என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் பள்ளிகள் இன்று இயங்கும்- பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
- தீபாவளி பண்டிகை கடந்த அக்.20-ந்தேதி கொண்டாடப்பட்டது.
- விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 25-ந் தேதி பணி நாளாக செயல்பட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி இருந்தது.
தீபாவளி பண்டிகை கடந்த அக்.20-ந்தேதி கொண்டாடப்பட்டது. தீபாவளி விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு சென்று திரும்புபவர்களுக்கு வசதியாக, கடந்த 21-ந்தேதி (செவ்வாய்கிழமை) பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 25-ந் தேதி பணி நாளாக செயல்பட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி இருந்தது.
அதன்படி, சென்னையில் இன்று அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் இயங்கும். செவ்வாய்க்கிழமை பாடவேளையை பின்பற்றி முழு பணி நாளாக செயல்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி சென்னையில் இன்று அனைத்து பள்ளிகளும் செயல்படுகிறது.
Next Story






