என் மலர்
நீங்கள் தேடியது "புதின்"
- அடுத்த இலக்கு ரஷிய அதிபர் புதின் என ஜெலன்ஸ்கி மறைமுகமாக குறிப்பிட்டார்.
- ரஷிய அதிபர் புதின் மீது சர்வதேச நீதிமன்றத்தின் பிடிவாரண்ட் நிலுவையில் உள்ளது.
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்கப் படைகள் கைது செய்துள்ள நிலையில், அடுத்த இலக்கு ரஷிய அதிபர் புதின் என ஜெலன்ஸ்கி மறைமுகமாக குறிப்பிட்டார்.
இந்நிலையில் புதினை கைது செய்ய அமெரிக்கா உத்தரவிடுமா என்ற கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், "அதற்கான அவசியம் ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை.
அவருடன் எப்போதும் ஒரு சிறந்த உறவை வைத்திருக்கவே விரும்பினேன். ஆனால் தற்போதைய நிலைமை ஏமாற்றமளிக்கிறது. உக்ரைன்-ரஷிய போரைத் தடுக்க முடியாததில் எனக்கு வருத்தம் உண்டு" என்று கூறினார்.
ரஷியாவின் பொருளாதாரம் மிகவும் மோசமாக இருப்பதாகவும், பல ரஷிய வீரர்கள் போரில் கொல்லப்படுவதாகவும் குறிப்பிட்ட டிரம்ப் , இந்தப் போரை மிக விரைவில் முடிவுக்குக் கொண்டு வர விரும்புவதாக தெரிவித்தார்.
உக்ரைனில் செய்த போர் குற்றங்களுக்காக ரஷிய அதிபர் புதின் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிடிவாரண்ட் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- அந்த 10 சதவீதம்தான் அமைதியின் தலைவிதியையும், உக்ரைன் மற்றும் ஐரோப்பாவின் தலைவிதியையும் தீர்மானிக்கும்.
- நாங்கள் சரணடைய தயாராக இருக்கிறோம் என்று யாராவது நினைத்தால் அது தவறானது என்றார்.
ரஷியா-உக்ரைன் இடையேயான 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார்.
இதற்காக 20 அம்சங்கள் கொண்ட அமைதி ஒப்பந்தத்தை டிரம்ப் பரிந்துரைத்தார். இந்த ஒப்பந்தம் தொடர்பாக ரஷியா-உக்ரைனுடன் அமெரிக்க குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
மேலும் ரஷிய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோருடன் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஆனாலும் அமைதி ஒப்பந்தம் தொடர்பாக இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியதாவது:-
அமைதி ஒப்பந்தம் 90 சதவீதம் தயாராகிவிட்டது. 10 சதவீதம் மீதமுள்ளது. போரை முடிவுக்குக் கொண்டு வர ஒப்பந்தம் ஏற்படுவதற்கு உக்ரைன் 10 சதவீத தொலைவில் உள்ளது.
அந்த 10 சதவீதம்தான் அமைதியின் தலைவிதியையும், உக்ரைன் மற்றும் ஐரோப்பாவின் தலைவிதியையும் தீர்மானிக்கும்.
போரை முடிவுக்குக் கொண்டுவர உக்ரைன் விரும்பினாலும், எதிர்கால ஆக்கிரமிப்பைத் தடுக்க எந்தவொரு தீர்வும் வலுவான பாதுகாப்பு உத்தரவாதங்களின் அடிப்படையில் அமைய வேண்டும்.
உக்ரைனின் நீண்டகால பாதுகாப்பை பலவீனப்படுத்தக்கூடிய அல்லது ரஷியாவைத் தூண்டிவிடக்கூடிய சலுகைகள் மூலம் அமைதி ஒப்பந்தம் ஏற்படக்கூடாது. நாங்கள் சரணடைய தயாராக இருக்கிறோம் என்று யாராவது நினைத்தால் அது தவறானது என்றார்.
- இதுதொடர்பாக புதின் டிரம்ப் உடன் தொலைபேசியில் பேசியிருக்கிறார்.
- 6 கிலோ வெடிபொருட்களுடன் கூடிய Chaklun-V ரக டிரோன் பாகங்கள் காணப்பட்டன.
தலைநகர் மாஸ்கோவின் அருகே உள்ள நோவ்கோரோட் பகுதியில் அதிபர் புதினின் அரசு இல்லத்தை குறிவைத்து கடந்த டிசம்பர் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் உக்ரைன் 91 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியதாக ரஷியா குற்றம்சாட்டி இருந்தது.
ரஷிய வான் பாதுகாப்புப் படையினர் அந்த டிரோன்கள் அனைத்தையும் சுட்டு வீழ்த்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அமெரிக்கா தலைமையிலான அமைதிப் பேச்சுவார்த்தையை குலைக்க ரஷியாவால் புனையப்பட்ட பொய் இதுவென உக்ரைன் இந்த குற்றச்சாட்டை மறுத்தது. இதுதொடர்பாக புதின் டிரம்ப் உடன் தொலைபேசியில் பேசியிருக்கிறார்.
இந்நிலையில் நோவ்கோரோட் பகுதியில் உள்ள புதினின் இல்லத்தைத் தாக்க உக்ரைன் அனுப்பியதாகக் கூறப்படும் ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்ட வீடியோவை ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் நேற்று வெளியிட்டது.
அந்த வீடியோவில், 6 கிலோ வெடிபொருட்களுடன் கூடிய Chaklun-V ரக டிரோன் பாகங்களுக்கு அருகில் ரஷிய வீரர் ஒருவர் நிற்பது போன்ற காட்சிகள் உள்ளன.
இந்த வீடியோ நகைப்புக்குரியது என உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் விமர்சித்துள்ளது. இத்தகைய போலியான ஆதாரத்தை உருவாக்க ரஷியா இரண்டு நாட்கள் ஆகியுள்ளதாக உக்ரைன் செய்தித் தொடர்பாளர் கிண்டலாக தெரிவித்தார்.
இதற்கிடையில், அமெரிக்கவின் சி.ஐ.ஏ புலனாய்வு அமைப்புநடத்திய ஆய்வில், உக்ரைன் புதினின் இல்லத்தை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தவில்லை என்று முடிவுக்கு வந்துள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.
- நாடு முழுவதும் ராணுவத்திற்குப் பின்னால் ஒற்றுமையாக இருக்கிறது.
- உக்ரைனுக்கு எதிரான சிறப்பு ராணுவ நடவடிக்கையில் ரஷியா தனது இலக்குகளை எட்டி வெற்றி பெறும்.
ரஷியா-உக்ரைன் இடையேயான 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார்.
இதற்காக 20 அம்சங்கள் கொண்ட அமைதி ஒப்பந்தத்தை டிரம்ப் பரிந்துரைத்தார். இந்த ஒப்பந்தம் தொடர்பாக ரஷியா-உக்ரைனுடன் அமெரிக்க குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
மேலும் ரஷிய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோருடன் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஆனாலும் அமைதி ஒப்பந்தம் தொடர்பாக இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்த நிலையில் ரஷிய அதிபர் புதின், புத்தாண்டையொட்டி நாட்டு மக்களுக்கு தொலைகாட்சியில் உரையாற்றினார். இதில் உக்ரைன் போர்க்களத்தில் உள்ள ரஷிய வீரர்களை பாராட்டினார்.
அவர் கூறியதாவது:-
போர்க்களத்தில் உள்ள எங்களின் நாயகர்களான உங்கள் (ரஷிய வீரர்கள்) மீதும், நமது வெற்றியின் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளோம்.
ரஷியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் மற்றும் நான் உங்களுக்கு உறுதிஅளிக்கிறோம். புத்தாண்டின் இந்தத் தருணத்தில் வீரர்களுக்காக வேண்டிக்கொள்கிறோம்.
நாடு முழுவதும் ராணுவத்திற்குப் பின்னால் ஒற்றுமையாக இருக்கிறது. உங்களை பற்றி மக்கள் நினைக்கிறார்கள். உங்களை நம்புகிறார்கள்.
நமது அனைத்து வீரர்களுக்கும் தளபதிகளுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். நாங்கள் உங்களையும் எங்கள் வெற்றியையும் நம்புகிறோம்.
உக்ரைனுக்கு எதிரான சிறப்பு ராணுவ நடவடிக்கையில் ரஷியா தனது இலக்குகளை எட்டி வெற்றி பெறும். ரஷியா மக்களின் ஒற்றுமை, தாய்நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கிறது. இவ்வாறு புதின் கூறினார்.
- அமைதி பேச்சுவார்த்தையை குலைக்க ரஷியாவால் புனையப்பட்ட பொய் இதுவென உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
- அதிபர் டிரம்ப், புதின் தன்னுடன் தொலைபேசியில் பேசியபோது இந்தத் தாக்குதல் குறித்துக் கூறி கோபப்பட்டதாகத் தெரிவித்தார்.
மாஸ்கோ அருகே உள்ள அதிபர் புதினின் அரசு இல்லத்தை குறிவைத்து 91 டிரோன்களை ஏவி உக்ரைன் தாக்குதல் நடத்தியதாகவும், அதை தங்கள் வான் பாதுகாப்பு அமைப்பு முறியடித்ததாகவும் ரஷியா நேற்று தெரிவித்தது.
ஆனால் அமைதி பேச்சுவார்த்தையை குலைக்க ரஷியாவால் புனையப்பட்ட பொய் இதுவென உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதவிட்ட பிரதமர் மோடி, "ரஷிய அதிபரின் இல்லத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த செய்திகள் மிகுந்த கவலையளிக்கின்றன.
போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதியை நிலைநாட்ட தூதரக ரீதியிலான முயற்சிகளே சரியான வழி" என்று தெரிவித்துள்ளார்.
அமைதிப் பேச்சுவார்த்தைகளைப் பாதிக்கும் வகையிலான இத்தகைய செயல்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் அனைத்துத் தரப்பினரையும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப், புதின் தன்னுடன் தொலைபேசியில் பேசியபோது இந்தத் தாக்குதல் குறித்துக் கூறி கோபப்பட்டதாகத் தெரிவித்தார். அதே சமயம் விரைவில் அமைதி உடன்படிக்கை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
- இந்தச் சம்பவம் தொடர்பாக அதிபர் புதின், அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் தொலைபேசியில் உரையாடினார்.
- இது ஒரு அப்பட்டமான பொய் என்று ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
உக்ரைன் ரஷியா இடையிலான போர் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த போரை நிறுத்த டிரம்ப் அரும்பாடுபட்டு வருகிறார்.
கடந்த சில வாரங்களாக அமெரிக்காவின் தலையீட்டுடன் ரஷியா - உக்ரைன் இடையே போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் அதிகாரப்பூர்வ இல்லத்தைக் குறிவைத்து உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, உக்ரைனுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளப்போவதாக ரஷியா அறிவித்துள்ளது.
ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறுகையில், டிசம்பர் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில், நோவ்கோரோட் பகுதியில் உள்ள அதிபர் புதினின் அரசு இல்லத்தை நோக்கி உக்ரைன் சுமார் 91 நீண்ட தூர டிரோன்களை ஏவியுள்ளது. இருப்பினும், ரஷிய வான் பாதுகாப்புப் படையினர் அந்த டிரோன்கள் அனைத்தையும் சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவித்தார்.

இது அரச பயங்கரவாதம் என்றும் இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் கூறிய லாவ்ரோவ், இந்தத் தாக்குதலால், தற்போது நடைபெற்று வரும் அமைதிப் பேச்சுவார்த்தையில் ரஷியாவின் கோரிக்கைகள் மற்றும் நிபந்தனைகள் தீவிரமாக மறுபரிசீலனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ரஷிய அதிபர் புதின், அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது, அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் இத்தகைய தாக்குதல்கள் நடப்பது பேச்சுவார்த்தையை வலுவிழக்கச் செய்யும் என்று புதின் சுட்டிக்காட்டியுள்ளார் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே ரஷியாவின் இந்தக் குற்றச்சாட்டுகளை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி முற்றிலுமாக மறுத்துள்ளார். இது ஒரு அப்பட்டமான பொய் என்றும், உக்ரைன் தலைநகர் கீவ் மீது தாக்குதல் நடத்துவதற்குத் தகுந்த காரணத்தை உருவாக்கவே ரஷியா இதுபோன்ற நாடகங்களை ஆடுவதாகவும் அவர் பதிலடி கொடுத்துள்ளார்.
புதின் இல்லத்தின் மீதான இந்தத் தாக்குதல் குற்றச்சாட்டு, போர் நிறுத்த முயற்சிகளுக்குப் பெரும் முட்டுக்கட்டையாகக் கருதப்படுகிறது.
- ரஷியா பிடித்துள்ள பகுதிகளை விட்டுக்கொடுக்க உக்ரைன மறுப்பு தெரிவிக்கிறது.
- டிரம்பை இன்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்து பேச இருக்கிறார்.
ரஷியா- உக்ரைன் இடையில் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் போரை முடிவுக்கு கொண்டுவர 20 அம்ச திட்டத்தை பரிந்துரை செய்துள்ளார். இதில் பெரும்பாலான அம்சங்களில் அமெரிக்கா- உக்ரைன் இடையில் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது.
உக்ரைன் பிராந்தியங்களை ரஷியாவுக்கு விட்டுக் கொடுப்பதும், ஐரோப்பியாவின் மிகப்பெரிய அணுஉலையான சபோரிசியாவை ரஷியாவிடம் ஒப்படைக்கவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மக்களிடையே வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் அல்லது பாராளுமன்ற உறுப்பினர்கள் மாற்றப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இன்று புளோரிடாவில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை, ஜெலன்ஸ்கி சந்திக்க இருக்கிறார். இந்த நிலையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில்தான் நேற்று ரஷிய அதிபர் புதின், அந்நாட்டின் ஆயுதப்படைகள் கமாண்டு மையத்திற்கு திடீர் விசிட் அடித்துள்ளார். அங்குள் அதிகாரிகளிடம் பேசும்போது "உக்ரைன் அமைதியை விரும்பவில்லை என்றால், ரஷியா ராணுவ வழியில் அனைத்து சிறப்பு ராணுவ ஆபரேசன் இலக்குகளை அடையும் எனத் தெரிவித்துள்ளார்.
உக்ரைன்- ரஷியா எல்லையில் பாதுகாப்பு பகுதி தொடக்கம் சிறப்பான நடைபெற்று வருகிறது. ரஷியப் படைகள் டான்பாஸ் மற்றும் சபோரோசியே பிராந்தியத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.
- இன்று, நாம் அனைவரும் ஒரே கனவைப் பகிர்ந்து கொள்கிறோம்.
- புதின் அழிந்து போகட்டும் என்று ஒவ்வொருவரும் தங்களுக்குள் சொல்லிக் கொள்கிறார்கள்.
கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில், நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் ஜெலன்ஸ்கி நாட்டு மக்களுக்கு கிறிஸ்துமஸ் உரையாற்றினார். அப்போது மறைமுகமாக ரஷிய அதிபர் புதின் அழியட்டும் என தனது விருப்பத்தை தெரிவித்தார்.
இது தொடர்பாக ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள வீடியோ உரையில் கூறியிருப்பதாவது:-
ரஷியா ஏற்படுத்திய அனைத்து துன்பங்களுக்கும் மத்தியிலும், மிகவும் முக்கியமானவற்றை ஆக்கிரமிக்கவோ அல்லது குண்டுவீசி அழிக்கவோ அதனால் முடியாது. அதுதான் எங்கள் உக்ரேனிய மக்களின் இதயம், ஒருவருக்கொருவர் மீது நாங்கள் கொண்டுள்ள நம்பிக்கை, மற்றும் எங்கள் ஒற்றுமை.
இன்று, நாம் அனைவரும் ஒரே கனவைப் பகிர்ந்து கொள்கிறோம். மேலும் எங்கள் அனைவரிடமும் ஒரே ஒரு ஆசைதான் உள்ளது. அவன் (புதின் பெயரை குறிப்பிடாமல்) அழிந்து போகட்டும் என்று ஒவ்வொருவரும் தங்களுக்குள் சொல்லிக் கொள்கிறார்கள்.
ஆனால் நாம் கடவுளை நோக்கித் திரும்பும்போது, நிச்சயமாக, நாம் இன்னும் பெரிய ஒன்றைக் கேட்கிறோம். நாங்கள் உக்ரைனுக்காக அமைதியைக் கேட்கிறோம். அதற்காக நாங்கள் போராடுகிறோம், அதற்காகப் பிரார்த்திக்கிறோம், அது எங்களுக்கு உரித்தானது.
இவ்வாறு ஜெலன்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
- பொய்யான உறுதிமொழி அளிக்கப்பட்டு ரஷிய இராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்படுகின்றனர்.
- இந்த ஆண்டு செப்டம்பர் முதல் உக்ரைன் போர் மண்டலத்தில் குறைந்தது நான்கு இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 59 பேர் காணாமல் போயுள்ளனர்.
உக்ரைன் உடனான போரில் ரஷிய ராணுவத்தில் கட்டாயமாக சேர்க்கப்பட்டு பணியாற்றிய 2 இந்தியர்கள் அண்மையில் சண்டையில் கொல்லப்பட்டனர். அவர்களின் உடல்கள் கடந்த புதன்கிழமை இந்தியா வந்தடைந்தது.
இறந்தவர்கள் ராஜஸ்தானைச் சேர்ந்த அஜய் கோதர் (22) மற்றும் உத்தரகண்டைச் சேர்ந்த ராகேஷ் குமார் (30) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஒரு வருடம் முன்பு, அஜய் மற்றும் ராகேஷ் இருவரும் மாணவர் விசாவில் ரஷ்யாவுக்குச் சென்றிருந்தனர். அங்கு பொய்யான வேலைவாய்ப்பு உறுதிமொழி அளிக்கப்பட்டு இருவரும் ரஷ்ய இராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டு, உக்ரைனுக்கு எதிராகப் போராட போர்க்களத்திற்கு அனுப்பப்பட்டனர்.
இந்த ஆண்டு செப்டம்பர் முதல் உக்ரைன் போர் மண்டலத்தில் குறைந்தது நான்கு இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 59 பேர் காணாமல் போயுள்ளனர்.
இதற்கிடையே நேற்று மாநிலங்களவையில் கேள்விக்கு வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் பதில் அளிக்கையில், ரஷிய ஆயுதப் படைகளில் பணியாற்றிய 26 இந்தியர்கள் இறந்துள்ளதாகவும், ஏழு பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்திய குடிமக்கள் இராணுவத்தில் கட்டாயமாக சேர்க்கப்பட மாட்டார்கள் என்று ரஷியா கடந்த ஆண்டு உறுதியளித்த போதிலும், ரஷிய தரைப்படைகளில் இந்தியர்கள் தொடர்ந்து சேர்க்கப்படுவது கவலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் ரஷிய அதிபர் புதின் இந்தியா வந்து பிரதமர் மோடியுடன் டெல்லியில் இந்தியா - ரஷியா உச்சிமாநாட்டில் கலந்துகொண்டபோதும் தீர்வு எட்டப்படாமல் இந்தியர்களின் உயிரிழப்புகள் தொடர்கின்றன.
- இந்தியாவில் 50-60 கோடி மக்கள் தான் இந்தி மொழி பேசுகினறனர்.
- இந்த ஒற்றுமையையும் பன்முகத்தன்மையையும் பாதுகாப்பது அவசியம்
சில நாட்களுக்கு முன்பு ரஷிய அதிபர் புதின் 2 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்திருந்தார் . டெல்லியில் நடைபெறும் 23-வது இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சிமாநாட்டில் புதின் பங்கேற்றார். 4 ஆண்டுகளுக்கு பிறகு அவர் இந்திய பயணத்தை மேற்கொண்டார்.
இன்று ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் புதின் அஞ்சலி செலுத்தினார். மேலும் அங்குள்ள பார்வையாளர் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.
இந்நிலையில், இந்திய வருகை குறித்து பேசிய புதின், "சில நாட்களுக்கு முன் இந்தியா சென்றேன். சுமார் 150 கோடி மக்கள் வசிக்கும் நாட்டில் அனைவரும் ஹிந்தி பேசுவதில்லை, 50-60 கோடி மக்களைத் தவிர பிறர் வெவ்வேறு மொழிகள் பேசுகின்றனர். அங்கு ஒரு மொழி பேசும் மக்கள் குறித்து இன்னொரு மொழி பேசும் மக்களுக்கு தெரியாது. ஆனால் இந்த ஒற்றுமையையும் பன்முகத்தன்மையையும் பாதுகாப்பது அவசியம்" என்று தெரிவித்தார்.
- இரவு உணவில் பரிமாறப்பட்ட அனைத்து உணவுகளும் முற்றிலும் சைவ உணவு.
- சில நேரங்களில் கிலோ ரூ. 50,000 ஐ கூட தாண்டும்.
இந்தியாவிற்கு வருகை தந்த ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு, திரௌபதி முர்மு குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரமாண்டமான இரவு உணவு விருந்து அளித்தார்.
இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் இரு நாட்டு தூதர்கள் கலந்து கொண்டனர்.
இரவு உணவில் பரிமாறப்பட்ட அனைத்து உணவுகளும் முற்றிலும் சைவ உணவு. இந்த மெனுவில் சிறப்பு ஈர்ப்பாக காஷ்மீர் உணவான 'குச்சி தூன் செடின்' இருந்தது.
இது மிகவும் விலையுயர்ந்த 'Gucci ' காளான்களால் தயாரிக்கப்படுகிறது. சந்தையில் அவற்றின் விலை ஒரு கிலோவுக்கு சுமார் ரூ. 35,000 முதல் ரூ. 40,000 வரை உள்ளது.
குச்சி காளான்கள் மிகவும் அரிதானவை என்பதால் இந்த விலை. அவை ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய இமயமலைப் பகுதிகளில் மட்டுமே வளரும்.
பனி உருகிய பிறகு, தனித்துவமான மண் மற்றும் வெப்பநிலை நிலைகளில் வசந்த காலத்தில் மட்டுமே அவை இயற்கையாக வளரும். சில நேரங்களில் காட்டுத் தீக்குப் பிறகும் அவை முளைக்கின்றன.
இந்த காளான்களை சேகரிப்பதும் மிகவும் கடினமான பணியாகும். உள்ளூர்வாசிகள் மலைகளின் கரடுமுரடான நிலப்பரப்பில் பல வாரங்கள் பயணித்து அவற்றை சேகரிப்பர். சில நேரங்களில் கிலோ ரூ. 50,000 ஐ கூட தாண்டும்.
குச்சி புலாவ், யக்னி மற்றும் ரோகன் ஜோஷ் போன்ற பாரம்பரிய காஷ்மீரி உணவுகளைத் தயாரிக்கவும் அவை பயன்படுத்தப்படுகின்றன.
- 137 ஆளில்லா டிரோன்களைப் பயன்படுத்தி ரஷியா தாக்கியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்தது.
- அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் அமைதி முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மத்திய உக்ரைனில் ரஷிய டிரோன் தாக்குதலில் 12 வயது சிறுவன் கொல்லப்பட்டான்.
வியாழக்கிழமை இரவு நடந்த தாக்குதலில் 137 ஆளில்லா டிரோன்களைப் பயன்படுத்தி ரஷியா தாக்கியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்தது.
அதே நேரம் ரஷிய துறைமுகங்கள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை குறிவைத்து உக்ரைன் தாக்குதல்களை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
அவ்வாறு தாக்குதல் நடத்த வந்த 85 உக்ரைன் டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாகவும் ரஷியா கூறியுள்ளது. அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் அமைதி முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலிலும், ரஷிய அதிபர் புதின் 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள சூழலிலும் இந்த தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.






