என் மலர்
நீங்கள் தேடியது "BJP councillor"
- ஆப்பிரிக்க பயிற்சியாளரிடம், நீங்கள் ஏன் இந்தி கற்கவில்லை என கேள்வி எழுப்பினார்.
- இந்தி கற்கவில்லை என்றால் டெல்லியை விட்டு வெளியேற வேண்டும் என பாஜக கவுன்சிலர் மிரட்டினார்.
டெல்லியில் பாஜக கவுன்சிலர் ரேணு சவுத்ரி, ஆப்பிரிக்க கால்பந்து பயிற்சியாளர் ஒருவரை ஒரு மாதத்திற்குள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டு வரும் வீடியோவில், உள்ளூர் குழந்தைகளுக்கு கால்பந்து பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்த ஆப்பிரிக்க பயிற்சியாளரிடம், நீங்கள் ஏன் இந்தி கற்கவில்லை என கேள்வி எழுப்பினார். அவர் அதற்கு பதிலளிக்காததால், நான் சொல்வதை நீங்கள் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. நீங்கள் ஏன் இந்தி கற்கவில்லை? ஒரு மாதத்திற்குள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும்.
இல்லையென்றால் டெல்லியை விட்டு வெளியேற வேண்டும். நீங்கள் இங்கே பணம் சம்பாதிக்கிறீர்கள் என்றால், இந்தியும் பேசக் கற்றுக் கொள்ளுங்கள்" எனப் பேசியுள்ளார். மேலும் மற்றொருவரிடம் (பூங்கா காவலாளியா என்பது சரியாக தெரியவில்லை) நான் உங்களுக்குச் சொல்கிறேன், பூங்கா இரவு 8 மணிக்குள் மூடப்பட வேண்டும். இல்லையெனில் ஏதேனும் குற்றச் செயல் நடந்தால், நீங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறினார்,.
இந்த வீடியோ வைரலாக ரேணு சவுத்ரிக்கு பெரும் கண்டனம் எழுந்தது. இதனையடுத்து வீடியோ தொடர்பாக விளக்கமளித்த அவர், பூங்காவிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் போதைப்பொருள் தொடர்பாக தனக்குப் பலமுறை புகார் வந்தது. அதனால்தான் தான் பூங்காவிற்கு வருகை தந்தேன். ஆனால், யாரையும் அச்சுறுத்தும் நோக்கம் தனக்கு இல்லை. தகவல்தொடர்பை எளிதாக்க இந்தி மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினேன்" என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த வீடியோ இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, பாஜக மேலிடத்தின் வற்புறுத்தலின் பேரில் பாஜக கவுன்சிலர் ரேணு சவுத்ரி தனது செயலுக்கு மன்னிப்பு கோரினார்.
- ராமநாதபுரத்தில் நடந்த நகரசபை கூட்டத்தில் பா.ஜ.க. கவுன்சிலருடன், தி.மு.க. வாக்குவாதம் செய்தது.
- தொடர்ந்து தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு கூட்டம் முடிவடைந்தது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் நகர சபை கூட்டம் தலைவர் ஆர்.கே.கார்மேகம் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் டி.ஆர்.பிரவீன் தங்கம், ஆணையாளர் அஜிதா பர்வீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பா.ஜ.க. கவுன்சிலர் குமார் பாதாள சாக்கடை திட்டம் குறித்து பேச முயன்றார். அப்போது தி.மு.க. கவுன்சிலர்கள் முகமது ஜஹாங்கீர், காதர் பிச்சை, ரமேஷ் கண்ணன், ஸ்டாலின் உள்பட அனைவரும் எழுந்து குமார் பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
நகராட்சியை கண்டித்து பா.ஜ.க சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கவுன்சிலர்களை குமார், விமர்சித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு குமார் மறுப்பு தெரிவித்ததால் மற்ற கவுன்சிலர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தலைவர் ஆர்.கே.கார்மேகம் இருதரப்பினரையும் அமைதிப்படுத்தினார். தொடர்ந்து தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு கூட்டம் முடிவடைந்தது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் அலகாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த பா.ஜ.க. கவுன்சிலர் கேசரி (40) நேற்று இரவு பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் கேசரியை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் படுகாயமடைந்த அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.
கேசரியை சோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேசரி துணை முதல்-மந்திரி கேஷவ் பிரசாத் மற்றும் பா.ஜ.க. தலைவர் நந்கோபால் நந்திக்கு நெருங்கிய நண்பர் என்பதால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கேசரி குடும்பத்தினரிடம் நடத்திய விசாரணையில், இந்த கொலை முன் பகையின் காரணமாக நடைபெற்றிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். மேலும், கேசரி மாவட்ட பா.ஜ.க. இளைஞரணியின் பொதுச்செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. #BJPcouncillor






