி வருகிறார் என்று அவர் கூறினார்.






