என் மலர்
நீங்கள் தேடியது "இந்தி"
- அருந்ததி திரைப்படம் தெலுங்கில் மட்டுமில்லாமல் தமிழிலும் மாபெரும் வரவேற்பை பெற்றது.
- அருந்ததி படம் ரூ.60 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்து சாதனை படைத்தது.
அனுஷ்கா நடிப்பில் 2009ல் வெளியான 'அருந்ததி' திரைப்படம் தெலுங்கில் மட்டுமில்லாமல் தமிழிலும் மாபெரும் வரவேற்பை பெற்றது.
அன்றைய காலகட்டத்திலேயே இப்படம் ரூ.60 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்து சாதனை படைத்தது.
ஒன்னிலையில் 'அருந்ததி' திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மோகன் ராஜா இயக்கும் இப்படத்தில் அருந்ததியாக ஸ்ரீலீலா நடிக்கவுள்ளதாகவும், 2026 ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
- மு.க.ஸ்டாலின் மெட்ரோ தொடர்வண்டி நிலையத்தில் மட்டும் மும்மொழிக் கொள்கையை கடைபிடித்தது ஏன்?
- திமுக அரசின் சொல்லுக்கும் செயலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை அசோக்நகர் மெட்ரோ தொடர்வண்டி நிலையத்தில் அசோக் நகர் என்ற பெயர் தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றுடன் இந்தியிலும் எழுதப்பட்டிருப்பது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. திமுக அரசின் இந்த நவீன இந்தித் திணிப்புக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து மெட்ரோ தொடர்வண்டி நிர்வாகம் இந்தி எழுத்துகளை மட்டும் வெள்ளைக் காகிதத்தை ஒட்டி மறைத்திருக்கிறது. இந்த நவீன இந்தித் திணிப்பு முயற்சி கண்டிக்கத்தக்கது.
சென்னை மெட்ரோ தொடர்வண்டித் திட்டம் மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டாலும் கூட, அதன் நிர்வாக அதிகாரம் தமிழக அரசிடம் தான் உள்ளது. தமிழ்நாடு பிரிவு இ.ஆ.ப. அதிகாரி தான் அதன் மேலாண் இயக்குனராக உள்ளார். இத்தகைய சூழலில் மெட்ரோ தொடர்வண்டி நிலையத்தில் இந்தி எழுத்துகள் இடம் பெற்றது எப்படி? என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.
மத்திய அரசு நிறுவனங்கள் மூலம் இந்தி திணிக்கப்பட்டால், அதற்கு எதிராக முழங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இப்போது அவரது அரசின் இந்தித் திணிப்பைக் கண்டும் காணாமலும் அமைதியாக இருப்பது ஏன்? இரு மொழிக் கொள்கை தான் தங்களின் கொள்கை என்று கூறி வரும் மு.க.ஸ்டாலின் மெட்ரோ தொடர்வண்டி நிலையத்தில் மட்டும் மும்மொழிக் கொள்கையை கடைபிடித்தது ஏன்?
அசோக் நகர் மெட்ரோ தொடர்வண்டி நிலையத்தில் நடந்த இந்தித் திணிப்பு முயற்சிக்கு எதிர்ப்பு எழுந்ததன் காரணமாகத் தான் இந்தி எழுத்துகள் காகிதம் ஒட்டி மறைக்கப்பட்டன. இல்லாவிட்டால் மெட்ரோ தொடர்வண்டி நிர்வாகம் முழுவதும் இந்தி திணிக்கப்பட்டிருக்காது என்பதற்க்கு என்ன உத்தரவாதம்?
திமுக அரசின் சொல்லுக்கும் செயலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது. தமிழக மக்கள் மீது தமிழக அரசு நிறுவனம் மூலம் இந்தியை திணிக்க முயன்றதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இந்தியை கற்றுக் கொள்வதால் எந்த தீங்கும் ஏற்படாது.
- பவன் கல்யாண் பேசிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.
ஆந்திராவில் மாநில மொழித்துறை பொன்விழா கூட்டத்தில் துணை முதல்- மந்திரி பவன் கல்யாண் கலந்து கொண்டார். இதில் அவர் பேசியதாவது:-
தெலுங்கு எங்கள் தாய்மொழியாக இருக்கலாம், ஆனால் எங்கள் தேசிய மொழி இந்தி. வீட்டில் தொடர்பு கொள்ள தெலுங்கு உள்ளது.
ஒரு வங்காளப் பாடல் தேசிய கீதமாக மாறியது. பஞ்சாபி பகத் சிங் நாட்டிற்காகப் போராடிய புரட்சியாளராக ஆனார். ராஜஸ்தானைச் சேர்ந்த ராணா பிரதாப் துணிச்சலின் அடையாளமாக ஆனார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த அப்துல் கலாம் இந்தியாவின் ஏவுகணை நாயகன் ஆனார். ஒவ்வொரு மொழியும் ஒரு வாழும் மொழி. இந்தி கற்கவேண்டும் இதில் எந்த தவறும் இல்லை. அதிக அளவில் தென் மாநில மொழிப்படங்கள் இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகின்றன. இந்தியை கற்றுக் கொள்வதால் எந்த தீங்கும் ஏற்படாது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த பேச்சுக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் இந்த அளவுக்கு விற்கீறீர்களா? ச்சீ... அச்சச்சோ... எவ்வளவு வெட்கக்கேடானது என பதிவிட்டார். மேலும் பவன் கல்யாண் பேசிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.
பிரகாஷ்ராஜின் இந்த பதிவு பவன் கல்யாண் ரசிகர்களை கோபமுடைய செய்துள்ளது. அவர்கள் எக்ஸ்தளத்தில் பிரகாஷ்ராஜிக்கு கடுமையான பதிலடி கொடுத்து வருகின்றனர்.
ஏய் அயோக்கியனே, உன்னைப் பார்த்தால் செருப்பால் அடிப்போம். படத்தில் நடித்த போது உண்மையிலேயே பவன் கல்யாண் உன்னை அடித்தாரா ஜாக்கிரதை என ரசிகர்கள் பதிவிட்டனர்.
நடிகர்கள் பவன் கல்யாண்- பிரகாஷ்ராஜ் மோதல் ஆந்திராவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- இந்தியாவின் எந்தவொரு மொழிக்கும் இந்தி எதிராக இருக்க முடியாது என்பதை மனதார நம்புகிறேன்.
- எந்தவொரு வெளிநாட்டு மொழிக்கும் எதிர்ப்பு இருக்கக் கூடாது.
மத்திய அரசின் அலுவலக மொழித்துறையின் 50ஆவது ஆண்டு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்தியாவின் எந்தவொரு மொழிக்கும் இந்தி எதிராக இருக்க முடியாது என்பதை மனதார நம்புகிறேன். இந்தி இந்தியாவின் அனைத்து மொழிகளுக்கும் நண்பன். எந்த மொழிக்கும் எதிர்ப்பு இருக்கக் கூடாது. எந்தவொரு வெளிநாட்டு மொழிக்கும் எதிர்ப்பு இருக்கக் கூடாது.
ஆனால் ஒருவரின் சொந்த மொழியைப் போற்றுவதற்கான, சொந்த மொழியைப் பேசுவதற்கான, சொந்த மொழியில் சிந்திப்பதற்கான உந்துதல் இருக்க வேண்டும். இந்திய மொழிகளை உயிருடன் வைத்திருப்பதும், அவற்றை வளப்படுத்துவதும் முக்கியம். வரும் நாட்களில் அனைத்து இந்திய மொழிகளுக்கும், குறிப்பாக அதிகாரப்பூர்வ மொழிக்கு நாம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.
- ராஜீவ் சிலை சதுக்கங்கள் மற்றும் கிராம பகுதிகளில் இந்த விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
- மத்திய, மாநில அரசுகள் தமிழை புறக்கணிப்பு செய்வதை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
புதுச்சேரி:
மத்திய அரசின் ஆயுஷ் நிறுவனம் சார்பில் நாளை (செவ்வாய்கிழமை) சர்வதேச யோகா மஹோற்சவ விழா நடக்கிறது.
புதுவை கடற்கரை சாலையில் நடைபெறும் திருவிழாவில் கவர்னர், முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அரசு உயர் அதிகாரிகள் என பலரும் பங்கேற்க உள்ளனர். இதற்கான விளம்பர பேனர்கள் புதுச்சேரி முழுவதும் வைக்கப்பட்டுள்ளன.
சாலைகளின் முக்கிய சந்திப்புகளான அஜந்தா சிக்னல், ராஜா சந்திப்பு, அண்ணா சிலை, காமராஜர் சிலை, இந்திராகாந்தி சிலை, ராஜீவ் சிலை சதுக்கங்கள் மற்றும் கிராம பகுதிகளில் இந்த விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
இவை அனைத்தும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே உள்ளன. தமிழில் எங்கும் விளம்பர பேனர் இல்லை.
புதுவையில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர் ரங்கசாமி பேசும்போது வர்த்தக நிறுவனங்களின் பெயர் பலகை தமிழில் கட்டாயம் இடம் பெற வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை ஆயூஷ் பின்பற்றவில்லை. ஆனால் யோகா விளம்பரத்தில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது தமிழ் ஆர்வலர்களிடையே கொந்தளிப்பை ஏற்டுத்தி உள்ளது.
இந்த நிலையில் யோகா நாள் விழாவிற்காக சிவாஜி சிலை அருகே அரசு சார்பில் வைக்கப்பட்டுள்ள இந்தி விளம்பர பலகைகளில் இந்தி மொழியை புதுவை மாநில தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில தலைவர் ஸ்ரீதர் தலைமையில் நிர்வாகிகள் கருப்பு மை பூசி அழித்தனர். மேலும் மத்திய, மாநில அரசுகள் தமிழை புறக்கணிப்பு செய்வதை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
- அனைவரும் மக்களை கண்ணியத்துடன் அணுக வேண்டும்.
- வங்கி ஊழியர்கள் மாநில மொழியில் பேச முயற்சிக்க வேண்டும்.
கர்நாடகாவில் கன்னடம், ஆங்கிலத்தில் பேச மறுத்து இந்தியில் மட்டுமே தான் பேசுவேன் என வாடிக்கையாளர்களிடம் முறையிட்ட எஸ்.பி.ஐ. வங்கி மேலாளருக்கு அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "கன்னடம், ஆங்கிலத்தில் பேச மறுத்து மக்களை அலட்சியப்படுத்திய எஸ்.பி.ஐ. வங்கி மேனேஜரின் செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது. இத்தகைய சம்பவங்கள் இனி நடக்கக் கூடாது. வங்கி ஊழியர்கள் அனைவரும் மக்களை கண்ணியத்துடன் அணுக வேண்டும், மாநில மொழியில் பேச முயற்சிக்க வேண்டும்.
இந்தியில் பேசிய ஊழியரை பணி இடமாற்றம் செய்த எஸ்.பி.ஐ. வங்கி நிர்வாகத்தின் விரைவான நடவடிக்கையை பாராட்டுகிறேன்.
வங்கி ஊழியர்களுக்கு மாநில கலாசார, மொழியை மதிப்பதற்கான விழிப்புணர்வு வகுப்புகளை மத்திய நிதியமைச்சகம் நடத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.
- இந்தியை முன்னால் அனுப்பி பின்னால் சமஸ்கிருதத்திற்கு மணி கட்டி அனுப்புவதுதான் தேசியக் கல்விக் கொள்கை
- சமஸ்கிருதத்தை அடிப்படையாக கொண்ட தேசியக் கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம்
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக்கொள்கை இந்தியை திணிப்பதாக கூறி தமிழ்நாடு அரசு தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், "இந்தியை முன்னால் அனுப்பி, பின்னால் சமஸ்கிருதத்திற்கு மணி கட்டி அனுப்புவதுதான் தேசியக் கல்விக் கொள்கை" என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
"மோடி அரசின் தேசியக் கல்விக் கொள்கை சமஸ்கிருதத்தை முக்கிய தூணாகக் கொண்ட இந்திய அறிவு முறைக்கு வலுவான முக்கியத்துவம் அளிக்கிறது என மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.
இது தொடர்பான செய்தி துணுக்கை தனது எக்ஸ் பக்கத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், "மோடி அரசின் தேசியக் கல்விக் கொள்கை சமஸ்கிருதத்தை முக்கிய தூணாகக் கொண்ட இந்திய அறிவு முறைக்கு வலுவான முக்கியத்துவம் அளிக்கிறது" என்று பேசியுள்ளார் ஒன்றிய அமைச்சர் அமித் ஷா அவர்கள்.
இதைத்தான் நாங்களும் தெரிவித்து வருகிறோம். 'வர்ணாசிரமத்தை உயர்த்திப் பிடிக்கும் சமஸ்கிருதத்தை அடிப்படையாக கொண்ட தேசியக் கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம்" என்கிறோம். "இந்தியை முன்னால் அனுப்பி பின்னால் சமஸ்கிருதத்திற்கு மணி கட்டி அனுப்புவதுதான் தேசியக் கல்விக் கொள்கை' என்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.
- மகாராஷ்டிராவில் புதிய கல்வி கொள்கையை பாஜக கூட்டணி அரசு அமல்படுத்தியுள்ளது.
- புதிய கல்வி கொள்கை படி அனைத்து ஆசிரியர்களும் பயிற்றுவிக்கப்படுவார்கள்
மகாராஷ்டிராவில் 1-5 வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் 3 ஆவது மொழியாக இந்தி மொழி கட்டாயம் கற்க வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மகாராஷ்டிராவில் புதிய கல்வி கொள்கையை பாஜக கூட்டணி அரசு அமல்படுத்தியுள்ளது. இதன்மூலம் மராத்தி, ஆங்கில வழிக்கல்வி பயிலும் மாணவர்களுக்கும் 3 ஆவது மொழியாக இந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
புதிய கல்வி கொள்கை படி அனைத்து ஆசிரியர்களும் பயிற்றுவிக்கப்படுவார்கள் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
மராத்தி மொழி பேசும் மக்கள் அதிகமுள்ள மகாராஷ்டிராவில் இந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- இனி வரக்கூடிய தேர்தலில் 40 இடங்களுக்கு மேல் நாம் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
- தேர்தல் கூட்டணி வைத்ததும் ஒரு கருத்துக்கணிப்பு வரும்.
சென்னை:
தமிழக பா.ஜ.க. மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். தலைவர் பதவியேற்பு விழா நிகழ்ச்சி சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலசில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை, நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பேசினர். அப்போது தமிழக பா.ஜ.க. பொறுப்பாளர் அரவிந்த் மேனன் இந்தியில் பேசினார். இதையடுத்து பேசிய நயினார் நாகேந்திரன், மாநிலத்தின் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் ஜி... அவர் மலையாளத்தில் பிறந்தாலும் இந்தியில் தான் பேசினார். மலையாளத்தில் பேசியிருந்தால் இன்னும் மக்களுக்கு நன்றாக புரிந்து இருக்கும். அடுத்த முறை வரும்போது உங்கள் தாய்மொழியான மலையாளத்திலேயே பேசுங்கள். இனி வரக்கூடிய தேர்தலில் 40 இடங்களுக்கு மேல் நாம் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
அண்ணாமலை அவர்கள் மிகச்சிறப்பான வகையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுப்பது என்றாலும் சரி, எதுவாக இருந்தாலும் சரி அவர்களது பாணி என்பது ஒரு பாணி. என்னுடைய விஷயம் என்பது வேறு. அவர் புயலாக இருந்தால் நாம் தென்றலாகத்தான் இருக்க முடியும்.
தேர்தல் கூட்டணி வைத்ததும் ஒரு கருத்துக்கணிப்பு வரும். போக போக பல மாற்றங்கள், நிகழ்வுகள் நடக்கும். அதை பொறுத்து மக்களின் மனநிலையும் மாறும். ஆக தேர்தல் முடிந்து, வாக்கு எண்ணிக்கை முடிந்ததும்தான் அது வெற்றிக் கூட்டணியா? வெத்துக் கூட்டணியா? தெரியும்.
கருணாநிதி பா.ஜ.க.வை பண்டாரம், பரதேசி கட்சி என்றார். 1998-ல் ஜெயலலிதா பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்றார். 1999-ல் கருணாநிதியே பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தார். அப்போதும் வெற்றி பெற்றார்கள். வெற்றிக்கூட்டணியை நானோ, கருத்துக்கணிப்போ, பத்திரிகையாளர்களோ கணிக்க முடியாது. அப்படி கணித்தாலும் அது மாயையே என்றார்.
- ஸ்ரீலீலா இந்தியில் கார்த்திக் ஆர்யனுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
- ஸ்ரீலீலாவை திடீரென கூட்டத்திற்குள் ஒருவர் வலுக்கட்டாயமாக இழுக்கிறார்.
தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வரும் ஸ்ரீலீலா, தற்போது இந்தியில் கார்த்திக் ஆர்யனுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இப்படத்தை அனுராக் பாசு இயக்கி வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கேங்டாக் மற்றும் டார்ஜிலிங்கில் நடைபெற்று வருகிறது.
டார்ஜிலிங்கில் ஸ்ரீலீலா மற்றும் கார்த்திக் ஆர்யன் ஆகியோர் மக்கள் கூடியுள்ள இடத்தின் இடையே நடந்து வரும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.
அந்த வீடியோவில் ஸ்ரீலீலாவை திடீரென கூட்டத்திற்குள் ஒருவர் வலுக்கட்டாயமாக இழுக்கிறார். இதனால் ஸ்ரீலா பதட்டமடைந்தார். ஆனால் இதை அறியாமல் கார்த்திக் தொடர்ந்து நடந்து செல்கிறார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாக, இந்த சம்பவத்தை விமர்சித்து, நடிகைகளுக்கு போதுமான பாதுகாப்புக்கு வழங்க வேண்டுமென நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்தனர்.
- தமிழ்நாடு வானிலை மையத்தின் இணையதளத்தில் புதிதாக இந்தி சேர்க்கப்பட்டுள்ளது
- தமிழ்நாட்டில் தற்போது உள்நோக்கத்தோடு வானிலை அறிக்கையில் இந்தியை திணித்துள்ளது ஒன்றிய அரசு
தமிழ்நாடு வானிலை மையத்தின் இணைய பக்கத்தில் தமிழ் ஆங்கிலத்தோடு இந்தி மொழியும் சேர்க்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு வானிலை மையத்தின் இணைய பக்கத்தில் இதுவரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வானிலை அறிக்கைகள் வெளியிடப்பட்டு வந்தன. தற்போது தமிழ், ஆங்கிலத்தோடு சேர்த்து மூன்றாவது மொழியாக இந்தி மொழியில் வானிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு வானிலை மையத்தில் இந்தி சேர்க்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "தென் இந்தியாவில் கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் வானிலை அறிக்கை ஆங்கிலத்துடன் வெளிவந்த நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் முதன் முறையாக இந்தி மொழியுடன் சேர்த்து வெளியிடப்பட்டுள்ளது. இங்கு மும்மொழிக்கொள்கை குறித்து சர்ச்சையாகவுள்ள நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பில் இந்தி மொழியும் சேர்க்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது.
சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகள் மட்டுமே இடம்பெறும். இருமொழிக் கொள்கையை பின்பற்றும் தமிழ்நாட்டில் தற்போது உள்நோக்கத்தோடு வானிலை அறிக்கையில் இந்தியை திணித்துள்ளது ஒன்றிய அரசு. இந்த செயல் ஒன்றிய அரசின் ஆதிக்க உணர்வையே காட்டுகிறது.
இந்தி மொழிக்கு இங்கு யாரும் விரோதிகள் கிடையாது. ஆனால், வலுக்கட்டாயமாக திணிப்பதைத்தான் எதிர்க்கின்றோம். எந்தவகையிலாவது இந்தியை தமிழ்நாட்டில் திணிப்பதிலேயே தீவிரமாகவுள்ள ஒன்றிய அரசுக்கு எனது கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
- மத்திய அரசு இந்தி திணிப்பதாக தமிழ்நாடு அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
- தமிழ்நாடு வானிலை மையத்தின் இணையதளத்தில் புதிதாக இந்தி சேர்க்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வானிலை மையத்தின் இணைய பக்கத்தில் தமிழ் ஆங்கிலத்தோடு இந்தி மொழியும் சேர்க்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு வானிலை மையத்தின் இணைய பக்கத்தில் இதுவரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வானிலை அறிக்கைகள் வெளியிடப்பட்டு வந்தன. தற்போது தமிழ், ஆங்கிலத்தோடு சேர்த்து மூன்றாவது மொழியாக இந்தி மொழியில் வானிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தென்னிந்திய மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, கேரளாவின் வானிலை மைய இணைய பக்கத்தில் தாய்மொழியோடு ஆங்கிலம் மட்டுமே உள்ள நிலையில், தமிழ்நாட்டில் இந்தி மொழி சேர்க்கப்பட்டுள்ளது.
மும்மொழி கொள்கை என்ற பெயரில் மத்திய அரசு இந்தி திணிப்பதாக தமிழ்நாடு அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், தமிழ்நாடு வானிலை மையத்தின் இணைய பக்கத்தில் இந்தி சேர்க்கப்பட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது.






