என் மலர்
நீங்கள் தேடியது "பள்ளிகள்"
- வெடிகுண்டு மிரட்டல் வந்த உடன் உடனடியாக பள்ளிகளை மூடிய நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
- வெடிகுண்டு மிரட்டலை உறுதிபடுத்திய டி.எஸ்.பி. ஹர்சிம்ரன் சிங் பால், பள்ளிகளை மூடி தேடுதல் நடவடிக்கை நடத்தப்பட்டு வருவதாக கூறினார்.
பஞ்சாப் மாநிலம் மொகாலியில் பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்த உடன் உடனடியாக பள்ளிகளை மூடிய நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
பள்ளிகளுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலை உறுதிபடுத்திய டி.எஸ்.பி. ஹர்சிம்ரன் சிங் பால், பள்ளிகளை மூடி தேடுதல் நடவடிக்கை நடத்தப்பட்டு வருவதாக கூறினார்.
மொகாலியில் யத்விந்திரா பப்ளிக் பள்ளி, மானவ் மங்கள் பப்ளிக் பள்ளி, ரியான் இன்டர்நேஷனல் பள்ளி, பாரகன் பள்ளி, ஷெம்ராக் பள்ளி மற்றும் பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
மொகாலி போலீசார், வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் பல்வேறு பள்ளிகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.
- குவாடலஜாரா முழுவதும் உள்ள பள்ளிகளில் முகக்கவசம் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
- மெக்சிகோ நாடு முழுவதும் 2,143 தட்டம்மை பாதிப்புகள் பதிவாகி உள்ளன.
மெக்சிகோ தட்டம்மை நோய் பரவல் காரணமாக அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம், பள்ளிகளில் சுகாதாரப் பரிசோதனைகளை அதிகரித்துள்ளதாகவும், மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு முகக்கவசம் பயன்படுத்த பரிந்துரைத்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.
மெக்சிகோவின் ஜலிஸ்கோ மாநிலத்தில் கடந்த வாரம் எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மெக்சிகோவின் இரண்டாவது பெரிய நகரமான குவாடலஜாரா முழுவதும் உள்ள பள்ளிகளில் முகக்கவசம் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மெக்சிகோ நாடு முழுவதும் 2,143 தட்டம்மை பாதிப்புகள் பதிவாகி உள்ளன. மேலும் 6,000 பேருக்கு நோய் பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுநோய்களில் பாதிக்கும் மேற்பட்டவை ஜலிஸ்கோவில் பதிவாகின. இருப்பினும் இப்போது மெக்சிகோவின் வடக்குப் பகுதியிலிருந்து தெற்கு எல்லைகள் வரை நோய் பரவல் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அடுத்த 30 நாட்களுக்கு ஏழு குறிப்பிட்ட சுற்றுப்புறங்களில் உள்ள குவாடலஜாரா பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம் என்று ஜலிஸ்கோ சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
- நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் நாப்கின்களை இலவசமாக வழங்குவது கட்டாயம்.
- மாணவிகளுக்கென தண்ணீர் வசதியுடன் கூடிய தனி கழிப்பறையை உறுதிசெய்ய வேண்டும்.
புதுடெல்லி:
மத்திய அரசின் மாதவிடாய் சுகாதாரக் கொள்கையை, நாட்டின் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் செயல்படுத்தக் கோரி ஜெயா தாக்கூர் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், வாழ்வுரிமை என்பது மாதவிடாய் காலத்தில் உடலை சுகாதாரமாக பராமரிப்பதையும் உள்ளடக்கியது. நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் நாப்கின்களை இலவசமாக வழங்குவது கட்டாயம். மாணவிகளுக்கென தண்ணீர் வசதியுடன் கூடிய தனி கழிப்பறையை உறுதி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதன் மூலம்தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் அளவிடப்படுகிறது. இதுதொடர்பாக 3 மாதத்துக்குள் இணக்க அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
- வெடிகுண்டு மிரட்டலையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் பள்ளி வளாகத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
- போலீஸ் குழுக்கள் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று முழுமையான தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டன.
சண்டிகரில் உள்ள சில பள்ளிகளுக்கு மின்னஞ்சல்கள் மூலம் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் பள்ளி வளாகத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீஸ் குழுக்கள் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று முழுமையான தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டன. இதுவரை எந்த சந்தேகத்திற்கிடமான பொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை.
- ஏகலைவா பள்ளிப் பணிகளுக்கான தேர்வுகளில் தமிழ் இணைக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட வேண்டும்.
- ஆர்.எஸ்.எஸ். போடும் இந்த இரட்டை வேடத்தை தமிழர்கள் தெளிவாகப் புரிந்துகொள்வார்கள்.
அகில இந்திய அளவில் நடைபெறும் ஏகலைவா பள்ளிகளில், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணிகளுக்கான தேர்வு எழுதுவதில், தமிழ்ப் புறக்கணிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், "ஏகலைவா பள்ளிகள் என்ற பெயரில் இந்தியா முழுவதும் உள்ள மலைவாழ் மாணவர்களுக்கென ஒன்றிய அரசு நடத்தும் ஏகலைவா மாடல் ரெசிடென்சியல் ஸ்கூல் (EMRS) – பள்ளிகள் தமிழ்நாட்டில் விழுப்புரம், சேலம், ஊட்டி, திருவண்ணாமலை, வேலூர், நாமக்கல், காஞ்சிபுரம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் சி.பி.எஸ்.இ பாடத் திட்டத்தில் செயல்படுகின்றன.
தமிழ்நாட்டில் ஏகலைவா பள்ளி...
தமிழுக்கு இடமில்லை!
கடந்த 19.09.2025 இல் மேல்நிலைப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளி ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணிகளுக்கான அறிவிப்பு வெளியான நிலையில், அதற்கான தேர்வுகள் 13.12.2025,14.12.2025 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. தேர்வில் பகுதி-6 இல் மொழிகளுக்கான பகுதியில் ஆங்கிலம், அசாமி, வங்காளம், போடோ, டோகிரி, கரோ, குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், காஷ்மீரி, காசி, மலையாளம், மணிப்பூரி, மராத்தி, மிசோ, நேபாளி, ஒடிசா, சந்தலி, தெலுங்கு, உருது உள்ளிட்ட மொழிகள் இடம்பெற்றன.
உள்ளூர் மொழிகள் காலிப் பணியிடங்களின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு, தமிழ்நாட்டு மாணவர்கள் அனைவரும் மொழிப் பட்டியலில், தமிழ் இல்லாத காரணத்தால் பகுதி-6 இல் ஆங்கிலத்தையே தேர்ந்தெடுத்து எழுத வேண்டிய இக்கட்டான சூழல் அமைந்தது. பகுதி 6-இன் 30 மதிப்பெண்களுக்கு 12 தகுதி மதிப்பெண்கள் எடுக்க வேண்டிய சூழலில், 10 கேள்விகளுக்குக் கட்டாயம் ஹிந்தியிலும், 10 கேள்விகளுக்குக் கட்டாயம் ஆங்கிலத்திலும் பதில் அளிக்க வேண்டும். அடுத்து உள்ள உள்ளூர் மொழி என்னும் பிரிவுக்கான 10 மதிப்பெண்களுக்கு என குறிக்கப்பட்டுள்ள மொழிகளில் தமிழ் இல்லாத காரணத்தால், அப் பிரிவிற்கும் ஆங்கிலத்தையே தேர்வு செய்து எழுத வேண்டிய கடுமையான நிலை தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மட்டும் நேர்ந்துள்ளது.
40% மதிப்பெண்கள் கட்டாயமாம்!
அனைத்திந்தியத் தேர்வுகள் எதிலும், இந்தியக் குடிமக்களாகப் பங்கேற்றுப் பணியில் தேர்வடைய எல்லோருக்கும் உரிமை உண்டு - தமிழர்களுக்கும் உண்டு. ஆனால், கட்டாயம் 40% மதிப்பெண்கள் எடுத்தால் தான், பிற கேள்விகளே திருத்தப்படும் என்று சொல்லப்படக் கூடிய கட்டாயமான மொழிப் பிரிவில் தமிழ் ஏன் இடம்பெறவில்லை?
தமிழ்நாட்டில் ஏகலைவா பள்ளிகள் இருக்கின்றன. அதில் பணியாற்ற மாட்டார்களா? அது குறித்த விவரம் என்ன? கடந்த சில ஆண்டுகளாகத் தமிழுக்கான ஆசிரியர்களே ஒன்றிய அரசின் கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளில் நிரப்பப்படவில்லை என்பது ஒன்றிய அரசின் வாயிலாகவே வெளிப்பட்டதே! அதே போல, ஏகலைவா பள்ளிகளில் உள்ள நிலைமை என்ன? எத்தனை இடங்கள் உள்ளன? அவற்றில் இட ஒதுக்கீட்டின் நிலை எவ்வாறு இருக்கிறது? தமிழ்நாட்டுப் பள்ளிகளில் நிரப்பப்படாத பணியிடங்கள் எவ்வளவு? போன்ற கேள்விகள் எழுகின்றன.
இவற்றுக்கு உரிய பதில்களை ஒன்றிய அரசு தரவேண்டாமா?
தேர்வில் உள்ளூர் மொழிகளில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதன் மூலம் தமிழ்நாட்டு மாணவர்களுக்கான வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளதே! இது அநீதி அல்லவா?
ஒரே ஆண்டில் இரு காசி தமிழ்ச் சங்கமத்தின் பின்னணி!
தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி தங்கள் பிரச்சாரத்திற்காக, காசித் தமிழ்ச் சங்கமம் என்ற பெயரில் "சங்கிமத்"தைத் ஒரே ஆண்டில் இரண்டு முறை நடத்திய ஒன்றிய அரசு, தமிழைப் போற்றுவதாக வேடம் போடும் ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. அரசு, தமிழுக்குத் தர வேண்டிய உரிமையை மறுப்பதேன்?
''தமிழுக்காகப் பேசுகிறோம், தமிழுக்காக உருகுகிறோம்'' என்றெல்லாம் நாடகமாடும் ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. அரசின் இரட்டை வேடத்திற்கு இதைவிட வேறென்ன சாட்சி வேண்டும்?
தமிழுக்கு உரிய நிதியையும் ஒதுக்காமல், தமிழர்களுக்கு உரிய வேலை வாய்ப்பையும் பறிக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுக் கொண்டு, ஆர்.எஸ்.எஸ். போடும் இந்த இரட்டை வேடத்தை தமிழர்கள் தெளிவாகப் புரிந்துகொள்வார்கள்.
ஏகலைவா பள்ளிப் பணிகளுக்கான தேர்வுகளில் தமிழ் இணைக்கப்பட்டு, மீண்டும் தேர்வு நடத்தப்பட வேண்டும். இந்த அநீதிக்குரிய பரிகாரம் வழங்கப்படவேண்டும். இல்லையேல், தமிழ்நாடெங்கும் கிளர்ச்சியைத் தொடங்க வேண்டி இருக்கும். நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது குறித்து குரல் எழுப்பிட வேண்டும்.
தமிழ் புறக்கணிப்பை, ஹிந்தித் திணிப்பை எந்த நிலையிலும் தமிழ்நாடு பொறுத்துக் கொள்ளாது. நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் களத்திலும் இப்பிரச்சினை நிச்சயம் எதிரொலிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
- சுமார் 17,000 அரசுப் பள்ளிகளின் பாடத்திட்டத்தில் பகவத்கீதை மற்றும் ராமாயணத்தை சேர்க்குமாறு NCERT-யிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
- ஸ்லோகத்தை வாசிப்பதோடு மட்டுமல்லாமல், அதன் பொருள் மற்றும் அதன் அறிவியல் ரீதியான தொடர்பு குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விளக்க வேண்டும்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் பகவத் கீதையின் வாசகங்களை வாசிப்பதை கட்டாயமாக்கி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவர்களிடையே இந்திய கலாச்சாரம், தார்மீக விழுமியங்கள், சுய ஒழுக்கம் மற்றும் தலைமைப் பண்புகளை வளர்ப்பதே இந்த முயற்சியின் நோக்கம் என்று முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக உத்தரகாண்ட் கல்வி அமைச்சர் தன் சிங் ராவத் கூறுகையில், "சுமார் 17,000 அரசுப் பள்ளிகளின் பாடத்திட்டத்தில் பகவத்கீதை மற்றும் ராமாயணத்தை சேர்க்குமாறு NCERT-யிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இது செயல்படுத்தப்படும் வரை, பள்ளிகளில் தினசரி பிரார்த்தனைக் கூட்டங்களில் பகவத் கீதை மற்றும் ராமாயணத்தின் வசனங்கள் சேர்க்கப்படும்" என்றார்.
உத்தரகாண்ட் அரசின் இந்த புதிய உத்தரவுபடி, பள்ளிகளில் காலை வழிபாட்டுக் கூட்டத்தின் போது தினமும் ஒரு பகவத்கீதை ஸ்லோகம் வாசிக்கப்பட வேண்டும். ஸ்லோகத்தை வாசிப்பதோடு மட்டுமல்லாமல், அதன் பொருள் மற்றும் அதன் அறிவியல் ரீதியான தொடர்பு குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விளக்க வேண்டும்.
இதுமட்டுமின்றி ஒவ்வொரு வாரமும் ஒரு குறிப்பிட்ட ஸ்லோகம் (Shloka of the Week) தேர்ந்தெடுக்கப்பட்டு, அது பள்ளி அறிவிப்புப் பலகையில் காட்சிப்படுத்தப்படும். ஒவ்வொரு வாரத்தின் முடிவிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட வசனம் வகுப்பறைகளில் விவாதிக்கப்படும், மேலும் மாணவர்களின் கருத்துக்கள் சேகரிக்கப்படும். இது மாணவர்களிடம் புரிதலையும், ஈடுபாட்டையும் ஆழப்படுத்த உதவும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைக்கு அம்மாநில கல்வித்துறைகள் பலவும் ஆதரவு தெரிவித்துள்ளன. உத்தரகண்ட் மதர்சா கல்வி வாரியத் தலைவர் முஃப்தி ஷாமூன் காஸ்மி இந்த முடிவை வரவேற்று, "ராமர் மற்றும் கிருஷ்ணர் இருவரும் நமது மூதாதையர்கள், ஒவ்வொரு இந்தியரும் அவர்களைப் பற்றி அறிந்து கொள்வது முக்கியம்" என்று கூறியுள்ளார்.
- அரசியலமைப்பின்படி மகளிர் மற்றும் சிறார்களின் அடிப்படை உரிமைகளை மேலோங்க செய்வதில் இவ்வரசு பெருமை கொள்கிறது.
- பள்ளி, கல்லூரிகளில் பேச்சுப் போட்டிகள், கருத்தரங்குகள், வினாடி வினா நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மக்களாட்சித் தத்துவத்தின் மாண்பினை உள்ளடக்கி இந்தியத் திருநாட்டினை வளமான பாதையில் முன்னெடுத்து செல்லும் ஓர் உன்னத உருவாக்கம், அண்ணல் அம்பேத்கர் வடிவமைத்துத் தந்த நமது அரசியலமைப்புச் சட்டமாகும்.
தமிழ்நாடு அரசு, இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளைப் போற்றிப் பாதுகாத்து, சமூகநீதி, சமநிலை மற்றும் மக்கள் நலனிற்காக அயராது பாடுபட்டு வருகிறது.
தமிழ்நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதும், ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு, சகோதரத்துவம் மற்றும் பொதுநலத்தை உறுதிப்படுத்துவதும், தமிழ்நாடு அரசின் தலையாய நோக்கம் ஆகும். கூட்டாட்சிக் கோட்பாடுகளுக்குட்பட்டு, மாநில சுயாட்சியே தமிழ்நாட்டின் நிலைப்பாடாகும். தமிழ்நாடு அரசு, அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளைப் பின்பற்றி மாநிலத்தின் வளர்ச்சி நோக்கி தொடர்ந்து செயல்படும் அரசாக இயங்கி வருகிறது.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான சிறப்பு வழிவகைகளை உருவாக்க மாநில அரசிற்கு அதிகாரம் அளிக்கும் அரசியலமைப்பின் 15 (3)-வது பிரிவின் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்தமையால், தனது செயல்பாடுகளில், விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை வகுத்து சிறப்பான முறையில் அவற்றை செயல்படுத்தி, அரசியலமைப்பின்படி மகளிர் மற்றும் சிறார்களின் அடிப்படை உரிமைகளை மேலோங்க செய்வதில் இவ்வரசு பெருமை கொள்கிறது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 76-வது ஆண்டினை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் நாளை காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்திலுள்ள அனைத்துத் துறைகளிலும், மாண்பமை ஐகோர்ட்டு மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்துத்துறை தலைமை அலுவலகங்கள், அனைத்து சார் நிலை அரசு அலுவலகங்கள், மாநில அரசின் அனைத்து அலுவலகங்கள், தன்னாட்சி அதிகார அமைப்புகள், நிறுவனங்கள், தன்னாட்சி அரசு நிறுவனங்கள், அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்க வேண்டும்.
மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் மற்றும் அரசியலமைப்பு நெறிமுறைகள் பற்றிய பேச்சுப் போட்டிகள், கருத்தரங்குகள், வினாடி வினா நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- வெடிகுண்டு நிபுணர்கள் 4 பள்ளிகளிலும் ஒவ்வொரு அறைகளாக சோதனை செய்தனர்.
- வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? என்று தெரியவில்லை.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் புல்லர்னில் உள்ள 4 பள்ளிகளுக்கு தொடர் வெடி குண்டு மிரட்டல்கள் வந்தது.
அங்குள்ள சன்னிஹில் பள்ளி, யூனியன் பள்ளி, டிராய் மற்றும் பெர்ன் டிரைவ் பள்ளிகளுக்கு தொலைபேசி மூலம் பள்ளியில் குண்டுகள் வைக்கப்பட்டு உள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதையடுத்து அந்த பள்ளிகளில் இருந்து மாணவர்கள் அவசர, அவசரமாக வெளியேற்றப்பட்டு யாரும் உள்ளே செல்லாமல் இருக்க பூட்டப்பட்டது.
பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் 4 பள்ளிகளிலும் ஒவ்வொரு அறைகளாக சோதனை செய்தனர். இறுதியில் அது வெறும் புரளி என தெரியவந்தது.
இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? என்று தெரியவில்லை. இந்த சம்பங்களால் புல்லர்டன் பகுதி பரபரப்பாக காணப் பட்டது. மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பீதி நிலவியது.
- தீபாவளி பண்டிகை கடந்த அக்.20-ந்தேதி கொண்டாடப்பட்டது.
- விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 25-ந் தேதி பணி நாளாக செயல்பட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி இருந்தது.
தீபாவளி பண்டிகை கடந்த அக்.20-ந்தேதி கொண்டாடப்பட்டது. தீபாவளி விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு சென்று திரும்புபவர்களுக்கு வசதியாக, கடந்த 21-ந்தேதி (செவ்வாய்கிழமை) பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 25-ந் தேதி பணி நாளாக செயல்பட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி இருந்தது.
அதன்படி, சென்னையில் இன்று அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் இயங்கும். செவ்வாய்க்கிழமை பாடவேளையை பின்பற்றி முழு பணி நாளாக செயல்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி சென்னையில் இன்று அனைத்து பள்ளிகளும் செயல்படுகிறது.
- கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை அளிக்க பள்ளிக்கல்வித்துறை அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
- இன்று மதியம் அறிவிக்கப்பட்டுள்ள மாதாந்திர தேர்வுகளை மற்றொரு நாளில் நடத்திட வேண்டும்.
விநாயகர் சதுர்த்தி விழாவின்போது பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் வழிபாட்டுக்கு பின்னர் இன்று நீர்நிலைகள் மற்றும் ஆறுகளில் கரைக்க பக்தர்கள் தயாராகி வருகிறார்கள்.
தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை 2 கட்டங்களாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள 312 சிலைகளையும் ஊர்வலமாக சென்று இன்று நீர்நிலைகளில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதன் காரணமாக தென்காசி அருகே கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை அளிக்க அம்மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
விநாயகர் ஊர்வலத்தையொட்டி போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் இன்று அரைநாள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். இன்று மதியம் அறிவிக்கப்பட்டுள்ள மாதாந்திர தேர்வுகளை மற்றொரு நாளில் நடத்திட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது.
- நேற்று 50 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் அனுப்பப்பட்டது.
- இந்த வாரம் 3-வது முறையாக இன்றும் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது தொடர்கதையாக உள்ளது. கடந்த திங்கட்கிழமை மர்ம நபர்களால் பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் அனுப்பப்பட்டது.
இதே போல் நேற்றும் மால்வியா நகரில் உள்ள எஸ்.கே.வி. அவுஸ், கரோல் பாக் பகுதியில் உள்ள ஆந்திரப் பள்ளிகள் உள்ளிட்ட 50 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் அனுப்பப்பட்டது.
வெடிகுண்டு மிரட்டலையடுத்து பள்ளி மாணவர்கள் வெளியேற்றப்பட்டு மோப்ப நாய்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் கொண்டு போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். பள்ளிகளில் வெடிகுண்டுகள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்தது.
இந்நிலையில் இந்த வாரம் 3-வது முறையாக இன்று பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன. டெல்லியில் உள்ள பிரசாத் நகர் மற்றும் துவாரகா செக்டார் 5 உட்பட 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன.
தகவல் அறிந்து காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் உடனடியாக பள்ளிக்கு விரைந்தனர். பள்ளி மாணவர்கள் வெளியேற்றப்பட்டு மோப்ப நாய்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் கொண்டு போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர்.
- நேற்று முன்தினமும் மர்ம நபர்களால் பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் அனுப்பப்பட்டது.
- டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது தொடர்கதையாக உள்ளது.
புதுடெல்லி:
டெல்லி மால்வியா நகரில் உள்ள எஸ்.கே.வி. அவுஸ், கரோல் பாக் பகுதியில் உள்ள ஆந்திரப் பள்ளிகள் உள்ளிட்ட 50 பள்ளிகளை குறிவைத்து கடந்த 48 மணி நேரத்திற்குள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.
இதேபோல் நேற்று முன்தினமும் மர்ம நபர்களால் பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் அனுப்பப்பட்டது.
பள்ளி மாணவர்கள் வெளியேற்றப்பட்டு மோப்ப நாய்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் கொண்டு போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். பள்ளிகளில் வெடிகுண்டுகள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை.
கடந்த மாதம் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மிரட்டல் விடுத்த 12 வயது சிறுவன் ஒருவனை போலீசார் கைது செய்தனர். விசாரித்ததில் அவன் விளையாட்டாக செய்ததாக சொல்ல அந்த சிறுவனை எச்சரித்து அனுப்பினர்.
டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது தொடர்கதையாக உள்ளதால் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.






